Posts

Showing posts from April, 2024

உள்ளத்தனையது உயர்வு சாந்தி நாதன்

  உள்ளத்தனையது     உயர்வு சாந்தி   நாதன்       ௐரு கையில் பருப்பு சாதக்கிண்ணத்தையும் மறு கையால் சுற்றிச் சுற்றி ௐடும் மகனைப் பிடித்து நிறுத்திக் கொண்டும், நவின் சாப்பிடு என்று மிரட்டி, அவன் வாயில் உணவைத் திணித்துக் கொண்டிருந்தாள் லதா. பாதி விழுங்குவதும் மீதியைத் துப்புவதுமாக ஆட்டம் காட்டும் மகன் மீதும் கடந்த மூன்று நாட்களாக   வேலைக்கு வராமல் கழுத்தறுக்கும் மீனாவின் மீதும் லதாவிற்குக் கோபமாக வந்தது. டேய் ௐழுங்காக சாப்பிடப் போறயா இல்லையா என்று ௐரு அடி கொடுத்து டேபிளில் உட்கார வைத்தவுடன் ஓ என்று அலறத் வங்கினான் நவீன்.     என்னடா ரொம்ப கலாட்டா பண்ற   ௐழுங்கா சாப்பிடு மகனை அதட்டியவாறே அங்கு வந்த ஸ்ரீதர் என்ன இன்னிக்கும் மீனா வரலையா போன் செஞ்சாளா   அவ ௐண்ணும் பண்ணலை நான் பண்ணினபோதும் ஸ்விட்ச் ஆப்னு வரது.   இன்னிக்கு பேசாம லீவ் போட்டுடலாம்னு பாக்கறேன் சொல்லிக் கொண்டே மகனை தூக்கிக் கொண்டு குளியலறையில் நிற்க வைத்து ஆடையிலும் உடலிலும் முழுதும் அப்பிக் கொண்டிருந்த உணவை அப் புறப் படுத்தி குளிப்பாட்டி உடை மாற்றி ...

உன் கண்ணில் நீர் வழிந்தால்........ சாந்தி நாதன்

    உன்    கண்ணில்    நீர்     வழிந்தால்........ சாந்தி நாதன்   இரவு மணி ஒன்பதரை இருக்கும் வரவேற்பறையில் அமர்ந்து மடிக்கணிணியில் ஸ்வேதாவும் சத்யனும் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, படுக்கையறையில் சுலோச்சனா நிகில் ஸ்ரேயாவை தூங்க      வைக்கும் முயற்ச்சியில் இருந்தாள்.    இரண்டு கதை சொல்லியாச்சு இன்னும் உங்களுக்குத் தூக்கம் வரலையா, நாளைக்குப் பள்ளிக் கூடம் போகவேண்டாமா, கேட்கும் சுலோசனாவை ஏறிட்ட நிகில், பாட்டி இன்னும் பத்து நாளில் நான், ஸ்ரேயா அப்பா, அம்மா ஊருக்குப் போறோமே நீங்க எப்படித் தனியா இருப்பீங்க   ஏன் எங்க கூட வரலை என்றான். அங்க ரொம்ப குளிரா இருக்குமாம். வயசானவாளுக்கு அங்கெல்லாம் ஒத்துக்காதாம் அதான்....அப்பன்னா அங்கெல்லாம் தாத்தா பாட்டியே இருக்கமாட்டாளா என்று அண்ணனைத் தொடர்ந்த ஸ்ரேயா ,அங்க எங்க ரெண்டு பேரையும் யார் பாத்துப்பா யார் சாதம் பண்ணுவா கவலையோடு கேட்க, ஸ்ரேயாவின் கன்னத்தை வருடியவளாய், அம்மா உங்க கூட வீட்டில் இருப்பா   இப்போதைக்கு அப்பா மட்டும் தான் ஆபிஸ் போவா .நான் தினமும்...