நியாயத்தின் மறுபக்கம்
நியாயத்தின் மறுபக்கம் -சாந்தி நாதன் “அப்பா,அம்மா ரெடியா? கல்யாண மண்டபம் இங்கிருந்து ரெம்ப தூரம். பெங்களூர் டிராஃபிக்கில் இப்ப கிளம்பினாதான் நீங்க கரெக்டான நேரத்துக்குப் போய் சேர முடியும்.” அலுவலகம் செல்லத் தயாராக மாடியிலிருந்து இறங்கியவாறே கௌசிக் கேட்க, “இதோ நாங்க ரெடி. பட்டு வேட்டி சட்டையில் சுந்தரமும் அவருக்குப் பின்னால் புடவையை சரி செய்தவாறே வசுமதியும் வந்தனர். நெருக்மாககக் கட்டிய மல்லிகைப் பூவை மருமகள் கலா, “அத்தை இந்தாங்க “ என்றபடி நீட்ட, “ஏம்மா நீ வச்சுக்கலை? ஆர்த்திக்கும் வைக்கலை போலிருக்கே” பள்ளிச் சீருடையில் நிற்கும் பேத்தியைப் பார்த்துக் கொண்டே கேட்டாள். சாயங்காலம் வந்து விளக்கேற்றிய பிறகு நான் வச்சுப்பேன். ஸ்கூலுக்குப் பூவெல்லாம் வைக்கக் கூடாது “ பதில் சொல்லியபடியே தனக்கும் கணவனுக்கும் காலை உணவுக்குத் தட்டுகள் வைத்தாள். ...