ரௌத்திரம் பயில்
மணி ஏழாவுது. இன்னும் உங்க மருமகளுக்குப் பொழுது விடியலை போல. காப்பித் தண்ணி இல்லாம தொண்டை வறண்டு போவுது.” முகத்தைச் சுருக்கிக் கொண்டு பேசும் மனைவியை முறைத்தாவாறே பால் அடங்கிய கடையையும் தினசரி பேப்பரையும் எடுத்துக் கொண்டு உள்ளே வந்த கனகலிங்கம் , “ஏங் காமாட்சி, இன்னிக்கி ஒருநாள் நீதான் காபி போடேன் .” சொல்லிக் கொண்டே பால் கடையை சமையலறை மேடையில் வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து உட்கார்ந்தவர் , மேலும் தொடர்ந்தார் . கவர்கள் “இன்னிக்கு அவங்க ரெண்டு பேருக்கும் லீவு. போதாமைக்கு நேத்து ராத்திரி உம்பிள்ளை மாடியில செஞ்ச கலாட்டாவையும் கத்தலையும் கீழே உக்காந்து கேட்டு ரசச்சுக்கிட்டு தானே இருந்தே. வாசக் கதவைப் பூட்ட வந்த பிரபுவை என்ன ஆச்சுன்னு கேட்டா, எல்லாம் இந்தப் பாட்டியாலதான் நாத்தான்னு!' கோபமா சொல்லிட்டுப் போறான் . கூடவே தண்ணி பாட்டில் எடுக்க வந்த சைலா, “அப்பா அம்மாவை ரொம்ப அடிச்சிட்டாரு தாத்தான்னு' சொல்லி அழுவுது..." “பொம்பளைங்க புருஷனை எடுத்தெறிஞ்சு பேசினா, வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான் !” “பொம்பளைங்க புருஷனுக்கு அடங்கிப் போறதைப் பத்தி நீ பேசறயா?” எனத் தலையில் அடித்தக் கொண்டே பேப்பரை ...