தங்கத்திலே ௐரு குறையிருந்தாலும்.............சாந்தி நாதன்
தாயின்
வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தையின் வீறிட்ட அழுகுரல் வெளியே காத்திருந்த
நால்வரையும் நிம்மதிக்குள்ளாக்கியது.
பிரபாவின் பெற்றொர் பார்வதியும் விநாயகமும் ௐரு நிமிடம் கண்மூடி கடவுளைப்
பிரார்த்தித்துக் கொண்டிருக்க, எதிரில் பொறுமையின்றி நடைபழகிக் கொண்டிருந்த கணவன்
ராகவன் தன் தாய் ஞானத்திடம் “எப்ப டாக்டர் வெளிய வருவா , என்று கேட்டுக் கொண்டிருந்தான். காலையிலிருந்து தன் தாயாரைக் காணாது வாடிப்
போயிருந்த நாண்கு வயது ரம்யா, அம்மாவையும்
பாப்பாவையும் நாம எப்பப்பார்க்கலாம், என்று மெல்லிய குரலில் கேட்க, சும்மா இருடி ,
என்று ஞானம் அதட்டினாள். பாட்டியை முறைத்துக் கொண்டு விநாயகத்திடம் ௐடி அவரது
மடியில் அமர்ந்து கொண்டாள் ரம்யா.
சார், டாக்டர்
உங்க எல்லாரையும் அவர் ரூமுக்கு வரச் சொல்றார்,
நர்ஸ் அறிவிக்க, நால்வரும் ரம்யாவுடன் டாக்டரின் அறைக்கு விரைந்தனர் உக்காருங்க,
அவர்களை அமரச் சொன்னவர், ராகவன்,
உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு ஆனா குழந்தையின் இருகால்களும் போதிய வளர்ச்சியின்றி
சூம்பியிருக்கு. மற்றபடி குழந்தை நல்ல ஆரோக்கியமா இருக்கு. பிரபாவும் நலமாக
இருக்கா..... டாக்டர் முடிப்பதற்குள் , என்னது நொண்டிக் குழந்தையா டேய் ராகவா
இப்பவே இவங்ககிட்ட பேசி அதை ஏதாவது அனாதை ஆசிரமத்தில் விடப் பாரு , உரத்து பேசும்
ஞானத்தை முறைத்தாள் டாக்டர் ரமாமணி..
ௐரு தாயா
இருந்திட்டு எப்படிம்மா உங்களால இரக்க உணர்ச்சியில்லாம இப்படிப் பேச முடிகிறது
உண்மையைச் சொல்லப் போனா பிரபா கருவுற்றதை அறிஞ்சதும் நீங்களும் உங்க மகனுமா சேர்ந்து கருவை கலைக்க
மருத்துவ ரீதியா எதுவும் செய்யாம ஏதோ
முறையற்ற நாட்டு மருந்தை வாங்கி அவளை மிரட்டி சாப்பிட வைத்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு பயந்து கொண்டு அவளும் அதை சாப்பிட்டதன் விளைவால் தான் கருவும் கலையாமல்
குழந்தை கால்களும் வளர்ச்சியின்றி போய்விட்டது. இரு மாதங்களுக்கு முன்பு நான்
ஸ்கேன் செய்தபோதே இது தெரியவர பிரபா இந்த
விபரங்களை என்னிடம் கூறினாள். குழந்தையின் இந்த குறைபாட்டுக்கு நானும் ௐரு காரணம்
என்பதால் இக்குழந்தையை பெற்று நல்ல விதமாக
வளர்த்தெடுப்பேன் என்று உறுதியாகச் சொன்னாள். விபரம் தெரிந்தால் நீங்களிருவும்
விபரீதமாக ஏதும் செய்து விடலாமென்ற எண்ணத்தில் இதை உங்களிடம் சொல்லாமல்
மறைத்துவிட்டாள். என்னையும் உங்கள்
யாருக்கும் இதைச் சொல்லவேண்டாம் என்று உறுதியாகச் சொன்னதால் நானும் சொல்லவில்லை.
