Posts

Showing posts from May, 2025
  காலத்தினால் செய்த நன்றி   சாந்தி நாதன்.   குறு   நாவல் அத்தியாயம்    1     "கந்தா   கதிர் வேலவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே " கந்தர் அனுபூதிப் பாடலை முணுமுணுத்தவாரே    தோட்டத்துக்குள் நுழைந்தாள் கமலம். பங்குனி மாத நடுவிலேயே கோடையின் தாக்கம் அதிகமாக   விடியல் நேரத்திலேயே தெரிந்தது.   ஆனால் நேற்று மாலை செடிகளுக்கு பாய்ச்சிய நீரால் குளிர்ந்திருந்த மண்ணின் ஈரமும் சலசலக்கும் இலைகளிலிருந்து   எழுந்த   குளிர் காற்றும் வெம்மையை குறைத்து சில்லென்ற உணர்வைத் தர , செடிகளிலிருந்து பூக்களைப் பறிக்கத் துவங்கினாள் கமலம்.      சிறிது அருகம்புல் , துளசி , நந்தியாவட்டை , அரளி , வெள்ளை , மஞ்சள் , ரோஸ் , சிகப்பு நிறங்களில் பூத்திருந்த செம்பருத்திப் பூக்கள் என்று பறித்து முடித்து அங்கிருந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்து கொண்டு பார்வையை சுழலவிட்டாள்.   இடம் சிறியதாக இருந்தாலும் அந்தந்த பூச்செடிகளின் தன்மைக்கேற்றவாறு இடம் தேர்வு செய்து , கச்சிதமாக பாத்திகள்   கட்டி , தினமும் தண்ணீர் ஊற்று...