காலத்தினால் செய்த நன்றி 

சாந்தி நாதன். 

குறு  நாவல்

அத்தியாயம்   1

 

  "கந்தா  கதிர் வேலவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே " கந்தர் அனுபூதிப் பாடலை முணுமுணுத்தவாரே   தோட்டத்துக்குள் நுழைந்தாள் கமலம். பங்குனி மாத நடுவிலேயே கோடையின் தாக்கம் அதிகமாக  விடியல் நேரத்திலேயே தெரிந்தது.  ஆனால் நேற்று மாலை செடிகளுக்கு பாய்ச்சிய நீரால் குளிர்ந்திருந்த மண்ணின் ஈரமும் சலசலக்கும் இலைகளிலிருந்து  எழுந்த  குளிர் காற்றும் வெம்மையை குறைத்து சில்லென்ற உணர்வைத் தர, செடிகளிலிருந்து பூக்களைப் பறிக்கத் துவங்கினாள் கமலம்.

     சிறிது அருகம்புல், துளசி, நந்தியாவட்டை, அரளி, வெள்ளை, மஞ்சள், ரோஸ், சிகப்பு நிறங்களில் பூத்திருந்த செம்பருத்திப் பூக்கள் என்று பறித்து முடித்து அங்கிருந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்து கொண்டு பார்வையை சுழலவிட்டாள்.  இடம் சிறியதாக இருந்தாலும் அந்தந்த பூச்செடிகளின் தன்மைக்கேற்றவாறு இடம் தேர்வு செய்து, கச்சிதமாக பாத்திகள்  கட்டி, தினமும் தண்ணீர் ஊற்றும் நேரம் குப்பை களை நீக்கித் துப்புரவாக பராமரிக்கும் தம்பி ராமுவின் கைத்திறன் மலர்ந்து  சிரிக்கும் ஒவ்வொரு பூவிலும் எதிரொலிப்பது போல் அவளுக்குத் தோன்றியது. ஆபீஸிலிருந்து வந்து ஒரு டீயைக் குடிச்சிட்டு தோட்டத்துக்குள்ள போனா விடாம அவன் செ்ய்யற   வேலைக்குப் பலனா கொல்லையிலே தென்னை காய்க்குது. மாடியிலே கீரை, வெண்டைன்னு கொஞ்சம் கறிகாயும் கிடைக்குது. எம் பொணணு மாலாவும் ஓடியாடி உதவறதிலே வீடே பூந்தோட்டமாத்தானிருக்கு. தம்பியே மாப்பிள்ளையா அமைஞ்சாலும் என்னைப் பெத்தவளா தாங்கறானே அது என் பூர்வ ஜென்மப் புண்ணியந்தான், ரதி மாதிரி இருக்கற என் செல்லப் பேத்திங்க இரண்டுக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்சு எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்." கண் மூடி அமர்ந்திருந்தவள்  பூக்கூடையோடு எழுந்து வீட்டிற்குள் செல்லத்திரும்பினாள்  .

" தாமரையம்மா, காலை வணக்கம் " மாடியிலிருந்து ஒரு கூடை நிறைய வெண்டைக்காயோடு இறங்கிக்கொண்டே உற்சாகக் குரல் எழுப்பும் இளைய பேத்தி ஆர்த்தி எதிரில் வர, " ஆமா நீ இப்ப என்னை வேற எதோ சொல்லிக் கூப்பிட்டியே?"  உனக்குப் புரியலையா? கமலம் என்பதற்குத் தமிழில் தாமரை தானே? இந்தப் பெயர் பிடிக்கலையா .... அப்ப லோட்டஸ்னு கூப்பிடவா ?" குறும்புச் சிரிப்போடு பாட்டியின் கன்னத்தைக் கிள்ள வந்தவளை. "அம்மா தாயே நான் குளி்ச்சு முடிச்சாச்சு. நீ இன்னும் பல்லு கூட விளக்கியிருக்கமாட்டியே ... என்னைத் தொடாம இரு" .."நான் பல் தேய்ச்சு எங்க அப்பா கூட காப்பி குடிச்சிட்டு உம் பெண் உத்தரவுப்படி மாடியிலேந்து காய் பறிச்சிட்டு வரேன். நீ செடியிலே ஒரு பூகூட விடாம எல்லாத்தையும் பறிச்சிட்டியா?" கொஞ்சம் பூவை விட்டு வைக்கணும்னு சொல்லியிருக்கேனில்லே..." நீ போய் பாரேன் எவ்வளவு பூ விட்டு வச்சிருக்கேன்னு. சரி வழியை விடு. நான் போறேன் “."பாட்டி, எனக்கு ஒரு சந்தேகம். குளிக்காத நான் குளிச்ச உன்னைத் தொடடா நீ அசுத்தமாயிடுவேன்னா நான் சுத்தமாயிடுவேன்னு ஆறதில்லை?" " காலை வேளையில் இதென்னடி வம்பு பண்ணறே? பாரு உ்ங்க அப்பா வரான். அவனைக் கேளு உன் சந்தேகமெ்ல் லாம். ஆளை விடு." பொங்கி   வரும் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியபடி உள்ளே சென்றாள் கமலம். பேப்பரைப் பிரித்து நோட்டம் விட்டுக் கொண்டே மகளின் சேட்டையை ரசித்துக்கொண்டிருந்த ராமநாதனிடம் சென்று "அப்பா, ரொம்ப நாளா ஒரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன்"..... "ஏய் ஆ்ர்த்தி, காலை எழுந்ததிலிருந்து படிக்காம என்ன ஒவ்வொருத்தர் கிட்டேயும் வம்பு பண்ணிட்டு இருக்கே?  என்னபா நீங்க அவளை ஒரு அதட்டு போடக் கூடாதா?" தங்கையை முறைத்தவாறே அ்ங்கு வந்தாள் மூத்தவள் அர்சசனா.                                           

             "என்னடா நம்ம வீட்டு நாட்டாமையைக் காணுமேன்னு நினைச்சேன். வாங்க அக்கா, இப்ப என்ன சொல்லவரீங்க" கிண்டல் குரலில் பேசுபவளை முறைத்தாள் அர்ச்சனா.  "விடும்மா அவ சுபாவம் தெரிஞ்சதுதானே ஏதோ விளையாட்டுத் தனமா இருக்கா." சமாதானம் செய்வது போல் ராமு கூற, "பரிட்சை நெருங்கி வரது. அந்த சீரியஸ்னெஸ் கொஞ்சம் கூட இல்லாம இப்படி எல்லார் கிட்டேயும் வம்பு பண்ணி நேரம் போக்கறா.".... "அன்புள்ள அக்கா,உன்னை மாதிரி எப்பப் பார்த்தாலும  புஸ்தகமும் கையுமா உக்கார நம்மால முடியாது. பொழுது விடிஞ்சதும் இந்த மாதிரி எல்லார் கூடவும் ஜாலியா வம்பு பண்ணிட்டு அந்த அலுப்புத் தீர அப்பா கூட சுடச்சுட டிபனை வெட்டுவேன். அப்புறம் குளியல்…. மதியம் வரை படிப்ஸ்…. ஒரேயடியா படிச்சு களைப்புத் தட்டி போயிருக்குமில்ல அதனால பாட்டி , அம்மாவோடு உலக நிலவரங்களைப் பற்றி விரிவான அலசல்களோடு மூக்கப் பிடிக்க சாப்பாடு, தொடர்ந்து ஒரு குட்டித் தூக்கம். சாயங்காலம் அப்பா கூட கார்டனிங்…. டி.வி பார்த்துக் கொண்டு லைட் டின்னர். தூக்கம் வரவரைக்கும் படிப்பு. அப்புறம் எஞ் செல்லப்பாடடி பக்கத்துல படுத்து சுகமான தூக்கம்.  எப்படி நம்ம ரொட்டீன்?"  "பிரமாதம் போ. ப்ளஸ் டூ பரிட்சையை இவ்வளவு ஈசியா எடுத்து க் கொண்டு பேசற மேதாவி நீயாதான் இரு க்கும். எப்படியோ போ. " தங்கையின் பேச்சால் மனதில் எழுந்த  சிரிப்பை மறை்த்துக் கொண்டு போலியாகக் கோபம் காட்டும் அர்ச்சனாவை ஓடிச் சென்று அணைத்துக் கொண்ட ஆர்த்தி, "உன்னோட அழகு கோபத்தில இன்னும் அதிகமாகிறது எப்படீன்னு விளக்கமுடியுமா" ? பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்பவளைப் பார்த்து கலகலென அ்ர்ச்சனா சிரிக்க, மற்றவர்களும் புன்னகை புரி்ந்தனர். பாட்டி, இன்றைய கோட்டாவில் கடைசியா ஒரு கேள்வி. ஓம் பேத்தி இரண்டு பேரில யார் ரொம்ப அழகு? உண்மையான பதில் தேவை" ஆர்த்தி கேட்க, "ரெண்டு பேருமே  அழகுதான் மூ்த்தவ அவ அப்பா அம்மா மாதிரி  விவேகமா ,பொறுப்பா நடந்துக்கறதால ஒரு பங்கு கூடுதல் அழகா தெரியறா. சினனவ பண்ற சேட்டையால அ்ப்பப்ப  அவ சாயல்ல நம்ம மூதாதையர்  சாடை தெரியுது.".... பாட்டி முடிப்பதற்குள், சுத்தி வளைச்சு என்னைக் குரங்குன்னு சொல்றீங்கந்.அதானே. பரவாயில்லை. பெரியப்பா எப்பப் பார்த்தாலும் நான் உங்க மாதிரியே இருக்கறதா சொல்லுவாரு. அதனால இது ஒரு சுயவிமர்சனம்னு சொல்லலாமில்லையா?" பதில் சொல்லமுடியாமல் பாட்டி விழிக்க,. ..  மற்ற மூவரும் சிரிக்கத் துவங்கினர். " மணி எட்டடிக்க போவுது. கரண்ட் போறதுக்குள்ள சட்னி அரைக்கணும். அம்மா கொஞ்சம் வந்து வேலையைப் பாருங்க." "இதோ வரேன்" கமலம் மகளைப் பின் தொடர, "ஏம்மா, உன் நாத்தானாரை இவ்வளவு தைரியமா வேலை வாங்கறியே எல்லாம் உன் புருஷன் கொடுக்கற இடம்....பாவம் எ்ங்க பாட்டி"  "ஏய் .ஆ்ர்த்தி இப்ப வாயை மூடிட்டு போறியா இல்ல ரெண்டு அறை போடவா? நீங்களும் குளிக்கப் போங்க. " மாலா  போட்ட அதட்டலில் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.

                         அடுத்த அரை மணி நேரத்தில் ராமுவும் பெண்களும் காலை உணவுக்கு வந்து அமர, கமலமும் பூஜை முடித்து தான் வழக்கமாக் குடிக்கும் கஞ்சியோடு வந்து எதிரில் உட்கார்ந்தாள். மாலா கணவனின் மதிய உணவு பையைக்கொண்டு வைத்தவுடன் "வேலையெல்லாம் ஆயிடிச்சில்லை நீயும் டிபனை சாப்பிட்டுவிடு மாலா. செல்வி  வேலைக்கு வரும் போது எல்லாத்தையும் சேர்த்துத் தேய்க்கப் போடலாமில்லை,"கமலம் சொல்ல, "அம்மா நான் அப்பா கூடவே போய் காலேஜுக்குப் போறேன்.  எங்க  புரபஸரைப் பாத்து  பேசணும். மதியம் வந்துவிடுவேன். ஆனா நீங்களும் பாட்டியும் சாப்பிடாம காத்துக்கிட்டு இருக்காதீங்க .ஆர்த்தி, ஒழுங்கு மரியாதையா படிக்கற வழியைப் பாரு." அப்பாவும் மகளுமாக பைக்கில் கிளம்பிச் சென்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                         அத்தியாயம் 2

 " ராகிணி செல்லம், ராகுல் கண்ணா, மணி ஏழு ஆகப் போவுது. எழு்திருங்க ஸ்கூலுக்குக் கிளம்பணும் இல்லை"  இதமான வருடலோடு எழுப்பும் சுமதியின் மென் குரல் ஒலியில் குழந்தைகள் இருவரும் துள்ளி எழுந்தனர். "குட் மார்னிங் அக்கா" ஒரே குரலில் கூவியபடி பல் தேய்த்துக் கொண்டு வருவதற்குள் பால் கோப்பைகளுடன் வந்தவள்" ராகுல், சீக்கிரமா பாலைக் குடிச்சிட்டுப் போய் மாத்ஸ் ஹோம் ஒர்க்கை முடி. சரவணன் அண்ணா நோட்டை தயாரா எடுத்து வச்சிட்டு இருக்கான் பாரு" என்றாள். தலையாட்டியபடியே ராகுல் ஓட,  "ஸ்கூல் பையை செக் பண்ணிட்டு குளிக்க வா ராகிணி" .... குளிப்பாட்டி யூனிபார்ம் அணிவித்து அவளோடு வெளியே வந்தாள் சுமதி. சரவணன் உதவியோடு வீட்டுப் பாடத்தை முடித்த ராகுல் குளிக்கப் போகவும் வாசலில் தண்ணீர் லாரி வரவும் சரியாக இருந்தது. "ஏய் சுமதி,  சரவணா வண்டி வர சத்தம் கேக்கலையா? என்ன பண்றீங்க" நீலா பெருங்குரலில் கூப்பிட, "ஏன் கத்தற? அவங்க குடத்தோட வாசலில் தான் இருக்காங்க" எரிச்சலாக பதில் கொடுத்த சிதம்பரம் காலி வாளியோடு வாசல் நோக்கி நகர்ந்தார். "நீ்ங்க போய் குளிங்க. அவங்க மூணு பேரும் தண்ணி பிடிக்கற வேலையைப் பாத்துப்பாங்க. ஒத்த ஆளா சம்பாதிச்சு இவ்வளவு பேருக்கு சோறு போடறது பத்தாதா? நீங்க இந்த வேலைக்கெல்லாம் வரவேணாம்."வெடுக்கென்று வாளியை அவரிடமிருந்து பிடுங்கினாள் நீலா. தண்ணீர் குடத்தோடு உள்ளே நுழைந்த சரசுவின் மனதில் அண்ணியின் வார்த்தைகள் ஈட்டியாய் குத்தினாலும்  எதையும் வெளிக் காட்டாமல் "அண்ணா  நீங்கபோய் குளிங்க நாங்க பாத்துக்கறோம்" என்று அவரை அனுப்பினாள்.

 

             வேகவேகமாக சரவணன் தண்ணீர் பிடித்து வாயிற்படிகளில் வைக்க, சுமதி அவற்றை  உள்ளே தூக்கிச் சென்றாள். சரசு பாத்திரங்களில் நீரை நிரப்பிக் கொண்டே அண்ணனுக்கும் குழந்தைகளுக்கும் காலை உணவையும் மதிய உணவு டப்பாக்களையும் எடுத்து வைத்தாள். பொங்கும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அமர்ந்த சரவணனிடம் நோட்டை நீட்டிய ராகுல்," அண்ணா, எல்லாம் சரியா செஞ்சிருக்கேன்னான்னு செக் பண்ணி நோட்டை எம்பையி்ல் வைச்சிடுங்க ப்ளீஸ் " என்றான்.   "ஸ்கூல் முடிச்சு வந்து வீட்டுப் பாடம் பண்ணாம இப்பதான் பண்ணுவியா? சிதம்பரம் கோபமாகக்  குரல் எழுப்ப, "நேத்து கிரிக்கெட் மாட்ச் ரொம்ப விறுவிறுப்பாப் போச்சு மாமா. நானும் அவனுமா மாட்ச் பாத்துட்டுப் படுக்கவே லேட் ஆயிடிச்சு. அதான்  இப்ப எல்லாம் கரெக்டா முடிச்சுட்டானி்லை. விடுங்க" சரவணன் நோட்டைப் பையில் வைத்தபடி எல்லாம் சரியா இருக்கு "போய் சாப்பிடு" என்றான்.

 

         "ஏய் ராகிணி வா. தலை சீவி விடறேன் " நீலா கூப்பிட," நான் அக்காகிட்டதான் பின்னுக்குவேன். நீ சரியாவே வாரமாட்ட "  ராகிணி எதிர்குரல் கொடுத்தாள்  தோய்ப்பதற்கு துணிகளை எடுத்துக் கொண்டிருந்த சுமதி அதை வைத்துவிட்டு "சரி வா. நான் பின்னி விடறேன் "என்றபடி சீப்பை எடுத்தாள்."அம்மா, நான் தலை பினனற சமயம் நீங்க அவளுக்கு டிபனை ஊட்டி விடடு்ங்க. பஸ் வர டயம் ஆவுது. மாமா சாப்பிட வந்தால் அத்தைப் பாத்துப்பாங்க" என்றாள்.   "நேத்து தக்காளி ரைஸ் சூப்பரா இருந்தததுச்சு.அத்தை இன்னிக்கு என்ன வதசிருக்கீஙக?  இன்னிக்கு டப்பால சப்பாத்தி உருளை மசாலா செ்ல்லம்" கொஞ்சியபடி உணவூட்டும் அத்தைக்கு ஓரு ப்ளையிங் கிஸ் கொடுத்து விட்டு "சூப்பர் அத்தை என்றபடி ஓடுபவளை பார்த்தபடி "சுமதி சரவணா, நீங்க இதுங்களுக்கு ஓவரா செல்லம் கொடுக்கறீங்க" என்றார் சிதம்பரம்  பொய் கோபக் குரலில். "நாங்க இரண்டு பேரும் உங்க செல்லம். அவங்க உங்க செல்லத்தோட செல்லம்" ....."பஸ் வந்து விட அவர்கள் இருவரது லன்ஞ் ஸ்கூல் பைகளை எடுத்துக குடுத்து இருவரையும் ஏற்றி வழியனப்பி விட்டு உள்ளே வந்தான் சரவணன்.ட அவங்களை பஸ் ஏத்தியாச்சில்லை .சரவணா, மாமாவோட ஸ்கூட்டரைத் துடைச்சிட்டு கைகால் கழுவிட்டு வா. வெய்யிலுக்கு இதமா பழைய சோறு கரைச்சு வச்சிருக்கேன். குடிச்சிட்டு கரண்ட் பில் கட்டிட்டு அபபடியே சில மளிகை சாமான்கள் வாங்கணும்..... நீலா சொல்ல," "இதபாரு அவனோட வேலை விஷயமா ஒரு இடத்துக்கு அவன் போகணும். மத்ததெல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம்" என்றார் சிதம்பரம் ."இந்த மாதிரி எத்தனை இடத்துக்குப் போய் எத்தனை பேரைப் பாத்து என்ன பலன், வேலை கிடைச்சபாடில்லையே" நொடிக்கும் நீலாவை முறைத்து ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள், "அத்தை ,கால் ரொம்ப வலிக்குதுன்னு சொன்னீங்களே உங்க காலுக்கு எணணெய் துடைச்சு சூடா தண்ணி விடறேன் வாங்க " சுமதி அவளை உள்ளே அழை்த்துச் சென்றாள்.                            

                                                                                                                                                         

                      

        "அண்ணா, குளிக்கப் போகலையா?" ஏதோ யோசனையில் கண்மூடி அமர்ந்திருக்கும் சிதம்பரம் தங்கையின் பரிவான குரல் கேட்டு கண் திறந்தார். இரு வாளிகள் நிறைந்த தோய்த்த துணிகளை சுமந்து கொண்டு நிற்பவளைப் பார்த்துத் துக்கம் பொங்க," காலையிலிருந்து நீங்க மூணு பேரும் ஓயாம வேலை பாக்கறதும் துளியும் இரக்கமில்லாம இவ ஏச்சுகளை வாய் மூடிக் கேக்கறதும்  மனசை ரொம்ப சங்கடப் படுத்துது...."    "என்ன பேசறீங்க நீங்க?  குடிகாரப் புருஷன் அந்தக் குடியாலயே செத்து போனதில  வீதியில நின்ன என்னையும் இரண்டு குழந்தைகளையும் நீங்க உங்க கூட கூட்டிக்கிட்டு வந்து ஆதரவு காட்டலேன்னா எங்க நிலமை என்ன ஆகியிருக்கும்  சொல்லுங்க அண்ணா?  அண்ணியும் பாவம். தாமதமான கர்பம, அடுத்தடுத்த சிக்கலான இரண்டு பிரசவம்னு உடம்பு தளர்ந்து போயிட்டாங்க. உங்க ஒருத்தர் சம்பாதியத்தில இவ்வளவு பேரோட பொறுப்பை எவ்வளவு சிரமத்துக்கு நடுவிலே நீங்க தனியாளா சுமக்கறீங்க்கற கவலையில அவங்க பேசறாங்க.அவ்வளவுதான். அதுக்கு ஈடு செய்ற விதமா உங்க பிள்ளைங்க ரெண்டும் எங்க மேல உயிரா இருக்காங்க  நீங்க எங்க மேல காட்டற பாசமும் பரிவும எங்க வரு்த்தத்தை மறக்கச் செய்யற மருந்தா இருக்கு. " கண்ணில் நீர் பொங்க பேசி முடி்த்தாள் சரசு..

"மாமா, இன்னும்  நீங்கக் குளிக்கப் போகலையா?" ஆளுக்கொன்றாக துணி வாளியைக் கையில் எடுத்த சுமதியும் சரவணனும் மாடியேறியபடியே கேட்க,"நான் இன்னிக்கு வேலைக்குப போகலை. போன் செஞ்சு லீவு சொல்லிட்டேன். நான் போய் குளிச்சிட்டு வரேன். நாம எல்லாருமா சேர்ந்து டிபன் சாப்பிடலாம். சரவணன் என்   வண்டியிலேயே போயி சுமதியை அவ பாக்டரியில விட்டுட்டு நான் சொன்ன இடத்துக்கும் போயி அ்ந்த ஆளைப் பாத்துட்டு வரட்டும்." சிதம்பரம் குளிக்கச் சென்றார்.  "அம்மா,  அண்ணனுக்குக் கரைச்சு வச்சிருக்கற பழைய சோறையே நான் இப்ப சாப்பிடறேன் .மதியததுக்கு நாலு இட்லியை டப்பால எனக்குக் கொடு.  என் பிரண்ட் பைக்கில் வந்திட்டிருக்கா    .நான் அவ கூடப் போய்க்கறேன். அத்தை டிபன் சாப்பிட்டுட்டு பக்கத்து வீட்டுக்குப் போயிருக்காங்க. நீ, மாமா, அண்ணா டிபன் சாப்பிடுங்க. காலையிலயே பக்கத்து வீட்  டு  ஆணடிக்கிட்ட பணம் குடுத்து கால் லிட்டர் பால் வாங்கி காய்ச்சி ௐரமா முடி வச்சிருக்கேன் அதைக் குடி. ராத்திரியெல்லாம் இருமிட்டேயிருந்த இல்ல அதுக்குப் பிறகு நீ கொஞ்சம்  ஓய்வெடு."

பழைய சோற்றை விழுங்கி டிபன்  பாக்ஸை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள் சுமதி

                     

 

                                                                                                                                     

                                                                                                                                                     [  அத்தியாயம்  3

 

ஒரு தனியார் நிறுவனத்தில் சுமார் வருமானத்தில் மனைவி நீலாவுடன் சென்னையில் வாழ்ந்து வந்தார் சிதம்பரம். ஒரே தங்கை சரசு, கணவனின் ஒழுக்கமில்லா வாழ் முறையினால்  வெளியூரில் இரு குழந்தைகளோடு சிரமமான வாழ்க்கை வாழ்வது பற்றி அறிந்தும் பெரிய அளவில் உதவி செய்ய முடியாத நிலையில் மிக வேதனை அடைந்து வந்தார்  .இதற்கு சிகரம் வைத்தது போல் ஒருநாள் தங்கை கணவர் ௐயாத குடியால் இறந்த செய்தி இடியாக இறங்க, பதைத்து அவள் இருப்பிடத்திற்கு ஓடினார். எட்டு வயது சரவணன், ஐந்து  வயது சுமதியோடு நிற்க நிழலின்றி சொத்து சுகமின்றி நிற்கும் தங்கையைத் தன் வீட்டிற்க்குக் கூட்டி வந்தார். திருமணம் முடிந்து ஆறு வருடங்களாகக் குழந்தைப் பேறின்றி வாடியிருந்த நீலா   ஆரம்பத்தில் இவர்களை அன்போடு ஏற்றுக் கொண்டாள். சரசுவும் அண்ணிக்கு உதவியாக வீட்டுப் பொறுப்புகளை கவனித்ததோடு ஒரு தையல் மிஷனை அண்ணன் மூலமாக வாங்கிக்கொண்டு அக்கம் பக்க வீடுகளுக்கு துணி தைத்துக் கொடுத்து சொற்ப வருமானத்திற்கு வழிபார்த்தாள். குழந்தைகள் இருவரும் பள்ளி சென்றபிறகு ஏதேனும் சமையல் வேலைக்குப் போகலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம் நீலா கருவுற்றிருக்கும் நல்ல செய்தி தெரிந்தது.. பிறந்த வீடு என்று நீலாவிற்கு தாய் தந்தை இல்லாமையால்  தங்கையின் உதவியோடு சிதம்பரம் நீலாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

   தாமதமான கர்ப்பம் அடுத்தடுத்து இரு சிக்கலான பிரசவங்கள் என்பதால் மனைவியின் மருத்துவ செலவுகள், தங்கை குழந்தைகளின் படிபபுச் செலவு, தன் சிசுக்களின் பராமரிப்பு என்று பல நெருக்கடிகளை சிதம்பரம் எப்படி எப்படியோ சமாளிக்க, சரசு வீட்டு நி்ர்வாகம் ,குழந்தை வளர்ப்பு, சமையல் என பம்பரமாகச் சுழன்றாள். சுமதியும் சரவணனும் பள்ளிநேரம் போக   மீதி நேரஙகளில் அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவுவதும் குழந்தைகளோடு விளையாடுவதுமாக நாட்கள் கழிந்தன.

                சரவணன் படிப்பில் சுமார் ரகம் தான் .பிளஸ்டூவிற்குப் பின் அவனது சாதாரண மதிப்பெண்களும் சிதமபரத்தின் நிதி நிலைமையும் அவனுக்கு வெறும் பி.ஏ. படிப்பிற்கே தகுதியானதாக இருந்தது. பட்டப்  படிப்பை முடித்து இரு வருடங்களுக்கு மேல் ஆனபோதும் நிரந்தர வேலை கிடைககாமல் அப்பப்போது கிடைக்கும்  தற்காலிக வேலைகளுக்குச் சென்று கொண்டு அந்த வீட்டின் நிரந்தர வேலையாளாக இருந்தான். அவனைத் தன் சுடு சொற்களால் நீலா நோகச் செய்யு்ம்போது மௌனமாகக் கண்ணீர் வடிக்கும் அம்மாவையும் துவளும் மனதைத் தேறறி அவனுக்குத் தெம்பூட்டும் தங்கையையும் தன்னால் நல்லமுறையில் காப்பற்ற முடியுமா என மனம்  நொந்து போனான்.அவன்  சிதம்பரமும் தன்னால் முடிந்தவரை அவனுக்காக பல இடங்களில் வேலைக்காக விடாமுயற்சி செய்து வந்த போதிலும் இதுவரை பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.

       அண்ணன் படும் அவஸ்த்தையைக் கண்டதால் சுமதி பிளஸ் டூவிற்குப் பிறகு தொழிற்கல்வி பயிற்சியைத் தேர்ந்தெடுததாள். தையல் பயிற்சியில் சிறந்த முறையில் டிப்ளமா   முடித்து  நல்ல கார்மெண்ட் பாக்டரி  ஒன்றில் வேலைக்கமர்ந்தாள். அவளது சுறுசுறுப்பும் தொழில் நேர்த்தியும் அதன் நிறுவன தம்பதிகளை் கவர்ந்ததில் விரைவில் அங்கு சூப்ரவைசர் பதவிக்கு உயர்த்தப் பட்டாள் .மதிய இடைவெளியில் அங்குள்ள எம்பிராய்டரி பிரிவிற்குச் செனறு அவரகள் வேலைகளுக்கு உதவுவதுடண் அந்தத் தொழில் நுட்பத்தையும் சிறிது சிறிதாக்கக்  கற்றுவரலானாள் .பண்டிகை சமயங்களி்ல்  ஓவர்டைம் வேலைகளைச் செய்து அந்த ஊதியத்தை உடல் நலிவுற்று வரும் அம்மாவை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று  மாத்திரை மருந்துகள் வாங்குவது, அண்ணனின் அத்தியாவசியத் தேவைகளை அவன் கேட்காமலே நிறைவு செய்வது போன்றவறறுக்கு பத்திரப் படுத்தி வநதாள்.

      சிறிது நேர ஓய்வுக்குப் பின் ஹாலில் வந்தமர்ந்த சிதம்பரத்தை "மணி ஒண்ணரை ஆவுது. சாபபிட வாங்க " தனககும் அவுருக்கும் தடடுகளை வைத்தபடி நீலா அழைத்தாள். "சரவணனும் வந்துடுவான்  .நான் அவனோடு சாப்பிட்டுக்கறேன். நீ போய் சாப்பிடு. இவ்வளவு நேரம் பக்கத்து வீட்டிலே வம்பு. பேசிவிட்டு இப்ப எதிர் வீட்டுக்குப் போய் கதை பேச தெம்பு வேணுமில்லை.....காலை அஞ்சு மணிக்கு எழுந்த என் தங்கச்சி ஒரு நிமிடங்கூட ஓய்வில்லாம வேலை பாக்கறா. கிரைண்டர்ல அரைச்சுக்கிட்டே துணிக்குப்  பட்டன் தைக்கறா கூடமாட ஏதாச்சும் செய்யலாமி்ல்லை...."  கணலரின் குத்தல் வார்த்தைகளில் ஆத்திரம் பொங்க,  என் உடம்பு படுத்தற பாடு எனக்கில்ல தெரியும்? மணி ஒம்பதடிச்சா நீங்க எல்லாம் ஆன்ந்தமா குறட்டை விடடு தூங்க ஆ்ரம்பிச்சு விடறீங்க. விடிய விடிய நான் படற அவதியைப் பத்தி ஏதாச்சும் கவலைப் படறீங்களா?" "ஆமாமாம் எந்த உடல் உழைப்புமில்லாம டி.வி. யை சானல் மாத்தி மாத்தி  அலறவிட்டுப ராத்திரி பதினோறு மணிவரைக்கும் பாக்கற,   மத்தவங்க தூங்கமுடியாம கஷ்டப் படறதை பாத்தும் பாக்காத மாதிரி இருக்கற  உனக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதான்னே தெரியலை"  இருவரையும் சமாதானம் செய்ய அங்கு வந்த சரசு,  விடுங்கண்ணா, சரவணன் வரபடி வரட்டும். நீங்க இரண்டு பேரும் சாப்பிட வாங்க " என்றாள். ஏதோ பதில் செல்ல  வந்தவர் "இதோ சரவணன் வந்திட்டானே " என்றபடி வாசலுக்கு விரைந்தார்.....  "அவரைப் பார்த்தேன் மாமா. அவர் சொன்ன ஆபீசில இப்போ வேகன்சி இல்லையாம். வேற ஏதாச்சும் தெரிஞ்சா சொல்றேன்னாரு." தயங்கியபடியே உள்ளே நுழைந்தான்  சரவணன். " பெட்ரோல் விக்கற விலையில் தண்டத்துக்கு வண்டி சவாரி வேற. சரி வநது சோற்றைத் தின்னு உனக்காக  இவர் சாப்பிடாம உக்காந்திருக்காரு." நொடித்துக் கொண்டு நீலா உள்ளே போக, மௌனமாகத் தட்டின் முன் அம்ந்த சரவணன் பொங்கி வரும் விழி நீரையும் சோற்றொடு சேர்த்து விழுங்கினான்.

 

       எதிரில் அமர்ந்து கொண்டு நொடிக்கு நூறு தரம் முகம் சுளிப்பதும்  முணுமுணுப்பதுமாக சாப்பிடும் நீலாவை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து சாப்பிட்டு முடித்தான் சரவணன். ஏதோ சாப்பிட்டதாகப் பேர் பண்ணிய சரசுவும் தேய்ப்பதற்கான பாத்திரங்களுடன் பின் பக்கம் சென்றாள். உண்ட களைப்புத்தீர ஓய்வெடுக்க நீலாவும் சிதம்பரமும் தங்கள் அறைக்குச் சென்றனர். "நீயும் கொஞ்ச  நேரம் படுத்துக்கம்மா. அப்புறம் பாத்திரம் தேய்க்கலாம்" சரவணன் சொல்ல, "இல்லேப்பா பசியோட பசங்க  வரும் போது ஏதாச்சும் செய்து வைக்கணுமில்ல, அதுக்குள்ள இதை முடிக்கணும்" பேசிக் கொண்டே சரசு தேய்க்க ஆரம்பிக்க, "சரி நீங்க தேய்ச்சுப் போடுங்க நான் கழுவறேன்" லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு சரவணன் பாத்திரங்களைக் கழுவிக் கூடையில் கவிழ்த்தான். "சரி இப்பவாச்சும் போயி கொஞ்சநேரம் படுங்க. பாத்திரக் கூடையை நான் அப்புறமா உள்ளே கொண்டு வைக்கிறேன்" கட்டாயப் படுத்தி அம்மாவைப் படுக்கச் செய்தவன் மறுநாளைக்குத் தேவையான பள்ளி உடைகளையும் மாமாவின் பாண்ட் சட்டைகளையும் அயர்ன் செய்யத் துவங்கினான்.

 

 

                                                                   ] 

 

                                                         

                                                               அத்தியாயம் 4

 

" விடாம படிச்சதில தலைவலிக்குது. அ்ம்மா,பாட்டி வா்ங்க  சாப்பிடலாம்." ஆர்த்தி குரல் கொடுத்தபடி மூவருக்கும தட்டுகளை வைத்து அமரந்தாள்."உனக்குப் பிடிச்ச வெஜிடபிள் ரைஸ் பண்ணியிருக்கேன். சாப்பிட்டுவிட்டு படிக்கப் போ இல்லேன்னா தூங்கு." மாலா சொல்லியபடியே சாப்பிட அம்ர்ந்தாள்.   "சாப்பாடு மட்டும் நல்ல இரு்ந்தா போதுமா ஜாலியா பேசிச் சிரிச்சிக்கிட்டு சாப்பிட்டாதான் சுவை கூடும் " ஆர்த்தி சாப்பிடத்  துவங்கினாள். "சின்ன வயசில உங்கப்பா மாலாவைச் சீண்டி அழவிட்டுக்கிட்டே இருப்பான் அவன் குணம் அப்படியே உனக்கு வந்திருக்கு....." பாட்டி சொல்ல, "எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் பாட்டி..உன் பெரிய தம்பியை விட்டுட்டு ஏன் சின்னத் தம்பியை மாப்பிள்ளைய முடிவு செஞ்ச? சொல்லு" என்றாள்.  " உங்க பெரியப்பாவுக்கும் எனக்கும் பன்னிரெண்டு வயசு வித்தியாசம். நான் அவரை என்  அண்ணனாத்தான் பார்த்தேன். அவரும் என்னைத் தன் தங்கையாத் தான் நினைச்சு பாசம் காட்டுவாரு. உங்க  அப்பா வம்பு பண்ணி என்னை அழ விடும்  போதெல்லாம் தம்பிக்கிட்ட இருந்து   என்னைக் காப்பாத்துவாரு. இப்பவும் எனக்கு அண்ணா தான் அவரு." மாலா உணர்ச்சி பொங்க பேசினாள்." அம்மா நீங்க ரொம்ப லக்கிதான் . உங்க பாட்டி அழகா இரண்டு பிளளையைப் பெத்து உனக்கு ஒரு அண்ணனையும் அழகான புருஷனையும் கொடுத்திருக்காங்க. ஆனா எம்பாட்டி சுத்த மோசம். எங்கம்மாவுக்கு ஒரு தம்பியைப் பெத்திருந்தாங்கன்னா நான்  அவரைக் கல்யாணம் கட்டிக்கிட்டு உங்க கூடவே ஜாலியா இருந்திருப்பேன் இல்லையா"  .... " நல்லவேளை பிறக்காத என் தம்பி உன் தொல்லையிலிருந்துத் தப்பிச்சான். ஏய் ஆர்த்தி இதோட நிறுத்திக்கிட்டு இடத்தை காலி  பண்ணு. வாசல்ல பாரு. அர்ச்சனா ஆட்டோவிலேந்து இறங்கி உள்ள வரா. " மாலா மிரட்டும் குரலில் சொல்ல. "அய்யைய்யோ என்ன படிச்சே  எப்படி படிச்சேன்னு இவ ரம்பம் போட ஆரம்பிப்பதற்குள்  நான் எஸ்கேப் "ஒரே தாவாக ஓடுபவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே,அம்மா நீ போய் கொஞ்ச நேரம் படு. நான் அர்ச்சனாவுக்கு  சாப்பாடு போட்டுட்டு வரேன்." ..."இன்னிக்கு எங்க புரோசபரைப் பார்த்து விட்டு வந்ததில் என் பி.எச். டி. கோர்ஸ் சம்பந்தமா நிறைய கிளாரிட்டி கிடைச்சுது. அப்பா வந்ததும் அது பத்திப் பேசணும்." உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே சாப்பிடும் மகளை பெருமை பொங்க பார்த்து, "ரொம்ப சந்தோஷம்மா. நீ ஆசைபட்டபடி படிச்சு டாக்டரேட் வாங்கணு்கறது தானே உங்க அப்பாவுக்கும் ஆசை? கடவுள் அருளில் எல்லாம் நல்ல  படியா நடக்ணும்." அறைக்குள் படுத்திருந்த கமலமும் இவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள். "பிறந்தது ரெண்டும் பெண்ணாயிடிச்சேனனு மனசில வருத்தப் பட்டதுக்கு மாறா ரெண்டு குழந்தைகளும் அறிவிலயும்  அழகிலயும் சிறந்து இருக்காங்க. எல்லாம் நல்லடியா நடந்து அவங்க எதிர்கால வாழ்க்கையும் பிரமாதமா அமையணும்." மனதிற்குள் வேண்டியபடியே எதிரில் புகைப் படத்தில் புன்னகை புரியும் கணவரைப் பார்த்தபடியே கண் மூடினாள். அரைகுறை உறக்கத்தில் இருந்த அவளது மனதில் கடந்தகால நினைவுகள் படம்போல் விரியலாயிற்று.

 

 

                                                                     

                                             

       கோவை நகரத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் கந்தசாமி. மனைவி சொர்ணாவுடனும் செல்ல மகள் கமலத்துடனும் வாழ்ந்து வந்தார். கமலத்தின் ஆறாவது வயதில் அவர்களுக்கு ஒரு மகன் பிறக்க, கோபாலகிருஷ்ணன் எனப் பெயரிட்டு ஆசைக்கு ஒருமகள், அன்புக்கு ஒரு மகன் என ஆனந்தமாக இருந்தனர். அவ்வூர்ப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையே பெண்கள் அனுமதிக்கப் பட்டனர். வயதுக்கு வந்த பெண்ணை தொலைதூரப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் சொர்ணா மீண்டும் கருவுற்றாள். வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு இப்ப இது தேவையா என்று வெட்கமும் வேதனையும் அடைந்த சொர்ணாவை கமலம் தன் அன்பு வார்த்தைகளாலும் கந்தசாமி பரிவான கவனிப்பாலும்  சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர் ."ஏம்மா இதுக்குப் போய் இவ்வளவு கவலைப் படறே.? மத்தவங்க கிண்டல் பத்தியெல்லாம் நினைக்காதே. அப்பாவும்  நானும்  இருக்கோமில்லை...."மகளே தாயாக மாறி உற்சாகமூட்டியதோடு வீட்டுப் பொறுப்புகளை முழுவதும் ஏற்றுக் கொண்டு "சொர்ணா பெண் மாதிரி பொறுப்பு யாருக்கு வரும்?" என்று ஊராரை வியக்க வைத்தாள்.

        உரிய நேரத்தில் தங்க விக்ரகம் போல் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடு்த்தாள் சொர்ணா. "என்னையும் கோபி    தம்பியையும் விட இவன் தான் ரொம்ப அழகு "என்று மகிழும் கமலமும் "நம்ம தம்பிக்கு பேரு ராம்னு வைங்கப்பா" என்ற மூத்தவனும் தம்பி வரவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

          வீட்டுப் பொறுப்புகளில் தாய்க்கு வலது கரமாக உதவியதோடு தோட்டக் கலையில் ஆர்வம் கொண்டு கந்தசாமி அமைத்துள்ள வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதிலும் கமலா முழுமையாக  ஈடுபட்டாள். எட்டாவதோடு பள்ளிப் படிப்பை நிறுத்தினாலும் தந்தையிடமிருந்து ஆங்கிலம் ,கணிதம் என்று தன் அறிவையும் வளர்த்துக்கொள்ள அவள் தவறவில்லை. தம்பிகள் இருவருமே பெற்றோர்களை விட அக்காவிடம் அதிக நெருக்கமும் பாசமும்  கொண்டு வளர்ந்தனர். அதுவும் இளையவன் ராமுவிற்கு அவள் தாயாகவே இருந்தாள்.

        வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்குத் தினமும் தோட்டத்துப் பூக்களைப் பறித்துக் கொண்டு செல்வதும் பூசை நேரங்களி்ல் அர்ச்சகருக்கு உதவியாக வேலைகள் செய்வதும் கமலத்திற்குப் பிடித்தமான விஷயங்கள். "கந்தசாமி, உம் பெணணோட அழகுக்கும் பதவிசான குணத்துக்கும் நல்ல இடமா அமைஞ்சு அவ வாழ்க்கை நல்லபடியா அமையணும்" ஊர்ப் பெரியவர்களின் நல்வாக்கு கமலத்தின் பதினாறாவது வயதில் பலித்துவிட்டது.

           உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வந்திருந்த ஒரு தம்பதியர் கோவிலில் கமலத்தைப் பார்த்து அவளைப்பற்றி அர்ச்சகரிடம் விசாரிக்க, அவர் மிக மகி்ழ்ச்சியோடு அவளின் குடும்ப விவரங்களைக் கூறி ஊரின் முக்கிய பிரமுகர் ஒருவரையும் அந்த தம்பதிகளையும் அழைத்துக் கொண்டு கந்தசாமியின் வீட்டிற்கே வந்து விட்டார்.

 

        தட்டு நிறைய பூ பழங்கள் என்று திடீரென வந்து நிற்பவர்களை வரவேற்று அமரச்செய்தனர் கந்தசாமி தம்பதியர் . "உங்க பெண்ணை நேத்துக் கோவிலிலே பார்த்தோம். பார்த்தவுடனே எங்க வீட்டுப் பையனுக்குப் பொருத்தம இருப்பான்னு மனசுக்குப் பட்டுச்சு" புன்னகை பூக்கும் முகத்தோடு பேசத் துவங்கினார் அந்த பெண்மணி." எங்க அண்ணன் மகனுக்கு தான் சம்பந்தம் பேச வந்திருக்கோம். அவுரு இப்போ இல்லாததால அவங்க ஒரே மகன் திருமணப் பொறுப்பை எங்க அண்ணி எங்ககிட்டே ஒப்படைச்சிருக்காங்க" பெண்மணி சற்று நிறுத்த, "அவள் கணவர் தொடர்ந்தார். "என் பேரு திருநாவு இவ மீனாட்சி.. அவிநாசியில சொந்த பிஸினஸ். இவங்க அண்ணன் மகன் சுந்தரம் கோவையில ஒரு பாக்டரியில மானேஜரா இருக்கான். பட்டப் படிப்புப் படிச்சிருக்கான். நல்ல ஒழுக்கமான பையன். அவங்க அம்மா செண்பகமும் ரொம்ப தன்மையானவங்க. பணங்காசுக்கொண்ணும் குறைவில்ல. வரப் போற மருமகளை நல்லாப் பாத்துப்பாங்கன்னு உறுதியா சொல்லலாம். இதில பையன் ஆபிஸ் விலாசம், வீட்டு முகவரி அவன் ஜாதகம், போட்டோ எல்லாமிருக்கு. பாருங்க. எல்லாம் ஓகேன்னா பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்யலாம்" சொன்னபடியே ஒரு நோட்டை கந்தசாமியிடம் தந்தார். அம்மாவின் உத்தரவுப்படி வந்தவர்களுக்குக் காப்பி தயாரித்துக் கொண்டு வந்த கமலத்தை அருகில் அழைத்து அவள் நீண்ட கருங்கூந்தலில் பூச்சரத்தை சூட்டி திருஷ்டி கழித்த மீனா தம்பதியரை வணங்கினாள் கமலம். வந்தவர்கள் விடைபெற்றுச் சென்றவுடன் மகளின் ஜாதகத்தையும்  சுந்தரத்தின் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு நண்பரும் ஜோசியருமான நமசிவாயத்தின் வீட்டிற்கு விரைந்தார் கந்தசாமி.

                                                                                               

                                                                                                                                                            

 

                                                                                                                                         

                                                                                                                                                         

 

     அடுத்த சில நாட்களில் ஜாதகப் பொருத்தம் நன்றாக  இருப்பது தெரியவந்தது. தொடர்ந்த பெண் பார்த்த்தில் இரு வீட்டினருக்கும் நல்ல திருப்தியைத் தர, உடனடியாக நிச்சயதார்த்த வைபவமும் அடுத்து வந்த சுப முகூர்த்தத்தில் திருமணமும் நடந்தது. சம்பந்தி செண்பகமோ மாப்பிள்ளை சுந்தரமோ எந்தவித எதிர்பார்ப்புமின்றி  கமலத்தைத் தங்கள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்த  மகாலட்சுமி என்று ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தாலும்  கந்தசாமி தன் ஒரே மகளுக்குத் தம்மால்  இயன்ற அளவு சீர் செனத்திகள் கொடுத்துத் திருமணத்தையும்  குறைவறச்  செய்தார்.   

              சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிந்து பெற்றவர்களை வணங்கி விடைபெறும் நேரம் வந்தது. அடக்கமாட்டாமல் மகளை அணைத்துக்கொண்டு அழும் சொர்ணத்தையும் கண்களில் நீir   கரைகட்டி நிற்கும் கந்தசாமியையும் நெகி்ழச்சியோடு பார்த்த செண்பகம் "உங்க மக எனக்கும் மகதான். அவளுக்கு எந்த வருத்தமும் வராம சந்தோஷமா வச்சுப்போம் .கவலைப் படாதீங்க. உங்களுக்கு மகளைப் பார்க்கணும்னு எப்ப தோணிணாலும் உடனே கிளம்பி வாங்க." என்றாள். " மூத்த தம்பியை செல்லமாக கோபி என்று கூப்பிடும் கமலம், டேய் கோபி அம்மாவுக்கு முடிஞ்சவரை ஒத்தாசை பண்ணு. பள்ளிக்கூடம் விட்டு வந்து தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்று. தம்பி ரகளை செஞ்சாலும் அவனை அடிக்காதே." ..."சரிக்கா, மாமா’, அப்பப்ப நீங்க அக்கவோடும் அ்த்தையோடும் இங்க வாங்க" என்றான். "நாங்க வரது இருக்கட்டும் நீ இங்க எட்டாம் வகுப்பு முடிச்ச உடனே ஒன்பதில் இருநது கோவையில் நல்ல ஸ்கூலில் தான் படிப்பைத்  தொடரணும். இது பத்தி நான் ஏற்கனவே மாமா கிட்ட பேசிவிட்டேன்..... சரி, கிளம்பறோம்" சொன்னபடியே கமலத்தின் கரம் பற்றி காரை நோக்கி நடந்தான் சுந்தரம். அதுவரை பேசாமல் நின்று கொண்டிருந்த ராமு வண்டியை நோக்கிச் செல்பவளைப் பிடித்து இழுத்து "அக்கா, என்னை விட்டுட்டுப்  போகாதீங்க. என்னையும் உங்க கூடவே அழைச்சிட்டுப்போங்க" என்று கதற ஆரம்பித்தான். அவனை கமலத்திடமிருநது பலவந்தமாகப் பிடித்து இழுத்து கைகளில் தூக்கிக் கொண்ட கந்தசாமி "இந்த வண்டியில இடமில்லை. நாம இன்னொரு காரு வருது. அதில போகலாம்." என்றார். "நீங்க எல்லாம் வேற கார்ல வாங்க. நான் அக்கா மடியில உக்காந்துகிட்டு இதுல போறேன்." விசும்பிக் கொண்டே சிறுவன் கூற, "சம்பந்தி பேசாம நீங்க கோவையிலேயே வேலை மாத்திக்கிட்டு அங்க வந்திடுங்க. அக்காவைப் பிரிஞ்சு தம்பிகளும் மகளைப் பிரிஞ்சு நீங்களும் ஏங்க வேண்டாமில்லையா? இதை உங்ககூடப் பிறந்த மாதிரி சொல்றேன்" எனறாள் செண்பகம்.

 

      "நீங்க இப்படி பேசறதே மனதுக்கு ரொம்ப இதமாயிருக்கு.  எங்க மகளைப் பிரியற ஏக்கத்தைவிட அவளை இவ்வளவு நல்ல இடத்தில சேர்த்து வச்சிருக்கற சந்தோஷம் தான் எங்களுக்கு அதிகமா இருக்கு. கமலம் ரொம்ப அதிருஷ்டசாலி. நீங்க கிளம்புங்க" கைகூப்பி அவர்களை வழியனுப்பினார்.கந்தசாமி.

                                                                

                      

 

                                                                         

                                                                  அத்தியாயம் 5

                                                                                                                                                        

 

     மகள் இல்லாத குறை நீங்க கமலத்தை மகளாக பாசம் காட்டி பேணிய செண்பகத்தின் பரிவுக்குக் கொஞ்சமும் குறையாமல் கமலம் அவளைப் பார்த்துக் கொண்டாள். அம்மா மகனின் ரசனைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சமையல் செய்வதிலிருந்து வீட்டு நிர்வாகத்தை மாமியாரின் பாணியிலேயே திறம்பட நிர்வகித்து அவளை ஓய்வெடுக்கச் செய்தாள் .

 

                       சொன்னபடியே சுந்தரம் விடுமுறை நாட்களில் மனைவியோடும் தாயோடும் கந்தசாமி வீட்டிற்கு வருவது பின் எல்லாருமாக அவினாசி சென்று திருநாவு மீனாட்சியைப் பார்த்து நலம் விசாரித்து வருவது, அடிக்கடி கந்தசாமி குடும்பத்தோடு கோவைக்கு விஜயம் செய்வது என நாட்கள் நிமிடங்களாகக் கழிந்தன. இந்த சந்தோஷமான சூழ்நிலைக்கு மேலும் ஆனந்தம் அளிப்பது போல் கமலம் கருவுற்றாள்.

           

                          "பிரவசத்தை கோவையிலேயே வச்சுக்கலாம் மாமா" என்ற சுந்தரத்தின் வார்த்தைகளை இதமாக மறுத்த கந்தசாமி  உரிய நேரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிகளை கோவையில் நிகழ்த்தி மகளை ஊருக்கு அழைத்துச் செனறார். "டாக்டர் பேறு காலத்துக்குக் குத்துமதிப்பா நாள் சொல்வாங்க இல்லையா? அந்த சமயம் நான் அங்க வந்துடுவேன். எங்க குல வாரிசை நான்தான் முதல்லப் பார்த்து கைகள்ல வாங்கணும்" l  செண்பகம், கமலம் கோவையிலிருந்து பிரசவத்துக்குப் பெற்றோருடன் கிளம்பும்போது  சொன்னாள் அது  போல அவள்   வந்து சேர்ந்த நாலாவது நாளில் கமலத்திற்குப் பெண்குழந்தை பிறந்தது.

 

     " எங்க மாமியார் பெயர் ஜெயலட்சுமி . பேத்திக்கு அந்தப் பெயரை வைக்கலாம்" செண்பகம் சொல்ல, அருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் ராமு, " என் மாலினி டீச்சரை எனக்கு ரொம்ப பிடிக்கும். பாப்பாவும் அவங்க மாதிரி அழகா இருக்கில்லை .நான் பாப்பாவை மாலினின்னு தான் கூப்பிடுவேன்" என்றான் தோரணையாக" இந்தப் பேரும் நல்லாத்தானிருக்கு. பெரியவங்க பேரை வச்சாலும் கூப்பிடறதுக்கு வேற பேரு வேணுமில்லை. அதால எல்லோரும் மாலான்னோ மாலினின்னோ கூப்பிடலாம். சந்தோஷம் தானே ராஜா" என்றாள் செண்பகம்.

 

    இரு குடும்பத்துக்கும் முதல் வாரிசு என்பதால்  மாலா செண்பகம் ,சொர்ணா, கந்தசாமி மூவரின் அன்பு பேத்தியாக  குலம் விளங்க வந்த செல்வமாக விளங்கினாள். அதற்கு ஏற்றார்போல் சுந்தரத்தின் அலுவலக்தில் அவனது உண்மையான உழைப்பையும் நேர்மையையும் பாராட்டி ஊதிய உயர்வும் பதவி உயர்வும் வழங்கினா்ர்கள்."எல்லாம் எம் பேத்தி பிறந்தவேளை அப்பாவுக்கு அதிருஷ்டம் அடிச்சிருக்கு" பெருமையி்ல் பூரிக்கும்  செண்பகத்திடம், " அத்தை ,இது எங்க வீட்டுக்காரரோட உழைப்புக்குக் கிடைச்ச பரிசு. உங்க பேத்தியால வரலை " கமலம் சிரித்துக் கொண்டே பதி்ல்  சொல்ல "உன் வீட்டுக்காரன்  எப்பவும் திறமையாத் தான் உழைச்சான். ஆனா இப்பதானே அதுக்கு நல்ல பரிசு கிடைசசிருக்கு .இன்னும் கொ்ஞ்ச நாள்ல மாலாவோட முதல் பிறந்தநாள் வருது. அதை தடபுடலாக் கொண்டாடணும்" சொன்னபடியே செண்பகம பேத்தியின் பிறந்தநாள் வைபவத்தை ஒர கல்யாணம் போல நிகழ்த்தி மகிழ்ந்தாள். காலையில் வைதிக நிகழ்ச்சிகளோடு உறவினர்களுக்கும்.  அக்கம் பக்கத்தினருக்கும் பெரிய விருந்து, மாலை கேக் வெட்டி அலுவலக நண்பர்களுக்கு  பார்ட்டி என்று  நாள் முழுவதும் கொண்டாட்டமாக அமைந்தது. கந்தசாமியும் தன் நிலைமைக்கும் அதிகமாகவே பேத்திக்கும் மகள் மாப்பிள்ளைக்கும் சீர் கொண்டு வந்து நிகழ்ச்சிகளில் உற்சாகமாகப பங்கேற்றா். "எதுக்கு இவ்வளவு சீர் செஞ்சீங்கப்பா? இவ்வளவு பணத்துக்கு என்ன செஞ்சீஙக"? தனிமையில் கவலையோடு கேட்ட மகளுக்கு "எங்க மனசில இருக்கற ஆசைக்கு இது ரொம்ப கம்மி இதைப் பத்தி நீ வீணா கவலைப் படாதே" என்று பதில் அளித்தார்.

 

      மாலினிக்கு இரண்டு வயது இருக்கும் போது சுந்தரத்தின் தொடர்ந்த வற்புறுத்தலுக்கு இணங்கி கோபியை ஒன்பதாவது வகுப்பில் கோவையில் கொண்டு வந்து சேர்த்தார் கந்தசாமி. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய கோபி கமலத்தின் எல்லா நல்ல குணங்களும் பொருந்தி விளங்கியதால் செண்பகத்தின் பிரியத்திற்கு உரியவனாகிவிட்டான். குழந்தை மாலாவை விளையாட்டுக் காட்டுவதும் தூங்க வைப்பதும் அவனுக்கு மிக பிடித்தமான விஷயங்கள். காலை வேளைகளில் தன் சைக்கிளையும் மாமாவின் பைக்கையும் அவர் தடுத்தாலும் கேட்காமல் சுத்தமாகத் துடைத்துவிட்டுதான் குளித்துவிட்டு பள்ளி கிளம்புவான். "பெத்தவங்களைப் பிரிஞ்சு நம்ம கூட இருக்கற பிள்ளை மனசில ஏக்கம் வராம நாம தான் கவனமா பாத்துக்கணும்னு" செண்பகம் மகன் மருமகளிடம் அடிக்கடி சொல்வதோடு கோபி சாப்பிட உட்காரும் போதெல்லாம் தானே அருகில் அமர்ந்து "படிக்கறபிள்ளை நல்ல சாப்பிடு ராசா" என்று பாசத்தோடு பரிமாறுவாள்." படிக்கற புள்ளைக்கு புத்தகமெல்லாம் வச்சுக்கற மாதிரி ஒரு மேசை நாற்காலி வாங்கு சுந்தரம் " என்று வாங்கி அவன் பிறந்தநாள் அன்பளிப்பாக அதை வழங்கினாள் .கோபியும் செண்பகத்தைத் தன் தாயைப்போல் நினைத்து "சாப்டீங்களா அத்தை? சோர்வா இருக்கீங்களே தலைவலிக்குதா? தைலம் தேய்ச்சு விடவா? என்று அன்போடு கேட்பான். இரவு அவன் படித்து முடித்து அத்தையின் கட்டில் பக்கத்தில் படுக்கப் போகும் வரை கண்விழித்துக் காத்திருப்பவளோடு ஏதாவது பேசியபடியே  அவளுக்கு இதமாகக் கால் பிடித்துவிட்டு போர்வை போர்த்திவிட்ட பிறகு தான் உறங்குவான். மொத்தத்தில் அவர்கள் எல்லாருமே அன்பெனும் வலுவான கயிற்றால் பிணைக்கப் பட்டிருந்தனர்.

 

                இந்த இன்ப வாழ்வில் ஒரு எதிர்பாராத நிகழ்வாக ஒரு நாள்..... பேத்தியை மடியில் போடடுக் கொஞ்சித் தூங்கவைத்தவள் குழந்தையை படுக்கையில் கொண்டுவிட வந்த மகனிடம் "பாப்பாவை படுக்க வச்சிட்டு இங்க வா" என்றாள் மாமியாருக்குக் குடிக்க பாலைக் கொண்டுவந்த கமலத்திடமிருந்து பாலை வாங்கி பருகியவள்"எம் பக்கத்தில உக்காரு என்று அவள் கையைப் பிடித்து அமர வைத்தாள். இன்னொரு கையால் மகனைப் பிடித்துக் கொண்டவள் ஏதோ சொல்ல வருவது போல் வாயைத் திறந்த சமயம் தலை சரிந்து மகன் மடியிலேயே கண்மூடி சாய்ந்தாள்.  அ ரு கில் இருக்கும் ஒரு மருத்துவரை ஓடிப் போய் கோபி அழைத்து வர, அவர்  செண்பகம் இறந்து விட்டதை உறுதிப் படுத்தினார்.                                                                                               

 

 

                                                                                                                                                                                

 

  

 

                                                                                                                                                                                                   

                                                                                                                                                               அத்தியாயம     6

 

      செண்பகத்தின் திடீர் மறைவால் நிலைகுலைந்து போன கமலம் சுந்தரம் இயல்பு நிலைக்குத் திரும்பி நடைமுறை வாழ்க்கையை எட்டும் வரை சிறிது நாட்கள் சொர்ணாவையும் ராமுவையும் கோவையில் இருக்கச் செய்துவிட்டு ஊர் திரும்பினார் கந்தசாமி. அக்காவோடு இருக்கும் ஆனந்தத்தோடு குழந்தை மாலினியோடு விளையாடுவதாகச் சொல்லி அவளைச் சீண்டி அழவிடுவது ராமுவிற்கு கூடுதல் சந்தோஷத்தை அளித்தது. நாட்கள் செல்லச் செல்ல   ஓரளவு குடும்பம் சகஜ நிலைக்குத் திரும்ப, சொர்ணாவும் மகனோடு ஊர் திரும்பினாள். நாலைந்து மாதங்கள் சென்றிருக்கும். ஒன்பதாவது வருட முழுத் தேர்வை நலல முறையில் முடித்துக் கொண்டு பெற்றோரோடு விடுமுறையை கழிக்க வந்தான் கோபி.

 

"இரண்டு நாளா காய்ச்சல். கஷாயம் வச்சுத் தரச் சொல்லி குடிச்சும் சரியாகலை. நீ அப்பாவை டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப்போ. நான் சொன்னா கேக்க மாட்டேங்கறாரு." அம்மாவின் கவலை தோய்ந்த முகமும் அப்பாவின் நலிந்த உடலும் கோபியைக் கலவரப் படுத்தியது. "வாங்கப்பா டாக்டர் கிட்ட போயிட்டு வரலாம்" மகனின் வற்புறுத்தலக்கு வேண்டாவெறுப்பாக இணங்கி கிளம்பிச் சென்றா் கந்தசாமி.

 

          சாதாரண ஜுரம் எனத் துவங்கி மருந்துகளால் குறையாமல் அதிகமான காய்ச்சலால் மருத்துவ மனையில் கந்தசாமியை அனுமதி்த்தனர். தகவல் தெரிந்து கோவையிலிருந்து பதைத்தோடி வந்தனர் சுந்தரமும் கமலமும். கோவைக்குக் கூட்டிச் சென்று நல்ல மருத்துவ மனையில் சேரக்கலாமா என சுந்தரம் பதற, அதற்கு் தேவையிருக்காது என்பது போல் அன்றிரவே  இறந்துவிடடார் கந்தசாமி.

 

             நிலைகுலைந்து போன இந்தப் பேரிழப்பிலிருந்து முதலில் தன்னை மீட்டுக் கொண்ட சுந்தரம் அடுத்து செய்யவேண்டியவைளைப் பற்றிய ஏற்பாடுகளைக் கவனிக்கத் துவங்கினார் . அதிகமான உலகியல் அறிவோ சாமர்த்தியமோ இல்லாமல் கணவரின் நிழலாக இதுநாள் வரை வாழ்ந்திருந்த சொர்ணாவையும் ஒன்பது வயது சிறுவன் ராமுவையும் தனியாக ஊரில் விட மனமின்றி கோவைக்கே அழைத்து வந்து ராமுவைப் பள்ளியில் சேர்த்தார். கந்தசாமியின் பள்ளி நி்வாகத்தின் ஒத்துழைப்பினால்  அவரது ஓய்வூதியத் தொகையில் கடன் கழிந்து வந்த மீதி சொற்ப தொகையோடு வீட்டை அடமானம் வைத்தவிரடமே  வீட்டை விற்று கடன் போக பாக்கி பணத்தை யும் சிறுவர்கள் இருவரின் பெயரிலும்  போட்டு சேமிப்புக் கணக்கைத் துவங்கி வைத்தார்.

          " ஊருக்கே உதவற நல்ல மனசுக்கார கந்தசாமி செஞ்ச புண்ணியந் தான் இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை உனக்குக்  கிடைச்சிருக்காரு. போனவரையே பத்தி நினைச்சசுப் புலம்பாம புள்ளைகளுக்காக மனசைத் திடப்படுத்திக்கிட்டு வாழப் பழகிக்க " ஊர்ப் பெரியவர்கள் தனக்கு ஆறுதலாகக் கூறிய வார்த்தைகளின் படி நாட்களைக் கடத்த முயன்றாள் சொர்ணா ."பாட்டி, பாட்டி" என்று மழலையில் கொஞ்சும் மாலாவின் அண்மையும் பெற்ற குழந்தைகளைவிட அதிக பரிவும பாசமும் காட்டும் மாப்பிள்ளையின் அன்பும் புண்பட்ட மனதுக்கு மருந்தாய் இதமளித்தது. ராமு  மாலாவோடு விளையாடும் சாக்கில் அவளைக் கிள்ளி அடித்து அழவிடுவதை கண்டு அவனைக் கண்டித்து அதட்டுவதே கமலத்திற்கு பெரிய வேலையாகி விட்டது. ஆனால் பெரியவன் வீட்டிலிருக்கும் சமயங்களில் தம்பியை மிரட்டி அடித்து மாலினியை காப்பாற்றினான். கமலத்திடமிருந்து  சமையல்  பொறுப்புகளை ஏற்று தன் இழப்பை மறந்து வளைய வரத்துவங்கினாள் சொர்ணா.   ப்ளஸ் டூவி்ல் கோபி பெற்ற  அதிக மதிப்பெண்கள்  எல்லாருக்கும் அதிக சந்தோஷத்ஐக் கொடுத்தது. மேற்கொண்டு அவனை பொறியியல் படிக்கும்படி சுந்தரம் வற்புறுத்தினாலும் அவன் கணித பாடத்தில் இளங்கலை படித்துக் கொண்டே கணிணி வகுப்புகளுக்குச்   செல்ல விரும்புவதாகச் சொல்லி கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பத் துவங்கினான். ராமுவும் விளையாட்டுப் போக்கிலிருந்து மாறி  படிப்பில் நல்ல கவனம் செலுத்தத் துவங்கியதுடன் அண்ணன வழியில் பொறுப்பான பிள்ளையாகிவிட்டான். ஒரு நாள் வழக்கம் போல் கோவிலுக்குச் சென்று திரு்ம்பிக் கொண்டிருந்த சொர்ணம் காலில் ஏதோ கடித்தது போலிருக்க  அவசரமாக வலியுடனே வீட்டுக்குத் திரும்பினாள்.  திண்ணைக்கருகில் வந்தவள் குரல் எழுப்பவும் முடியாமல் வாயில் நுரை தள்ள மயங்கிச் சரிந்தாள். கோவிலுக்குப் போன தாய் நீணட நேரமாக வரவில்லையே என வாசலுக்கு வந்த  கமலம் தாய் அலங்கோமாகக் கிடப்பது கண்டு அலறிய அலறலில் தெருவே கூடி உடனடியாக அவளை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உதவினர். தேம்பி அழு்ம் ராமுவை  சமாதானம் செய்து பயந்து நிற்கும் மாலாவை அவனிடம் விட்டுவிட்டு கமலமும் கோபியும் மருத்துவ மனைக்கு விரைந்தனர். தகவல் அறிந்த சுந்தரமும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். ஆனால் விஷப்பூச்சி யின் கடியால் உ டலெங்கும் பரவிவிட்ட விஷத்தின் தீவிரத்தால் சிகிச்சை ஏதும் தேவைப் படாமல்  மருத்துவ மனையைச் சென்று அடையும் முன்பே சொர்ணத்தின் உயிர் பிரிந்துவிட்டது.

 

 

 

 

 

                                                                                                                                       

 

     அடுத்தடுத்த மூன்று பெரியவர்களின் இறப்பு சுந்தரத்தை வீட்டின் தலைவனாக்கி மகளோடு இரு ஆண்குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கும முழுப் பொறுப்பை  ஏற்கவைத்தது. கமலம் சுந்தரத்தின் அன்பும் அரவணைப்பும் அவர்களது நல் வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமைந்தது. கோபி அவன் விரும்பியபடியே தன் இளங்கலைப் படிப்பின் இடையே கணிணி வகுப்புகளுக்கும்

சென்று பல தேர்வுகளை எதிர்கொண்டு அத்துறையில் தன் அறிவை மேம்படுத்திக் கொண்டு வந்தான். பட்டப் படிப்பை சிறப்பாக முடித்த கோபியை மேலே படிக்கச் சொல்லி சுந்தரம் வற்புறுத்தியபோதும் அதை பணிவாக மறுத்தவன் வேலைக்குச் செல்லவிரும்புவதாகச்  சொல்லி அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பத் துவங்கினான் கோபி.

 

       "மாமா, இத்தனை நாளா நீங்க ஒருவரா குடும்பப் பொறுப்புபை சுமந்திட்டீங்க. இனி உங்களுக்குத் தோள் கொடுத்து நின்னு நானும்  உங்க பொறுப்புகளைப் பகிர்ந்துக்க விரும்பறேன். ராமுவோட மேற்படிப்பு , மாலினியின் கல்யாணம் எல்லாத்தையும நாம இணைஞ்சு செய்யப் போறோம்." கோபியின் அன்பான வார்த்தைகள் தந்த மகிழ்ச்சியில் சுந்தரமும் கமலமும் திக்குமுக்காடிப் போயினர்.

 

            கோபியின்  முயற்சிகளுக்கு எதிர்பார்த்ததை விட விரைவாகவே சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கோபியைப் பிரிந்து இருப்பது குடும்பத்தினருக்கு சிரமமாக இருந்தாலும் அவனது எதிர்கால முன்னேற்றத்தை உத்தேசித்து அவனை சென்னை க்கு அனுப்ப ஒத்துக் கொண்டனர். அவனோடு கூடச் சென்று அங்குள்ள தன் நண்பர் ஒருவரின் உதவியோடு கோபிக்கு சௌகரியமாக அறை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு ஊர் திரும்பினார் சுந்தரம்.

 

          விடுமுறை தினங்களில் எல்லாம் சென்னையிலிருந்து கோவைக்கு ஓடிவரும் கோபி ஒரு அன்பு சகோதரனாய் மாலாவிற்கு பரிசுப் பொருள்களோடு வந்து எல்லாருடனும் சந்தோஷமாக நேரம் செலவழிப்பதும் கமலம் அவனுக்குப் பிடித்த சமையல் செய்து அவன் உண்பதைக் கண்டு மகிழ்வதுமாக நாட்கள் சிறகடித்துப் பறந்தன. இதனிடையே கோபி தன் கடின உழைப்பாலும் அறிவுத் திறத்தாலும் அப்பெரும் நிறுவன அதிகாரிகளின் நன்மதிப்பிற்கு உரியவனாகி பதவி உயர்வு எனும் ஏணியில் படிப்படியாக ஏறத் துவங்கினான்

 

        அந்த முறை லீவில் கோபி வரும்போது ராமுவின் பிளஸ் டூ முடிவுகள் வெளிவந்தது. கணிதம், வணிகயியல், பொருளாதாரம் மூன்றிலும் டிஸ்டிங்ஷன் வாங்கி பள்ளிக்கும் குடும்பத்துக்கும் பேர் வாங்கித் தந்த  ராமுவின் வெற்றியில் சுந்தரம் பூரித்து மகி்ழ்ந்தார்.  "மாமா,மேலே எனக்கு பி.காம். படிக்கணும். கூடவே சி.ஏ.வும் படிக்கலாம். பாங்க் பரிட்சைகளுக்கும் தேவையான  கோச்சிங் வகுப்புகளுக்கு் போனா பட்டப் படிப்பு முடிச்சவுடன் பாங்க் வேலைக்கும் முயற்சிக்கலாம். அண்ணா மாதிரி நானும் பட்டப் படிப்புற்குப் பிறகு வேலையில் இருநதுகொண்டு என் தகுதியை    வளர்த்துக் கொள்கிறேன்" ராமு தன் எண்ணத்தை  குடும்ப உறுப்பினர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டான்.

 

        "மாமா, ராமு சென்னையிலேயே நல்ல கல்லூரியில் பி.காம் சேர்ந்தால் அவன் விருப்பப்படி நல்ல கோச்சிங் கிளாஸிலும் மாலை வகுப்புகளுக்குப் போகலாம். அவன் வாங்கியிருக்கிற மார்க்குக்கு ஈஸியா அட்மிஷன் வாங்கிடலாம். நீங்க இரண்டு பேரும் சம்மதிச்சா நான் அங்க  காலேஜ்களில அப்ளிகேஷன் வாங்கி அனுப்பறேன்."... கோபி சொல்லி முடிப்பதற்குள் கமலம் அழத் துவங்கினாள்.

 "உன்னைப் பிரிஞ்சு இருக்கறதே வேதனையா இருக்கு. இதிலே ராமுவும் அங்க கிளம்பிட்டான்னா எப்படிடா" ?

 

         "கமலி, என்ன குழந்தை மாதிரி பேசறே? கோபி சொல்றது நியாயமான பேச்சு தான் .இங்க விட பசங்க முன்னேற்றத்துக்கு சென்னை சிறந்ததுன்னு எனக்குப் புரியுது. உங்க கிராமத்திலிருந்து கோபியை படிப்பை காரணம காட்டி கோவைக்கு அழைத்துக்கொண்டு வந்தது போலத் தான் இதுவும். புரிஞ்சிக்க "மனைவியை சமாதானப் படுத்தியவர் "என்னப்பா ராமு கோபி சொல்றது உனக்கு ஓ.கே. தானே " .....  ஒரு நிமிட தயக்கத்திற்குப்பின் "நீங்களும் அண்ணாவும் சேர்நது செய்யறது எல்லாமே என் நன்மைக்கு தான்னு எனக்கு நல்லப் புரியுது மாமா. ஆனா அக்காவை யும் உங்களையும் பிரிஞ்சு இருக்கணும்னு நினைக்கும் போது தான்

 

கொஞ்சம கஷ்டமா இருக்கு " ஓரக் கண்ணால் கமலியைப் பார்த்துக் கொண்டே பேசும் தம்பியையும் வாட்டமுற்ற முகத்தோடு மௌனமாக நிற்கும் மாலினியையும் கவனித்த கோபிக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது.

 

 

       "ஏன் மாமா இப்படி செஞ்சா என்ன? மாலினியையும் அங்க நல்ல ஸ்கூ்ல் பாத்து பிளஸ் ஒன் சேர்த்திடலாம்.நீங்க உங்க வேலையிலிருந்து வி.ஆர்.எஸ். வாங்கிடடு எல்லாருமா சென்னைக்கே வந்துடலாம். என்ன சொல்றீங்க?"   கோபி " கேட்க, " டேய் உங்க மாமாவுக்கு இப்ப வயசு 42தான். இப்பவே என்னை தள்ளாத தாத்தாவாக்கி ஓய்வெடுக்கச் சொல்றியா? எங்க ஆபிஸிலே என்னை நம்பி நிறைய புது திட்டங்கள் ஆரம்பிச்சிருக்காங்க. இப்ப நான் போறேன்னு சொன்னாலும் அவங்க என்னை விடமாட்டாங்க. இ்ந்த வயசில புது ஊரு, புது வேலை இதெல்லாம் நமக்குசெட் ஆகாது. மாலினி கல்யாணப் பொறுப்பு, தம்பி படிப்பு இதெல்லாம் நாம இரண்டு பேருமா சேர்ந்து  செய்யலாம்னு நீயே சொல்லியிருக்கியே அது போலவே  செய்வோம்.  இப்ப  என்ன, உங்க இரண்டு பேருக்கும் லீவுன்னா இங்க வந்திடுஙக,  எப்பல்லாம் மாலினிக்கு லீவு,எ னக்கு ஆபிஸில வேலை அதிகமில்லைங்கற சமயங்கள்ல நாங்க அங்கு வந்திட்டுப் போறோம் கோவையும் சென்னையும் கிட்டத்தில தானேயிருக்கு " சுந்தரம் இந்த பேச்சுக்கு முத்தாய்ப்பாக பதில் கூறி எல்லாரையும் திருப்தி படுத்தினார்.

 

 

     சொன்னபடியே ராமுவிற்கு சென்னையில் நல்ல கல்லூரியில் சீட் கிடைக்க, சுந்தரம் அவனைக் கூட்டிக் கொண்டுவந்து  ஓரிரு நாட்கள் அவர்களோடு இருந்துவிட்டு ஊர் திரு்பினார். கோபியின் அறை இருவருக்கும் போதுமானதாக இருப்பதும் அருகிலிருந்த மெஸ்ஸில் இருவரும் காலை இரவு சாப்பாடு சாப்பிட வசதியாக இருப்பதும்  அவரின் மனதி்ற்கு நிம்மதியாக இருந்தது.

 

 

                                                                                                                                                         

                                                                                                         அத்தியாயம்  7                                                                                                                                      

                  

              "ஏங்க நம்ம கோபிக்கு நல்ல பொண்ணாப் பாத்து சீக்கிரமா கல்யாணம் முடிச்சிடலாம்னு தோணுது. கிட்டத்தட்ட ஒரு வருஷமா பசங்க ஹோட்டல்ல சாப்பிடறாங்க. கோபி  பாவம் ராமுவை விட இன்னும் அதிக நாளாவே வெளி ச்சாப்பாடு சாப்பிட்டிருக்கான். ராமுவுக்கு படிப்பு , கோபிக்கு வேலை அதிகமாறதால அவங்களால முன்னமாதிரி அடிக்கடி வர முடியறதில்லை. மாலினியும் பிளஸ்டூ போறதால நாமும் போறது குறைஞ்சுக்கிட்டு வரது."  ஒருநாள் கமலம் கணவரிடம் பேசத் துவங்கினாள்.