பார்த்தியாடா ராகவா உம் பெண்டாட்டியோட நெஞ்சழுத்தத்தை... இதுக்கும் மேல இவளையும் அந்த நொண்டிப் பயலையும் வீட்டுக்குக்
கூட்டிட்டுப்போய் ஆரத்தி எடுக்கப் போறியா வீறிட்டாள் ஞானம். அப்படியெல்லாம் செய்ய எனெக்கென்ன கிறுக்கா டாக்டர், உங்களுக்குத்
தெரிஞ்ச ஏதாவது ஹோமில் இந்த நொண்டிப் பயலை அநாதைன்னு சொல்லி சேர்த்து
விடஒத்துக்கணும். இதை நீங்க செஞ்சு
குடுத்தா நான் உங்க ஆஸ்பத்திரிக்கு கணிசமா ௐரு தொகையை டோனேஷனா தந்துடறேன், பேசும்
ராகவனை முறைத்த டாக்டர், நிறுத்துங்க சார் எங்க மருத்துவமனை ரொம்ப கௌரவமானது.
பணத்துக்காக நீங்க சொல்ற இழி வேலையெல்லாம் செய்யறவங்க நாங்க இல்லை. சமீபத்தில
பேப்பரில் ௐரு செய்தி படிச்சது நினைவுக்கு வருது. பிறந்து ௐரிரு நாட்களே ஆன ௐரு
பச்சிளம் குழந்தையை இரக்கமில்லாம குப்பைத் தொட்டியில் வீசியிருக்கிறார்கள்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த ௐரு பெண்மணி எறும்புகளாலும் தெரு நாய்களாலும் கடிக்கப்
பட்டு குற்றியுரும் கொலையுயிருமாய் கிடந்த அந்த சிசுவை கணவனின் உதவியோடு
மீட்டெடுத்து மருத்துவ மனையில் தகுந்த சிகிச்சை அளித்துக் காப்பாற்றியிருக்கிறாள் . குழந்தையின் உரிமை
கோரி யாரும் வராத நிலையில் அந்த தம்பதிகள் தாஙகளே அக்குழந்தையை முறைப்படி தத்தெடுத்து
வளர்க்கத் துவங்கியுள்ளனர். இத்தனைக்கும் அவர்களுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள்
இருக்கின்றனர் மிக எளிய மக்களாகிய அவர்களின் மனித நேயத்தை ௐரு நிமிடம் உணரப் பாருங்கள் சார்.
டாக்டர், தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம் நான்
கேட்டுக் கொண்டபடி இந்த நொண்டிப்பயலை கை கழுவ உங்களால் உதவ முடியுமா முடியாதா சொல்லுங்கள்
உங்கள் உதவியில்லாமலேயே என்னால் அதைச் செய்யமுடியும். இப்பவே அவங்களை
டிஸ்சார்ஜ் செஞ்சு அனுப்ப பாருங்க சீறினான் ராகவன். அதாண்டா சரி யாருக்கு வேணும் இவங்க உபதேசம்.
ஆங்காரக் குரலெழுப்பும் ஞானத்தை
இகழ்ச்சிப் புன்னகையோடு ஏறிட்டாள் டாக்டர். இங்க பாருங்கம்மா உபதேசம் பண்ணவோ
உங்களை மாதிரி ஆளுங்களை திருத்தவோ எனக்கு
நேரமுமில்லை தேவையுமில்லை. ஆனா எங்க பேஷண்டை மிரட்டி அவங்க விருப்பத்துக்கு
மாறான முறையில் குழந்தையை அவங்க கிட்டேயிருந்து பிரிக்க நினைச்சு நீங்க ஏதேனும் செய்ய முயற்சி
செய்தா எங்க நிர்வாகம் தீவிர எதிர் நடவடிக்கை
எடுக்கும்ங்கறதை மறந்திடாதீங்க. சொன்னபடியே டாக்டர் அகல அதுவரை மௌனமாக
நின்றுகொண்டிருந்த விநாயகமும் பார்வதியும் பேத்தியுடன் மகள் படுத்திருக்கும் அறையை
அடைந்தனர்.
பாப்பாவைப் பாத்தீங்களாப்பா தீனக் குரலில்
கேட்கும் மகளின் தலையை வருடியபடியே , பார்த்தோம்மா ராஜா மாதிரி இருக்கான்,
என்றார். ஆமா நொண்டி ராஜா... கேலியாக சொல்லிக் கொண்டே மகனோடு அறைக்குள் நுழைந்தாள்
ஞானம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பார்வதி அமர்ந்திருக்க ரம்யா தம்பியை மென்மையாக
வருடிக் கொண்டிருந்த காட்சி அவளது ஆங்காரத்தை அதிகப் படுத்தியது.
இதப் பாருடி நானும்
எம் பிள்ளையும் சொல்றபடி கேட்டு இதைக் கைகழுவ ௐத்துக்கிட்டு உம் பெண்ணோட வீடுவந்து
சேரு. முரண்டு பிடிச்சா உங் கோடீஸ்வர அப்பனோட வீட்டுக்குப் போயி திண்டாடு. ஞானம் மிரட்டும் தொனியில் பேச கை கட்டிக் கொண்டு
விரைப்பாக நிற்கும் ராகவனையும் அவளையும் ௐரு சேர
பார்த்தபடியே மெதுவாக
எழுந்து அமர்ந்தாள் பிரபா, நானும் என் முடிவை சொல்லிடறேன். என் குழந்தையை
ஏத்துக்காத வீட்டுக்கு நானும் வருவதாயில்லை. நாங்க மூணு பேருமே எங்க அப்பாவோட போறோம்
என்றாள் உறுதியாக.
வாயை
மூடிக்கிட்டு நிக்கறீங்களே நீங்களாவது உங்க பெண்ணுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா, கோபமாக கேட்கும் ராகவனைப் பார்த்த விநாயகம்
மாப்பிள்ளை, அவ எடுத்துள்ள முடிவில எனக்கு எந்த தப்பும் தெரியலை. எம் பெண்ணையும் பேரக்
குந்தைகளையும் நான் சந்தோஷமா என் வீட்டுக்கு அ ழைச்சிட்டுப் போகத் தயாரா இருக்கேன்.ஆனா
நீங்க கொஞ்சம் பொறுமையா இதைப் பத்தி யோசிச்சு முடிவெடுக்கலாமேங்கறது தான் எனக்கத்
தோணுகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மருத்துவத் துறையில இந்தக் குழந்தையின் குறைபாட்டிற்கு
தீர்வு கிடைக்கலாமில்லையா.......
இதைப் பத்தி பேச
இனி எதுவுமில்லை.உங்க மகளை எப்ப டிஸ்சார்ஜ் செய்றாங்கன்னு தகவல் கொடுங்க. பிரசவச்
செலவுத் தொகையை விட்டெறிஞ்சிட்டுப் போறேன் இதோட எங்களைப் பிடிச்ச சனியன் விட்டுதுன்னு
நிம்மதியா இருப்போம். வாம்மா , திரும்பிப் பார்க்காமல் தாயாருடன் வெளியேறினான்
ராகவன். என்னங்க இப்படி பேசிட்டு போறாக
கண்கலங்கும் பார்வதியையும் அப்பா என்னால உங்களுக்கு எவ்வளவு சிரமம் விம்மும் மகளையும் பார்த்த விநாயகம் இப்போதைக்கு இந்த பேச்சை
நிறுத்திட்டு மேல ஆகவேண்டியதைப் பார்ப்போம் பிரபாவுக்குக் கஞ்சி கொண்டு வந்திருக்க
இல்லையா அதைக் குடு நான் ரம்யாவைக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வச்சு நமக்கும்
சாப்பாடு வாங்கிட்டு வரேன் விநாயகம் கிளம்ப, .பாப்பாவுக்கு ௐரு பிளையிங் கிஸ் கொடுத்து பாட்டி அம்மாவுக்கு டாடா காட்டியபடி
தாத்தாவின் கை பிடித்து குஷியாக நடக்கும் மகளை பார்த்தபடியே கஞ்சியைப் பருகத்
துவங்கினாள் பிரபா.
கடந்த சில
மாதங்களாக குழந்தையைப் பற்றிய இந்த விஷயத்தை எங்ககிட்ட கூட சொல்லாம உனக்குள்ளயே வச்சுக்கிட்டு
எவ்வளவு வேதனைப் பட்டிருப்பேன்னு நினைச்சா பெத்த மனசு கலங்குது பிரபா. இனி அப்பா அம்மா துணையில
எல்லாத்தையும் சமாளிக்கலாம்னு தைரியமா இரு.
நமக்கு ஆண்டவன் துணையிருப்பாரு........ இப்ப கொஞ்சநேரம் தூங்கு. மகளைப்
படுக்கச் செய்தாள் பார்வதி.
