உன் கண்ணில் நீர் வழிந்தால்........ சாந்தி நாதன்
உன் கண்ணில்
நீர் வழிந்தால்........ சாந்தி
நாதன்
இரவு மணி ஒன்பதரை இருக்கும் வரவேற்பறையில் அமர்ந்து
மடிக்கணிணியில் ஸ்வேதாவும் சத்யனும் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க,
படுக்கையறையில் சுலோச்சனா நிகில் ஸ்ரேயாவை தூங்க வைக்கும் முயற்ச்சியில் இருந்தாள்.
இரண்டு கதை
சொல்லியாச்சு இன்னும் உங்களுக்குத் தூக்கம் வரலையா, நாளைக்குப் பள்ளிக் கூடம்
போகவேண்டாமா, கேட்கும் சுலோசனாவை ஏறிட்ட நிகில், பாட்டி இன்னும் பத்து நாளில்
நான், ஸ்ரேயா அப்பா, அம்மா ஊருக்குப் போறோமே நீங்க எப்படித் தனியா இருப்பீங்க ஏன் எங்க கூட வரலை என்றான். அங்க ரொம்ப குளிரா
இருக்குமாம். வயசானவாளுக்கு அங்கெல்லாம் ஒத்துக்காதாம் அதான்....அப்பன்னா
அங்கெல்லாம் தாத்தா பாட்டியே இருக்கமாட்டாளா என்று அண்ணனைத் தொடர்ந்த ஸ்ரேயா ,அங்க
எங்க ரெண்டு பேரையும் யார் பாத்துப்பா யார் சாதம் பண்ணுவா கவலையோடு கேட்க, ஸ்ரேயாவின்
கன்னத்தை வருடியவளாய், அம்மா உங்க கூட வீட்டில் இருப்பா இப்போதைக்கு அப்பா மட்டும் தான் ஆபிஸ் போவா
.நான் தினமும் உங்க கூட போனில் பேசுவேன் .நீங்களும் எனக்கு இங்க சொல்ற மாதிரி உங்க
புது பள்ளிக்கூடம் ,ஊரைப் பத்தி எல்லாம் சொல்லனும். இப்ப ஸ்வாமியை வேண்டிண்டு சமத்தாத்
தூங்கணும் என்றாள் சுலோசனா. பேசாம நாம எல்லாரும் எப்பவும் போல இங்கியே
சேர்ந்திருக்கலமில்லையா நிகில் அலுத்துக்கொள்ள, அப்படியெல்லாம் சொல்லக் கூடாது கண்ணா
அப்பாவுக்கு அங்க பெரிய வேலைக் கிடைச்சிருக்கு. அங்க உங்களையெல்லாம் நிறைய
இடங்களுக்கு அப்பா கூட்டிண்டு போவார் .ஜாலியா இருக்கும். பாட்டிக்கு அந்த போட்டோவெல்லாம் அனுப்பலாம். சரி ரொம்ப நேரமாறது
.சமத்தா தூங்குங்கோ பாக்கலாம்...... ஒரு
வழியாக இருவரும் தூங்கி விட அறையை விட்டு வெளியே வந்தாள் சுலோசனா.
குழந்தைகள்
வாய்விட்டு அவங்க மனசில் இருப்பதை சொல்லிடறாங்க. உங்களை இங்க தனியா விட்டுட்டுப் போகப்
போறதை நினைச்சு நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு கவலைப் படறோம்ங்கறதை சொல்லத் தெரியலை.
என்ற சத்யனைத் தொடர்ந்து ஆமாம்மா கடந்த
பத்து வருஷமா வீட்டுப் பொறுப்பு, குழந்தைகள் வளர்ப்புன்னு எல்லாத்தையும் உங்ககிட்ட
ஒப்படைச்சிட்டு கவலையேயில்லாம நாங்க ஆபிஸ், மாலைக் கல்லாரி, பரிட்சைன்னு ஓடிண்டு
இருந்தோம். பெற்றவர்கள் அன்பையே
அனுபவித்திறாத எங்களுக்கு ஒரு சிறந்த அம்மாவா எங்க குழந்தைகளுக்கு பாசமான பாட்டியா
ஒவ்வோண்ணையும் கவனிச்சு எவ்வளவு அழகா செஞ்சிருக்கீங்க நீங்க இல்லைன்னா நாங்க
வாழ்க்கையில இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்க முடியுமா குரல் கம்ம பேசும்
ஸ்லேதாவை ஏறிட்டுப் புன்னகைத்தாள் சுலோசனா.