 

         "அட, இது நமக்கு தோணவேயில்லையே, அவனுக்கு இப்ப இருப்பத்தேழு ஆவுது இல்லை. சீக்கிரம் இதுக்கான வேலையில் இறங்கிடுவோம். அதுக்கு முன்னாடி அவங்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டிடுவோம். அவன்  மனசில ஏதாச்சும் இருக்குமான்னு தெரியணுமில்லை...."  "ஏங்க வர வெள்ளிக்கிழமை மாலினிக்கு ஸ்கூல் லீவு. நீ்ங்க ஆபிஸில ரெண்டு நாள் லீவு சொல்லிட்டு மூணு பேருமா சென்னைக்குப் போயிட்டு வரலாம். என்ன சொல்றீங்க" கமலம் கேட்க, "என் பொண்டாட்டி பேச்சை நான் என்னிக்குமே மீறியதில்லை. அப்படியே செஞ்சிடுவோம்." மனைவி கன்னத்தில் ஒரு உம்மா கொடுக்கும் எண்ணத்தோடு சுந்தரம் நெருங்க, "வயசு வந்த பெண்ணை வீட்டில வச்சுக்கிட்டு "...... செல்லமாக அதட்டிக் கொண்டே நகருபவளை "அதுக்குள்ள உம் முகம் வெக்கத்தில குங்குமம் போல சிவந்திடிச்சே" சொன்னபடியே அவள் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டியபடியே ஹாலுக்குப் போனார்.

          திட்டமிட்டபடியே மூவரும் வெள்ளிக் கிழமை விடியலில் சென்னை வந்து ஆட்டோவில் கோபியின் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தனர். அழைப்பு மணி ஓசையில் கண் விழித்து  கதவைத் திறந்து வெளியே வந்த கோபியும் ராமுவும் ஆனந்தமும் ஆச்சரி

யமுமாக  அவர்களை வரவேற்றனர். "என்ன மாமா வரேன்னு சொல்லியிருந்தா நான் ஸ்டேஷனுக்கு வந்திருப்பேனில்ல," கோபி சொல்லவும் "இரணடு பேருக்கும் இன்னைக்கு வொர்க்கிங் டே. இராத்திரி கண்முழிச்சு படிக்கிறதும் வேலை பார்க்கறதுமா இருக்கீங்க. இதில நாங்க வரோம்னு தெரிஞ்சா இன்னும் சீக்கிரமா  எழுந்து ஸ்டேஷனுக்கு வந்திடப் போறயேன்னு தான் சொல்லலை." பதில் சொன்னபடியே பல் விளக்கச் சென்றார் சுந்தரம்.

அதற்குள் ராமு ஓடிச் சென்று பால், இன்ஸ்டண்ட் காபி பவுடர்  வாங்கிக் கொண்டு மாடியேறும் சமயம் ஒரு ப்ளாஸ்க்கில் காபியோடு அவனை முந்திக் கொண்டு படியேறினார் வீட்டுக்காரர் வினாயகம். "நீங்க ரெண்டு பேரும் வீட்டில சமைக்கறதேயில்லை . திடீரென்று வந்த உங்க மாமா அக்காவைப் பாத்துட்டு எங்க வீட்டம்மா தான்  காபி கொடுத்து அனுப்பியிருக்கா. தம்பி டம்ளர் கொண்டு வரீங்களா? உங்களுக்கும் சேர்த்துதான் சொண்டுவந்திருக்கேன் ." டம்ளர்களோடு அங்கு வந்த கோபி,"எதுக்கு சார் உங்களுக்கு வீண் சிரமம்" ... "அட போப்பா, நீங்க ரெண்டு பேரும்  ஓரு லீவு நாள்ல எங்க வீட்டுக்குச் சாப்பிட வாங்கன்னு நாங்க எவ்வளவு கூப்பிட்டாலும் கூச்சப் பட்டுக்கிட்டு  வரமாட்டீங்கறீங்க. ஏதோ இன்னிக்கு எங்க வீட்டு காப்பியாவது குடிச்சீங்களே ரொம்ப சந்தோசம் " என்றவர் ,"ஏன் சார் காலை டிபனுக்கு எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துடுங்க." அவர் பேசி முடிப்பதற்குள் அங்கு வந்த அவர் மனைவி" ஆமாங்க உங்க தங்கச்சி கூப்பிடறதா நினைச்சு வாங்க" என்றாள். அவர்கள் அன்பில் நெகிழ்ந்த சுந்தரம் "சரிங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தார். " மாமா ராமுவுக்கும் எனக்கும் இன்னைக்கு லீவு போட முடியாது.  நான் சாயங்காலம்  சீக்கிரமா வரேன்".... சொன்னபடியே கோபி குளிக்கச் செல்ல, "எனக்கு மதிய வகுப்புகள் இருக்காது. அதனால நான் வீட்டுக்கு வந்து அப்புறம் ஈவினிங் கிளாஸ் போறேன்"  ராமுவும் அண்ணனைத் தொடர்ந்து உள்ளே போனான். சிறிது நேரத்தில இருவரும் தயாராகி வர, "அக்கா ஏதாச்சும் சாமான் வாங்கணுமா? வாங்கிக் கொடுத்திட்டு நான் ஆபிஸ் போறேன்" என்றவன் தொடர்ந்து "நாங்க ரெண்டு பேரும் வழக்கமா சாப்பிடற இடத்தில டிபன் சாப்பிட்டுக்கறோம். அவங்களுக்கு ஏன் வீண் சிரமம்?"என்று முடிப்பதற்குள், மாலினி "அப்பா நானும் மாமா கூடப் போய் அந்த மெஸ்ஸில் சாப்பிட்டுட்டு அப்படியே வாங்க வேண்டிய சாமான்களை வாங்கிட்டு வரடடுமா" என்றாள் ஆவலாக."ஆமாம் மாமா அவங்க கூப்பிட்ட மரியாதைக்கு நீங்களும் அக்காவும் கீழே போய் சாப்பிடுங்க. மாலினி எங்க கூட வரட்டும். மதியம் ராமு வந்து கடைவேலைகளைப் பாப்பான். அதுக்கு முன்ன உங்க நாலு பேருக்கும் சாப்பாடும் அவன் மெஸ்ஸில் சொல்லி வச்சு கூட்டிட்டுப் போவான். நீங்க ரெண்டுபேர் மட்டும்  இப்ப வருவீங்கன்னு கீழே சொல்லிட்டுப் போயிடறோம்." கோபி சொல்ல. " சரிப்பா நாங்க குளிச்சிட்டு வரோம்னு சொல்லிடு. சாப்பிட்ட பிறகு மாலினியை வாசல் வரை விட்டுட்டுப் போயிடு. ஏற்கனவே உங்க ரெண்டு பேருக்கும் லேட் ஆயிடிச்சு."              

           சொன்னபடியே சுந்தரமும் கமலியும் வீட்டுக்காரர் இல்லத்தில் காலை உணவை உண்டவுடன் ஹாலில் வந்து அமர்ந்தனர். "நீங்க பாகட்ரிக்குக் கிளம்பலையா ? " சுந்தரம் கேட்க,  இன்னிக்கு மதியம் ஒரு கஸ்டமரைப் பார்க்கப் போகணும். அதனால நேத்தே மானேஜருக்குச் செய்ய வேண்டிய வேலைகள் பத்தி சொல்லிட்டு வந்திட்டேன். ரயில்ல வந்தது களைப்பா இருந்தா போய் ஓய்வெடுங்க. இல்லைன்னா உங்க கிட்ட கொஞ்சம் பேசலாம்னு பாக்கறேன்." விநாயகம் முடிப்பதற்குள் "தாராளமா பேசலாம்" சுந்தரம் பதிலுக்குக் காத்திருந்தவராய், "சார் என் நண்பன் உங்க பசங்களுக்கு வீடு கேட்டு வந்தப்ப ப்ரம்மச்சாரி பசங்களாச்சேன்னு கொஞ்சம் தயக்கத்தோடுதான் ஒத்துக்கிட்டேன் ஆனா இரண்டு பேரின் பண்பும் கண்ணியமும் எங்களுக்கு அவங்க மேல ஒரு பாசத்தை உருவாக்கிடிச்சு. கல்யாண வயசில எனக்கு மக இருந்தா கோபியை மாப்பிள்ளையாக்கிக்க உங்கள் சம்மதம் கேட்டிருப்பேன். ஆனா என் மூத்த பையனக்கே இப்ப பதினைஞ்சு வயசுதான் ஆவுது. இளையவளுக்கு பத்து வயசு. எங்களுக்கு ரொம்ப நெருக்கமான குடும்ப நண்பருக்கு கல்யாண  வயசில ஒரு பெண் இருக்கா. நல்ல குடும்ப.ம். பெண்ணும் பார்க்க நல்ல அழகா இருக்கும். நீங்க ஓ.கே சொன்னா அவரை உங்களோடு பேச வரச் சொல்றேன்." .. ஒரு நிமிடம்.சுந்தரத்துக்கும் கமலத்துக்கும் மகிழ்ச்சியில் பேச்சே  வரவில்லை. "சார் கோபி திருமண விஷயமா அவனோடு பேசற எண்ணத்தோடுதான் நாங்க கிளம்பி வந்தோம் உங்க வழியா ஒரு சம்பந்தம் வரதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும் .ஞாயிறு இரவு வண்டியில நாங்க ஊர் திரும்பறோம்.அதுக்குள்ள அவங்களைப் பார்க்க முடிஞ்சா நல்லா

 

யிருக்கும். " அதுக்கென்ன சார்நான் ஏற்பாடு பண்றேன். " விநாயகத்தின் வார்த்தைகள் தந்த உற்சாகத்தோடு மாலினியிடம் விஷயத்தைச் சொன்னதும் அவள் உற்சாகத்தில் துள்ளி குதித்தாள். "நீங்க ரெண்டு பேரும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நான் வீடெல்லாம் சரி கபண்ணிட்டுக் குளிக்கறேன்."

          அப்போது படியேறி வந்த விநாயகத்தின் மனைவி "இவர் அவங்க நண்பர் கிட்டப் பேசிட்டார்.  இன்னிக்கு நாள் நல்ல இருக்கறதால அவர் ஏழு மணிவாக்கில் இங்க வந்து உங்களைப் பார்க்கிறதா சொல்றாரு.   இவரும் அதுக்குள்ள வேலையை முடிச்சிக்கிட்டு வந்திடுவாரு. கோபி தம்பியும் அதுக்குள்ள வந்திடுவான்"   என்றவள்" மாலினி, நீ ஒண்ணும் வீடு சுத்தம் பண்ணவேண்டாம் .எங்க வீட்டில் வேலை செய்யற பொண்ணு இவங்களுக்கும் லீவு நாள்ல வேலை செய்யறா. ஆனா நம்ப மாதிரி இவங்க அவள் வேலை செய்யும் போது  மேற்பார்வை பாப்பாங்களான்னு தெரியலை. அவளை அனுப்பறேன் .நீ பார்த்து வேலை வாங்கு. "

மாலை சொன்னமாதிரியே பெண்ணின் பெற்றோர்கள் வந்து சேர்ந்தனர். அதற்குள் கமலம் சமையலறையை சரிசெய்து பால் காய்ச்சி  சுவாமி படங்களுக்கு பூவைத்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்து கொண்டாள். மதியம் ராமுவோடு சாப்பிட்டு வரும்போதே  இரண்டு நாட்களுக்கு் தேவையான மளிகை சாமான்களையும் வாங்கி வந்து வைத்தாள். "மாமா, அவங்க வரும்போது நான் இருக்கணுமா இல்ல வகுப்புக்குப் போகவா" என்று கேட்ட ராமுவிடம் "நீ கிளாஸுக்குப் போப்பா. பொண்ணு பாக்கப் போறபோது நீ வந்தாகணும் " என அவனை அனுப்பி வைத்தார்

 

      மாலை கோபியின் வரவுக்காக காத்திருந்த நேரம் பரபரப்பாக உள்ளே வந்தான் அவன். "மாமா, நான் ஒரு டூவீலர் புக் பண்ணி இருந்தேனில்லை. அந்த வண்டி இப்ப இங்க வரப் போவுது. நீங்க வந்திருக்கும் சமயம் வண்டி வரது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. வண்டியோட நாம எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டு வந்துடலாம். முதல்ல நா உங்களைத் தான் பின்னாடி உட்கார வச்சு ஓட்டுவேன்." குழந்தை போல் குதுகலித்து வாங்கி வந்த ஸ்வீட் பாக்கெட்டைத் திறந்து நீட்டினான். உள்ளேயிருந்து கமலம் கொண்டு வந்திருந்த முந்திரி கேக் சம்புடத்தை எடுத்துக் கொண்டு அவசரமாக அங்கு வந்த மாலினி " மாமா உங்க வண்டி பின்சீட் டில் எப்பவும் உட்கார்ந்து  வர அப்பாவும் அம்மாவும் ஆள் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப டபுள் ஸ்வீட் சாப்பிட வேண்டியநேரம் என்று அவன் வாயில் ஒரு துண்டைத் திணிக்க, கோபி புரியாதவனாய் விழித்தான். "கோபி நீ உள்ளபோய் முகம் கழுவி வேற டிரஸ் போடு.நான் உனக்கு விவரம் சொல்றேன்." "என்னங்க கீழே வண்டி சத்தம் கேக்குது. அவங்க வந்துட்டாங்க போலிருக்கு. கோபிக்கு சுருக்கமா விஷயத்தை சொல்லி அவனை தயார் படுத்துங்க."  சொல்லிக் கொண்டே மாலினி சீர் செய்திருந்த ஹாலை  நோட்டமிட்டு திருப்தி அடைந்தாள். கமலம்.

       சிறிது நேரத்துக்கெல்லாம் விநாயகம் அவர் மனைவி பின் தொடர  பெண்ணிண் பெற்றோர்கள் உள்ளே நுழைய அவர்களை வரவேற்று அமரச் செய்தார் சுந்தரம். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின்  பெண்ணின் தந்தைசிவஞானம் இவ எனக்கு மூத்த மகள. மகன் சின்னவன். இவ பள்ளிபடிப்பு கடைசி வருடம் முடிக்கிற சமயம் என் மனைவிக்குக் கர்பப்பை அறுவைசிகிச்சை செய்யவேண்டியதா போச்சு. வீட்டையும் அவளையும் கவனிக்க வேண்டி மகளோட படிப்பை பிளஶ்டூவோட நிறுத்திட்டோம். குடும்பப்பொறுப்பான அமைதியான பொண்ணு  உங்களப் பத்தியும் உங்க பையனப் பத்தியும் லினாயகம் ஏற்கனவே ரொம்ப உயர்வா சொல்லியிருக்காரு......  அந்த சமயம் கோபியும் வர, அவர் அவனது  வேலைகளைப் பற்றிக் கேடடவற்றுக்கு பதில் கூறினான். மாலினியும் கமலமும ஸ்வீட், கார வகைகளோடு காபி கொடுக்க அனைவரும்  பேசியவாறே உண்டு முடித்தனர். "இது என் பெண்ணின் போட்டோ. எங்களுக்கு உங்களையெல்லாம் பார்த்ததில் ரொம்ப திருப்தி. உங்களுக்கு சம்மதம் என்றால் ஞாயிற்றுக் கிழமை நேரில் வந்து எங்க மகளைப் பார்க்கலாம்் " என்றார். மாலினியும் கமலாவும் போட்டாவைப் பார்த்து முகம் மலர்ந்தவர்களாய் சுந்தரத்திடம் போட்டோவை நீட்ட, பொண்ணு அம்சமா இருக்கா .கோபி,நீ பாருப்பா" என்று கொடுக்க, ஓரக்கண்ணால் பார்த்தவாறே அக்காவுக்கும் உங்களுக்கும் பிடிச்சிருந்தா சரி மாமா என்றான் "அட மாமா வெக்கப்படறாரு" சொல்லிக் கொண்டு மாலினி சிரிக்க, எல்லார் முகத்திலும் புன்னகை விரிந்தது. "ஞாயிறு இரவு நாங்க வண்டியேறணும். அதனால ராகு காலத்துக்கு முன்னாடி  மூன்றரை நாலுக்குள் உங்க  வீட்டுக்கு வரோம் " சுந்தரம் சொல்ல  வந்தவர்கள் திருப்தி பொஙக  கிளம்பிச் சென்றனர்.

 

                          

 

   பெண் வீட்டினர் சென்றபிறகு சுந்தரத்தோடு கோபி தன் ஸ்கூட்டரிலும் ராமு ,கமலம் மாலினி ஒரு ஆட்டோவிலும் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்று வந்தனர். அதற்கு முன் வினாயகத்தின் குழந்தைகளுக்கு ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த பலகாரங்களைக் கொடுத்து விட்டு ஞாயிறு அவர்களும் தங்கள் கூட பெண் பார்க்க வரவேண்டும என அழைப்பு விடுத்தனர். "இவர் கண்டிப்பா வருவாரு. பசங்க வீட்டில் இருப்பாங்க அதனால நான் வரலை. எல்லாம் நல்லபடியா முடிஞ்சு கல்யாணம் இங்கதானே நடக்கும்? அப்ப முழுக்க உங்க கூடவே இருப்பேன்.....ஆமா ராத்திரி  சாப்பிட எல்லாரும் இங்கே வந்திடுங்க." என்றாள் சித்ரா. இல்லீங்க நான் ஒரு சாதம் வைச்சு குழம்பு செஞ்சிருக்கேன். கோயிலிலிருந்து வந்து நறுக்கி வச்சிருக்கற வெண்டைக்காய் தாளிச்சு பொறியல் செய்யணும். இந்த ரெண்டு நாளாவுது பசங்களுக்கு என்  கைசாப்பாடு போடுணம்னு ஊரிலிருந்து கொஞ்சம் சாமான்கள் கொண்டு வந்திருக்கேன். ஏதாச்சும் வேணுமினா நான் உங்ககிட்டே கேட்டு வாங்கிப்பேன்." கமலமும் மற்றவர்களும் கிளம்பிச் சென்றனர்.

 

           அன்று இரவும் சனிக்கிழமையும் நேரம் போவது தெரியாமல்  நால்வரும்     ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டும் வேலைகளைப் பகிர்ந்து செய்வதுமாக கழித்தனர். ஞாயிறு சரியான நேரத்தில் பெண் வீட்டை  வினாயகம் உடன் வர சென்றடைந்தனர்.  எளிய கண்ணிறைந்த அலங்காரத்தில் வந்து வணங்கிய ராதிகாவைப் பார்த்த உடனேயே எல்லார் முகங்களும் மலர்ந்தன. அவள் அருகில் சென்று அவள் கைகளைப் பற்றிய மாலினி "போட்டோவில் பார்த்தைவிட நேரில் இன்னும் அழகா இருக்கீங்க. எங்க மாமாவை நல்லாப் பாருங்க " ராதிகாவின் முகம் வெட்கத்தில் சிவந்து மேலும் அழகானது. "கோபி பெண்கிட்ட ஏதாச்சும் பேசவிரும்பினா பேசு" வினாயகம் இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தார். முதலில் பேசிய  கோபி "எனக்கு எங்க மாமாவும் அக்காவும் தான் எல்லாம்.  எனக்கு வரப்போறவங்க அவங்க மனம் கோணாதபடி நடந்துக்கணும்னுங்கறது தான் என் எதிர்பார்ப்பு." என்றான். "எனக்கும் எங்க அப்பா அம்மாவை மதிக்கத் தெரிஞ்சவரா என் தம்பிக்கு நல்ல நண்பனா எனக்கு வரப்போகிறவர் இருக்கணும்னு ஆசை" என்றாள் ராதிகா. " உங்க அப்பா அம்மா எனக்கும் பெற்றோர்கள் மாதிரித் தான் உன் தம்பிய்ய   என் தம்பி ராமு போல ஒரு சகோதரனாகத் தான் நடத்துவேன். என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?"..... "வெளிய போய் எல்லார் எதிரவும் இதுக்கு பதில் சொல்லலாமா?" ராதிகா கேட்க புன்னகையோடு இருவரும்  வெளிவந்தனர் , "என்ன, உங்க முகமே விடையை சொல்லுதே? இருந்தாலும் இரண்டு பேரும்  வாய்திறந்து சொன்னா நல்லாயிருக்குமே" வினாயகம் கேட்க, இருவரும் தங்கள் இசைவைத் தெரிவித்தனர்.

 "வினாயகம் சார் நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் பாலமா இருந்து நம்மை சம்பந்தி ஆக்கிட்டாரு. நம்ம வேலையை இவ்வளவு சுலபமா சீக்கிரமா பண்ணிக் கொடுத்த அவருக்கு எப்படி  நன்றி சொல்றதுன்னு தெரியலை." சுந்தரம் கூற. "இந்த மாதிரி பேசி என்னை வெளியாள ஆக்கிடாதீங்க. .... ராகு காலம் துவங்கறத்துக்கு முன்னே ராதிகா தலையில பூ வச்சு உங்க சம்மதத்தைத் தெரிவியுங்க அம்மா" என்றார் கமலத்தைப் பார்த்து . வணங்கி எழுந்த ராதிகாவின் தலையில் கொண்டுவந்திருந்திருத்த மல்லிகையை வைத்து கமலம் அவளை உச்சி முகர, ராதிகா அவளையும் சுந்தரத்தையும் வணங்கி எழுந்தாள். "இப்ப எல்லாரும் டிபன் சாப்பிடலாம்  " ராதிகாவின் தாயார் மீனா எல்லாரையும் டேபிளில் அமரச் செய்தாள். தாயாருடன் ராதிகா பரிமாறத் துவங்க "ஆண்டி, நீ்ங்க உட்காருங்க அக்காவும் நானும் பரிமாறுகிறோம்" சொல்லியபடி மீனாவை அமரச் செய்தாள் மாலினி.. "என் தங்கம் "அவளை ் கொஞ்சியபடி மீனா அமர, "உங்க சின்னத் தம்பிக்கு பெண் வெளியே தேடவேண்டாம் சார் .உங்க பெண்ணையே அவருக்குக் கட்டி வச்சிடலாம். எம் பொண்ணும் அவளும் இணைஞ்சு உங்க  எல்லாரையும் நல்ல பார்த்துப்பாங்க" சிவஞானம் சொல்ல, "கடவுள் கிருபையில் உங்க வாக்கு பலிக்கணும் " சுந்தரமும்  தன் உள்ளக்கிடக்கையை  வெளிப்படுத்தினார்.  இந்த வார்த்தைகளால் ராமுவின் முகம் மலர்வதையும் வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தவாறே மாலினி அவனை ஓரக்கண்ணால் பார்ப்பதையும் கோபி ரசித்ததோடு ராதிகாவிற்கும் சைகை மூலம் காட்டினான்"சம்பந்தி, எங்க பெண்ணுக்கு நல்லடியா சீர் செஞ்சு சிறப்பா திருமணத்தை செஞ்சு தருவேன். உங்க எதிர்பார்ப்புகள் என்னென்னன்னு தெரிஞ்சுக்கலாமா......" அவரை மேலே பேசவிடாமல் "நம்ம ரெண்டு குடும்பமும் இதே போல சந்தோஷமா  இணைஞ்சிருந்து நம்ம பசங்க வாழ்க்கையில நல்லடியா முன்னுக்கு வர உதவியா இருக்கணும் .இதுதான் எங்க ஆசை எதிர்பார்ப்பு எல்லாம்." என்றவர் தொடர்ந்து "உங்க மனைவி மகன் மகளோடு சீக்கிரமா கிளம்பி எங்க ஊருக்கு வாங்க. அதுக்கு முன்னாடி திருமணத் தேதியும் பார்த்து வச்சிடலாம். மாலினி , ராமு, உங்க மகன் பரத் இவங்க பரிட்சை முடிஞ்சு லீவுல முகூர்த்தம் கிடைச்சா நல்லாயிருக்கும். நாங்க கிளம்பறோம் " என்றார். "அங்க பாருங்க அஞ்சு பேரும் சேர்ந்து உக்காந்து அரட்டை அடிக்கறததை "கமலம் சுட்டிக் காட்ட, ஹாலில் ஒரு பக்கம் கோபி ,ராமு, பரத், மாலினி,ராதிகா ஒன்றாகஅமர்நது சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பெரியவர்கள் ரசித்தனர். "இன்னிக்கு இரவு வண்டியில நாம ஊருக்குப் போகணும். நினைவு இருக்கா மாலா, கிளம்பலாமா"சுந்தரம் குரல் கொடுக்க, அனைவரும் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். தாங்கள் நினைத்துக் கொண்டு வந்த வேலை இவ்வளவு விரைவில் இனிதாக முடிந்த திருப்தியுடன் கோவை வந்து சேர்நத சுந்தரம் அடுத்து ஆகவேண்டிய  திருமணவேலைகள் பற்றி கமலத்தோடு பேசி ஏற்பாடுகளில் இறங்கினார்.

