Posts

Showing posts from February, 2024
  தங்கத்திலே ௐரு குறையிருந்தாலும்.............சாந்தி நாதன்       தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தையின் வீறிட்ட அழுகுரல் வெளியே காத்திருந்த நால்வரையும்   நிம்மதிக்குள்ளாக்கியது. பிரபாவின் பெற்றொர் பார்வதியும் விநாயகமும் ௐரு நிமிடம் கண்மூடி கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்க, எதிரில் பொறுமையின்றி நடைபழகிக் கொண்டிருந்த கணவன் ராகவன் தன் தாய் ஞானத்திடம்   “ எப்ப டாக்டர் வெளிய வருவா , என்று கேட்டுக் கொண்டிருந்தான்.    காலையிலிருந்து தன் தாயாரைக் காணாது வாடிப் போயிருந்த நாண்கு வயது ரம்யா,   அம்மாவையும் பாப்பாவையும் நாம எப்பப்பார்க்கலாம், என்று மெல்லிய குரலில் கேட்க, சும்மா இருடி , என்று ஞானம் அதட்டினாள். பாட்டியை முறைத்துக் கொண்டு விநாயகத்திடம் ௐடி அவரது மடியில் அமர்ந்து     கொண்டாள் ரம்யா.   சார், டாக்டர் உங்க   எல்லாரையும் அவர் ரூமுக்கு வரச் சொல்றார், நர்ஸ் அறிவிக்க, நால்வரும் ரம்யாவுடன் டாக்டரின் அறைக்கு விரைந்தனர் உக்காருங்க, அவர்களை   அமரச் சொன்னவர், ராகவன், உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு ...