ரௌத்திரம் பயில்
மணி ஏழாவுது. இன்னும் உங்க மருமகளுக்குப்
பொழுது விடியலை போல. காப்பித் தண்ணி
இல்லாம தொண்டை வறண்டு போவுது.”
முகத்தைச் சுருக்கிக் கொண்டு பேசும் மனைவியை
முறைத்தாவாறே பால் அடங்கிய
கடையையும் தினசரி பேப்பரையும் எடுத்துக்
கொண்டு உள்ளே வந்த கனகலிங்கம் , “ஏங்
காமாட்சி, இன்னிக்கி ஒருநாள் நீதான் காபி
போடேன் .” சொல்லிக் கொண்டே பால் கடையை
சமையலறை மேடையில் வைத்துவிட்டு ஹாலுக்கு
வந்து உட்கார்ந்தவர் , மேலும் தொடர்ந்தார் .
கவர்கள்
“இன்னிக்கு அவங்க ரெண்டு பேருக்கும் லீவு.
போதாமைக்கு நேத்து ராத்திரி உம்பிள்ளை
மாடியில செஞ்ச கலாட்டாவையும் கத்தலையும்
கீழே உக்காந்து கேட்டு ரசச்சுக்கிட்டு தானே
இருந்தே. வாசக் கதவைப் பூட்ட வந்த பிரபுவை
என்ன ஆச்சுன்னு கேட்டா, எல்லாம் இந்தப்
பாட்டியாலதான் நாத்தான்னு!' கோபமா
சொல்லிட்டுப் போறான் . கூடவே தண்ணி
பாட்டில் எடுக்க வந்த சைலா, “அப்பா அம்மாவை
ரொம்ப அடிச்சிட்டாரு தாத்தான்னு' சொல்லி
அழுவுது..."
“பொம்பளைங்க புருஷனை எடுத்தெறிஞ்சு
பேசினா, வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான் !”
“பொம்பளைங்க புருஷனுக்கு அடங்கிப்
போறதைப் பத்தி நீ பேசறயா?” எனத் தலையில்
அடித்தக் கொண்டே பேப்பரை பிரித்து முகத்தை மறைத்துக் கொண்டார் . மாடியிலிருந்து இறங்கி
வந்து கொண்டிருந்த சவிதாவின் காதுகளில்
மாமியாரின் வார்த்தைகள் விழ, அவளை
முறைத்தவாறே கிச்சனில் நுழைந்தாள் .
சிறிது நேரத்தில் காபி கோப்பைகளுடன் வந்தவள் ,
“மாமா, காபி!” என்று அவரிடம் ஓன்றைக்
கொடுத்துவிட்டு மற்றொன்றை மெளனமாக
காமாட்சியின் எதிரில் வைத்துவிட்டுத் இரும்பும்
நேரம் , ஆட்டோ ஓன்று வாயிலில் நிற்பதைப்
பார்த்து வாசலுக்கு விரைந்தாள் .
“வா லதா, வாங்க தம்பி!” ஹகத்தியையும்
மைத்துனரையும் வரவேற்ற சவிதாவின் கன்றிய
கன்னங்களையும் , அமுது சிவந்த விழிகளையும்
பார்த்து இருவரின் மனமும் வருந்தியது.
“ராத்திரி நான் உங்களுக்கு போன் போட்டேன் .
சைலாதான் எடுத்து அழுதுகிட்டே விபரம்
சொன்னா. இவரு அவங்க அண்ணா மேல
ரொம்ப கோபமா இருக்காரு.” மெல்லிய குரலில்
சொல்லியவாறே லதா, சவிதாவின் கைகளைப்
பற்றிக்கொள்ள மூவரும் உள்ள நுழைந்தனர் .
“அட சங்கர! சொல்லாம திடீர்னு வந்திருக்க?”
வியப்போடு கேட்கும் தாயைப் பார்த்து, “ஏன் சொல்லிட்டுதான்
வரணுமா?” எனப் பைகளைக்
கீழே வைத்துவிட்டு பல்
துலக்க உள்ளே சென்றான் .
அதற்குள் முகம்
கழுவிக்கொண்டு வந்த
லதா, “இவரு எம் .டியோட
மகனுக்கு இங்க கல்யாணம் .
ஸ்டாப்க்கெல்லாம் போகவர
பஸ் ஏற்பாடு செஞ்சிருக்காரு.
இன்னிக்கு சாயங்காலம்
ரிசப்ஷன் . நாளை முகூர்த்தம் .
மதிய சாப்பாடு அனவுடனே
பஸ்ஸில இரும்பிடுவோம் .
அதான் வழியில இறங்கி
இங்க வந்தோம் .” என்றாள் .
o
சவிதா நீட்டிய காபியை
வாங்கிக் கொண்ட
சங்கர் , “அண்ணி! நீங்க
குடிச்சீங்களா 2” என்று
கேட்ட சமயம் இருவருக்கும்
காபியோடு வந்த லதா
அவளை இழுத்து
உட்காரவைத்து காபியைக்
கொடுத்து தானும் குடிக்கத்
துவங்கினாள் .
“அண்ணி, உங்க
அத்தையம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு!
கேள்விப் பட்டு ரொம்ப வருத்தமாயிருக்கு. உங்க
குடும்பத்துக்கு மட்டுமில்லாம நம்ம வீட்டுக்கும்
நெருக்கடி நேரத்தில எவ்வளவு உதவியா
இருந்திருக்காங்க...”
“சங்கர் தம்பி, உங்களுக்காவது அதெல்லாம்
நினைவிருக்கறது சந்தோஷம் ...”
“அமா, நீங்க போயி பாத்தீங்களா அக்கா?” லதா
கேட்டாள் .
“விஷயம் தெரிஞ்சு நான் கிளம்பிய போது,
அத்தையும் இவரும் எதிர்ப்பு காட்டினாங்க. மாமா
நான் அவங்களை அடக்கி என்னை அனுப்பி
வச்சாரு. பிரபு ஏங்கூடவந்து அவங்களைப்
பார்த்தே ஆகணும்னு அடம் பிடிச்சான் . முணு:
வயசு வரை அவங்க தானே அவனை வளர்த்தாங்க
அப்புறமா கூட்டிட்டுப் போறதா சொல்லி நான்
மட்டும் போய் வந்தேன் . அங்க போன பிறகுதான்
நிலமையோட தஇவிரம் தெரிஞ்சது.
