Posts

Showing posts from December, 2023
  மேன்மக்கள்   மேன்மக்களே   சாந்தி நாதன்   பகல் 1 மணியிருக்கும்‌ சாப்பிட்டு விட்டுச்‌ சோபாவில்‌: அரைத்‌ தூக்கத்தில்‌ இருந்த சரஸ்வதி காலிங்பெல்‌ ஒலியால்‌ எரிக்சல்‌ அடைந்து விழித்துக்‌ கொண்டாள்‌. வாசற்கதவைத்‌ திறந்தவள்‌ அருமை மகள்‌ பூர்ணிமாவைக்‌ கண்டதும்‌ முகம்‌ மலர்ந்தாள்‌.   “என்னம்மா தூக்கமா? தனியாவா இருக்கே? அண்ணா,அப்பா, உன்‌ அருமை மருமகள்‌ யாருமில்லையா?” படபடவெனப்‌ பேசிக்கொண்டே சோபாவில்‌ அமர்ந்தாள்‌ பூர்ணிமா.   **அப்பா சாப்பிட்டு விட்டுப்‌ படுத்துண்டு இருக்கார்‌. உன்‌ அண்ணா. ஆபிஸ்‌ டூரில்‌ கல்கத்தா போயிருக்கான்‌ வர இரண்டு நாளாகும்‌. உன்‌ அண்ணி வீடெல்லாம்‌ கிளீன்‌ செய்யறேன்னு வேலைக்காரி சொர்ணாவுடன்‌ இத்தனை நேரம்‌ மாடிக்கும்‌ கீ ழுக்கும்‌   போயிட்டு இப்பத்தான்‌ குளிக்கப்‌   போயிருக்கா. இனிமேல்‌ தான்‌ சாப்பிட வருவா'” என்றாள்‌.   “ நீ இன்னும்‌ சாப்பிடாமல்‌ இருக்கியா? ஞாயிற்றுக்‌ திழமைன்னா கூட வேளையோடு சாப்பாட்டுக்‌கடையை முடிக்க மாட்டீங்களா”? “ எனக்கு ஏதுடி ஞாயிற்றுக் கிழ மை”? வழக்கம்‌ போல்‌ காலையில்‌ எழுந்து சமையலை முடி...