 

                                                              

 

        

                                                            அத்தியாயம்  8  

           அடுத்த வார விடுமுறையில் சிவஞானம் தம்பதியர், மகள் ராதிகாவுடனும் மகன் பரத்துடனும் வினாயகம் தம்பதிகள் சகிதம் கோவை வந்து சேர்ந்தனர். முன்னதாகவே வந்துவிட்ட கோபி, சுந்தரம் கமலம் மாலினி அவர்களை ஆசையாக வரவேற்றனர். "உங்க குழந்தைகளை ஏன் அழைச்சிட்டு வரலை?" கமலம் வினாயகத்தை விசாரிக்க,"என் தங்கை வீட்டில விட்டுட்டு வந்திருக்கோம். கல்யாணம் கோடை விடுமுறையில தானே வருது. அப்ப கண்டிப்பா  அவங்க வருவாங்க. கோபியும் ராமுவும்   அவங்க பிரெண்ட்ஸ் ஆச்சே"....நம்ப இரண்டு பக்க ஜோசியர்களும் இவங்க ஜாதகம் நல்ல பொருந்தியிருக்கறதா சொல்லிட்டது ரொம்ப நிம்மதியா இருக்கு. அவசரமா பெண்பார்த்துட்டு பிறகு பொருத்தம் பார்கறோமேன்னு கொஞ்சம் மனசுக்குள்ளே கவலையா இருந்திச்சு. " சுந்தரம் சொல்ல, "அது மடடுமில்ல சம்பந்தி அவங்க  குறிச்சுக் கொடுத்து இருக்குற முகூர்த்த தேதியும் ஒத்துப் போவுது பாருங்க".....

 

       "முதல்ல கைகால் அலம்பிக்கிட்டு சாப்பிட வாங்க. விடியல்ல கிளம்பி காரில் பயணம் வந்திருக்கீங்க. மத்த விஷயமெல்லாம்  அப்புறம் பேசலாம்." கமலம் சொல்ல , ராதிகா பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பெரிய கவரை கமலத்தின் கைகளில் கொடுத்து "என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க" என்றபடி சுந்தரம் தம்பதியரை வணங்கினாள். "கோபி, அதைப்பிரி" வினாயகம் சொல்ல,பேப்பரைப் பிரித்த கோபி, அக்கா இங்க பாருங்க என்று குதுகலக் குரல் கொடுத்தான். "முதல் முறையா நம்ம வீட்டுக்கு வரதுக்கு அடையாளமா ராதிகா வரைஞ்சு கொண்டு வந்திருக்கா".... சிவன் பார்வதி தங்கள் மடிகளில் வினாயகனையும் முருகனையும் அமர்த்திக்கொண்டு வீற்றிருக்கும் அழகிய காட்சி தஞ்சாவூர் ஓவிய பாணியில் வண்ண ஓவியமாய் தீட்டப் பட்டு  இருந்ததைப் பார்த்துப் பரவசம் அடைந்த கமலம் ராதிகாவை அணைத்துக் கொண்டாள். "ரொம்ப பிரமாதமாயிருக்கு " சுந்தரம் பாராட்ட, "காலேஜில படிக்கமுடியாம போனதால ஓவியம் கத்துக்கிட்டா. நிறைய கைவேலைகளும் செய்வா. மீனா சொன்னாள்  அனைவரும் உண்டு முடித்தபின் வீட்டைச் சுற்றிப் பா்த்தபோது மாலினியின் அறையில் இருந்த தம்பூராவைப் பார்த்த ராதிகா "மாலா, நீ பாடுவேன்னு சொல்லவேயில்லையே" என்றாள். " அவ ரொம்ப நல்லா பாடுவா. ஸ்கூலில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் எல்லாம நிறைய பரிசு வாங்கியிருக்கா." பக்கத்தில் கப்போர்டில் அணிவகுத்திருந்த பரிசுகளைக் காட்டியபடி சொன்னான் கோபி ."நாளைக்கு நிச்சயதார்த்த விழாவில ஒரு மினி கசசேரி வச்சிடுவோம்." வினயம் உறுதியாகச் சொன்னார்.         

           

       "நான் ஏற்கனவே மாஙினி பாட்டு டீச்சர் கிட்ட இது பற்றிப் பேசி அவங்களும் ரொம்ப சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க. நாலு வருஷமா அவங்க கிட்ட அவ பாட்டு கத்துக்கிட்டு வரா. அவங்க கூட சில மேடைக் கச்சேரிகளுக்கும் போயி கூடப் பாடியிருக்கா. அதனால அவங்க இந்த நிகழ்ச்சியை அவளுடைய ஒரு இசை அரங்கேற்றம் மாதிரி பண்ண ஏற்பாடு செஞ்சிருக்காங்க. மாமாவும் அ்க்காவும் ரொம்ப சந்தோஷத்தில இருக்காங்க. நிச்சயதா்த்த விழா பத்தரைக்குள் முடிஞ்சிடும் அப்புறம் சுமார் ஒன்றரை மணிநேரம் மாலினி டைம்." கோபி பெருமையாகப் பேசி முடித்தான்.

                  மாலை எல்லாருமாக நகைக்  கடைக்குச் சென்று மணமக்களுக்கு மோதிரம், கோபிக்கு பெண் வீட்டார் சார்பில் செயின் ராதிகாவிற்கு பிள்ளை வீட்டின் பரிசாக ஒரு நெக்லஸ் வாங்கிக் கொண்டு ஐவுளிக் கடைக்குச் சென்றனர். மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் சென்னையிலேயே ஆடைகள் வாங்கிவிட்டதால் சம்பந்திகள் பரஸபரம் சேலை தேர்வு செய்து கொண்டதோடு வினாயகத்தின மனைவிக்கும அவருக்கும் நல்ல புடவை வேஷ்டிகளும் கமலம் வாங்கினாள். "நம்ம மாலினி தான் நாத்தி முறையில பெண்ணுக்கு நலங்கு வைக்கப் போறாயில்லையா? அதனால அவளுக்கு ஏத்த மாதிரி அழகா ஒரு புடவை வாங்கணும். அவ பாட்டு டீச்சரைப் பாக்கப்போயிட்டதால நீங்களே ஓரு புடவை தே்ர்வு செஞ்சிடுங்க." ராதிகா தாயாரின் விருப்பப்படி கமவம் ராதிகாவின் உதவியோடு அழகான சாப்ட்சில்க் புடவை ஒன்றை தே்ந்தெடுத்தாள். ராதிகா அருகில் இருந்த ஒரு எம்பிராய்டரி தையல்கடைக்கு கோபியோடு சென்று எதையோ பார்த்து வருவதாக சொல்லிவிட்டுப் போகமற்றவர்கள் வீடு திரும்பினார்கள் "ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா இருக்க நினைக்கறாங்க போல அதுக்கென்னா போயிட்டு வாங்க. ரொம்ப நேரம் பண்ணாம வீடு வந்திடுங்க" சுந்தரம் சொல்ல, "சரி மாமா" என்றபடி இருவரும் சென்றனர். மாலினிக்கு வாங்கிய   புடவையோடு தையல் கடைக்குள் வந்த ராதிகா, "ரொம்ப அழகான டிசைன் எல்லாம் வச்சிருக்கீங்க. என் கல்யாணத்துக்கு நான் சென்னையில் பிளவுஸ் தைக்கப் போறதில்லை. இங்கதான் வரப்போறேன்" முதலாளி இருக்கையில் இருக்கும பெண்மணியிடம் நட்பாக பேசி மாலினியின் புடவைக்குரிய பிளவுஸ் மறுநாள் காலை தருவதற்கு ஒப்புதல் வாங்கினாள். "ராது அளவு பிளவுஸ் இல்லாம எப்படி?" கோபி கேட்க, "அதெல்லாம் நான் மாலினி கிட்டப் பேசி வாங்கி வந்திருக்கேன்." கைப்பையிலிருந்து எடுத்து தையல்காரரிடம் கொடுத்து பாட்டர்ன் டிசைன் எல்லாம்  தேர்ந்தெடுத்துப்பேசுவதை பெருமை பொங்க பார்த்தபடி  அமர்ந்திருந்தான் கோபி." மேடம் நீங்க வழக்கமா போடற சார்ஜ்ஜை விட கூடுதலா பில் போடுங்க. வேலையை கச்சிதமா முடிச்சு கரெக்டா நாளைக் காலையில  வீட்டிற்கு வந்து பிளவுஸை கொடுத்திடுங்க". சொன்னபடியே அட்ரஸ் போன் நமபர் மற்றும் அட்வான்ஸ் தொகையையும கொடுத்தபின் இருவரும் வெளியே வந்தனர்.  "எனக்கு ரொம்ப பெருமையா இருககு ராது. விரைந்து சரியா முடிவு எடுக்கற உன் திறமையைப் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு. ஏதாவது கூல் டிரிங்க்ஸ் குடிக்கலாமா?" கோபி கேட்க, "சரி அதுக்கப்புறம நல்ல பேஷன் ஜ்வெல்லரி போயி இ்ந்தப் புடவைக்கு மேட்ச் நகைசெட் வாங்கிட்டுப்போயிடலாம். மாலினி மேடையில பாட உட்காரும் போது  ஜொலிக்கணும்."ராதிகா சொல்ல, "ஓ.கே."என்றபடி அந்த வேலையையும் முடித்துக் கொண்டு இருவரும் வீடு திரும்பினார்கள். அதே சமயம் ராமுவும் ராதிகாவின் தம்பியும் சென்னையிலிருந்து வந்து சேர, சிரிப்பும் கலகலப்புமாக இரவு உணவு உண்டு முடித்தனர். :மாமா, இதுவரைக்கும் நீங்க நாளைய விழாவுக்காக நிறைய வேலை செஞ்சிருப்பீங்க. அண்ணனும் முன்னாடியே வந்து உங்களுக்கு உதவி செஞ்சிருப்பாரு. இதுக்கு மேல நீங்க ரணடு பேரும் எல்லாத்தையும் என் பொறுப்பில விடுங்க" ராமு சொல்ல, "ராமுவிற்கு அஸிஸ்டெண்ட் நான்" ராதிகாவின் தம்பி பரத் கையுயர்த்த, எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தனர். "சரி, எல்லாரும் சீக்கிரமா படுத்தாதான் காலையில நேரத்துக்கு ரெடியாகி ஹாலுக்குப் போகமுடியும்" சுந்தரம் கூற ,ஆடவர் மூவரும் ஒரு அறை, பெண்டிர் மூவரும் ஒரு அறை என்று படுக்கச் சென்றனர். வாலிபர்கள் மூவரும் ஹாலில் படுத்தபடியே கதைபேசிக் கொண்டிருக்க, மாலுவும் ராதுவும்  தங்கள் அறையில் தூக்கம் வரும் வரை பேசி  மிகத் தாமதமாக உறங்கச் சென்றனர்.

 

 

                                                                                                                                                                       

 

 

 

 

 

 

                                                                அத்தியாயம்  9

                                                      

       மறு நாள் காலை குறித்த நேரத்திற்கு முன்பாகவே எல்லாரும் தயாராகி அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றபின் மண்டபத்தை அடைந்தனர். விடியலிலேயே கிளம்பி மண்டபத்திற்குச் சென்றுவிட்ட ராமுவிம் பரத்தும் மேடை அலங்கார மேற்பார்வை, சமையல் கட்டில் ஆட்களுக்குத் தேவையான கட்டளை என்று பம்பரமாக வேலைகளை  சரிபார்ததுக்  கொண்டிருந்தனர். ஊரிலிருந்து ஒரு வாரம் முன்னதாகவே வந்திருந்து  விழா சம்பிராதமுறைகளை சுந்தரம் தம்பதிகளுக்கு   வழிகாட்ட வந்திருந்த அவரது  ஒன்றுவிட்ட அண்ணனும் அவருடைய மனைவியும் சடங்குக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொண்டே ராதிகாவை  வரவேற்க ஆரத்தியோடு தயாராக நின்றனர்.

 

     அழகுக்கு அழகு சேர்ப்பது போல்  ராதிகாவின் எழில் முகம் மாலினியின் நேர்த்தியான அலங்கரிப்பில் மேலும் ஜொலித்தது. கமலமும் சுந்தரத்தின் அண்ணியும் ஆரத்தி சுற்றி அவளை உள்ளே அழைத்துச் சென்றனர். "விருந்தாளிங்க வரதுக்கு முன்னாடி நீங்க எல்லாம் டிபன் சாப்பிடுங்க" தலைமை சமையல்காரரின்  வேண்டுகோளுக்கிணங்கி அவர்கள்எல்லாரும் ஒன்றாக  அமர்ந்து, சுவையான காலை உணவை சாப்பிட்டனர். "பொங்கல், வடை, இட்லி சாம்பார், கேசரி , இருவகை சட்னி, காபி என்று இப்பலே வயிறு நிரம்பிடிச்சு. மதிய உணவு எப்படி சாப்பிடப் போறோம்னு தெரியலை.  எல்லாம் பிரமாதம்" வினாயகம் பாராட்ட, அனைவரும் ஆமோதித்தனர்.

          மங்கல இசை முழங்க பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக கோபியும் பூரிப்பும் நாணமும்  பொங்கும்  முகத்தோடு ராதிகாவும் மேடையேறினார்கள். சுந்தரத்தின் அலுவலக நண்பர்கள், அண்டை அயல் வீட்டினர், கோபி ,ராமு மற்றும் மாலினியின் நண்பர்கள் என்று நிறைந்திருந்த சபையினரை வணங்கி இருவரும் அமர சடங்குகள் துவங்கின.  " ராமு ஒன்பது மணிவாக்கில் டெய்லர் கடையிலிரு்து ஒரு துணி தைத்து வரும். அவங்க போன் நம்பர் பில்லும் இந்தாங்க. அது வந்தவுடனே எங்க அம்மாகிட்ட அதை கொடுத்திடுங்க. அட்வான்ஸ் போக அவன் சொல்ற  பணத்தையும் கொடுத்திடுங்க." ராமுவிடம் மேடைக்குப் போவதற்கு முன்னதாகவே ராதிகா சொல்லியபடி தையல்கடை ஆள் வந்து கவரை சேர்ப்பித்ததை மேடையிலிருந்தே பார்த்த பிறகுதான் ராதிகாவின் மனம் நிம்மதி அடைந்தது.

        முதலில் பரத் கோபிக்கு சந்தனம் பூசி செயின்  அணிவித்து மாலை போட்டு முடிந்ததும் ராதிகாவின் பெற்றோர்கள் அவனுக்கு புது ஆடை வழங்க, மணமகனின் சகோதரி முறையில் மாலினி ராதிகாவிற்கு நகை அணிவித்து சந்தனம் பூசி மாலை சூட்டினாள்.  சுந்தரமும் கமலமும் ராதிகாவிற்குப் புத்தாடை வழங்கியோடு பரத்துக்கும் ராதிகாவின் பெற்றோர்களுக்கும் வினாயகம் தம்பதிக்கும் பதில் மரியாதை செய்து முடித்தனர். மாலினிக்குத் தயாராக வைத்திருந்த பரிசுப் பொருள்களை அவளுக்குக் கொடுக்கும் சமயம் "ராமு த்ம்பி நீங்களும் மேடைக்கு வாங்க" வினாயகம் குரல் கொடுக்க ராமு வந்து நின்றான். அவனுக்கும் சிவஞானம் தம்பதியர் புத்தாடைகள் வழங்கினர். ஒரு சில நிமிடங்கள் இருவரும் இணைந்து நின்ற காட்சி புகைப்படத்தில் சிறையாக"சுந்தரம், அடுத்த ஜோடி தயாராயிடிச்சு பாரு" என்று ஒரு பெரியவர் குரல் கொடுத்தார். ஆர்த்தி, நமஸ்காரங்கள் போன்ற சம்பிரதாயங்கள் அடுத்தடுத்து நடந்து முடிந்ததும் கச்சேரிக்கு ஏற்ப மேடையை மாற்றி அமைக்கும வேலை கோபியின் மேற்பா்வையில் துரிதகதியில் நடந்தது. விருந்தினர்களுக்கு குளிர் பானம், லஸ்ஸி என்று இருக்கை தேடி வர, மைக்கை கையில் எடுத்த கோபி "வணக்கம் .எங்க அருமை மாமா மகள் மாலினி இப்ப உங்க எல்லாருக்கும் இசை விருந்து அளிக்கப் போறா. கேட்டு அவளை வாழ்த்தி மதிய உணவு சாப்பிட்ட பிறகுதான் நீங்க போகணும்னு கேட்டுக்கறேன் " என்றான்.

 

மாலினியின் பாட்டு டீச்சரின் ஏற்பாட்டில் அமர்த்தப்பட்ட ஒரு வயலின் வித்வானும் மிருதங்கம் வாசிப்பவரும் மேடையேறி வணங்கி அமர, ஒலிபெருக்கி சாதனங்களும் சரிபார்க்கப்பட்டுப் பொறுத்தப் பட்டன.  ராதிகா மாலினிக்கு முதல்நாள் வாங்கிய சேலை, ரவிக்கையுடன் அதற்குப் பொருத்தமாக வாங்கியிருந்த நகைசெட்டையும் அணிவித்து அவளை மேடைக்கு அனுப்பி தானும் வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டாள். முதலில் தன் குரு திருமதி சரளாவையும் பிறகு பெற்றோர்கள் மற்ற பெரியோர்களை வணங்கி மாலினி மேடையேற ராது,கோபி,பரத் ராமு மற்றும் வந்திருந்த மாலினி யின் தோழிகள் "ஆல் த பெஸ்ட்" கூறி அவளை உற்சாகப் படுத்தினர் ஒருநிமிடம் கண்மூடி பிரார்த்தப் பின் சுருதியை சரிபார்த்து "கஜவதனா" என்ற ஸ்ரீரஞ்சனி ராகப் பாடலை இனிமையாகத் துவங்கியவுடன் கூட்டத்தில் அதுவரை  கேட்டுக் கொண்டிருந்த பேச்சுக் குரல்கள் அடங்கி முழு மௌனம் நிலவத் துவங்கியது. அடுத்து அடதாள வர்ணம், சின்னதாக கல்யாணி ராக ஆலாபனைக்குப் பின்" நிதி  சால சுகமா"  என்ற தியாகைய் யர் கிருதிக்குப் பின் குருவின் கண் அசைவை ஏற்றுத் தமிழ்பாடல்கள் பாடத் துவங்கினாள். தன் அம்மாவுக்குப் பிடித்தமான "ஸ்ரீசக்ர ராஜ" ராகமாலிகை பாடல், "அருள வேண்டும் தாயே" சாரமதி ராகப் பாடலுக்குப் பிறகு சுந்தரம் அடிக்கடி அவளைப் பாடச் சொல்லும்  "எப்படிப் பாடினாரோ" கர்நாடக தேவகாந்தாரிப் பாடலை உணர்ச்சிபொங்கப் பாடினாள். அடுத்து "ராமனைக் கண்ணார "எனத் துவங்கியவுடன் ராதிகா ஒரு குருஞ்சிரிப்பை உதிர்க்க, வெட்கத்தில் அழகு முகம் சிவந்தவளாய் பாடலைத் தெடர்ந்நாள். வினாயகம் முருகன் பாடல்களை நேயர் விருப்பமாய் கேட்க,"கலியுக வரதன்" பிருந்தாவன சாரங்கா வில் மற்றும்"கூவி அழைத்தால்" வலஜி ராகப் பாடல்களைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தாள்.

அடுத்து "அசைந்தாடும் மயில்"பாடலும்" காத்திருப்பான் கமலக் கண்ணன்" என்று ஜனரஞ்சகமான கண்ணன் பாடலையும் "ராதிகா ஸ்பெஷல்" என்ற அறிவிப்புடன் பாடி்  அசத்தினாள் . துளசிதாசரின் "ஸ்ரீ ராமசந்த்ர கிருபாலு" பஜன்பாடலுடன் "வாழிய செந்தமிழ்" பாடி

முடித்தவுடன் சபையில் தொடர்ந்து எழுந்த கரவொலி அடங்க சிறிது நேரமாயிற்று.  தொடர்ந்து குருவிற்கு சுந்தரம் தம்பதியர் மரியாதை செலுத்துவதும் உடன் வாசித்தவர்களுக்கு சன்மானம் செய்வதும் நிகழ்ந்து  யாவரும் மனம் நிறைந்த மகி்ழ்ச்சியுடன் மதிய விருந்து உண்டு முடித்தனர். விடை பெறும் முன் பலர் சுந்தரத்திடம் "குடத்திலிட்ட விளக்கு   போல இவ்வளவு  அடக்கத்தோடதிறமைசாலியான பெண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க என்று முழு மனதோடு பாராட்டியும்  அவளுக்கு சிட்சை அளித்துத் தயார் செய்த குருவின் கற்பித்தலை புகழ்ந்தும் விடைபெற்றனர்  "செவிக்குக் கிடைச்ச விருந்தும் வயிறுக்கு அளித்த விருந்தும் பிரமாதம் சுந்தரம்" நண்பர்கள் பாராட்டில் மனம் கொள்ளா மகிழ்ச்சி அடைந்தார் சுந்தரம்..எதிர்பார்த்ததைவிட நிச்சயதார்த்த விழா கோலாகலாக நடந்தேறிய நிறைவுடன் யாவரும் வீடு  திரு ம்பினர் .சுந்தரத்தின் அண்ணி எல்லாரக்கும் திருஷ்டி கழித்து சுவாமி கும்பிடச் செய்தாள்."மாமா, நான் ரெண்டு நாள் லீவு  எடுத்திட்டு வந்ததால நாளைக்கு ஆபிஸ் போயாகணும். அதே போல ராமுவும் பரத்தும் நாளை கிளாஸ் மிஸ் பண்ணமுடியாது. மூணு பேரும் ராத்திரி கிளம்பறோம்". மூவரும் இரவு உணவிற்குப் பின் கிளம்பிச் சென்றனர்.  

         மறு நாள் எட்டு மணிக்குள் சுந்தரத்தின் அண்ணி, கமலம் இருவருமாக தயாரித்த சுவையான காலை   உணவை சாப்பிட்டபடியே பேசத் துவங்கினார் சிவஞானம். "நீங்க மிகச் சிறப்பா நிச்சயத்தை நடத்தி பிரமிக் வச்சிட்டீங்க. அதுக்கு ஈடு கொடுக்கற வகையில நான் திருமணத்தை செய்ய ஆசைப்படறேன். மண்டபம் பார்க்க நீங்களும் வந்தா நல்லாயிருக்கும். அதே போல நாங்க செய்யவேண்டிய சீர் செனத்தி பற்றியும் உங்க வீட்டுப் பெரியவங்களைக் கேட்டு சொன்னா அது மாதிரி எல்லாம செஞ்சிடுவோம் " என்றார்.  "உங்க மக திருமணத்தை எப்படி நடத்தணும்னு நீங்க ஒரு திட்டம் வச்சிருப்பீங்க. அது படி செய்யுங்க. திருமண மண்டபமும் நீங்க வசதியானதுதான் பார்ப்பீங்க வேணுமான கோபியைக் கூட்டிட்டுப் போய் காண்பீ்ங்க. அவன் ஆபிஸ் நண்பர்கள் வருவாங்க இல்லை இங்க நிறையப் பேர்  நிச்சயத்துக்கு வந்திட்டதால திருமணத்துககு எங்க பக்கத்திலிருந்து அதிகம் பேர் வரமாட்டாங்க. அதே போல உங்க பெண் புது வாழ்க்கை துவங்க தேவையானதை உங்க விருப்பப்படி செய்யுங்க. மேற்கொண்டு அவங்க இல்லறத் தேவைகளை கோபி பார்த்துப்பான் அதனால எங்க தரப்பிலிருந்து இது பத்தி எந  டிமாண்டும் இருக்காது. புது குடித்தனத்திற்கு பொருத்தமா வசதியா வீடு பார்கற  பொறுப்பை நீங்க ஏ்ததுக்கணும். ராமுவும் அவங்க கூட இருப்பான். நாங்களும் அடிக்கடி இனி வருவோமில்லை?" சுந்தரம் சொல்லி முடிக்க, பெண் வீட்டினர் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினார்கள்

                                                                

                                                                                                                                                                      அத்தியாயம்    10

     சிவஞானம் நகரின் மையப் பகுதியில் சகல வசதிகளும் நிறைந்த திருமணக் கூடத்தை புக்செய்தார். இரு வீட்டார் அழைப்பு எனப் பெயரி்ட்டு ஒரே பத்திரிகை யாகஅச்சிட்டு   விடலாம் என்று சுந்தரத்தை சம்மதிக்கச் செய்து ராமு, ராதிகாவின் உதவியோடு  அழகான வடிவமைப்பில் அழைப்பிதழ்கள் தயார் செய்து சுந்தரத்திற்கும் அவரது தேவைக்கேற்ப பத்திரிகைகள் அனுப்பி வை்த்தார்.

"பத்திரிகை ரொம்ப நல்லா வந்திருக்கு சம்பந்தி. என் வேலையையும் நீங்களே ஏத்து செய்தி்டடீங்க" சுந்தரம் பாராட்ட, "நீங்க சொன்ன மாதிரி குடித்தனத்திற்கு வீடும் பார்த்திருக்கேன். மாப்பிள்ளையும் ராமுத் தம்பியும் வந்து பார்த்து ஓகே சொல்லிட்டா வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்திடலாம். மாசக் கடைசியிலே வீடு ரெடியாயிடும். நீங்க ரெண்டு பேரும் மாலுவோட வந்து  வீட்டுக்குப்பால் காய்ச்சறதோட கல்யாண ஏற்பாடுகளையும் சரிபார்த்திடலாம்" அதுக்கென்ன கோபி வீட்டைப் பாத்துச் சொல்லட்டும. அப்படியே செஞ்சிடலாம். மாலுவும் ராதிகாவைப் பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கா. எங்க கோயில்ல முதல் பத்திரிகை வச்சுக் கும்பிட்ட பிறகு தான் பத்திரிகை வச்சு கூப்பிட ஆரம்பிக்கணும். பசங்க ரெண்டு பேரும் வரும்போதுதான்  அதைச் செய்யணும். கோபியோட பேசிட்டு விபரம் சொல்றேன்." போனை வைத்தார் சுந்தரம்.

        இரவு சுந்தரம் போன் செய்ய நினைத்து போனை கையில் எடுக்கவும் கோபியின் எண்ணிலிருந்து அழை்பபு வரவும் சரியாக இருந்தது. "மாமா, ராதிகா அப்பா கூட நானும் ராமுவு்ம் வீட்டைப் போய்ப் பார்த்தோம். வீடு நல்லா இருக்கு. மூணு பெட்ரூம், ஹால், கிட்சன் எல்லாம் விஸ்தாரமா இருக்கு.  பெட்ரூம் எல்லாமே பாத் அடாச்ட். அது தவிர வீட்டுக்கு முன்னும் பின்னும்  தோட்டம் போடற மாதிரி இடமும் இருக்கு. அக்காவுக்கு பிடிச்ச மாதிரி செடியெல்லாம் வைக்கலாம். வீட்டுக்காரரும் வந்தாரு. அவருக்கு வெளியூர் மாத்தலாகிவிட்டதால குடும்பத்தோட ஊருக்குப் போறாரு. நாம அட்வான்ஸ் கொடுத்தா வொயிட் வாஷ் செஞ்சு  நல்லாக் கிளீன் பண்ணித் தருவதாகச் சொல்றார். .." "அப்புறமென்னப்பா உங்க மாமனாரை கூட வச்சிக்கிட்டு அவர் கேக்கற அட்வான்ஸ் தொகையை கொடுத்திடுவோம். நான் அதுக்குப் பணம் அனுப்பிடறேன்." சுந்தரம் சொல்ல, "அதெல்லாம் வேணாம் மாமா. ஏற்கனவே நிச்சயத்துக்கு முழுவதும் நீங்களே செலவு பண்ணிட்டீங்க. அட்வான்ஸ் தொகையாவது என்னைக் கொடுக்கவிடுங்க" கோபி கெஞசும் குரலில் கேட்க, "சரிப்பா உன் இஷ்டம்...." சிறிது நிறுத்தியவர் தொடர்ந்து, " என் மாமனார் வீட்டை வித்து கடன் போக மீதிப் பணத்தை பிள்ளைங்க இரண்டு பேரு பேரில பாங்கில போட்டு வச்சிருக்கேன். அதை அனுப்பிடறேன். வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கிடு. " என்றார்.   

 

       "மாமா, ராமு உங்ககிட்ட ஏதோ சொல்லணுமாம்" போனை ராமுவிடம் கொடுக்க, "மாமா பரிட்சை முடிவுகள்  வரதுக்குள்ளையே எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு. ஒரு நல்ல ஃபனான்ஸ் கம்பனியில டெம்ப்ரரி வேகன்ஸியில வேலை. எப்படியும் ரிசல்ட் வந்தபிறகு தான் பாங்க்களுக்கு அப்ளை பண்ணமுடியும். பாங்க் என்ட்ர்ன்ஸ் பரிட்சை தேதியும் இன்னும் தெரியலை.அதுவரைக்கும் இந்த வேலைக்குப் போகலாமான்னு தோணுது. நீங்க என்ன சொல்றீங்க?" ..... "ஏம்பா கொஞச  நாளு இங்க வந்து எங்களோட ஓய்வா இருப்பேன்னு நினைச்சேன்" "சனி,ஞாயிறு லீவு தான் மாமா. அப்ப எல்லாம் அங்கு வரேன். நீங்க, அக்கா, மாலா கிளம்பி இங்க வந்தா தானே புது வீடு குடி போறது, கல்யாண வேலையெல்லாம் பார்க்க முடியும்? நான் வேணுமினா  உங்களைக் கூட்டிக்கிட்டு வர வரவா?".... "இந்த வேலைக்குப் போற முடிவிலதான் இருக்காப்பல தெரியுது. சரி, கோபியை இந்த கம்பனி பத்தி நல்ல விசாரிச்சுப் பாக்கச் சொல்லு. அப்புறம் நாம முடிவெடுக்கலாம்" ....."என்னோடயே ரெண்டு பேரும் பேசறீங்கன்னு உங்க அக்கா கோபமா இருக்காப்பில தெரியுது. அவ கிட்டப் பேசுங்க", சிரித்தபடி போனை கமலத்திடம் நீட்ட,"அவரு இவ்வளவு நேரம் ஸ்பீக்கரில் தான் போட்டிருந்தாரு. நான் எல்லாம் கேட்டேன். இந்த வாரக் கடைசியில நீங்க ரெண்டு பேரும் வந்தா நாம கோயிலுக்குப் போய் முதல் பத்திரிகை வச்சு சாமி கும்பிடடு வரலாம். அப்புறம் தான் மத்தவங்களுக்கு அனுப்ப முடியும். சரி, சாப்பிட்டாச்சா? நேரமாவுது போய்  படுங்க" சொல்லியபடியே போனை வைத்தாள் கமலம்.

 

   திட்டமிட்டபடியே கோயில் பிரா்த்தனைகளை முடித்து  ஊரில் திருமணத்திற்கு  அழைக்கவேண்டயவர்களை அழைத்தும் தபாலில் அனுப்பவேண்டியவர்களுக்கு முறையாக அனுப்பும் வேலைகளை முடித்துக் கொண்டும் சுந்தரம் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு சென்னை வந்து சேர்ந்தார். புது வீட்டிற்குப் பால் காய்சசி குடி போகும் வைபவம் தொடங்கி, கோலாகலத் திருமணம் வரை எல்லாம் திட்டமிட்டபடி இனிதாய் நிகழ்ந்து முடிந்தது.

 

       ராதிகா நல்லநேரத்தில் கணவன் வீடு வந்து சேர, ஒட்டு மொத்த குடும்பமும் அவளைக் கொண்டாடி வரவேற்றதில் பெற்றோரைப் பிரிந்து வந்த துயரமே மறந்து அவர்களோடு ஒன்றிப் பழகினாள். ஒருவாரத் தேன் நிலவு, மறுவீடு போன்ற சம்பிரதாயங்கள் முடியவும் சுந்தரம் விடுமுறை முடிந்து  ஊர் திரும்ப வேண்டிய நாளும் வந்தது. "மாமா இன்னும் கொஞ்ச நாள் லீவை எக்ஸ்டெண்ட் செய்யுங்க ப்ளீஸ்," கோபி, ராமு, ராதிகா கேட்க, "இல்லையப்பா இப்ப முடியாது. அப்புறம் வரோம்" ..... "மாலா இன்னும் கொஞ்ச நாள் எங்க கூட இருக்கட்டுமே " ராதிகா கேட்க, "நான் போய் காலேஜ் அப்பிளிகேஷன் வாங்கணும் கோவை மியூசிக் காலேஜில தான் சேரப் போறேன்னு சொன்னேனில்ல, ரிசல்ட் வந்தவுடன் அப்ளை செய்யணும். இப்பப் போனாத் தான் சரியாயிருக்கும் " மாலா  சொல்ல, " நீங்க மூணு பேரும் ஒரு நடை அங்க வாங்க," என்றாள் கமலம்.

 

        கோவை  திரும்பிய ஒரு வாரத்தில் மாலாவின்  பிளஸ் டூ ரிசல்ட் நல்லவிதமாக வந்து அவள் விரும்பிய இசைக் கல்லூரி அட்மிஷனும் கிடைத்து விட்டது. "அக்கா, மாமா நான் ராமு பேசறேன். நான்  பி.காம் தேர்வில் காலேஜ் பர்ஸ்ட் வந்திருக்கேன்." இரவு ராமு போனில் சொல்ல, அவனிடமிருந்து போனைப் பிடுங்கிய ராதிகா," இரண்டு பேப்பரில் ஸ்டேட் ராங்க் மாமா " என்றாள் உற்சாகக் குரலில். " இதைக் கொண்டாடும் விதமாக அப்பா, வினாயகம் மாமா நாங்க எல்லாம் இரவு டின்னருக்கு வெளிய போறோம். இப்ப நீங்களும் இங்க இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்?" என்றாள். "சந்தோஷத்தில எனக்குப் பேச்சே வரலை. அடுத்த வார விடுமுறையில இங்க வறீங்க இல்ல அப்ப இங்கேயும் இதைக் கொண்டாடிலாம் .கமலம் சந்தோஷத்தில திக்குமுக்காடிக்கிட்டிருக்கா மாலா பேசணுமாம்." "கங்கிராட்ஸ்," உற்சாகமும் நாணமும் கலந்த குரலில் மாலா பேச,  ராதிகா புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தாள். "எப்படியிருக்க, காலேஜ் எப்பத் துவங்குது?" ராமு கேட்க, "நேரில வாங்க சொல்றேன்" சிரித்துக்கொண்டே இணைப்பைத் துண்டித்தாள்.

.

      தொடர்ந்து வரும் நாட்களில் இரு வீட்டினரும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மாறி மாறி சென்னை, கோவை என விஜயம் செய்து கொண்டு ஒன்றாகக் கூடி மகிழ்ந்ததில் நாட்கள் நிமிடங்களா்ய் சிறகடித்துப் பறந்தன. கோபி, ராதிகா திருமணம் முடிந்து ஆறுமாதங்கள் முடிந்த சமயம் ராதிகாவின் தாய் போன் செய்து ராதிகா கருவு்ற்றிருக்கும் செய்தியைச் சொல்ல, சுந்தரம் மாலினி  கமலத்தோடு சனியன்று காலை சென்னை வந்துவிட்டார். பெற்றமகள் கருவுற்றுருக்கும் சமயம் பார்க்க வரும் தாய்  பட்சணம், பழங்கள் என்று மூட்டைக் கட்டிக் கொண்டு வருவதைப் போல் கமலம் கொண்டு வந்து நிறைத்த ஸ்வீட், கார வகைகள் பழங்கள் பார்த்து ராதிகா நெகிழ்ந்து போனாள். "நாலு நாளில ஒரே ஆளா எப்படி செஞ்சீங்க," கமலம் வாயில் ஊட்டிய பாதாம் கேக்கை சுவைத்தவாறே ராதிகா கேட்க, "கூடமாட நான் எவ்வளவு வேலை செஞ்சேன்னு அப்பாவைக் கேட்டுப் பாருங்க. நாலு மணிக்குக் காலேஜில் இருந்து வந்தபிறகு ஹெட் குக் அம்மாவுக்கு அஸிஸ்டண்ட் உத்தியோகம் தான். நடுநடுவே அப்பாவுக்கு போன் போட்டு அவர் வரும்போது வாங்கிட்டு வரவேண்டிய ஐட்டம்ஸ் லிஸ்ட் அனுப்பற வேலை. எல்லாம் வரப் போற குட்டிப் பாப்பாவுக்காக் தானே " ன்றபடி தட்டில்  பாதாம் கேக் விள்ளல்களை வை்த்து கோபி, ராமுவிடம் நீட்டினாள் மாலா. "மாமா, ராமு பாங்க் தேர்வில் முன்னணி ரேங்கில் இருக்கான்.அனேகமாக அவனுக்குக் கூடிய சீக்கிரம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திடும். ...மாலா, படிப்பெல்லாம் எப்படிப் போவுது " கோபி கேட்க, "ரொம்ப நல்லாப் போவுது மாமா தியரி, பிராக்டிகல் எனறு இசைக்கு நடுவே வாழற இந்த சூழல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இனி வரும் பாடதிட்டத்தின்படி பெரிய வி்த்வான்களின் இசை, உரை என்று ரொம்ப சுவாரஸ்யமாகப் போகும். "உறுசாகமாகப் பேசி முடிக்கும் சமயம் இரு கூடைகளில் பெரிய டிபன் காரியர்களுடன் ராதிகாவின் பெற்றோர்கள் உள்ளே வந்தனர்.

        "வாங்க சம்பந்தி, நல்ல செய்தி கிடைச்சதும் உடனடியா கிளம்பி வந்துட்டோம்" கமலம் அவர்களை வரவேற்க, "அத்தே அக்கா செய்தி தெரிஞ்சதும் எவ்வளவு செஞ்சிட்டு வந்திருக்காங்க பாருங்க " கோபி சொல்ல, "எனக்குத் தெரியும் மாப்பிள்ளை. அதான் வந்ததும் வராததுமா இங்கேயும் சமைக்கக் கிளம்பிடப் போறாங்கான்னுதான் நான்  எல்லாருக்கும் டிபன் செஞ்சு கொண்டு வந்திருக்கேன். கைகால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம். பிறகு பிரயாண  அலுப்புத் தீர குளிச்சிட்டு ஓய்வெடுங்க .மாப்பிள்ளை, எல்லாரையும் அழைச்சிக்கிட்டு மதியம் சாப்பிட அங்கு வந்திடுங்க, பேசியபடியே எல்லாரையும் சாப்பிட வைத்து கணவரோடு அவளும் உண்டு முடித்து விடைபெற்றுச் சென்றனர் ராதிகாவின் பெற்றோர்.

 

      இதுபோன்ற சந்தோஷ சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணங்களுக்கு சிகரமாக ராதிகா குறித்த நேரத்தில் ஆண்  குழந்தையைப் பெற்றெடுக்க  எல்லாரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தனர். தன்  விருப்பப்படி பாங்க் வேலையில் சேர்ந்த ராமு முதல் கட்டப் பணியாக சிறு சிறு கிளைகளில் ரூரல் சர்வீஸ் என்று அடிக்கடி பிரயாணம் செய்து வந்தான். மாலாவும் இரண்டாம் வருடப் படிப்பில் மும்முரமாக இருந்தாலும் லீவு நாட்களில் குட்டிப் பையனைப் பார்க்க சென்னைக்கு பெற்றோருடன் வருவதும தன் பாட்டுகளால் அவனைக் கொஞ்சுவதுமாக  இரு வருடங்கள்  கழிந்தன. வாழ்க்கையில் இன்பங்கள் மட்டுமல்ல அதற்கிணையாகவும் ஏன் அதைவிட பலமடங்கு அதிகமாகவம் துயரங்கள் நிகழும் என்பதற்கொப்ப அடுத்து வரும் சில நாட்களில்  குடும்பத்தில்  நிகழ்ச்சிகள அரங்கேறத் துவங்கின.

                                                                

                     அத்தியாயம்   11

 

       மாலாவின் இரண்டாவது வருடப் படிப்பு முடிந்து  பத்து நாள் விடுமுறையில் மூவருமாக சென்னை வந்தனர். ராமுவோடு அருகிலிருந்த கோயிலுக்குக் கமலம் சென்றிருந்தாள். இரவுக்கான சமையலை ராதிகா பார்த்துக் கொண்டிருக்க, குழந்தை விஜய்க்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள் மாலா.

            வாசலில் காற்றாட உட்கா்திருந்த சுந்தரத்தின் அருகில் வந்தமர்ந்த கோபி "மாமா, ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்றான். "நானும் உங்கிட்ட மட்டும் ஒண்ணு சொல்லணும். சரி, நீ சொல்ல வந்ததை முதல்ல சொல்லு" என்றார். "எனக்கு மட்டும என்னவோ சொல்லப் போறதா சொல்றீங்க... இங்க நாம மட்டும் தான் இருக்கோம. அதனால நீங்க முதல்ல சொல்லுங்க " சிறிய மௌனத்துக்குப் பின் "கொஞ்ச நாளா அப்பப்ப வயித்தில ஏதோ சங்கடமா இருக்கு. அஜீர்ணமா இருக்கும்னு நினைச்சு உங்க அக்காகிட்ட கஷாயம் வச்சுதரச் சொல்லி குடிப்பேன். போன முறை ஆபிஸிலேயே அதிகமா வலி வந்திடிச்சு. வண்டியை ஆபிஸிலேயே விட்டுட்டு வழக்கமா போற டாக்டர் கிட்ட ஆட்டோ பிடிச்சுப் போனேன். அவரு டெஸ்ட் பண்ணிப் பா்த்திட்டு இப்போதைக்கு வலி குறைய மருந்து தரதாகவும் ஆனா சில டெஸ்ட்டெல்லாம் கூடிய சீக்கிரம் செய்யணும்னும்  சொல்லியிருக்கார். உங்க அக்காவுக்கு இது எதுவும் தெரியாது.  இப்ப அந்த மருந்தை அவளுக்குத் தெரியாம சாப்பிட்டுக்கிட்டு இருக்கறதில வலி வராமத் தானிருக்கு. மேற்கொண்டு என்ன பணைணலாம்னு நீ தான் சொல்லணும். கமலத்துக்கு சந்தேகம் வராதபடி இதை எப்படி செய்யறதுன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்குப்பா" கண்களில் துளிர்க்கும் நீரை துடைத்தவாறே பேசுபவரை  வாயடைத்தவனாய் அதிர்ச்சியோடு பார்த்தான் கோபி. "நீ எதோ முக்கிய விஷயம் சொல்ல வந்தியே அதைச் சொல்லு" சுந்தரம் கேட்கவும் கோயிலிலிருந்து கமலம் ராமு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. "என்ன ரெண்டு பேரும் சுவாரஸ்யமா பேசிக்கிட்டு இருந்தப்பல இருக்கே. நாங்க வந்ததும் பேச்சு நின்னிடிச்சு?" விபூதி, குங்குமத்தை இருவரின் நெற்றியிலும் இட்டவாறே கமலம் கேட்க, "கோபி ஏதோ சொல்ல வந்தான் அதுக்குள்ள நீயும் வந்திட்ட.... சொல்லுப்பா உங்க அக்காவும் கேக்கட்டும்," கோபிக்குப் புரிவது போல் கண் ஜாடைக் காட்டினார் சுந்தரம். " எங்க ஆபிஸில் மும்பையில் ஒரு புது பிராஞ்ச் ஆரம்பிக்கப் போறாங்களாம். அதுக்கு இன் சார்ஜாப் போக விருப்பமான்னு என்னைக் கேட்டு ஒரு வாரத்தில பதில் சொல்லச்சொல்லியிருக்காங்க. நான் அதை வேணாம்னு சொல்றதாயிருக்கேன்...." அண்ணா, எவ்வளவு பெரிய விஷயம் இது? நீ கண்டிப்பா ஒத்துக்கணும். மாமா, நீங்களும் சொல்லுங்க" ராமு உற்சாகமாகப் பேச, "ஆமாம் கோபி உன் திறமைக்கான பதவி உயர்வை நீ ஏத்துக்காதான் வேணும் " சுந்தரம் சொல்ல, "பார்ப்போம் மாமா, அதுதான் ஒரு வாரம் டயமிருக்கே" சரி இப்ப  சாப்பிடப்போகலாம் " என்றவாறே       உள்ளே சென்றான் கோபி.

         இரவெல்லம் தூக்கமின்றி மாமாவைப் பற்றிய சிந்தனையில் கழித்த கோபி காலை கண் விழித்ததும் சுந்தரத்தைத் தேடி வந்தான். "ராது, ஏதாச்சும் கடைக்குப் போற வேலையிருக்கா?" காபியைக் குடித்தபடியே கேட்க, "நீங்களும் ராமுவும் ஆபிஸ் போனபிறகு நானு்ம மாலுவும் கடைக்குப் போய் கறிகாய், சில சாமான்கள் வாங்கறதாயிருக்கோம். நீங்க குளிச்சி்  டிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புங்க " என்றாள் ராதிகா. "இப்ப போனா பிரஷ்ஷா கறிகாய் இருக்கும். நான் இன்னிக்கு லேட்டாதான்  ஆபிஸ் போகப் போறேன். நீ லிஸ்ட் குடு. நான் மாமாவைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வரேன்" சுந்தரத்தை ஜாடையாகப் பார்த்துக்கொண்டே பேச, அவரும் புரிந்துகொணடவராய், "ஆமாம்மா, எனக்கும் வீட்டுக்குள்ள சும்மாவே உட்கார்ந்து இருக்கறைவிட கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்னு தோணுது"  மேற்கொண்டு பேச்சை வளரவிடாமல் இருவரும் வெளியே வந்தனர்.

             அருகில் இருந்த பார்க் வாயிலில் வண்டியை நிறுத்தி உள்ளே சென்று ஒரு மேடையில் இருவரும் அமர்ந்த  பிறகு கோபி பேசத் துவங்கினான். "மாமா, எங்க அலுவலக எம்ளாயிஸ் மருத்துவத் தேவைகளுக்காக ஒரு மருத்துவமனையோடு நாங்கள் காண்ட்ராக்ட்டில் இருக்கிறோம். அதன் சீஃப் டாக்டர் எனக்கு நல்ல நண்பராகிவிட்டார். இன்று அவரோடு பேசி அப்பாயின்ட்மெண்ட் வாங்கி விடுகிறேன். அவரைப் பார்த்து அவரது ரெவ்யூவைத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு செய்ய வேண்டியது பற்றித் தீர்மானிக்கலாம்.கடவுள் அருளால்   பெரிய  பிராபளம் இருக்காது என்று எனக்கு நம்பிக்கையிருக்கு"   "சரிப்பா, பிரச்னையை உன்கிட்ட சொன்னபிறகு எனக்கு மனசு ஓரளவு நிம்மதியா ஆன மாதிரி இருக்கு. பார்ப்போம்.... இப்ப போய் கறிகாய்  எல்லாம் வாங்கிட்டு வீடு போனாத்தான் நீ  ஆபிஸ் கிளம்ப சரியாயிருக்கும்." இருவரும் கிளம்பி மார்க்கெட் சென்றனர்.   

          மதிய உணவுக்குப் பிறகு சுந்தரம் ஓய்வெடுததுக் கொண்டிருநத நேரம் கோபியிடமிருந்து ஒரு வரி செய்தியாக "டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் ஏழு மணி. அக்காவிடம் என்ன சொல்லி வருவது என்பது பற்றி பேசுவதற்கு தனியாக ந்து போன் செய்யுங்கள்" என மெசேஞ் வந்தது. கமலம் குழந்தையை அணைத்தபடி  அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க, ராதுவும் மாலுவு்ம அவர்கள் அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருநதனர். வாசல்புறம் போனோடு வந்தவர், "எங்க ஆபிஸ் வேலையா நான் ௐரு கம்பனி நிறுவனரைப் பார்க்கவேண்டியிருக்கும்னு ஏற்கனவே உங்க அக்காகிட்ட சொல்லியிருக்கேன். இன்னிக்கு அவர் வரச் சொல்லியிருக்கறதாவும் நீதான் கூட்டிட்டுப் போகப்போறதாகவும் சொல்லிட்டு நீ சொல்ற எடத்துக்கு வந்திடறேன். நீயும் இதுக்குப் பொறுத்தமா உங்க அக்காகிட்டப் பேசிடு. "  அதேபோல் சிறிது நேரத்துக்கெல்லாம்  ராதிகாவை போனில் அழைத்த கோபி"அக்காகிட்ட போனைக்கொடு " என்றான். "அக்கா, மாமா அவருடைய ஆபிஸ் வேலையா ஒருத்தரைப் பாக்கணும்னு சொல்லி இரு்ந்தாரு. இன்னிக்கு எனக்கு வேலை சீக்கிரமா முடிஞ்சிடிச்சு. அவரும் இன்னிக்கு ஏழு மணிக்கு மாமாவை சந்திக்க முடியும்னு சொல்றாரு .அதனால மாமாவை நான் சொல்ற இடத்துக்குக் கிளம்பி  வரச் சொல்லணும். போனை அவர் கிட்டகுடுங்க" என்றான். "மாமா, ஏதாச்சு்ம்  சாப்பிட்டு நீங்க இப்ப சாப்பிடற மருந்து பிரிஸ்கிருப்ஷனை மறக்காம எடுத்திட்டு ஒரு வண்டி பிடிச்சு அடையார் பஸ் டெர்மினஸ் வந்திடுங்க. நானும் அரைமணியில் கிளம்பி அங்கு வந்திடறேன்" "சரிப்பா" போனை வைத்தவர் குறித்த நேரத்தில் சென்று நின்ற சிறிது     நேரத்துக்கெல்லாம் கோபியும் வர. இருவருமாக மருத்துவமனை சென்றனர். 

          முதற்கட்டப் பரிசோதனைகளுககுப் பின் டாக்டரின் மேற்பா்வையில் ஸ்கேன் செய்யப்பட,  ஒரு சிறிய கட்டி வயிற்றில் உருவாகியிருப்பது தெரிய வந்தது. "கோபி, இ்ந்த க்ரோத்தை பயாப்ஸி செய்து பா்த்த பிறகு தான் அது எப்படிப் பட்டது என்பதை சொல்லமுடியும். நாளை காலை இவரோடு வந்துவிடுங்கள். எதுவாக இருந்தாலும் ஆரம்ப நிலை என்பதால் கண்டிப்பாகக் குணப்படுத்தி விடலாம். கவலைப் படாதீ்ர்கள்" டாக்டரின் பேச்சு சிறிது நம்பிக்கையை விதைக்க இருவரும் விடைபெற்று வெளிவந்தனர்.