நடந்த
விஷயங்களெல்லாம் விநாயகம் மூலம் அறிந்து கொண்ட மூத்த மகள் பூர்ணிமா கணவன்
விக்னேஶ்வருடன் மறுநாளே கிளம்பி வந்து விட்டாள். பிரபா, நீ எடுத்த முடிவு ரொம்ப சரி. இனி
எதற்கும் கவலைப் படாதே. உன் ரெண்டு குழந்தை களையும் நல்லபடியாக வளர்த்து ஆளாக்கும்
பொறுப்பை உன் பெற்றோருக்கு இணையாக
நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இதற்கெல்லாம் முதற்படியாக நீ உன் உடல்நலத்தை
பார்த்துக்கொள். குழந்தையையும் கவனித்துக் கொள். இந்த சமயத்தில் குழந்தைக்கு
பாடும் சாக்கில் உனது இசைத்திறனையும் தூசி தட்டிப் புதுப்பித்துக் கொள். நீ
முன்பெல்லாம் அடிக்கடி பாடுவாயே,ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போர்களமே என்ற பாட்டின் வரிகளின் நிதர்சனத்தை
புரிந்துகொண்டு போராடத் துவங்கு. நாங்கள் எல்லாரும் துணைநிற்கிறோம். விக்னேஷ்வரின் வார்த்தைகள் பிரபாவுக்கும் பெற்றோர்களுக்கும்
தெம்பையும் தைரியத்தையும் கொடுத்தது.
விநாயகத்திடம்
தனிமையில் நாமே பணத்தைக் கட்டி பிரபாவை டிஸ்சார்ஜ் செஞ்சு கூட்டிட்டுப் போயிடலாம்.
நீங்க ஆபிஸில் கேட்டு தொகையைச் சொல்லுங்க என்றவரை இல்ல மாப்பிள்ளை பிரபா பிரசவச் செலவுக்குன்னு
நான் ஏற்கனவே பணம் தயாராக வச்சிருக்கேன் என்று மறுத்து அவர்கள் உதவியோடு பிரபா
குழந்தையை வீட்டிற்கு அழைத்துவந்து விட்டார். பூர்ணிமா வேண்டுமானா கொஞ்சநாட்கள் இங்க
இருந்தா உங்களுக்கு உதவியா இருக்குமில்லை எனறு கேட்க பார்வதி வேண்டாம் மாப்பிள்ளை
வயசான உங்க அப்பா அம்மா ஏற்கனவே மூணு நாளாக உங்க பசங்களைப் பாத்திட்டிருக்காங்க.
இப்ப ஏதும் சிரமமில்லை நாங்க சமாளிச்சுக்குவோம்.
அடுத்தமுறை பசங்களுக்கு லீவு நாளாப் பார்த்து பசங்களோட
அவங்களையும் அழைச்சிட்டு வாங்க அப்ப குழந்தைக்கு
பேர் வச்சு வீட்டுவரைக்கும் கொண்டாடிலாம் .
ஆமாம் அம்மா விஷயத்தைக் கேள்விபட்டு மாமாவும் அத்தையும் ரொம்பவே அதிர்ச்சி
ஆயிட்டாக. உடனடியா எங்களை கிளப்பினதே அவங்கதான். இன்னும் ௐரு மாசத்தில ஸ்கூல் லீவு விடுவாங்க இல்லியா அப்ப எல்லாருமா வரோம். ரம்யாகுட்டி தம்பிக்கு நல்ல
பேரா யோசிச்சு வை இருவரும் கிளம்பிச்
சென்றனர். கிளம்புவதற்கு முன் பிரபாவிடம் ௐரு பணக் கவரை திணித்து மறுக்காம லாங்கிக்க அவசரத் தேவைக்கு இருக்கட்டும் என்று கொடுத்தனர்.
