Posts

Showing posts from May, 2022

சுகமான சுமைகள் சாந்தி நாதன்

                                                           சுகமான சுமைகள்                                  சாந்தி நாதன்     " யாரு போன் ?   உன் ஆருயிர் தோழி திரிபுர சுந்தரி தானே ?"   சதாசிவனின் கிண்டல் கேள்வியால் சிறிது கோபம் வந்தாலும் , எப்படி இவ்வளவு சரியா கண்டுபிடிச்சீங்க ? “ அவதான் என்றாள் அகிலா. இந்த வாரம் முழுக்க மாதங்கி ஆபிசிலிருந்து லேட்டா வரதால நான் கோயிலுக்கே போக முடியலை. அதான் ஒரு தகவல் சொன்னா....." " என்னவாம் ?"   நம்ப கோவில் கமிட்டி ஒரு ஆன்மிக டூர் ஏற்பாடு பண்றாங்களாம். கர்நாடக கோவில் சுற்றுலா மங்களூர் வரை ரயில் அங்கிருந்து டீலக்ஸ் ...

மனத்துக் கண் மாசிலன் ஆதல்....... சாந்தி நாதன்

  மனத்துக்    கண்     மாசிலன்      ஆதல்....... சாந்தி நாதன்                    மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , " உள்ளே வரலாமா ?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.                       " வாப்பா எப்ப சென்னை வந்தே ? உன் மனைவி வரலையா ?" என்றவர் "வேணி   இவருக்கும் சேர்த்து டீ போடு " என்று குரல் கொடுத்தார். "ஐயா டீயா காப்பியா " என்றவாறு   சமையலறையிலிருந்து வந்தவளிடம்   "இப்போதைக்கு தண்ணீர் போதும். சிறிது நேரம் பொறுத்து டீயோ காப்பியோ இவருக்கு என்ன போடுவியோ   அது " என்வாறே டேபிளின் மேலிருந்த ஜக்கிலிருந்து தண்ணீரைக் குடித்துவிட்டு சோபாவில் அமர்ந்தார். "எனக்கும் இப்ப அவசரமில்லை வேணி அப்புறமா   டீ போதும். நீ மத்த வேலைகளைப் பார்" என்றபடி நண்பன் ...