உங்க ரெண்டு
பேரையும் பாக்கறப்ப என் மனசெல்லாம் பூரிச்சுப் போறது. உங்க வீட்டு வாசல்ல அனாதையா
வந்து நின்ன எனக்கு வீட்டில தங்க இடம்
கொடுத்து தாயா நினைச்சுப் பரிவு காட்டி ஆதரிச்ச உங்களையும் உங்க குழந்தைகளும் நான்
பார்த்துக்கிட்டது ஒரு பெரிய விஷயமா இப்ப மட்டும் என்ன பெரிய வேலை கிடைச்சு
வெளிநாடு போற உங்களுக்கு இருக்கும் பல வேலைகளுக்கு இடையே என்னை ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு
அலைஞ்சுத் தேடிக்கண்டு பிடிச்சிருக்கற இடத்தில் தானே என்னை விட்டுட்டுப் போகப்
போறீங்க....உங்க ரெண்டு பேரோட உயர்ந்த மனசும் குழந்தைகளோட மாசு மருவிலாத அன்பும்
வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச.பெரிய பாக்கியமா...... நான் நினை.க்கிறேன்........
சரி ரொம்ப நேரமாறது. போய் படுங்க சொ ல்லிக்கொண்டேதன் அறைக்குள் சென்றாள் சுலோதனா.
தூக்கம் வராமல்
புரண்டு கொண்டிருந்த சுலோசனாவின் மனதில்
பழைய நாட்கள் நிழற்படமாய் விரியத் துவங்கியது. மளிகைக் கடை கணக்கனுக்கு
வாழ்க்கைப் பட்ட சுலோசனா அவரது சொற்ப
வருமானத்தில் சிக்கனமாகவும் கௌரவமாகவும் வாழ்க்கையை நடத்திவந்தாள். திருமணமாகி சில
வருடங்கள் குழந்தை பேறின்றி வருத்தமுற்றிருந்த அவர்கள் குறை நீங்க ஒரு மகன் பிறக்க
பெற்றோர் இருவரும் பூரித்துப் போனார்கள். ஒரே மகன் என்று பெற்றவர் இருவரும்
அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து அவனது ஆசைகளையெல்லாம் நிறைவேற்றி வளர்த்ததின்
விளைவாக ஒரு தத்தாரியாக வளர்ந்தான் மகன் சந்துரு. ஒழுங்காகப் பள்ளிக்குப் போகாமல்
வேண்டாத தீய பழக்கஙகளுக்கு ஆளான மகனைத் திருத்தமுடியாமல் அந்த கவலையிலேயே உடல்
நலம் கெட்டு கணவர் இறந்துவிட சுலோசனா நிலைகுலைந்து போனாள். வயிற்றுப்
பிழைப்புக்காக கூப்பிடும் வீடுகளுக்குச்
சென்று சமையல்செய்வது, ஒழிந்த நேரங்களில் வத்தல், வடகம் செய்து விற்பனை செய்வது
என்று கிடைக்கும் காசில் மகன் வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டு மிஞ்சியதை போதும் போதாமலும் சாப்பிட்டு நாட்களைக்க
கடத்தினாள் மகன் தன்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை
சிறிதும் இல்லாவிடினும் அவன் பிழைப்புக்கு ஏதேனும் வழி வேண்டுமே என்ற எண்ணத்தில் பள்ளிப் படிப்பையே
முடிக்காத அவனுக்காக தெரிந்தவர்களிடம் கெஞ்சி ஒரு தொழிற்சாலையில் வேலை வாங்கித்
தந்தாள். சிறிது நாட்கள் அமைதியாகக் கழிய திடீரென்று ஒரு நாள் ஒரு பெண்ணோடு கைகோர்த்துக் கொண்டுவந்த
சந்துரு இவ அருணா. நான் இவளைக் கல்யாணம் பண்ணி கூட்டிண்டு வந்திருக்கேன். இவ இனிமே
இங்கு தானிருப்பா என்று அறிக்கை விட்டவனாய் அம்மாவைத் தாண்டிக்கொண்டு அவளோடு உள்ளே
சென்று அறைக் கதவை சார்த்திக்கொண்டான்.