அவர்கள்
கிளம்பிச் சென்ற மறு நாள் காலை ௐரு ஆட்டோவில் வந்த ராகவன் வாசலில் நின்றபடியே
விநாயகம் என்று குரல் எழுப்ப, மனைவி சகிதம் வெளியே வந்தார் உள்ள வாங்க மாப்பிள்ளை என்றவரை நான் உமக்கு
மாப்பிள்ளையே இல்லன்னு ஆனப்பறம் நான் எதுக்கு உள்ள வரணும் உம்பொண்ணோட சாமான்எல்லாம்
விட்டெறியத்தான் வந்தேன். கூடவே உம்ம பேத்தியோட பை புத்தகம் எல்லாமிருக்கு. இனி
அவங்க நிழல் கூட எங்க பக்கம் வரக்கூடாது,
பெருங்குரலில் பேசிக் கொண்டே சமான்களை வீசி விட்டுப் போகிறவனை
செய்வதறியாமல் இருவரும் பார்த்துக்கொண்டு நிற்க குழந்தையை மடியில் வைத்துக்
கொண்டிருந்த பிரபா கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
சொன்னபடியே
குழந்தைக்கு ஓரு மாதம் முடியும் சமயம் பூர்ணிமா கணவர் குழந்தைகள் மாமியார்
மாமனாருடன் வந்திருந்து பெயர் சூட்டும் வைபவத்தை அண்டை அயல் வீட்டினர் சூழ நிறைவாக
நடத்தினாள். ரம்யாவின் ஆசைப்படி குழந்தைக்கு ஹரிஹரன் எனப் பெயரிட்டு ஹரி எனக் கூப்பிடத் துவங்கினார்கள். பட்டப் படிப்பை
முடித்திருந்த பிரபா அருகிலிருந்த கணிணி
வகுப்பிற்குச் சென்று பயிற்சி எடுக்கத் துவங்கியதோடு மாலை நேரங்களில்
குழந்தைகளுக்கு பாட்டு வகுப்பும் எடுத்து வந்தாள். அம்மாவின் நிலை புரிந்து
ரம்யாவும் சமர்த்தாக தன் படிப்பில் சிறந்து விளஹ்கியதோடு மட்டுமல்லாமல்
பாட்டிக்குஉதவியாக குழந்தையையும் தாய்மை உணர்வோடு பார்த்துக் கொண்டாள். ஹரியும்
பெயருக்கேற்ப குட்டிக் கண்ணனாய் எல்லார் மனத்தையும் கவரும் குழந்தையாய் நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாய் வளர்ந்து வந்தான். மனதில் கொண்டிருந்த உறுதியும் குழந்தைகளின்
முன்னேற்றம் என்ற எண்ணத்துடன் விக்னேஷ்வர்
போன்ற நல்ல உள்ளங்களின் தொடர் ஊக்கமும் சேர்ந்து இயல்பிலேயே புத்திசாலியான பிரபாவிற்கு
ௐரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கவும் வழிவகுத்தது.
குழந்தைக்கு
மூன்று வயது முடிவதற்குள் விநாயகம் பணிௐய்வு பெற்றுவிட்டார். ஹரியின் உடல்நிலையில்
பெரிய அளவில் முன்னேற்றம் ஏதுமில்லை. மாறாக அவனது புத்தி கூர்மை பலமடங்கு அதிகமாக
இருந்தது. அவனை பள்ளிக்குத் தூக்கிச் செல்வது விநாயகத்திற்கும் பிரபாவிற்கும்
சிரமமாகிய நிலையில் விக்னேஷ்வரின் யோசனைப் படி ஒரு கார் வாங்கி நல்ல ஓட்டுனரும்
அமர்த்தப் பட்டார்.
ஹரியின் இனிமையான
சுபாவமும் கலகலப்பும் அறிவுக் கூர்மையும் பள்ளியில் அவனுக்கு ஓரு நட்பு
வட்டாரத்தையே உண்டாக்கி இருந்தது. சகமாணவர்கள் மட்டுமல்ல பல சமயங்களில்
ஆசிரியர்களும் அவனுக்கு மகிழ்ச்சியோடு உதவிக்கரம் நீட்டி அவன் மனதிள் தாழ்வு மனப்பான்மை தோன்றாதபடி செய்துவிட்டனர்.
காலம் தான்
எத்தனை வேகமாகப் .பறக்கிறது பள்ளியிறுதித் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற
ரம்யாவிற்கு நகரத்திலன் சிறந்த பொறியியல்
கல்லூரியில் சுலபமாக அட்மிஷன் கிடைக்க குடும்பமே குதூகலிதுத்தது. அப்போது
பத்தாம் வகுப்பில் நுழைந்திருந்த ஹரி எனக்கும் அக்கா மாதிரி இனஜினியர் ஆகணும்னுதான்
ஆசை. ஆனா அது முடியாதில்லையா அதனால நான் காமர்ஸ் படிச்சு ஆடிட்டராகப் போறேன்
தாத்தா என்றான். நீதாண்ட என்னைவிட புத்திசாலி நீ நிச்சயமாக பெரிய அளவுல ஜெயிக்கப்
போறே பார் என்று அவனை ரம்யா அணைத்துக் கொண்டாள்.