வேளை வாசலில் சும்மா நடந்திட்டிருக்கும்போது
கால் இடறி கீழே விழுந்திருக்காங்க. அங்க
இருந்த கல் குத்து தலையில அடிபட்டு ரத்தம்
நிறைய போனதில, நினைவு தப்பிடிச்சு. இடுப்பில
எலும்பு முறிவு. ஆஸ்பத்திரியில
சாயங்கால
உடனடியா சேர்த்திருக்காங்க. முழு நினைவு இன்னும் வரலை.
என் தம்பிக்கு ரெட்டைப் பிள்ளைங்கன்னு
தெரியுமில்லை! அதுங்க ரெண்டும் இவங்க
கூடவே தானிருக்கும் . இப்ப இவங்களை காணாம
ஓரே அமுது ரகளையாம் . இப்போதைக்கு என்
தம்பி மாமியார் . ஓத்தாமைக்கு ஊரிலிருந்து
வந்திருந்தாங்க அனா நளினி தங்கை தம்பி
காலேஜில படிக்கறாங்க அவங்க அப்பாவும்
வேலைக்குப் போறவரு. அதனால அவங்களாலும்
ரொம்ப நாள் தங்க முடியாது.”
அவள் பேச்சை தொடர விடாமல் , “வந்ததும்
வராததுமா அவங்க கிட்ட உங்க அத்தை புராணம்
படிச்சது போதும் . ராகவன் இறங்கி வரான்
பாரு அவனுக்கு காபி கொண்டா. என்ன உன்
அஸிஸ்டெண்ட் பொன்னம்மா இன்னும் லரலை.
காலை டிபனுக்கு என்ன செய்யறதா உத்தேசம் ?
தேவிகாவும் இப்ப வரதா சொல்லியிருக்கா
தெரியுமில்லே!” என கணவன் எதிரில் காபியை
வைத்தாள் காமாட்சி.
“பொன்னாமாவுக்கு ஏதோ வேலையிருக்காம்
மதியம் சமையலுக்குள்ள வருவா. டி.பன் இட்லி
சட்னிதான் !” என்றாள் சவிதா.
“என்னது இட்லியா ? வராதவன் வந்திருக்கான் .உன் நாத்தனார் இப்ப வரப் போறா. பூரி கிழங்கு
ஏதாச்சும் செய் .”
“என்னால இப்ப வேற எதுவும் செய்ய முடியாது.
பசங்களுக்கு இன்னிக்கு ஸ்கூல் போகணும் .”
சொல்லிக் கெண்டே சவிதா நகர்ந்தாள் .
“அண்ணி, தண்ணீர் ஊத்தி வச்ச பழைய
சோறு இருந்தா கொண்டாங்க. கொஞ்சம் உப்பு
தயிரு சேத்து பிசைஞ்சு, சின்ன வெங்காயம்
தொட்டுக்கிட்டு சாப்பிட்டா வெய்யிலுக்கு
அமிர்தமா இருக்கும் . எங்க பேரை சொல்லி
உங்க வேலையை அதிகப்படுத்த நினைக்கற
அம்மா சொல்ற மாதிரி எதுவும் செய்யாதீங்க.”
கிண்டலாகச் சொன்னான் சங்கர் .
“டேய் , ஏற்கனவே அவளுக்குத் திமிர் ஏறிக்கிட்டே
வருது. இதில நீ வேற அவ முன்னாடி அம்மாவை
கிண்டல் பண்றது தேவையா?” எனக் கோபமாகக்
கேட்கும் அண்ணனைப் பார்த்தான் சங்கர் .
“இத பாரு ராகவா, பேருக்கேத்த மாதிரி
நீ வேணா அம்மா செய்யறதுக்கெல்லாம்
நலையாட்டிக்கிட்டு இரு. ஆனா என்னால அப்படி
இருக்கமுடியாதுன்னு உனக்கே தெரியும் .”
“சந்தப்பா! சத்தி!” உற்சாகக் குரல்
கொடுத்துக்கொண்டு படியிறங்கி வரும் சைலஜா
பிரபுவை அணைத்துக் கொண்டான் சங்கர் .
லதா அவர்களுக்காக செய்து கொண்டு வந்திருந்த
இின்பண்டங்களைக் கொடுத்தாள் .
“என்னடா பிரபு கண்ணா ! செகண்ட் சார்ட்ட்டே
கூட ஸ்கூலா?” என்றாள் .
“அண்ணா இப்ப பத்தாவது இல்லையா?
அவனுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. ஸ்கூல்
டே வருது. அதனால எனக்கு டான்ஸ் பிராக்டீஸ்
இருக்கு. மதியம் வந்திடுவோம் .” என்ற சைலஜா,
“நீங்க ஏன் ரஞ்சிதா சேகரைக் கூட்டிக்கிட்டு
வரலை?” என்றாள் .
“லதா, ஆட்டோ இப்ப வந்திடும் . அதுக்குள்ள
இவ தலையை வாரி பின்னிடு. நான் போய் இவங்க
ரெண்டு பேருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன் .”
என சப்பை லதாவிடம் கொடுத்துவிட்டுத்
இரும்பியவளிடம் , “அண்ணி, சைலஜா இப்ப உங்க
ஜாடையில ரொம்ப அழகாயிருக்கா. இவளோட
டான்ஸ் அரங்கேற்றம் எப்ப செய்யப் போறிங்க?”
என்றாள் லதா.
“வீடு இருக்கற இருப்பில அதைப் பற்றி யாரு
நினைக்கறாங்க? எம் மாதிரி அவ அழகா
இருக்கறதா சொல்ற அனா அவ வாழ்க்கை
என்னுடையது மாதிரி அமையாம இருக்கணும்
லதா.” எனக் கண்ணிலிருந்து வழியும்நீரை துடைத்துக் கொண்டு சன்னமான
கூறிச் சென்றால் சவிதா.
குரலில்
அவளை மெளனமாகப் பார்த்தாள் லதா.
“கண்ணுங்களா, ஆட்டோ வந்துடிச்சு !” தாத்தா
குரல் கொடுக்க, அவசரமாக கழுவிக்
கொண்டே, “சித்தி, ஸ்விட் ரொம்ப நல்லா இருக்கு.
அம்மா வரோம் . பை தாத்தா, சித்தி, சித்தப்பா”
என்றபடி இருவரும் வண்டியில் ஏறிச் சென்றனர் .
கை
“எதிரில் அத்தை நான் வரேன் . என்னைத்
இரும்பிக் கூட பாக்காம ரெண்டும் ஆட்டோவில
ஏறிப் போவுதே! அவ்வளவு திமிரா இந்த
வாண்டுகளுக்கு..” கோபமாகக் குரல் எடுத்துப்
பேசிக் கொண்டே நுழைந்த மகளிடம் , “ஆமாண்டி
எல்லாம் பெத்தவ வளர்த்து வச்சுள்ள லட்சணம் ...
கிளம்பும் போது பெத்தவனையும் என்னையும்
தவிர மத்த எல்லாருக்கும் பை சொல்லிட்டுப்
போவுதுங்க!” என்றால் காமாட்சி.
“அதுக்குக் காரணம் அவங்கவங்க மனரக்குத்
தெரியும் !” முமுணுத்தபடி நகர்ந்தாள் சவிதா.
“சங்கர் , லதா, எப்ப வந்தீங்க? பசங்க வரலியா?”
என்றவளிடம் , “இல்ல நாங்க ஒரு கல்யாணத்துக்கு
வந்திருக்கோம் . பையன் சனி, ஞாயிறு ஸ்போர்ட்ஸ்
கிளாசக்குப் போறான் . பொண்ணு அடுத்த வருடம்
பத்தாவது போறதால கோச்சிங் கிளாஸுக்கு
வாரக் கடைசி நாட்கள்ல போறா. அதான்
அம்மா கிட்ட விட்டுட்டு வந்தோம் ...” என்றாள்
லதா.
“இப்ப உங்க அம்மாவை வீட்டோட கூட்டிட்டு
வந்திட்டேன்னு சொல்லவே இல்லையே!”
கிண்டலாகக் கேட்கும் மாமியாரைக் கோபமாக
முறைத்த லதா, “எங்க அம்மாவுக்கு வீடு
இல்லையா? தம்பிக்கு வேலை கிடைச்சு அறு
மாசம் ப்ரண்ட்ஸ் கூட ரூமில தான் இருந்தான் .
வேலை கர்ன்பாம் அனதும் எங்க வட்டுக்குப்
பக்கத்திலேயே தனியா வீடெடுத்து இரண்டு பேருமா
இருக்காங்க. என் கல்யாணத்துக்காக அப்பா வீடு,
நிலம் எல்லாத்தையும் வித்து பாக்கிப் பணத்தை
பையன் படிப்பு செலவுக்கும் வச்சிட்டுத்தான்
போயிருக்காரு. இப்பவும் அம்மாவுக்கு வர
பென்ஷன் , தம்பி சம்பளம் எல்லாமிருக்கறதால
அவங்க எதுக்கும் எங்க கிட்ட கையேந்தி நிக்கலை.
நாங்கதான் எங்க பசங்கங்களுக்காக அப்பப்போ
அவங்க தயவை நாடிப் போறோம் .”
“லதா, எங்கம்மாவுக்கு இதெல்லாம் தெரியாதா?
இந்த மாதிரி வீண்பேச்சுக்கு ரோஷப் பட்டு பதில்
பேசி நேரத்தை வீணாக்காதே.” என்றான் சங்கர் .
“என்னமோ ஓஒருகேள்வி கேட்டதுக்கு பொரிஞ்சு
கொட்றா பாரு. இருத்தி வாயைத் திறக்காம
உசிரை வாங்கறா. இன்னொருத்தி பேசிப் பேசி கடுப்பேத்தறா! மாமியாருக்கு மரியாதை
கொடுக்காத ஜன்மங்க. எல்லாம் என்
தலையெழுத்து...” அலுத்துக் கொள்ளும்
தன் மனைவியைப் பார்த்து வரும்
சிரிப்பை சிரமப்பட்டு அடக்கினார்
கனகலிங்கம் .
“மரியாதை கொடுக்கற மாதிரி
நாம் நடந்துக்கணும்னு புரியாதவங்க,
மரியாதையை எதிர்பார்க்கறது
சரியா?” முணுமுணுப்பாய் கனகலிங்கம்
சொல்ல, “என்னவோ சொன்னீங்களே
புரியலை. உரக்க சொல்லுங்க.” என்றாள்
காமாட்சி.
“மாமா, டிபன் ரெடி! எல்லாரையும்
கூட்டிட்டு வாங்க.” கவிதா நரல்
கொடுக்க, “அப்பாடா தப்பிச்சேன் ."
என்ற உணர்வுடன் சென்று டைனிங்
டேபிளில் முதல் அளாய் அமர்ந்தார் !
கனகலிங்கம் .
“இதோ பாரு! ஆடி அசைஞ்சக்கிட்டு
உன் அசிஸ்டெண்ட் உள்ள வரா. மதிய
சாப்பாட்டுக்காவது ஏதாச்சும் ஸ்பெஷல
செய்ய வை.” காமாட்சி விரைப்பாகச்
சொல்லிக் கொண்டே கைகமுவச் சென்றாள் .
“அண்ணி! நீங்களும் லதாவும் சாப்பிட்டுட்டு
ஹாலுக்கு கொஞ்சம் பேச
வேண்டியதிருக்கு.” என சங்கர் சொல்ல, “அமாம்
தம்பி, எனக்கும் பேசணும் ” என அவசரமாக
உண்டு முடித்து பொன்னம்மாவிற்கு சமையல்
மெனு சொல்லிவிட்டு லதாவோடு ஹாலுக்கு
வந்தாள் கவிதா.
வாங்க.
“லதா, என் கைப்பையை எடுத்திட்டு வா!”
சங்கர் சொன்னவுடன் பையை அவனிடம் லதா
கொடுக்க, அதிலிருந்து ஓரு கவரை எடுத்துத்
தந்தையிடம் நீட்டினான் .
“அப்பா, மாசாமாசம் நான் உங்களுக்கு
அனுப்பற ஐயாயிரத்தோட இன்னொரு ஐயாயிரம்
வச்சிருக்கேன் . தங்கச்சி மாமனார் விழாவுக்கு எங்க
பங்கு. அந்த சமயம் பசங்க பரிட்சை நேரமா
இருக்குகறதால நாங்க வரமுடியாது.”
“சரிப்பா.” என்றபடி கவரை வாங்கிக் கொண்டார்
கனகலிங்கம் .
“என்னடா இவ்வளவு கறார பேரற. கூடப்
பிறந்த ஒரே தங்கச்சி புகுந்த வீட்டில ஒரு
விசேஷம்னா அவ கெளரவம் கெடாதபடி நாம
சீர் செய்யறதுதானே முறை!” என்றாள் காமாட்சி.
“அத்தே, நாலு மாசம் முந்திதான் தேவி மக
பெரியவளானதுக்கு மாமான்மார் ஒவ்வொருவரும் தனித்தனியா
நாங்களும் நகை, துணின்னு!
வாங்கி சிறப்பா செஞ்சோம் . அடுத்து அவங்க
விட்டுப் பெரியவரு விசேஷத்துக்கும் அதே மாதிரி
செய்யணும்னு!
கடனை
செய்யணும்னா எப்படி முடியும் ? மாசாமாசம்
இருத்தர் சம்பளம் வீட்டு தவணைக்கும் , பசங்க
படிப்பு செலவுக்கும் சரியாயிடுது. இன்னொருத்தர்
சம்பளத்தைப் பாத்துப் பாத்து செலவு செஞ்சு
வண்டியை ஓட்டிக்கிட்டிருக்கோம் . இதுக்கு மேல
நாங்க என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க?”
என்ற லதா பேச்சில் ஆத்திரம் அடைந்தாள் தேவி.
“என்னமோ எம் பெண்ணுக்கு பெரிசா
சீர் செஞ்சதை எப்படி சொல்லிக் காட்டறா
பாரும்மா. நாளைக்கே இவங்க மக பெரியவளான
அத்தைங்கற முறையில நான் அதைவிட சிறப்பா
செஞ்சுகாட்டுவேன் . சொல்லுங்கம்மா.” என்றான்
தேவி.
“நாங்க இது மாதிரி எதுவும் உங்கிட்டேந்து
எதிர்பார்த்திட்டு இல்லை. எங்க மக வயசுக்கு வந்து
கிட்டத்தட்ட இரண்டு மாசம் ஆறறது. ஸ்கூலில்
அப்ப அவளுக்குப் பரிட்சை நேரமாயிருந்த்தால
லீவு போட மறுத்திட்டா. அவளுக்குப் படிப்பில
இருக்கற ஈடுபாட்டைப் புரிஞ்சுகிட்டு நாங்களும்
அந்த நாட்களில் அவளைப் பாதுகாப்பா
பள்ளிக்குக் கூட்டிட்டுப் போயி இரும்ப
அழைச்சுக்கிட்டு வந்தோம் . அதோடு இல்லை,
இதுக்கு செலவு பண்ணி விளம்பரப் படுத்தி
விழா எடுக்கறதுக்கு பதிலா எப்பப் பார்த்தாலும் ரிப்பேராகி தொல்லை குடுக்கற அப்பாவோட
பழைய ஸ்ஃகூட்டரைக் கொடுத்திட்டு புதிய வண்டி
வாங்குங்க என்று பிடிவாதம் பிடிச்சு வண்டி
வாங்க வச்சா அவ.”
“பக்கத்திலேயே இருக்கற
தப்புன்னு! சொல்லலியா? இல்ல அந்தப்
பாட்டி மட்டும் போதும்னு நீங்க எல்லாருமா
தீர்மானம் செஞ்சு எங்களையெல்லாம் ஓதுக்கி
வச்சிட்டீங்களா?”
உங்க அந்தா இது
அஆங்கரக்குரல் எழுப்பும்
கமாட்சியை இடைமறித்தாள் லதா.
“இப்ப எதுக்கு எங்க அம்மாவைப் பந்தப்
பேசறீங்க? இது நடக்கும்போது
எங்கம்மாவும் தம்பியும் குலதெய்வக்
கோயிலுக்கும் உறவுக்காரங்க
விட்டு விசேஷம்னும் ஒரு வாரம்
ஊருக்குப் போயிருந்தாங்க. வந்த
பிறகு விஷயம் கேட்டு முதல்ல
கோபிச்சுக்கிட்டாலும் இதெல்லாம்
உங்க விருப்பம்னு எங்க போக்கில
விட்டுட்டாங்க.”
“அம்மா, எனக்கு வீட்டில நிறைய
வேலை இருக்கு. நீவரச் சொன்னதால
பசங்களும் அவரும் எங்க மூத்தார்
விட்டுக்குத் தாத்தா பாட்டைப்
பார்த்துட்டு வரதா சொல்லிட்டுப்
போயிருக்காங்க. மதியம் அங்க
சாப்பிட்டு அவங்க தஇரும்பறதுக்குள்ள
நான் வீடு போகணும் . என் ஓரகத்து
பிறந்தவிட்டில சம்பந்திகளுக்கு நகை ஆஅடம்பரமா
புடவைன்னு பெரிய அளவில ர் செய்யப்
போறதா எங்க மாமியார் பெருமை பேசிக்கிட்டு
இருக்காங்க. நீங்க என்ன செய்யப் போறிங்கன்னு!
எனக்குத் தெரியணும் ...” என்றாள் தேவி.
“உன் மூத்தாரின் மாமனார் பிஸினஸ்
இல்லுமுல்லு பத்தி ஊரே பேசுது. கருப்புப்
பணத்தை இப்படி வாரி விட்டு அவர் பேர் தேடற
மாதிரி மாசச் சம்பளக்காரங்களான நாங்க எப்படி
செய்யமுடியும் ? இதை முதல்ல புரிஞ்சுக்க!”
என்றான் சங்கர் சிறிது காட்டமாக.
“வாயை மூடுடா சங்கர் . வீட்டுக்கு வந்திருக்கற
தங்கச்சி மனம் வாடற மாதிரி பேசாதே...” ராகவன்
ஏதோ தொடர்ந்து சொல்வதற்குள் , “தம்பி, இப்ப
நான் பேச நினைக்கறதை சொல்லிடறேன் .”
பதிலுக்குக் காத்திராமல் பேசத் துவங்கினாள்
சவிதா.
“திருமணமாகி வந்ததிலிருந்து இதுவரை உங்க
தங்கச்சி கல்யாணம் துவங்கி இவரு சொல்லும்
போதெல்லாம் அபிஸிலே லோன் போட்டு வர
பணத்தை அப்படியே இவருக்கிட்ட கொடுத்திட்டு
நானிருக்கேன் . அனா இந்த முறை என்னால
அப்படி எதுவும் செய்யமுடியாது. வரில உ௭ருக்குப்
போராடிக்கிட்டிருக்கற எங்க அத்தையின் மருத்துவ
செலவு அதிகமாக இருக்கறதால நான் என்னால
முடிஞ்ச அதிக பட்சத் தொகையை தம்பி பேருக்கு
அனுப்ப ஏற்பாடு செஞ்சிட்டேன் . இதுக்காக
நேத்து என்னை வாயில வந்தபடி இட்டி கைநீட்டி
அடிச்சு, தடுக்க வந்த பசங்களையும் அதட்டி அழ
வச்ச இவருகிட்ட எனக்குப் பேசவே பிடிக்கலை...”
“ஏய் நிறுத்துடி. ரொம்ப ஓவரா பேரற அவ
என்ன உன்னைப் பெத்தவளா?”
“உங்களுக்கு அவங்க
அருமை புரியாது அத்தை!
பெத்த தாயை விவரம்
அறியாத வயசில பறி
கொடுத்த என்னையும்
என் தம்பியையும் பாசமும்
பரிவும் காட்டி வளர்த்த
அவங்களை நாங்க
எங்க அம்மாவாத்தான்
பாக்குறோம் . எங்க
அம்மா இறக்கும்போது
எனக்கு ஏழு வயக.
அவங்க நினைவு
எனக்கு அரைகுறையா
எப்பவாவது வரும் .
ஆனா என் தம்பி
ராஜு இரண்டு வயசா
இருக்கும் போதே எங்க அம்மா
இறந்துபோன நாளிலிருந்து இவங்களைத்தான்
அம்மாவா நினைக்கிறான் . அப்பாவையும்
என்னையும் விட அவன்தான் ரொம்ப கலங்கிப்
போயிருக்கான் . இரண்டு மாசம் முன்னாடி
நான் ராஜுவுக்கு ஒரு உயர்ந்த கம்பெனியில
நல்ல சம்பளம் பதவியில வேலை கிடைச்சிருக்கு.
புது ஆபிஸில உடனடியா ஏதும் பண உதவியை
எதிர்பார்க்க முடியாதுங்கறதால பெண்டாட்டி
நகைகளை அடமானம் வச்சும் அப்பாவோட
சன்ன சேமிப்பும் , பழைய அபிஸிலிருந்து வந்த
பாதிப் பணம் எல்லாத்தையும் போட்டு அவங்க
ஆபரேஷன் வரை சமாளிச்சிட்டான் . இதுக்கு
மேல அவங்க வீட்டுக்கு வந்தா கூடவேயிருந்து
பாத்துக்கறதுக்கு நர்ஸ் , அவங்க உடல்நிலைக்கு
ஏத்த மாதிரி கட்டில் படுக்கை எல்லாம்
வாங்கணும் . அப்பாவோ தம்பியோ வாய் திறந்து
எதுவும் கேக்காட்டியும் என் படிப்புக்கும் நல்ல
உத்தியோகத்திற்கும் மூலகாரணமா அமைஞ்ச
அவங்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில உதவி
செஞ்சே அகணும்ங்கற எண்ணத்தில ஆஅபிஸில
பைனல் லித்டிராயல் போட்டு அந்த பணத்தை
தம்பி பேருக்கு டிரான்ஸ்பர் பண்ண ஏற்பாடு
பண்ணிட்டிருக்கேன் .”நீ எப்படி
அந்தப் பணத்தை
அனுப்பேறன்னு
பாக்கறேன் . அந்தமாதிரி
ஏதும் செஞ்சா நீ இந்த
விட்டில இருக்க முடியாது
தெரிஞ்சுக்க...” உறுமும்
குரலில் பேசிக்கொண்டே
கை ஓங்கும் கணவனை
அலட்சியமாகப்
பார்த்துக் கொண்டே
விலகி நின்றாள் சவிதா.
“அவங்க சமயத்தில
நமக்கு எப்படியெல்லாம்
உதவியிருக்காங்கங்தறதை
அடியோடு மறந்துட்டுப்
பேசற இவரைப்
பார்க்கவே எனக்குப்
பிடிக்கலை! சங்கர் , உங்களுக்கு நினைவிருக்கா:
பிரபு பிறந்து பிரசவ லீவு முடிஞ்சு நான் திரும்ப
வேலையில சேர நாலு மாசக் குழந்தையோடு
அத்தையையும் கூட அழைச்சுக்கிட்டு வந்தேன் .
பக்கத்து விட்டு அம்மா சொல்லி அப்பத்தான்
பொன்னம்மாவை வேலைக்கு சேர்த்துக்கிட்டோம் .
அவங்களுக்கு அத்தை குழந்தை பராமரிப்பு பற்றி
நல்லவிதமா சொல்லிக் கொடுத்ததில் அவங்களும்
சிக்கிரமா சமையல் குழந்தை வேலைகளைப்
பொறுப்பா செய்யறதில இிருப்தி அடைஞ்ச
அத்தை ஊருக்குக் கிளம்பத் தயார் அன நேரம்
இவருக்கு மஞ்சள் காமாலை வந்ததில பயணத்தை
ரத்து செஞ்சிட்டு இவருக்குப் பத்திய சாப்பாடு
பார்த்துப் பார்த்துத் தானே செஞ்சு, கீழாநெல்லிக்
கஷாயம் பண்ணிக் குடிக்க வச்சுக் கவனமாப்
பார்த்துக்கிட்நில இவரு சக்கரமே குணமாகி
வேலைக்கும் போகத் துவங்கிட்டாரு. அந்த சமயம்
தேவியை தலைப்பிரவசத்துக்காக நம்ம விட்டுக்கு
வளைகாப்பெல்லாம் செஞ்சு அழைச்சுக்கிட்டு
வந்திருந்தாங்க. லாக்கரில் இருந்த என் நகையை
என் அனுமதி இல்லாமலேயே எடுத்து அம்மாவும்
மகனுமா அவளுக்கு நகைச் சீர் செஞ்ச பிறகுதான்
என்கிட்ட விஷயம் சொன்னாங்க. நானும் நம்ம
விட்டுப் பெண்ணுக்கு தானே போவுதுன்னு!
அதை பெரிசா எடுத்துக்கலை. அனா உடம்பு
சரியில்லாம படுத்திருக்கிற இவரையோ
பேரனையோ எட்டிக்கூட பாக்காம அம்மாவும்
பெண்ணும் அவங்க அறையை விட்டே
வெளிவராம பாதுகாப்பா ஓதுங்கியே இருந்தாங்க.
அப்பப்ப வந்து போன நீங்க கூட இதுக்காக உங்க
அம்மாவை கோபிச்சிக்கிட்டதும் உங்க அண்ணன்
அதுக்காக உங்களைக் கண்டிச்சதும் உங்களுக்கு
மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன....” என்றாள்
சவிதா. சங்கர் ஓப்புதலாய் தலையசைக்க,
தொடர்ந்தாள் சவிதா.
“அந்த சமயம்
மாமா குழந்தையைப்
பராத்துக்கறதில
எங்க அத்தைக்கும்
பொன்னம்மாவுக்கும்
G u ® 5 வியா
இருந்ததினால் தான்
நான் அபிஸுக்கேபோக
முடிஞ்சுது. அப்ப என்
தம்பிக்குத் திருமணம்
ஆகலை. அப்பாவும்
அவனும் சாப்பாட்டுக்குக்
படறாங்கன்னற
இருந்தாலும்
நம்ம விட்டு
நிலை அறிஞ்சு நமக்கு
உதவி செஞ்சதை
எவ்வளவு சுலபமா மறந்து
நடந்துக்கறாங்கன்னு
நினைக்கவே பிடிக்கலை. ஒரு வழியா அத்தை
கஷ்டப்
உறுத்தல்
அத்தை
இரும்ப ஊருக்குக் கிளம்பத் தயாரான
நேரம் உங்க அம்மா கீழே விழுந்து காலில்
அடிபட்டுக்கிட்டாங்க. படுக்கையில இருந்த
அவங்களுக்கு ஆயா வேலை பார்க்கறதுக்காக
அத்தை மறுபடியும் தன் பயணத்தை ஒத்திப்
போட்டாங்க. இந்த அமர்க்களத்துக்கிடையே
தேவிக்கு குழந்தை பிறந்திடிச்சு. சிசேரியன்
டெலிவரி என்கிறநால அவளை நல்லபடியா
கவனிக்க வேணுமில்லையா ? இப்ப விழா எடுக்கப்
போறாங்களே அந்த பெரியவங்களோ அவங்க
மகன் இருவாளர் தேவிகாவோ இதில சம்பந்தப்
படாதவங்க போல அஸ்பத்திரிக்கும் விட்டுக்கும்
வந்து வந்து போனாங்களே தவிர, எந்த வித்திலும்
உதவாம ஓதுங்கி நின்னாங்க. உங்க அம்மாவின்
கெஞ்சுதலை மதிச்சுத் தாய் , சேய் பாட்டி
மூணுபேரையும் கண்ணும் கருத்துமா பாத்து
பணிவிடை செஞ்ச அந்த நல்ல மனுசியோட
அருமையை மதிக்காட்டியும் உதாசினமா பேசற
இவங்களுக்கு நான் எந்த விதத்தில்லையும்
பணிஞ்சு போறதில்தில்லைன்னு தீர்மானமா
இருக்கேன் .” தொடர்ந்து பேச முடியாது வெடித்து
வரும் அழுகையை அடக்கிக் கொண்டு தன்னைத்
தேற்றிக் கொண்ட சவிதாவின் கரம்பற்றிய லதா:
கூறினான் .
“இவரு இதையெல்லாம் நான் திருமணமாகி வந்த
அரம்ப நாளிலேயே சொல்லியிருக்காரு. போன
வருடம்நாங்க கோயில்களுக்குடூர் போனபோதுகூட
உங்க அப்பா ரொம்ப கூப்பிட்டாருன்னு
வீட்டுக்குப் போயிருந்தோம் . அப்பதான் உங்க தம்பி
மனைவி மூணு மாத இரட்டைப் பிள்ளைங்களோட
இரும்பி வந்திருந்தா. எங்க பசங்களுக்கு ரெண்டு
குழந்தைளை ஓண்ணா பாத்ததில ஒரே சந்தோஷம் . அதுங்களை விட்டுட்டு வரவே
மனசில்லை. இதைப் பாத்த உங்க
அத்தையும் அப்பாவும் எங்களைக்
கட்டாயப் படுத்தி அன்னைக்கு
அங்கயே நங்க வச்சிட்டாங்க.
எங்களுக்கு தடபுடல் சமையல்
செஞ்சக்கிட்டே குழந்தைகளின்
தேவைகளையும் பாத்துக்கிட்டவங்க.
நீ பச்சை உடம்புக்காரி போய்
லதாவோட பே௫க்கிட்டிருன்னு!