அருணாவின் அளவுக்கு
மீறிய தளுக்கும் குலுக்கும் சுலோசனாவை மட்டுமல்ல அண்டை வீட்டார்ளையும் முகம்
சுளிக்கச் செய்தது. ஆனால் சந்துருவோ தேன்
குடித்த நரியாய் அவளைச் சுற்றி வந்து கொண்டு அவன் சம்பாதிக்கும் சொற்ப தொகையையும் அவளது
ஆடம்பரத் தேவைகளுக்கே செலவழிக்கத் துவங்க மூன்று பேர்களின் வயிற்றப் பாட்டுக்காக
சுலோச்சனா அதிகமாக உழைக்க வேண்டியதாயிற்று .மகனும் அவளும் வீட்டில் இல்லாத
நேரங்கில் யார் யரோ அருணவைத் தேடிவருவதும் அவர்களோடு குழைந்து நெளிந்து பழகுவதும்
அவர்களோடு அரைகுறை ஆடை அலங்காரத்தில் வெளியே சென்று வருவதும் அடிக்கடி நிகழ
அக்கம் பக்கத்தினர் சுலோசனாவிடம் இது குறித்து முறையிடத் துவங்கினர். ஒரு நாள் வேலை சீக்கிரம் முடிந்ததில் முன்னதாவே
வீடு திரும்பிய சுலோச்சனா அருணா வேறு ஆடவனுடன் இருக்கும் அவலத்தைக் கண்டு கொதித்தெழுந்தாள்.
மருமகளை ஆத்திரம் தீர திட்டி அவனையும் விரட்டி அடித்தாள். இரவு வீடு திரும்பிய
சந்துரு அருணா நீலிக் கண்ணீரின் இடையே சுலோச்சனா
அவளைக் கொடூரமாக நடத்துவது போல் நடித்த நாடகத்தை நம்பி பெற்றவளை வாய்க்கு
வந்தபடி திட்டியது மட்டுமல்லாமல் கை
நீட்டி அடித்தும் விட்டான்.இதற்கும் மேல் அவர்களோடு இருக்க விரும்பாத
சுலோச்சனா அன்று இரவே தன் சொற்ப உடைமைகளும் உழைத்து வந்த காசில் வீட்டின் செலவுகள்
போகத் தனியாக வைத்திருந்த காசையும் எடுத்துக் கொண்டு அந்தஊ ரை விட்டேக் கிளம்பிவிட்டாள்.
அறியா வயதில்
தாய் தந்தையை ஒரு விபத்தில் பறிகொடுத்த சத்யனை உறவினர்கள் ஆதரிக்க மனமின்றி ஒரு அனாதை
ஆசிரமத்தில் விட்டுவிட அவன் அங்கேயே வளர்ந்து பள்ளிக்கும் சென்று வரலானான். அதே
விடுதியில் தொட்டில் சிசுவாய் வந்து சேர்ந்த குழந்தை ஸ்வேதா என்று இல்லத்தினரால்
பேர் சூட்டிஅங்கு வளர்ந்து வந்தாள். அவர்களது
ஒத்த நிலையே இருவரையும் நட்ப்பை உருவாக்கி நாளடைவில் காதலர்களாகவும் ஆக்கிவிட்டது.
பள்ளிப் படிப்போடு இல்லத்திலிருந்து வெளியேறிய சத்யன் தன் முயற்சியால் ஒரு வேலை
தேடிக்கொண்ட தோடு மாலைக் கல்லூரியில் சேர்ந்து தன் கல்வித் தகுதியை யும் மேம்படுத்திக்
கொள்ளத் துவங்கினான்.கூடவே தக்க தருணத்தில் ஸ்வேதாவை இல்லத்தினரது ஆசியோடு
திருமணம் புரிந்துகொண்டு இல்லற
வாழ்க்கையைத் துவங்கினான். கணவனைப் போன்றே கிடைத்த வேலையில் அமர்ந்தவள் மாலைக்
கல்லூரிக்கும் சென்று வரலானாள். சத்யனின் கல்வி
முன்னேற்றத்தால் ஓரளவு நல்ல வேலையும் கிடைக்க அவர்கள் மகிழ்ச்சியை அதிகப்
படுத்தும் விதமாக ஸ்வேதா கருவுற்றாள். அலுவலகப் பணிகள், ,மாலைக் கல்லூரி, வீட்டு வேலைகள் என்று துவண்டுவிடும் ஸ்வேதாவிற்கு
சத்யன் எவ்வளவோ உதவினாலும் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்
இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒரு நாள் லேலை கேட்டுக் கொண்டு அவர்கள் வீட்டு வாயிலில்
சுலோசனா வந்து நிற்க, எங்களுக்கு உதவிக்கு ஆள் தேவைதான். ஆனால் சம்பளம் அதிகமாகக்
கொடுக்க முடியாது என்று சத்யன் தயங்க, எனக்குப் பணமெல்லாம் வேண்டாம்பா. இந்த அனாதைக்கு ஒரு பிடி சோறும் ஒண்டிக்க இடமும் போதும் என்று கூறி உள்ளே நுழைந்த
சுலோச்சனா கூடிய விரைவில் அவர்களின்
தாயாய்,, தாதியாய் அந்தக் குடும்பத்தில் ஒரு முக்கியமான நபராகிவிட்டாள் சுலோச்சனா.
இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ என்பதற்கொப்ப, குழந்தைகள் நிகில், ஸ்ரேயாவின்
அன்பு பாட்டியாய் கண்ணும் கருத்துமாய் அவர்களை வளர்த்தாள். சத்யனது விடா முயற்ச்சியும்
உயர் கல்வித் தகுதியும் அலுவலகப்பணியில் தகுந்த
முன்னேற்றத்தைப் பெற காரணமாகி இன்று அவன் வாழ் நாள் கனவான வெளிநாட்டில் நல்ல வேலைக்கும் வழிவகுத்து
விட்டது. இன்னும் பத்து நாட்களில் அவர்கள் கிளம்பப் போகின்றனர்.
இரவு தாமதமாகத்
தூங்கியதன் காரணமாக காலை சிறிது நேரம் கழித்து லேட்டாக கண் விழித்த காரணமாக பரபரப்பாக வேலைகளை
செய்து கொண்டிருந்தாள் சுலோச்சனா. அம்மா சாயங்காலம் நாங்க சீக்கிரம் வந்துவிடுவோம்
.நீங்க தயாராயிருங்க. உங்களைச் சேர்க்கப் போகும் இல்லத்திற்குப் போயி உங்களுக்குத்
திருப்தியாயிருக்கான்னு பார்க்கணும்.
குழந்தைகள் பெற்றோர் நால்வரும் கிளம்பிச் சென்றபின் வழக்கம்
போல் அருகிலிருக்கும் கோவிலுக்குக் கிளம்பினாள் சுலோச்சனா. அதற்குள் வீட்டி வேலைகளை முடித்துவிட்டு அவள்கொடுத்த டிபனையும் காப்பியையும்
திருப்தியாக உண்டு முடித்த வேலைக்காரி பொன்னம்மாளும் அவளுடன் பேசிக்கொண்டே
வந்தாள். அய்யா, அம்மா பங்க எல்லாம் உன்னைப் பிரிஞ்சு எப்பி இருக்கப் போறாங்களோ
தெரியலை. எனக்கும் உன்ன மாதிரி யாரு
இப்படி வயிராற சோறு குடுப்பாங்க....சரி என் வீடு வந்திடிச்சு வரேன் என்று விடைபெற்றுச்
சென்றாள்.
மாலை வீடு
திரும்பிய சத்யன் தம்பதிகள் அம்மா, நீங்க ரெடியாகலையா என்று குரல் கொடுக்க, அப்பா,
பாட்டி ரொம்ப வருத்தமா இருக்காங்க. ஸ்கூலில் இருந்து வந்த எங்களோடு ரொம்பப்
பேசவேயில்லை நிகில் கிசுகிசுக்க ஆமாப்பா என்று ஸ்ரேயவும் தலையாட்டினாள். என்னம்மா
உடம்பு ஏதும் சரியில்லையா பதறிக்கேட்கும் ஸ்ரேயாவிடம் அதெல்லாம் ஒண்ணுமில்லை.
ரெண்டு பேரும் கொஞ்சம் உக்காருங்க. காபியா டீயா என்னவேணும் கொண்டு வரேன்
அதுக்கப்பறம் நான் உங்களோடகொஞ்சம் பேசணும் என்றாள். நீங்க உக்காருங்க நான் போய்
எல்லாருக்கும் ஜூஸ் போட்டு எடுத்துண்டு வரேன் ஸ்வேதா உள்ளே சென்று ஜூஸ் நிரம்பிய கோப்பைகளுடன்
வந்து குழந்தைகளின் கையிலும் கொடுத்து நீங்க போய் டி.வி பாருங்க என்று அங்கிருந்து அனுப்பினாள். மௌனமாக மூவரும் ஜூஸ்
பருகி முடித்தபின் உங்க வீட்டுக்கு முதன் முதலாய் நான் வந்தப்ப ஒரு அநாதைன்னு சொன்னேனில்லையா. நிஜத்தில எனக்கு ஒரு
பையன் இருக்கான் ..... தொடர்ந்து தன்
கடந்த காலக் கதையை முழுவதுமாகக் கூறி சிறிது நிறுத்தினாள்.இவ்வளவு நாள் சொல்லாத
இதை நான் ஏன் இப்ப சொல்றேன்னு உங்களுக்குத் தோணும்....இன்னைக்குக் கோலிலில் என் பையனை கண் தெரியாத ஒரு பிச்சைக் காரனா
பார்த்த பாவத்தை சொல்லித் தானே ஆகணும். நான்
பயந்த மாதிரியே இவன் பெண்டாட்டிஇவனை விட்டுட்டு வேற ர்கூடவோ போயிட்டா. இந்த வருத்தத்தில மொடாக் குடியனாகி வேலை போச்சு.
காசில்லாததால எதை எதையோ குடிச்சு கண் பார்வையும் மங்க ஆரம்பிச்ச நிலையில்
வாடகைக்காக வீட்டு ஓனரும் கடன் கொடுத்தவர்களும் விரட்ட, பயந்து போய் திருட்டு
ரயிலேறி இந்த ஊருக்கு வந்திருக்கான். கோயில்ல அன்னதானம்னு கேள்விபட்டு அங்க
வந்தவன் நெரிசலில் மாட்டிண்டு அம்மான்னு கத்திண்டு இவன் கீழே விழுந்த சமயம்
பிரகாரத்தைச் சுத்திண்டு வந்த நான் இவனைப்
பார்த்தேன். பதறிப் போய் அவனை எழுப்பி மெதுவா வெளியில கூட்டிண்டு வந்து உட்கார
வச்சதும் நான் யார்னு தெரிஞ்சுண்டு நடந்த்யெல்லாம் சொல்லிக் கதறினான். பெத்த வயிறு
இல்லையா அன்னம்மா வீட்டுத் திண்ணையில அவனை உக்கார வச்சிட்டு வீட்டுக்கு வந்து
அவனுக்கு சாப்பாடு எடுத்துண்டு போயி சாப்பிட வச்சேன். அன்னம்மா புருஷன் உதவியோட
அவனை அழுக்குபோக குளிக்க வச்சு சத்யனோடபழைய வேஷ்டி சட்டையை உடுத்தக்
கொடுத்திட்டுவரேன். இதெல்லாம் செஞ்சதில் வீட்டுவேலைகள் முடிக்க லேட் ஆயிடுச்சு.
உங்க வாழ்க்கை
நிகழ்ச்சிகளைக் கேட்டா ஏதோ கதை மாதிரி தானிருக்கு.உங்களைத் தனியா விட்டுட்டுப்
போறோமேங்கற எங்க வருத்தம் நீங்கற மாதிரி கடவுள் உங்க மகனை உங்களோடளோட சேர்த்து
வச்சிருக்கார். வாங்க இப்பவே போயி உங்க பிள்ளையை இங்க அழைச்சிண்டு வரலாம். நாளைக்குப்போய் அந்த இல்லத்தில்
உங்க ரெண்டு பேரையும் சேர்க்க ஏற்பாடு செய்துடலாம். சத்யனை இடைமறித்து வேண்டாம்பா
அது சரிவராது. அன்னம்மா வீட்டுக்குப் பக்கத்தில ஒரு போர்ஷன் காலியா இருக்காம்
நாளைக்கேஉங்க அனுமதி யோட அதுக்கு அட்வான்ஸ் கொடுத்து எம்மகனோட அங்க தங்கிக்கறேன்.நீங்க
ஊருக்குப் போற வரைக்கும் இங்க வந்து எல்லா வேலையும் செஞ்சு கொடுத்திடுவேன். எம் மகனுக்கு இகிருந்தே சாப்பாடு
கொடுத்திடுவேன். அதுக்குப் பிறுகு இங்கிருந்து கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்களை
எடுத்திட்டுப்போயி எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு செஞ்சுக்கறது ஒண்ணும் சிரமமில்லை.
எதுக்கு நீங்க அப்படியெல்லாம் சிரமப் படணும் இது வரைக்கும் நீங்க எங்ககிட்டசம்பளம்ன்னு
பெரிசா எதுவும் வாங்கிக்கலை. அதனால உங்க ரெஇடு பேருக்கும் பணம் கட்டிஇல்லத்தில
சேர்க்கறது என் கடமை. அங்கபோயி குழந்தைகளுக் கு ஏதேனும் ஏற்பாடு செய்துவிட்டு
ஸ்வேதாவும் வேலைக்குப் போக ஆரம்பிப்பா.அதனால உங்களுக்குப் பணம் அனுப்புவதில்
சிரமம் இருக்காது. ஸ்வேதா, நீயும் சொ
ல்லேன். ஆமாம்மா இவர் சொல்ற மாதிரி உங்க
மகனைப் போயி இப்பவே கூட்டிண்டு வந்திடலாம். கிளம்புங்க என்றாள் ஸ்வேதா.
அன்னம்மாகிட்ட பணம் கொடுத்து அவனுக்கு ராத்திரி சாப்பிட
ஏதாச்சும் வாஙகித்தரச் சொல்லியிருக்கேன். அவங்க வீட்டுத் திண்ணையில அவன் இன்னிக்குத்
தங்கிப்பான்.நாளைக் காலையில அந்த இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா
அந்த சூழ்நிலைக்கு அவனைப் பழக்கிடவேன்.நானும் சமையல் லைக்குப் போயோ வீட்டிலிருந்து
சமைச்சுக்கொடுத்தோ எங்க ரெண்டு பேர் வயிற்றுப் பாட்டுக்கு வழிதேடிப்பேன்.
இந்த
வயசில நீங்க எதுக்காக உழைக்கணும். நான் ஒருக்காலும் இதுக்கு சம்மதிக்க
மாட்டேன்.கோபமாக குரல் உயர்த்தி சத்யன் பேசினான். இத பாருப்பா பெறாத பிள்ளையான நை
எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு முன்னுக்கு ந்திருக்கேன்னு கண்கூடா பார்த்தவ நீன்.
அதனால எடுத்த எடுப்பிலேயே சொகுசு வாழ்க்கையைப் பழக்காம அவன் உழைச்சுப் பிழைக்க
ஏதாவது வழி செய்யணும்னு எனக்குத் தோண்றது. முடிஞ்சா வைத்தியம் பார்த்து அவனுக்கு
பார்வை கிடைக்க வழியிருக்கான்னு பார்க்கணும். கூடவே அவன் கைவேலை ஏதாச்சும்
கத்துண்டு சொற்பத் தொகையாவது சம்பாதிக்கச் செய்யணும் அது வரைக்கும் என்னால அவனை
உழைச்சுக் காப்பாத்த முடியும் நீங்க இதுக்த் தேவையான உதவிகளை செஞ்சு
தருவாங்க்ன்னு நம்பறேன். தீர்மாமாகப் பேசி
முடித்தாள் சுலோச்சனா.
நாளையிருந்து நாங்க ஆபிஸ் போகவேண்டாம். அதநால உங்க விருப்பப் படி உங்கமகனை
அந்த வீட்டல் தங்கவச்சு சாப்பாடெல்லாம் இங்கிருந்தே செஞ்சு எடுத்திட்டுப் போய்
குடுங்க. வீட்டுக்குத் தேவையான பாத்திரம்
பண்டங்களும் இங்கிருந்தே எடுத்துக்கலாம்.
மேற்கொண்டு ஏதும் தேவைப் பட்டாலும் நான் உங்களுக்காக வச்சிரக்கற தொகையை கொண்டு வாங்கிக்கோங்க.
சந்துருவை இன்னிக்கே கண் டாக்டரிடம் அழைச்சிட்டுப் போறேன்.இந்த மாதிரி அன்பான தாய்
கிடைக்க அவர் அதிருஷ்டம் செஞ்சிருக்கணும். இனி மேலாவது உங்க அருமை தெரிஞ்சு அவர்
நடந்துப்பார்னு நம்பறேன். உணர்ச்சிப் பொங்க பேசியவனை கண்கள் கசிய பார்த்து
நின்றாள் சுலோச்சனா.
Comments
Post a Comment