ரம்யாவின்
வாக்குப் பொய்க்கவில்லை. பத்தாவதுப் பொதுத் தேர்வில் முக்கிய பாடங்களில்லாம் முழு மதிப்பெண் பெற்று
மாநில அளவில் முதன்மை ராங்க் வாங்கிய ஹரியை பள்ளியும் அண்டை அயலாரும் பாராட்டி
மகிழ்ந்தனர். உடனடியா கிளம்பி வர முடியலை பிரபா. சந்தோஷத்தில என்ன பேதறதுன்னே
தெரியலை வீடியோ காலில் பூர்ணிமா குடும்பமே குதூகலிக்க இதுக்கெல்லாம் மூலகாரணமே
நீங்கதான் மாமா நெகிழ்ந்த குரலில் சொன்ன பிரபா இப்ப. தொலைக்காட்சியிலேந்து ஹரியை
பேட்டி எடுக்க வராங்களாம்..... நேரலையா காட்டுவாங்க போல என்றாள்.சீக்கிரம் நீங்க
எல்லாம் ரெடியாகுங்க. நாங்களும் டி.வி முன்னாடி தயாரா உட்காருகிறோம்.
பேட்டிதுவங்கியது. வாழ்த்துக்கள் ஹரி. உன்னுடைய இந்த
சாதனைக்கு உன்கடும் உழைப்பு முதற் காரணம் என்பது தெரிந்த விபரம் இது பற்றி நீ ஏதும்சொல்ல
விரும்புகிறாயா நிருபர் கேட்க, ஓரு நிமிட மௌனத்திற்குப் பின் ஹரிபேசத்துவங்கினான்.
எனது இந்த
வெற்றிக்கு உறு துணையாய் நின்ற என் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் குடும்ப
உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் வெறும் வாய் வார்த்தைகளால் நன்றி கூறுவது இயலாத
ஓன்று. ஆனால் இந்தப் பேட்டியின் வாயிலாக இதுவரை நான் பார்த்ததே இல்லாத ஓருவருக்கு
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன். என் பிறப்பிற்குக்
காரணமானவரும் என் தாயின் கணவருமான ஸ்ரீமான் ராகவன் என்பவர் தான் அது. என் ஊனத்தின்
காரணமாய் என்னை அவர் ஓதுக்கியதன் விளைவே எனது தன்னம்பிக்கையை வளர்த்து உதாசீனங்கள்
என்னை நெருங்காத சூழ்நிலையில் என்தாய் தாத்தா பாட்டி பெரியப்பா பெரியம்மா அக்கா
ஆகியோரின் அன்புக்கிடையே நான் வளர்ந்து. இந்த உயரத்தை எட்ட முடிந்தது.
ஓளிபரப்பான
பேட்டியை பார்த்த மனநிறைவில் மாறி மாறி வரும் போன்களுக்கும் நேரில் வாழ்த்து
கூறியவர்களுக்கும் பதில் சொல்லி இரவு உணவு உண்டபின் வாயிற் கதவைப் பூட்டச் சென்ற
பிரபா செல்போன் ஓலிக்க அதை எடுத்தாள்.
பிரபா, நான்தான் ராகவன். நம்ம மகன் பேட்டியைப் பாத்தேன். ரொம்ப பெருமையா
இருந்தது. தயவு செய்து போனை கட் பண்ணாம நான் சொல்றதை கேளு. அம்மா ஸ்ட்ரோக் வந்து
படுத்த படுக்கையாகிட்டா. ஆனா அவளோட மோசமான சுபாவத்தால வர ஆளுங்க யாரும்நிலைச்சு
நிக்கறதில்லை. எனக்கும் ஓழுங்கான சாப்பாடு
இல்லை.ஆபிஸ் போறதே பெரும்பாடா இருக்கு. பேசாம நீயும் குழந்தைகளும் இங்கவந்துட்டா.........
...தொடர்ந்து பேச வருபவனை நிறுத்தும் விதமாக
ஹலோ நீஙக யாருன்னே தெரியலை.
உங்க பிராபளம் எல்லாம் எங்கிட்ட
எதுக்கு சொல்றீங்க. பணத்தை விட்டெறிஞ்சா உங்க அம்மாவுக்கு எவ்வளவோ முதியோர் இல்லம்
கிடைக்குமே. போனை கட் செய்து நம்பரையும் பிளாக் செய்தாள். யாரும்மா போனில் எதோ ராங்
நம்பர் அப்பா சொன்னபடியே கேட்டைப் பூட்டினாள் பிரபா.
Comments
Post a Comment