மருமகளையும் , உதவப் போன
என்னையும் தடுத்திட்டு ஓண்டி
ஆளா அழகா வேலைகளைச் செஞ்ச
அவங்க இன்னிக்கு நினைவில்லாம
படுத்திருக்காங்காங்கறதை நினைச்சா
ரொம்ப வருத்தமா இருக்கு அக்கா”
“அப்பாவுக்கு ஓமுங்கான சாப்பாடு
இல்லாததால உடல் நிலை
சரியில்லாம போயிடிச்சுன்னு தெரிஞ்சதும்
பதறிப்போய் இதுக்குமேல இங்க இருக்க
முடியாதுன்னு ஊருக்குப் புறப்பட்டவங்க,
என்னால அஆஅபிஸூக்கும் போயிட்டு வீட்டில்
எல்லாரையும் பாக்க முடியாதுன்னு பிரபுவை
தன்னோட தூக்கிட்டுப் போறதா முடிவெடுத்து
என்னையும் சம்மதிக்க வச்சாங்க. தேவி, அவ
குழந்தை வேலை, சமையல் இதோடு எட்டு
மாசமான பிரபுவையும் பொன்னம்மாவால
பாத்துக்கமுடியாது. இதுக்கு மேல என்னால
லீவும் போடமுடியாதுங்கற எதார்த்தத்தை
புரிஞ்சுக்கிட்டும் அத்தையில்லைன்னா பிரபு ஏங்கிப்
போயிடுவாங்கற உணர்ந்துகிட்டும்
வலி நிறைஞ்ச மனசோட பிரபுவை அவங்க கூட
அனுப்பிவச்சேன் . அதிலிருந்து அவங்ககிட்டதான்
அவன் இரண்டு வருஷம் வளர்ந்தான் . நான்தான்
அவனை நினைச்சு ஏங்கிப்போனேனே தவிர,
அவன் என் அப்பா, தம்பி இவங்களோட
விளையாடிக்கிட்டும் அத்தையோட கனிவான
வளர்ப்பிலும் உற்சாகமா என்னை மிஸ் பண்ற
உணர்வு தோன்றாமலும் வளர்ந்தான் . இளம்
பெண்ணா அவங்க இருந்தப்ப எங்க அத்தையோட
அழகையும் நல்ல பண்புகளையும் பார்த்து
பிடிச்சுப் போன ஒரு அந்தஸ்தான குடும்பம் தங்க
விட்டுப் பையனுக்கு எங்க அப்பாவைப் பார்த்துப்
பெண் கேட்டிருக்காங்க. தன் தகுதிக்கு இவ்வளவு
பணக்கார இடம் ஓத்து வருமான்னு முதல்ல
தயங்கிய அப்பா, பிறகு அவங்க நல்ல மனசை
புரிஞ்சுக்கிட்டு திருமணம் செஞ்க குடுத்திருக்கறாரு.
திருமணத்தை அவங்களே நடத்தி அப்பாவுக்கு எந்த
செலவையும் வைக்காம எங்க அத்தையை அவங்க
விட்டு ராணியாய் கொண்டாடி மகறழ்ந்திருக்காங்க.
அத்தையின் கணவரும் அவங்க மேல அன்பும்
பிரியமுமாய் இருந்திருக்காரு. திருமணமாகி சில
வருடங்கள் குழந்தை பிறக்கலை என்ற அவங்க
உண்மையை
ஏக்கம் தீர, அத்தை
முதல் முறையா
கர்ப்பம் ஆனதும்
இரண்டு பேரும்
அஆனந்தப்பட்டுக்கிட்டு
இருந்தபோது யார் :
கண் : பட்டுதோ
ஓரு கார் விபத்தில
அவங்க கணவர்
இறந்துபோயிட்டாரு.
அந்த அதிர்ச்சியில
அவங்க கருவும்
கலைஞ்சு போயிடிச்சு.
ஓரே பிள்ளையான
எங்க அத்தையின்
கணவருக்குப்
பற்றெொர்களும்
e W G g டு
இல்லாததால் எங்கப்பா தன் வீட்டிற்குக் கூட்டிக்
கொண்டு வரும்போது நியாயமா அவங்களுக்குச்
சேர வேண்டிய அவங்க கணவரோட வீடு,
நிலம் அவர் வாங்கிக் கொடுத்திருந்த நகைகள்
என்று எல்லாத்தையும் அவங்க
அத்தைக்குக் கொடுத்து அவங்களுக்குப்
பிரியாவிடை கொடுத்து அனுப்பியிருக்காங்க.
பிறந்த விட்டிலயும் அவங்க ஓயாமல் உழைக்கற
மாதிரி எங்க அம்மாவின் உடல்நிலை மோசமாகி
எந்த மருத்துவமும் அவங்க பணிவிடையும் பலன்
தராம எங்க அம்மா இறந்திட்டாங்க. சாகற
நறுவாயில அவங்க பிடிச்சிக்கிட்டு
இதுக ரெண்டையும் குழந்தைகளா
நினைச்சுப் பாத்துக்கோங்க என்று சொன்ன
மாதிரியே எங்களைப் பெத்த தாய்க்கும் மேல
பாசம் காட்டி வளர்த்திருக்காங்க. எனக்காவது
எங்க அம்மா நினைவு எப்பவாவது வரும் . ஆனா
என் தம்பி இவங்களைத்தான் அம்மான்னு
கூப்பிட்டுப் பெத்தவங்களா மதிக்கறான் . அவன்
குழந்தைகளும் இவங்களையே சத்திச்சுத்தி வரும் .
இப்ப இவங்களைக் காணாம அதுக சாப்பிடாம
சரியா தூங்காம அழுது ரகளை செய்யறதைப்
பாத்தா ரொம்ப வேதனாயிருக்கு. எங்க வீட்டு
நிலைமை இவருக்கு ஹூளவு தெரிஞ்ச விஷயம்தான் .
பள்ளிக்கூட வாத்தியாரா இருந்த அப்பாவின்
குறைந்த வருவாயில எங்க அத்தையின் பண
உதவி இல்லேன்னா நான் விரும்பியபடி முதுகலை
படிப்பு, கம்யுட்டர் பயிற்சி எல்லாம் முடித்து
இவ்வளவு நல்ல வேலை கிடைத்திருக்குமா? என்
கல்யாணத்துக்கு போட்ட நகைகள் எல்லாம்
அத்தையின் நகைகளை மாற்றி வாங்கியவைதான் .
அப்பாவின் ரிடையர்மெண்ட் பணம் திருமணச்
செலவுக்கு போதாது என்ற நிலையில் உடனடியாக
ஊரிலிருந்த தன் வீடு நிலம் எல்லாவற்றையும் எங்கள்
மூவரின் மறுப்பையும் மீறி விற்று திருமணத்தை
நன்றாக நடத்தியதோடு மட்டுமல்ல, மீதி பணத்தில் என் தம்பி பேரில் ஒரு பிளாட்டும்
வாங்க வைத்தார் . தனக்கென்று
ஏதும் சேமிப்பு இருக்கவேண்டும்
என்ற சிந்தனையே இன்றி வாழும்
அவங்களுக்குப் பொருளாலும்
உடம்பாலும் இந்த சமயம் செய்வது
என்று நான் முடிவெடுத்துவிட்டேன் .
