மௌனம் பேசியது
மௌனம் பேசியது பெங்களூரின் இதமான காலைக் குளிரை அனுபவித்தபடி ஒரு கையில் காபியும் மறு கையி்ல் தினசரியுமாக வராண்டாவில் வந்து அமர்ந்த கணேசன் ஹாலில் ஒலித்த தொலைபேசியை ஓடிச்சென்று எடுத்தான். "யாரு கணேசனா?நான் சென்னையிலிருந்து ராமு மாமா பேசறேன் . “...”சொல்லுங்க மாமா எப்படி இருக்கீங்க? அப்பா அ ம் மா சௌக்கியம் தானே?" "உங்க அம்மா காலையி ல் துளசி மாடத்துக்கிட்டே வழுக்கி விழுந்துட்டா. வெளிக் காயமோ அடிபட்ட இடத்துல ரத்தக் கசிவோ ஒண்ணுமி் ல் லை. ஆனா நினைவு இல்லாம மயக்கநிலையிலேயே இருக்கா. உங்க குடும்ப டாக்டர் பாலசந்திரன் வந்து பார்த்துட்டு உடனடியா ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணச் சொல்லிட்டார். ஆம்புலன்ஸுக்கு காத்திருக்கும் நேரம் உனக்குத் தகவல் சொல்லிடலாமேன் தான்".... "எ ங் கம்மா விழுந்த நேரம் எங்கப்பா என்ன பண்ணிண்டு இருந்தார்.? வயசான காலத்தில தனியா இருக்கவேணடாம். எங்க மூணுபேரில யாரிட மா வது வந்து இருங்கன்னு சொன்னா எனக்கு அங்கெல்லாம் சரிப்படாதுன்னு அப்பா சொல்றதும் அம்மா அவரை எதிர்த்து பேசாம அவருக்குத் தலையாட்டறதும் இ்ன்னிக்கு இப்படி ஒரு நிலமைக் கு கொண்டு விட்டிருக்கு" . கோப...