பிரபு அவங்களைப் பார்க்ணும்னு
துடிக்கிறான் . மாமா, பணம் அங்க
போனா நான் இந்த வீட்டில
இருக்க முடியாதுன்னு உங்க மகன்
சொன்னாரில்லை. இன்னும் ரெண்டு
மாசத்தில பிரபுவின் பத்தாம் வருப்புத்
தேர்வு முடிஞ்சிடும் . அதற்குப் பிறகு
நான் டிரான்ஸ்பர் வாங்கிட்டு
குழந்தைகளோட எங்க அப்பா வீட்டுக்கே
போறதா முடிவு. எடுத்திட்டேன் . அதுக்கு
முன்னாடியே விட்டைவிட்டுப் போய் இதே ஊரில
குழந்தைகளோடு வீடு எடுத்துத் தங்கவும் நான்
தயார் . ஏதேதோ காரணம் சொல்லி அம்மாவின்
அலோசனைப் படி அடகு வச்சிருக்கற என்
நகைகளை உங்க பிள்ளையை மீட்டுத் தரச்
சொல்லுங்க. உடனடியா நானும் கிளம்பிப்
போயிட்டே இருப்பேன் .” அரை மணிக்கும்
மேல் விடாமல் பேசிய சவிதா தொண்டை வரள
செம்பில இருந்த நீரை ஒரே மூச்சில் குடித்துவி
ட்டு ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள் .
அங்கு நிலவிய ஓரிரு நிமிட கனத்த மெளனத்தை
கலைக்கும் விதமாக கனகலிங்கம் பேசத்
துவங்கினார் .
“முதல்ல நான் என் மகன்க, மருமகங்க கிட்ட
மன்னிப்புக் கேட்டுக்கிறேன் . இவ வாய்க்கு
பயந்து சில விஷயங்களிலிருந்து நான் ஒதுங்கிப்
போனதோட விபரீத விளைவு இப்பத்தான்
எனக்குப் புரியுது. எனக்கு வர பென்ஷன் , ஊரில்
இருக்கும் வீட்டு வாடகைப் பணம் எல்லாத்தையும்
இவ சொன்னதை நம்பிட்டு இருந்தேன் . கையில
கொடுத்திட்டு எல்லா குழந்தைகளுக்காகவும்
சேமிக்கறதா நினைச்சிட்டு இருந்தேன் . இருங்க.
ஓரு நிமிஷத்தில வரேன் !” என்றவர் உள்ளே
பீரோவிலிருந்து ஓரு பை, பைல் எல்லாவற்றோடும்
வந்தார் .
“அம்மா தேவி, இதில என் வீட்டுப் பத்திரம்
உங்கம்மா உன் பெண்ணு பேரில கட்டற சட்டு
எல்லாமிருக்கு. எல்லாத்தையும் எடுத்திட்டுப் போயி
உன் கெளரவம் பாழாகாதபடி என்ன தேவையோ
எல்லாம் வாங்கிக்க உங்க அம்மா கூடவந்து
உனக்கு ஓந்தாசை பண்ணுவா. எல்லாத்தையும்
எடுத்திட்டுப் போ. அம்மாவையும்
வேணுமினா கூடவே கூட்டிட்டுப் போய் வச்சிக்க.
என் பென்ஷன் தொகை அவ அக்கவுண்ட்டுக்கு
வந்திடும் . என்னை எம் நல்லப்
உங்க
பங்க
பாத்துப்பாங்க.” சொல்லியவாறே
எல்லாவற்றையும் மகள் கைகளில் திணித்தார் .
“இப்ப என்ன அயிடிச்சின்னு ரொம்ப ஓவரா
பேசறீங்க... என வாய் திறந்த காமாட்சியை
அடக்கினார் கனகலிங்கம் .
“ஏய் நிறுத்து, இதுக்கு மேல ஒருவார்த்தை
பேசினே... நான் என்ன செய்வேன்னு எனக்கே
தெரியாது. இவ்வளவு வருஷமா சீட்டுக்
கட்டிட்டு வரயே நம்ம பேத்திங்க ரெண்டுக்கும்
ஓரு திருகாணியாவது வாங்கித் தந்திருப்பியா,
அம்மாவும் பெண்ணுமா இவ்வளவு கழ்த்தரமா
நடந்துக்கிட்டு இன்னும் என் பசங்க உழைப்பையும்
உறிஞ்சப் பாக்கறீங்களே ! வெக்ககேடு...”
“விடுங்க மாமா.”என ஏதோ சொல்லவருபவளைத்
தடுத்தவராய் , “சவிதா, இன்னிக்கு உன் பேச்சால
என் குருட்டுக் கண்ணைத் திறந்துவிட்டுட்டே.
உன்னை இந்த வீட்டைவிட்டுப் போன்னு சொல்ற
உரிமை இங்க யாருக்கும் கிடையாது. இந்த வீடு
உழைப்பையும் சேர்த்து உருவானதுதான் !
இதை மறந்துட்டுப் பேசற என் பிள்ளை சார்பா
நான் உங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன் . நீ உன்
அத்தைக்கு தேவையான பண தவி செய்யறதை
யாரும் தடுக்கமுடியாது. அதோடு நீ லீவு
போட்டிட்டு ஊருக்குப் போய் எவ்வளவு நான்
வேண்டுமானாலும் அவங்க கூட உதவிட்டு வா.
குழந்தைகளைப் பத்தி கவலைப் படாதே. நான்
அவங்களை நல்லாப் பாத்துக்கறேன் . இனிமே
இந்த வீட்டில என் மேற்பார்லையில எல்லாம்
சரியா நடக்கும் . பொன்னம்மா, சாப்பாடு ரெடியா
எல்லாருக்கும் தட்டு போடு. ஆட்டோ சந்தம்
கேக்குது. பசங்களும் வந்துட்டாங்க போலிருக்கு!”
உன்
பேசிக்கொண்டே மிடுக்காக நடந்து செல்லும்
அப்பாவை சந்தோஷமாக ஓடிச்சென்று ஈங்கர்
அணைத்துக் கொள்ள, காமாட்சி, ராகவன் , தேவி
அதியோர் மிரண்டு நின்றனர் .
Comments
Post a Comment