         "நாளைக்குக் காலையில என்ன காரணம் சொல்லிடடுக் கிளமபறது ? உன்னோட ஆபிஸ் வேலையெல்லாம் என்னால தடைபட்டுப் போகுதேப்பா" சுந்தரம் வேதனை தொனிக்கப் பேச, "மாமா, நாளைக்கு நீங்க என்னோடவே கிளம்பிடுங்க. உங்க பிரண்ட் காலை சாப்பாட்டுக்குக் கூப்பிட்டு இருக்கறதா சொல்லிடுவோம். ஏன்னா, டெஸ்ட் பண்ணும்போது வயிறு காலியா இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. நான் முதல் அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கறதால எட்டரைக்குள் அங்கு இருக்கணும்னு சொல்லி  இருக்காங்க. நான் உங்களை உங்க நண்பர்   வீட்டில விட்டுட்டு ஆபிஸ் போறதா சொல்லிக்கறேன்..... "மும்பை ஆபிஸ் போறதைப் பத்தி என்னப்பா முடிவெடுத்த?" அந்த பிராஜெக்ட்டுக்கு இன்னும் முழு அப்ரூவல் வரலை. அதனால இப்போதைக்கு அது பத்தி பேச ஏதுமில்லை. நீங்க இதுக்குமேல அக்கா மாலாவோட ஊரில்  தனியா இருக்க வேண்டாம் மாமா. வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னை வந்துடுங்க" .... பார்க்கலாம். இப்ப வீட்டை நெருங்கிட்டோம். பிறகு பேசலாம்." இயல்பான புன்னகையை வரவழைத்துக்கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

  "என்னங்க, போன வேலை முடிஞ்சுதா? " உள்ளே நுழைபவர்களை எதிர்கொண்டு கமலம் கேட்க, அக்கா எங்களுக்கு செம பசி. சாப்பிட்டுக்கிடடே பேசுவோமே, மாமா, கைகால் கழுவிட்டு வாங்க" அவரை உள்ளே அனுப்பியவன் தன் கையில் ஆபிஸ் ஃபைலோடு மறைத்து வைத்திருந்த சுந்திரத்தின் மெடிகல் ரிப்போ்ட்களையும் உள்ளே வைத்துவிட்டு  முகம் கழுவி உடைமாறி வந்தான். அப்பாவைக் கண்டதும் ராதிகாவிடமிருந்து தாவிய மகனைக் கொஞ்சியபடி இருந்தவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட கமலம் "மாமா வந்திட்டாரு பாரு. ராமுவும் நீங்க வரட்டும்னு சாப்பிடாம காத்திருக்கான். மூணு பேரும் சாப்பிடுங்க" சொன்னபடி அருகில் அமர்ந்து குழந்தையோடு விளையாடத் துவங்கினாள். "அக்கா, நாளைக்கு காலையில மாமா என்னோடவே கிளம்பணும். காலை உணவு மாமாவுக்கு அவங்க வீட்டில. அப்புறம் அவரோட பாக்டரிக்குப் போகபபோறாரு. அவரே மாமா திரும்பி வீடு வரதுக்கு வ்ண்டி அரேஞ்ச் பண்ணி அனுப்பறதா சொல்லியிருக்காரு. எனக்கு காலை டிபனை பாக் பண்ணி கொடுத்திடுங்க.நான் ஆபிஸ் போனபிறகு சாப்பிட்டுக்கிறேன். என் வண்டி வேற நாளை  சர்வீஸுக்குப் போகப் போவதால டாக்ஸியில தான் போகப் போறோம். " ஒரே மூச்சில் பேசி முடித்தான் கோபி." நான் வேணா என் ஸ்கூட்டரில நாளைக்கு மாமாவை அவங்க பிரண்ட் வீட்டில விட்டுட்டு பாங்க்குக்குப் போறேனே என் வண்டியில மாமா அதிகம் வரதேயி்ல்லை. எப்பவும் கோபியோடதான் போறாரு. நாளைக்கு எங்கூட வாங்க. உங்க பிரண்ட் எங்க இருக்காரு சொல்லுங்க மாமா"  ராமு கேட்க,"அதெல்லாம் வேண்டாம் ராமு வரப் போற ஸி. ஏ.ஐ.ஐ.பி. பரிட்சைக்கு நீ எ்ப்படித் தீவிரமா படிக்கிறேன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். காலை வேளையில படிச்சிட்டு நீ கிளம்ப ஒன்பதாயிடும். மாமாவின் நண்பர் வீடும் நீ போற ரூட்டில் வராது. எனக்கும் நாளை ஆபிஸிற்கு சீக்கிரம் போகவேண்டியிருக்கு. ..ராது, நாளைக்கு எனக்கு ஆபிஸில் லன்ச். சாப்பாடு கட்டவேண்டாம்.." சிறிது நிறுத்தியவன்  சுந்தரத்தைப் பார்க்க, புரிந்து கொண்டவராய் அவரும் "பாக்டரிக்குப் போயிட்டுத் திரும்ப லேட் ஆச்சுன்னா நான் என் பிரண்ட் கதிர் கூட சாப்பிட்டுட்டு தான் வருவேன். அதனால  நீங்க மூணு பேரும் காத்திருக்காம சாப்பிடுங்க." கை கழுவச் சென்றார். " உங்களுக்கு வெளி சாப்பாடே ஒத்துக்காது எதுக்கு உங்க நண்பர் வீட்டில சாப்பிட ஒத்துக்கணும். இங்க சாப்பிட்டு வரேன்னு சொல்லியருக்கலாமில்லை" கமலம்  சிறிது குரல் உயர்த்த, "அக்கா, அவரும் வயசானவரு. ஷுகர் பேஷண்ட் கூட. அதனால அவங்க  பக்குவமாதான் சாப்பாடு செய்வாங்களாம். நீங்க அனாவசியமா டென்ஷன் ஆகாதீங்க....மாமா, காலையில சீக்கிரம் கிளம்பணுமில்லை. போய் ஓய்வெடுங்க." .........ஆண்டவா, விஷயத்தை மறைக்க இன்னும் எப்படியெல்லாம் பொய் பேசணுமோஎன்று மனதிற்குள் மருகியவராய் சுந்தரம் நகர, " நான் விஜயைத் தூங்கப் போடறேன். நீங்க மூணு பேரும் சாப்பிட்டு வாங்க" என்று குழ்ந்தையோடு அறைக்குள் சென்றான் கோபி.

 

 

                      அத்தியாயம்      12

 

        சரியான நேரத்தில் எண்டாஸ்கோப்  பயாப்சி நடந்து முடிய மிகக் களைத்திருந்த சுந்தரம் மருத்துவமனையிலேயே ஓய்வாகப் படுக்கவைக்கப் பட்டார். அவருக்கு திரவ ஆகாரம் கொடுத்த பின் மாமனார் சிவஞானத்தை் தொடர்பு கொண்டான் கோபி. சுந்தரம் ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்து கொணடவன்,  மாமா  பக்கத்தில அத்தை இ்ல்லாம தனியா இருந்தா ஒரு விஷயம் சொல்லணும் ".... "என்ன மாப்பிள்ளை குரலே ஒரு மாதிரி இருக்கு?  அவ குளிக்கறா  பையன் காலேஜ் போயாச்சு. நான் தனியாத் தானிருக்கேன். சொல்லுங்க. "சிவஞானம் பதில் கூற. "அத்தைகிட்ட அவசர வேலையா ஒரு போன் வந்ததா சொல்லிட்டு கிளம்பி நுங்கம்பாக்கம் அரவிந்த் மருத்துவமனைக்கு வரமுடியுமா? " கோபி சொல்ல பதட்டாமானார் சிவஞானம் இப்பவே கிளம்பி வரேன். யாருக்கு உடம்பு சரியி்ல்லை " கேட்டுக் கொண்டே உடை மாற்றத்  துவங்கினார். "சுந்தரம் மாமாக்கு தான் நீங்க நேரில் வாங்க " மேலே பேச இயலாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. " இப்ப மணி ஒன்பதாவுது. இனனும் அரை மணியில் அ்ங்கு வந்திடறேன். " சொன்ன மாதிரியே மனைவியிடம், "ஒரு அவசர வேலையா வெளியே போறேன் இப்ப ஏதும் கேள்வி கேக்காதே வந்து விபரம் சொல்றேன்.கார் சாவி எடு " அவரது இயல்பு தெரிந்தவளாய் "பாத்துப போங்க "என வழியனுப்பினாள் மீனா.

           பதட்டமாக வருபவரை அறை வாசலிலேயே  எதிர்கொண்ட கோபி "அவரு நல்ல தூங்கறாரு. நாம இங்கே உக்காந்து  பேசலாம்" என அறையின் எதி்ர்புறம் போட்டிருந்த நாற்காலிகளில் இருவரும் உட்கார்ந்தனர். ஒரு விதமாக அவருக்கு விபரத்தை குரல் அடைக்க சொல்லி முடிக்கவும் டியூட்டி டாக்டர் அங்கு வரவும் சரியாக இருந்தது. "பேஷண்ட் கண் விழித்தபிறகு நீங்கள் கிளம்பலாம். பயாப்ஸி ரிப்போர்ட் வர இரண்டு நாட்களாகும். அந்த சமயம் டாக்டர் சங்கர் என்ற ஸ்பெஷலிஸ்ட் உங்களை சந்தித்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய சிகிச்சை பற்றி சொல்வார். மிகுந்த கைராசிக்காரான அவருடைய கவனிப்பில் இவர் விரைவில் குணமாகி விடுவார்" என்று சொல்லிச் சென்றார்.

 

         "மாப்பிள்ளை கவலைப் படாதீங்க. சம்பந்தி உடல்நிலை பற்றிய விபரம் முழுமையா தெரியற வரை இது பத்தி உங்க அக்காவுக்கோ மத்தவங்களுக்கோ எதுவும் சொல்லவேண்டாம். இது பத்தி நாம விபரமா பேசி முடிவெடுக்கலாம். இப்ப நீங்க ஆபிஸு்குப் போய் முக்கியமான வேலை இருக்குன்னீங்களே அதைப் பாருங்க. இதோ அவரும் எழுந்திட்டாரு. உங்களை ஆபிஸில விட்டுட்டு. நான் அவரைப் பாத்துக் கூடடிட்டுப் போய் வீட்டில விடறேன். அதோட  நான் எப்படி நடுவில வந்தேன்கறதுக்கும் தகுந்த மாதிரி காரணம் சொல்லி சமாளிச்சுக்கறேன். என் காரை உங்க வீட்டிலேயே விட்டுட்டுப் போகப் போறேன். ரிடையர் ஆகிட்ட நான் எப்பவோ வெளியில போறதுக்கு வாடகை வண்டி எடுத்துப்பேன். நீஙக  தான் நல்ல கார் ஓட்றீங்க இல்லை, லைசென்ஸ்ஸும் இருக்கு .இனிமே என் சம்பந்தியை சௌகரியமா காரில்  கூட்டிட்டுப் போங்க. சம்பந்தி, தைரியமா இருங்க. மாப்பிள்ளளைக்கு துணையா இருந்து உங்களை நான் பார்த்துப்பேன். சரி, மாமாவுக்கு இந்த ஆஸ் பத்திரி உடையை மாத்துங்க. போற  வழியில மத்ததெல்லாம் பேசிக்கலா்ம் " மூவரும் காரில் கிளம்பினா்கள்.

         " கோபி, கையில டிபன் கட்டிக் கொடுத்தை சாப்பிட்டியா? சுந்தரம் கேட்க, "நான் சாப்பிட்டேன். நீங்க தான் எதுவும் சாப்பிடாம இருக்கீங்க.அக்கா உ்ங்களைப் பார்த்தவுடன் நீ்ங்க நார்மலா இல்லைன்னு கேப்பாங்கன்னு தோணுது. "கவலை தொனிக்க கோபி பேச, "மாப்பிள்ளை எல்லாத்துக்கும் நான் பதில் யோசிச்சு வச்சிருக்கேன். வீட்டுக்குப் போறதுக்குள்ள நாங்க எப்படிப் பேசி சமாளிக்கணும்னு தீர்மானிச்சுக்கறோம். ஆபிஸ் வந்திடிச்சு. " கோபி இறங்கிக் கையசைத்து விடை கொடுக்க, கார் கிளம்பியது.

        "வாங்க மாமா, நீங்க எப்படி அப்பா கூட வந்தீ்ங்க" விஜய்க்கு விளையாட்டு காட்டிக் கொண்டே உணவு ஊட்டிக் கொண்டிருந்த மாலா உள்ளே நுழைபவர்களை வரவேற்றாள். தாவிக் கொண்டு வரும் பேரனை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த சிவஞானம் "எல்லாம் எதேச்சையா நடந்ததுன்னு தான சொல்லணும்....  பேச்சுக்குரல் கேட்டு  உள்ளிருந்து கமலமும் ராதிகாவும் வெளியே வந்து அவரை வரவேற்றனர். சுந்தரம் அவரே நிலைமையை சமாளிக்கட்டும் என்பது போல் பாத்ரூமிறகுள் சென்றுவிட்டார். " ஒரு வேலையா நுங்கம்பாக்கம் வரை போகவேண்டியிருந்தது. மாப்பிள்ளை ஆபிஸ் வழியா திரும்பி வரும் போது  உளள போயி அவரைப் பாக்கலாமா வேலை நேரத்தில தொந்தரவா நினைப்பாரோன்னு தயங்கி வண்டியை ஒரு நிமிஷம் நிறுத்திட்டுப் பார்த்தா உங்க அப்பாவும் மாப்பிள்ளையும் ரோடைக் கிராஸ் பண்ணி இந்தப் பக்கம் வராங்க. வண்டியை அவங்க பக்கத்தில் நிறுத்தியவுடன் இவருக்கு டாக்ஸி புக் பண்ணப் போறதா மாப்பிள்ளை சொன்னாரு.  வேண்டாம் நானே வீட்டில விட்டு்ட்டுப் பேரப் பிள்ளையையும் உங்களை எல்லாமும் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன் " சிவஞானம் முன்கூட்டியே பிளான் செய்திருந்தபடி சொல்லி முடித்தார். அதற்குள் இரு கோப்பைகளில் ஜூஸோடு வந்த மாலினி அவரிடம்  ஒன்றைக் கொடுத்துவிட்டு முகத்தைத் துடைத்தவாறு வெளியே வரும் அப்பாவிடமும் ஒன்றை தந்தாள். "என்னப்பா, ரொம்ப சோர்வா தெரியறீங்க? உங்க நண்பரைப் பாத்தீங்களா? அவங்க வீட்டில  காலையில என்ன சாப்பிட்டீங்க?....." ஒரு நிமிடம் ஜூஸை குடிக்கும் சாக்கில் கேள்விகளுக்கு ஏற்ற பதிலை மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டவராய், " பொங்கல், வடை ஏதோ ஸ்வீட் செஞ்சிருந்தாங்க. எனக்கு எல்லாம் அதிகக் காரமா இருந்ததால  ஜாஸ்தி  சாப்பிடமுடியலை. ஸ்வீட்டும் ,நெய் சக்கரை எல்லாமே தூக்கலா இருந்ததால ரொம்ப கம்மியா தான் சாப்பிட்டேன். அவருடைய பாக்டரியில ஏதோ மிஷின் கோளாறுன்னு சூப்ரவைசர் போன் பண்ணியதில அவர் பதட்டமா இருந்தாரு. இன்னொறு நாள் பாக்டரிக்கு வரேன்னு சொல்லிட்டு நான் கிளம்பினேன். அந்த சமயம் என் பர்ஸ் கோபிக்கிட்டவே இருக்கறதைப் பார்த்து  அவன் போன் செஞ்சான். பாக்டரிக்குப் போற வழியில என்னை கோபி ஆபிஸ் வாசலில அவரு இறக்கிட்டுப் போனாரு. அப்ப தான் சம்பந்தியும் அ்ங்கு வர, அவர் கூடவே வந்திட்டேன்."  "எங்க அம்மா சமையல் தான் உங்களுக்கு ஒத்துக்கும் போல...." கிண்டலாகக் கேட்கும் மாலாவை "ஏய் வாயாடி, அவரே வெய்யிலிலேயும் பசியிலேயும் சோர்ந்து போயிருக்காரு. கேலி பேசாம அப்பாவுக்கும் என் அண்ணனுக்கும் தட்டு வை" அதட்டிய கமலம், "நீங்களும் இங்கே தான் சாப்பிடணும்" என்றாள் சிவஞானத்தைப் பார்த்து. "என் பொண்டாட்டி நான் அவளை விட்டுட்டு இங்க வந்தது தெரிஞ்சாலே கோபப்படுவா. இதுல சாப்பாடும் இங்கேயே சாப்பிட்டேன்னா அவ்வளவு தான் " பயந்தவர் போல பேசுபவரை இடைமறித்த ராதிகா, ஏதோ அம்மாவுக்கு ரொம்ப பயப்படுற மாதிரி ஆக்ட் பண்ணாதீங்கப்பா. கொஞ்ச நேரம் முன்ன அம்மாவோட நான் பேசிக்கிட்டு இருக்கும் போதுதான் நீங்க ரெண்டு பேரும் உள்ளே வந்தீங்க. உடனே கமலம்மா போனை வாங்கி அவங்களையும் ஒரு ஆட்டோ பிடிச்சு இங்க வரச் சொல்லிட்டாங்க. நல்லவேளை குக்கர் வைக்கப் போனவங்களை சரியான நேரத்தில பிடிச்சு நிறுத்திட்டோம். அம்மாவும் விஜயைப் பார்த்து பத்து நாளைக்கு மேல ஆயிடிச்சு. வரேன்னுடங்க. இப்ப வந்திடுவாங்க" "ஆமாம் இங்க சாப்பிட்டு ஓய்வெடுத்திட்டு வெய்யில் தாழ  திரும்பிப் போகலாம். பரத் காலேஜிலிருந்து வரதுக்குள்ள போனா போதாதா" கமலம் சொல்ல, "அதுவும சரிதான். இப்பல்லாம பொண்ணை பாக்கணும்ங்கற நினைப்பைவிட பேரனைப் பாக்கணும்னு தான் அதிகமாத் தோணுது. ....  சொல்ல மறந்திட்டன்னே நம்ப பரத் காலேஜ் வழியா நடந்த இண்டர்வியூவில ஒரு நல்ல கம்பனியில செலக்ட் ஆகியிருக்கான். புனே பெங்களூர் ரண்டு இடத்தில எங்க போஸ்டிங்னு சேருவதற்கு முன்னாடி தான் தெரியும் போல."..... சிறிது நேரத்தில் ராதிகா அம்மாவும் வந்து சேர சந்தோஷமாகப் பேசிக் கொண்டும் விஜயோடு விளையாடிக் கொண்டும் நேரம் கழிந்தது. வெளிப் பார்வைக்கு சுந்தரம் இயல்பாகக் காணப்பட்டாலும் உண்மையை கமலத்திடமிடமிருந்து மறைத்துப் பேசுவது குறித்தும்  மருத்துவ  சோதனைகளின் முடிவு எப்படியிருக்கும் என்ற சிந்தனையிலேயே அவரது மனம் குழம்பிக் கொண்டிருந்தது.  நாலு மணிவாககில் சிவஞானம் மனைவியுடன் விடைபெறும் சமயம் ,"ராது, நான் காரை இங்கேயே விட்டுட்டுப் போறேன் .ஏற்கனவே மாப்பிள்ளை கிட்ட இது பத்தி பேசிட்டேன். மாலா அப்பாவை எங்க கூட்டிட்டுப் போறதாயிருந்தாலும காரில் தான் போகணும்னு சொல்லியிருக்கேன். லீவுநாளில பேரனையும் கூட்டிட்டு எல்லாருமா  வெளிய போக வண்டியிருந்தா நல்லது தானே.  எனக்குத் தேவைப்பட்டா நான் வந்து எடுத்திட்டுப் போய்க்கறேன்" சாவியை மகள் கையில் கொடுத்தவர் மனைவியிடம் "கிளம்பலாமா" என்று கேட்க, "நானும் உஙகளோடு ஆட்டோஸ்டாண்ட் வரைக்கும் வரேன் " சுந்தரமும் கிளம்பினார்.

"எனக்கென்னவோ இதே மாதிரி கறபனை கதை சொல்லி  உண்மை நிலைமையை மறைக்கறது சரியாப் படலை" சிறிது பின்தங்கி நடந்து வரும் அவரது மனைவி காதில் விழாதபடி சிவஞானத்திடம் சுந்தரம் கிசுகிசுக்க, "டெஸ்ட் ரிசல்ட் வரட்டும். மேற்கொண்டு செய்வதைப் பத்தி அப்ப முடிவெடுக்கலாம். டாக்டர் கொடுத்துள்ள மருந்தை தவறாம சாப்பிடுங்க. கடவுளை நம்பி வீண் கவலைகள ஒதுக்குங்க. வரட்டுமா?" மனைவியோடு ஆட்டோவில் கிளம்பிச் சென்றார் சிவஞானம். சிறிது நேரம் ஸ்டாண்டில் இருந்த சிறிய பிள்ளையார் சிலை எதிரில் கண்மூடி நின்றவர் உடனடியாக வீட்டிற்குப் போகத் தோன்றாதவராய் எதிரில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தார். "சீக்கிரமாக மாலினி ராமுவின் திருமணத்தை நடத்தி விடவேண்டும். அன்பு மகனாக கமலததையும் ஆருயிர் கணவனாக மாலினியையும் அவன் பார்த்துக் கொள்வான் எல்லாருக்கு ம் பாதுகாவலானாக கோபி இருக்கும் போது நான ஏன் வீணாகக் கவலைப் படவேண்டும். டெஸ்ட் ரிசல்ட் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கோபியோடு பேசி ராமு மாலினி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனா கமலத்திற்கு ஏதும் சந்தேகம் வராத மாதிரி இதை   எப்படிக் கையாள்வது என்று புரியவில்லையே....." தெளிவு கிடைக்காத மனக் குழப்பங்களில் தடுமாறிக் கொண்டிருந்தவர் "இதுக்கும் மேல இங்க உக்காந்திருந்தா நம்மளைக் காணோம்னு தேடிட்டு கமலம் வந்திடப் போறா."என்ற நினைப்பு எழ, தளர்ந்த நடையில் வீடு திரும்பினார்.சுந்தரம்

        இரு நாட்களில் மருத்துவ சோதனை முடிவுகள் தயாராகிவிட ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சங்கர் மாலை ஐந்து மணிக்கு பேஷண்டை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தந்திருப்பதால் பேஷண்டை அழைத்து வரும்படி கோபிக்கு தகவல் வந்தது. மாமாவுடன் வாக்கிங் போவதாகச் சொல்லி அவரோடு வெளியே வந்தவன் சிவஞானத்தை தொடர்பு கொண்டான். விஷயத்தை சொன்னவுடன் ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு "மாப்பிள்ளை,  ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டிய நாள் சனிக்கிழமை ஆவுது. நான் முன்னதாக உங்க வீட்டுக்குப் போயி மாமாவை வெளிய கூட்டிட்டுப் போறதா சொல்லி ஆஸ்பத்திரிக்கு வந்திடறேன். நீங்க ஆபிஸில வேலை அதிகம் வர லேட்டாகும்னு வீட்டுக்கு போன்ல  சொல்லிட்டு நேரா அங்கு வந்திடுங்க". கோபியின் ஒப்புதலோடு சனிக்கிழமை மதியம் சுந்தரத்தை போனில் அழைத்தார் சிவஞானம். "கமலா இன்னும் கொஞ்ச நேரத்தில சம்பந்தி இங்க வராறாம். ஒரு இண்டஸ்டிரியல் கண்காட்சிக்கு அவருக்கு அழைப்பு வந்திருக்காம். என்னை வரீங்களான்னு கேட்டாரு. நான் வரேன்னு சொல்லிட்டேன்." சிறிது நேரத்தில் அவர் வர, இருவருமாகக் காரில் கிளம்பி மருத்துவமனையை அடைந்தனர். முன்னதாகவே அங்கு வந்திருந்த கோபி ரிப்போரட்டுகளுடன் காத்திருக்க, அவர்கள் முறை வந்ததும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தனர்.

 

 

 

 

அத்தியாயம்    13

 

       அறைக்குள் நுழைந்தவர்களை மெனமையான புன்னகையோடு வரவேற்ற டாக்டர் சங்கரின் முன் சுந்தரத்தின் ஃபைலை வைத்துவிட்டு மூவரும் நிற்க,  " மிஸ்டர் சுந்தரம், இங்கு வந்து அமருங்கள்" தன் அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்தார். சிறிது பதட்டமாகக் காணப்பட்ட அவரை இயல்பான நிலைக்குத் திரும்பச் செய்யும் எண்ணத்தில் அவரது அனறாட வாழ்க்கை முறை, அலுவலகம், உணவுப் பழக்கங்கள் என சில சாதாரண கேள்விகள் கேட்டார். பிறகு, "இவரது வயிற்றில் உருவாகியுள்ள கட்டி டியூமர் வகையைச் சேர்ந்தது என்பது பயாப்ஸி ரிப்போர்ட்டிலிருந்து தெரிகிறது. இதைக் கேட்டடு உடனே கலவரப் படவேண்டாம். பெருகி வரும் மருத்துவக்  கண்டுபிடிப்புகள்,  இந்நோயை  முற்றிலும் அழிக்க் சிறந்த மருந்துகளும் சிகிச்சை  முறைகளும் நடைமுறையில் வந்துள்ளன. லக்கிலி, உங்களது நோய் ஆரம்பகட்ட நிவையில் இருப்பதால் என் சிகிச்சையும் உங்கள் பூரண ஒத்துழைப்பும் இணைந்து  நீங்கள்  விரைவில்  முழுமையாகக் குணமடைந்து விடுவீர்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயம்., இந்த மருந்து களால் பல பக்க விளைவுகள் இருக்கும். உடல் சோர்வு,  தள்ளாட்டம், செரிமானக் குறைபாடு என பல்வேறு பிரச்னைகள் நிகழலாம்.அடிக்கடி மருத்துவமனைக்கு வரச் சொல்லி பரிசோதனைகள் வாயிலாக உங்கள் உடல்நிலையின் முன்னேற்றத்திற்கான நிலவரத்தை கண்காணிப்போம். எனவே நீங்கள் உங்கள் மனைவி குழந்தைகளிடம் பக்குவமாக விஷயத்தைக் கூறுவதுடன் வேலையிலிரு்நது ஓய்வு கேட்டுப் பெறுவதும்  சென்னையிலேயே தொடர்ந்து தங்குவதற்கான வழிகளையும் மேற்கொள்ளுங்கள். ஒரு மருத்துவராக மட்டுமின்றி உங்கள் நெருங்கிய நண்பனாகவும் என்னை நினைத்துக் கொண்டு நம்பிக்கையோடும் தைரியமாகவும் இருங்கள்" மனிதநேயத்தோடு பேசிய டாக்டரின் வார்த்தைகளால் நெகிழ்ச்சியில் மூவரின்      கண்களிலும் நீர் துளிர்த்தது. அவர் எழுதித் தந்த நீண்ட  மருந்து சீட்டைப் பெற்றுக் கொண்டு நன்றி கூறி மூவரும் வெளிவந்தனர்.

 

         இந்த விஷயத்தை வீட்டில் எப்படிச் சொல்வது என்ற சிக்கலான வினாவிற்கு விடைதேடி சிறு விவாதங்களுக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்த மூவரும் வீட்டிற்குக் கிளம்பினார்கள். கோபி தனது ஸ்கூட்டரில் மருத்துவமனையிலிருந்து கிளம்பி தனது அலுவலக பார்க்கிங்கில் வண்டியைப் பூட்டிவிட்டு  பின் தொடர்ந்து வந்த சிவஞானத்தின் காரில் ஏறிக்கொள்ள மூவரும் ஒன்றாக வீடு வந்து சேர்ந்தனர்.

மூவரும் ஒன்றாகக் காரிலிருந்து இறங்குவதை வீட்டில் உள்ளவர்கள் வியந்து பார்த்து கேள்விகள் எழுப்புவதற்குள சிவஞானம் முந்திக்கொண்டவராய் ,ராமு் தம்பி, மாமாவை உள்ளே கூட்டிட்டிப் போய் சௌகரியமா ஃபான் போட்டு உக்கார வையுங்க. " மகளைப் பார்த்து "அவருக்கு ஏதாச்சும்  குடிக்க கொண்டு வாம்மா" சொல்லிக்கொண்டே அவர் அருகி்ல் அவரும் உட்கார்ந்தார். எல்லார்  கவனமும் சுந்தரத்தி்ன்  மீதிருக்க,கோபி அவசரமாக அவரது ஃபல்களை அறையில் மறைத்து வைத்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான். பதட்டத்துடன் கணவன் அருகில் கமலம் அமர்வதற்குள் சிவஞானம், "நாங்க ரெண்டுபேரும் கிளம்பிக் கொஞ்ச தூரம் போவதற்குள் இவருக்குக் கடுமையான வயித்து வலி வந்திடிச்சு. வீட்டுக்கு் போய் கஷாயம் வச்சுத் தரச் சொல்லி சாப்பிட்டாப் போதும்னாரு. இவருக்கு இப்படி அடிக்கடி வருங்கறதை  அவர் சொல்லவும் இவரை உடனடியா ஏதாச்சும் டாக்டரை கிட்ட கூட்டிட்டுப் போறதுதான் நல்லதுன்னு் தோணிச்சு. மாப்பிள்ளைக்குப் போன் போட்டு விஷயத்தை சொன்னதும் பதறிட்டாரு. எப்படியோ சமாளிச்சுக்கிட்டு அவங்க அலுவலகம் மூலமா அரவிந்த் ஆஸ்பத்திரியி்ல்  எமெர்ஜென்சி அப்பாயி்ன்மெண்ட் வா்ங்க் கிட்டு எங்களை நேரா அங்கபோகச் சொல்லி அவர் வாடகைக்கார் பிடிச்சு அங்க வந்திட்டாரு. அவர் ரொம்பப் பதட்டமா இருந்ததால பைக் ஓட்ட வேண்டாம்னு நாங்கதான் சொன்னோம்.....நல்லவேளை காத்திருக்காம டாக்டரை உடனடியா பார்த்தோம். அவர் டெஸ்ட் செய்து பார்த்துவிட்டும் தொடரந்து ஸ்கேன் செய்தும் இவருக்குக் கடுமையான அல்சர் பாதிப்பு இருப்பதை உறுதிப் படுத்தினார். பவர்புல் மருந்துகள் , கட்டுப் பாடான உணவு முறை, அடிக்கடி மருத்துவ செக்கப் என்று அவர் சொல்லும் அறிவுறைகளைத் தவராது பின்பற்றினால் பூரணமாகக் குணமடைந்து விடுவார் என்று உறுதியாகக் கூறுகிறார்"  சிவஞானம் பேசுவதை சமைலறையிங் பால் காய்ச்சிக் காபி தயாரித்துக் கொண்டே கலவர மனதுடன் கேட்டுக்கொண்டிருந்த ராதிகா ட்ரேயில் கோப்பைகளோடு வந்து எல்லாருக்கும் கொடுத்தவள், "இதுக்கு மேலே கமலம்மா அப்பாவை நாங்க தனியா ஊரில விடமாட்டோம்.  இனி அவங்க இங்கதானிருக்கணும். அதுக்கு என்ன செய்யணமோ அதை உடனடியா செய்யுங்க."கணவனைப் பார்த்துச் சொன்னாள். "்அண்ணி, கரெ்க்டாச் சொல்லிட்டீங்க. மாமா வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னைக்கு வந்திடணும்." ராமு திடமாகப் பேசினான்.    

      இதுவரை மௌனமாக அமர்ந்திருந்த சுந்நரம் " நாங்க இங்க வந்து நிரநதரமா தங்கறது உடனடியா நடக்காது. அதுக்கு முன்னாடி செய்ய வேண்டியது நிறைய இருக்கு. முதலாவதா மாலினிக்கு இன்னும் ஒரு வருடப் படிப்பு இருக்கில்லே...." "உங்க ஆரோக்கியத்தை விட எம்படிப்பு எனக்கு முக்கியமில்லைப்பா. மாமாக்களோட கவனிப்பில நீங்க சீக்கிரம் சரியாகணும் "அழத் துவங்கினாள் மாலினி. "இவ்வளவு நாளா உங்க வலியைக் கவனிக்காம இருந்திட்ட பாவி நான். இனி எனக்கு உங்களைப் பாத்துக்கறதுதான் முக்கிய வேலை .மாலு சொன்ன மாதிரி  நாம பசஙக கண்காணிப்பில தான் இனிமே இருக்கணும்"  பொங்கி வரும் அழுகையினூடே கமலம் பேசி முடித்தாள்.

 

 

              "இன்னும் என்ன மாமா? நாளைக்கே உங்க ஆபிஸுக்கு இங்கிருந்து போன் போட்டு பேசுவோம்.  வேணுமினா டாகடரிமிருந்து சர்டிபிகேட் வாங்கி அனுப்புவோம். உங்க பாஸ நிலமையைப் புரிஞ்சுக்கிட்டு   உங்களை ரிலீவ் செய்திடுவாரு. பைனலாக நீங்க ரிசைன் பண்ணப் போகும்போது நாங்களும் கூடவே வந்து வீட்டிலிருந்துத் தேவையான சாமான்களை இங்க அனுப்பிட்டு மீதி சாமான்ளை ஒரு ரூமில் போட்டவிட்டு முடிஞ்சா யாரையாவது குடி வச்சுடலாம். இதெல்லாம்  நானும் ராமுவுமா நிதானமா செஞ்சுப்போம்." பேசும் கோபியை இடமறித்த சுந்தரம் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்குப்பா" என்றார். சிறிய இடைவெளிக்குப் பின் தொடர்ந்தவர்,"கமலம் இதை நான் இதுவரை   உங்கிட்ட கூட சொல்லலை.....நம்ப கோ பி நிச்சியவிழாவுக்கு என் நண்பர்கள் நிறையப் பேர்வந்திருந்தாங்க இல்லையா அதில நமசிவாயம்னு ஒருத்தரை இரண்டு மூணுநாள் கழிச்சு எதேச்சையா கோவில்ல சந்திச்சேன். அவர்கிட்ட பேசசுவாக்கில் நம்ம மாலாவை ராமுவுக்குத் திருமணம் செய்யப் போறதைப் பத்தி சொன்னேன். ரண்டு பேரோட நட்சத்திர விபரங்களைக் கேட்ட அவர் நல்லபொருத்தம் இருப்பதாகச் சொன்னார். மேலும் விரிவான தகவல்கள் தேவையெனில் இருவரது ஜாதகம் தேவையென்றார். அதன்படி நானும் ஜாதக காப்பிகளை மறுநாள் அவரிடம் கொடுத்தேன். அன்று கமலமும் மாலுவும்  சென்னையில் இருந்ததால் அவர்களுக்கு இது தெரியாது. நானும் மறந்துவிட்டேன். அவர் சொன்ன தகவலின் படி மாலாவிற்கு இந்த ஆண்டிற்குள்  திருமணம் நடக்காவிடில் பிறகு சில வருடங்கள் தள்ளிப்போகலாம் எனறார்.அ ந்த நேரத்தில் எனக்கு அது ஒரு முக்கிய விஷயமாகத் தோன்றவில்லை. ஆனால் இப்போது  மாலா ராமுவின் திருமணத்தை உடனடியாக நடத்திவிடவேண்டுமென்று உறுதியாகத் தோன்றுகிறது. என் ஒரே மகளின் திருமணத்தை நடத்திக் கண்குளிர பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க ராமு, மாலா நீ ங்கள் இருவரும் இதற்கு சம்மதிக்க வேண்டும்" குரல் கம்ம சுந்தரம் பேசப்பேச கமலம் அழத் துவங்கினாள்."மாமா, உங்களுக்கு

 வந்திருக்கறது  அல்சர் .சரியான மரு்துவம், உணவு முறைகள் வழியா சீக்கிரம் குணமாக்கிவிடலா்ம். வேண்டாத கற்பனையெல்லாம்  பண்ணிக்கிட்டு உடம்பையும் மனசையும் வருத்திக்காதீங்க .மாலா  தான் என் மனைவிங்கறது என்னைப் பொறுத்த வரை உறுதியான முடிவு. நீங்க    கட்டுட தாலியைன்னு எப்ப சொன்னாலும் நான் சந்தோஷமா தாலி கட்டத்  தயார். அதுக்கு முன்னால மாலா இதைப் பற்றி என்ன நினைக்கறாங்கறதையும் தெரிஞ்சுக்கணுமில்லையா....." உணர்ச்சி பொங்க ராமு பேசி முடிப்பதற்குள் "அ்பபா, எனக்கு எல்லாத்தையும் விட நீங்கதான்பா முக்கியம். நீ்ங்க என்ன   சொன்னாலும் , செஞ்சாலும் அது என் நல்லதுக்குதான் என்று எனக்குத் தெரியும். இது விஷயமா நீங்க எடுக்கப் போற தீர்மானத்துக்கு நா ன் முழு மனசோட ஒத்துக்கறேன். "மாலா அழுகையினிடையே பேசி முடித்தாள்.    "என்ன சம்பந்தி இப்ப திருப்தி தானே? இனி ஆக வேண்டியதைப் பார்போம். நாளைக்கே உங்க ஆபிசுக்குப் போன் போட்டுப் பேசுங்க. நேரில் போய்தான் ஆகவேண்டுமென்றால் நம்ம காரிலேயே மாப்பிள்ளையும் நானுமா கூட்டிட்டுப் போயி ஆபிஸ் வேலைகளை முடிச்சிட்டு வருவோம். வீட்டைப் பத்தின வேலைகளை ராமுத் தம்பி சொன்னது மாதிரி அவரும் மாப்பிள்ளையும் பார்த்துப்பாங்க. அவங்க செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன சொல்லிட்டு நீங்க நிம்மதியா ஓய்வெடுங்க. எல்லாம் நல்லவிதமா நடக்கும்" சிவஞானம் முடிப்பதறகுள் இடைமறித்த சுந்தரம், "முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே சம்பந்தி ... ராமு, மாலா கல்யாணம்....." " அதை மறப்பேனா நான்? மாலா எனக்கும் மக தான். முதல்ல  நம்ம ஜோசியரைப் வரச்சொல்லி  தேதி குறிப்போம். நீங்க இந்தத் திருமணத்தை எப்படி நடத்தணும்னு விரும்புகிறீங்களோ அப்படி  நடத்தற பொறுப்பு என்னுது. கவலயே படாதீங்க." சிவஞானத்தின்  உள்ளா்ந்த  வார்த்தைகள மனதை உருக்க அவரது கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்ட சுந்தரம் " சந்தோஷத்தில எனக்குப் பேச்சே வரலை" திணறலாகச் சொல்லி முடிததார்.

 

    அடுத்த இரு மாதங்களில் முகூர்த்த தேதி நிச்சயிக்கப் பட்டு திருமண ஏற்பாடுகள் விரைவாகவும் விமரிசையாகவும் ஒருபுறம் நடக்க, அப்பப்போது மருத்துவமனை விஜயத்தோடு சுந்தரம் தன் சேமிப்பு, வீடு இவற்றைப் பற்றிய உயில் தயாரிப்பதையும் திருமண செலவுகளுக்குப் பணத்தை கோபியின் மறுப்பையும் மீறி உடனுக்குடன் கொடுத்து விடுவதிலும் கவனமாக இருந்தார்.  குறித்த முகூ்ர்த்தத்தில் திருமணம் சிறப்பாக நடந்து முடிய, ஓரளவு நோயின் தீவிரம் குறைந்தவராய்  சுந்தரம் தெம்பாக நடமாடத் துவங்கினார். "புலி  பதுங்குவது பாய்ந்து தாக்குவதற்கே " என்பதற்கிணங்க, அடுத்த மூன்றாவது மாதம் நோயின் தீவிரம் அதிகமாகிவிட கீமோதெரபி துவங்கவேண்டியதாயிற்று.  இந்நிலையில்  அவரது உடல்நிலை குறித்த உண்மைகள் தெரியவர, கமலமும் மாலாவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். தங்களிடமிருந்து உ ண்மையை மறைத்த கோபியின் மேல் ராமு, கமலம், மாலா மூவரும் அடக்கமுடியாத ஆத்திரத்தை வார்த்தைகளால்  வெளிப்படுத்தத் துவங்கிய நேரம் அது வரை மனதில் அடக்கிவைத்திருந்த துயரம் ஒரு சேர பொங்கி வர  கோபி அக்காவின் கைகளைப் பற்றிக் கொண்டு அழத் துவங்கினான். " என் நிலைமையிலிருந்து நீங்க யோசிச்சுப் பாருங்க அக்கா, உண்மை தெரிஞ்சா நீங்க எப்படி அதைத் தாங்கிப்பீங்கன்னு மாமா இதை உங்ககிட்ட சொல்லவே கூடாதுன்னு உறுதியா சொன்னதை மீறி நான் எப்படி சொல்லுவேன்? ராமுவும்  மாலுவும் என் கண்ணுக்கு இன்னும் குழந்தைகளாகத் தன தெரியராங்க. அவங்க கிட்ட இதைப் பத்தி பேசற தைரியம் எனக்கு இல்லை.மூணு பேரும் எம்மேல கோபப் படாம யோசிச்சுப் பாருங்க" கோபி முடிப்பதற்குள்,  "என்னை மன்னிச்சிடு கோபி நீ சரியாத்தான்   செஞ்சிருக்க.  தாள முடியாத வருத்ததத்தில நான் ஏதேதோ பேசிட்டேன். மன்னிச்சிடுப்பா......."

 

 

 

 

                அத்தியாயம்     14

 

       "பாட்டி, எழுந்திருங்க, மததிய நேரத்தில நீங்க இவ்வளவு நேரம் தூங்கவே மாட்டீங்களே, ஏதாவது   கனவு  கண்டீங்களா, கோபி, கோபின்னு பெரியப்பா பேரை சொல்லி குரல் கொடுத்ததைக் கேட்டு நாங்க பயந்தே போயிட்டோம்." பேசிக் கொண்டே கமலத்தை மெதுவாக எழுப்பி அர்ச்சனா உட்கார வைக்க, "முதல்ல கொஞ்சம் தண்ணி குடிங்க" வழக்கமான கலகலப்பு இல்லாமல் பயந்த குரலில் ஆ்ரத்தி தண்ணீர் குவளையை நீட்டினாள்.  முழுமையாக விழித்துக் கொண்ட கமலம் "உங்க தாத்தா படத்தைப் பாத்துக்கிட்டே கண்ணசந்திட்டதில பழசல்லாம் நினைவுக்கு வந்து ".....அழத் துவங்கும்  அம்மாவை் பார்த்துக் கண் கலங்கிய மாலா உடனே தன்னை சுதாரித்துக் கொண்டவளாய் " ஏம்மா , மனசை வரு்த்திக்கற . பாரு, உம்பேத்தி ரெண்டும் எப்படி கலங்கி நிக்கறாங்கனனு..முகம் கழுவிக்கிட்டு வா.சூடா காபி கலந்து கொண்டு வரேன். ஏய் பாட்டியைப் பார்த்துக் கூட்டிடடு வா" பேசிக் கொண்டே கிச்சனுக்குச் சென்றாள் மாலா.

         கமலம் முகம் கழுவிக் கொண்டு பேத்திகளோடு வந்து உணவு மேசையில் அமர, நால்வருக்கும் காபி கொண்டுவந்து அமர்ந்த மாலா மூவருக்கும் கொடுத்துத் தானும் அருந்தினாள். "அர்ச்சனா, காயப் போட்ட துணியை எடு்க்க மறந்திடடேன். போய் எடுத்திட்டு  வா.  ஆர்த்தி, அப்பா வரதுக்குள்ள தோட்டத்துக்குத் தண்ணி ஊத்திடு போ" என்று அவர்களை அங்கிருந்து அனுப்பினாள். "மாலா, ராத்திரி கோபியோட பேசலாமா"? "என்னம்மா நீ மாமா கூடபேசறதுக்கு என்னை அனுமதி  கேக்கற. இப்பவே கூடபேசலாமே...." "உன் அப்பாவின் கடைசி நாட்களில அவன் பட்ட சிரமங்களையும் நம்ம ரண்டு பேருக்காகவும் அவன் பிரமோஷன்ல மும்பை போறதைக் கூட  வேண்டாம்னு சொல்லி பிடிவாதம் பிடிச்சதுன்னு அந்த நாள் நினைப்பெல்லாம் திரும்பத் திரும்ப இன்னைக்கு வந்திட்டே இருக்கு அதுதான் . ராத்திரி பேசலாம். அப்பதானே  பசங்களும் வீட்டில இருப்பாங்க" ... ஆமாம் நீ சொல்றமாதிரி என் திருமணம் முடிஞ்சு ஆறு மாசம் நம்மோட அப்பா இருந்தாலும் கடைசி நாட்கள்ல   அவர் நோயின் தீவிரத்தில துடிக்கும் போது நாமெல்லாம் அழுதா மாமா நம்மை சமாதானப் படுத்தறது ,அப்பாவை ஆசுவாசப் படுத்தறதுன்னு எப்பவும் தன்நினைவு இல்லாம எவ்வளவு பாடுபட்டாரு. இவரும் நீயும் அப்பாவோட மறைவுக்குப் பிறகு அவரை கெஞ்சியும் மிரட்டியும் மும்பைக்கு அனுப்பும் போத குழந்தை மாதிரி அழுதது இப்பவும் கண் முன்னாடி நிக்குது. ராதிகா அண்ணியும் அந்த நாட்களில் எவ்வளவு பக்குவமாக ஒரே ஆளா வீடடுப் பொறுப்பை சமாளிச்சாங்க?  எல்லாத்துக்கும் மேல அவங்க அப்பா நமக்கு எப்படியெல்லாம் உதவினாங்கங்கறதை நாம மறக்கவே முடியாது" குரல் கம்ம மாலா பேசி நிறுத்த. ஒரு நிமிடம் இருவரும் மௌனமாக இருந்தனர். "மாலா, ராமு வர நேரமாயிடிச்சு. நாம ரணடு பேரும் இப்படி பழசை நினைச்சுக்கிட்டு முகம் வாடி உக்காந்திருக்கறதைப் பார்த்தா துடிசசுப் போயிடுவான். சீக்கிரமா தலைவாரி முகம் கழுவிக்கிட்டு விளக்கேத்து. ராத்திரிக்கு ஏதாச்சும் சமைக்கணுமா சொல்லு. நான் செய்யறேன்." எழுந்தகொணடே கிச்சன் பக்கம் தகர்பவளை "வேண்டாம்மா. காலையிலேயே அ்ர்ச்சனா ராத்திரிக்கு நிறைய வெங்காயம் தாளிச்சு இட்லி உப்புமா  கூட ,தயிர் தான் டின்னர்னு மெனு சொல்லிட்டா. கறிகாய்  துருலி சாலட் அவ வந்து செய்வாளாம். உனக்கு வேணுமானா தோசை ஊத்தித் தறேன். உன் செல்லத் தம்பி வர சமயம் நீ கிச்சனுக்குள் வந்தா வெய்யிவ்ல எங்க அக்காவை வேலை வாங்கறியான்னு என்மேல கோபப்படு.வாரு ..." "ஏன் என் தம்பி எங்கிட்டமட்டும் தான் பாசமா இருக்கானா? இவ்வளவு படிச்சு பரிட்சை எல்லாம் பாஸ் பண்ணினாலும் ஆபிசரான ஊர் ஊரா மாத்துவாங்க. அதனால ஆபிசராகவே மாட்டேன்னுன்னு உன் மேலையும் பெண்ணுங்க மேலையும் இருக்கற பிரியத்தினாலதானே சொல்லிட்டான்." கமலமும் சிரித்துக்கொண்டே பதில் சொல்ல, "என்னம்மா  உங்க நாத்தனார் உங்கூட சண்டை போடறங்களா? பாட்டி. உன் தம்பி பெண்டாட்டி உன்னை படுத்தறாங்களா சொல்லு நான் விசாரிக்கிறேன்." கூடை நிறையமல்லிகைப் பூவோடு அங்கு வந்த ஆர்த்தி மிரட்டுவது போல் கேட்க, "ஏய் உங்க பாட்டி வழக்கமா பார்க்கற சீரியல்ல தான் அதெல்லாம் நடக்கும். அ்ம்மா, நூல் கண்டு இந்தாங்க. டி.வி. பாத்துப்கிட்டே  பூவைக் கட்டிக் கொடுங்க" மாலா அவர்கள அனுப்ப  ராமுவின் வண்டி வீட்டிற்குள் நுழைந்தது.

"ஏய் ஆர்த்தி இங்கே வா " மகளைக் கூப்பிட்டு அவள் கையில் "அர்ச்சனா ஸ்வீட்ச்ஸ்" பெயரிட்ட ஒரு பெரிய கவரைக் கொடுத்துவிட்டு வண்டியை பூடடி உள்ளே நுழைந்தான் ராமு.  தாங்க்ஸ் அப்பா. மத்தியான வேளைகளில் படிக்கும் போது இந்த மாதிரி ஸ்னாக்ஸ், டீயோட படிச்சா எவ்வளவு நல்லாயிருக்கும்னு  நினைச்சுக்கிட்டே இருந்தேன். இவங்களை செய்யச் சொல்லவும் பயமா இருந்திச்சு. நம்ம வீட்டு நாட்டாமை  வெய்யில்ல பாட்டியையும் அம்மாவையும்  அடுப்படியில எண்ணெய் புகையில கஷ்டப்படுத்தறேன்னு சண்டைக்கு வருவான்னு பயந்துகிட்டுப் பேசாம இருந்தேன். என் அருமை அப்பா என் கஷ்டம் புரிஞ்சு அவரே வாங்கிட்டு வந்திட்டாரு. ஆனா அளவு தான் கம்மியா இருக்கற மாதிரி தோணுது. பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். " பையிலிருந்து ஒவ்வொரு கவராக எடுத்து டேபிளில் வைத்துக்கொண்டே பேசும் ஆரத்தியைப் பார்த்து கமலமும் மாலாவும் சிரித்துக்கொண்டனர்.  மடித்த துணிகளோடு அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த அர்ச்சனா "அளவு கம்மியா தோணுதா.? போன வாரம் பாட்டி டப்பா நிறைய முறுக்கு செஞ்சு வச்சதை முக்காவாசி நீதான் தின்னு டப்பாவை காலி பண்ணியிருக்கே.. ஸ்நாக்ஸ்ஸை சாப்பாடு மாதிரி சாப்பிட ஒன்னை மாதிரி யாரால முடியும்"   முகம் கழுவிக் கொண்டு துடைத்தவாறே  வந்த ராமு, "ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்ததுக்கு  இன்னொரு காரணமு் ம் இருக்கு. எல்லாரும் வாங்க சொல்றேன்" கூடத்தில் அக்காவின் அருகில் சோபாவில் அமர, ஸ்நாக்ஸ் தட்டுகளோடு பெண்களும் கணவனுக்கு டீயோடு மாலாவும் வந்து அமர்ந்து கொண்டனர்.

"சஸ்பென்ஸ் தாங்கலையே  விஷயத்துக்கு வாங்கப்பா "முறுக்கை சுவைத்தபடி ஆர்த்தி கேட்க, மும்பையில என் பிரண்டு சங்கர் இருக்கானில்லையா அவன் பெண்ணு சித்ராவுக்குத் திருமணம் திடீரென்று  நிச்சியமாகியிருக்கு. சித்ராவைப் பெண் பார்த்து பரஸ்பரம் சம்மதம் தெரிவிச்ச இரண்டு நாளிலேயே அந்தப் பையனோட ஆபிசில அவனுக்கு மூணு வருடம் வெளிநாட்டுக்கு மாற்றல் பதவி உயர்வோட கொடுத்திருக்காளாம். திருமணம் உடனடியாகச் செஞ்சா மனைவியையும் கூட்டிண்டி போகலாமாம். அதனால அந்தப் பையனின் பெற்றோர் எப்படியாவது  திருமணத்தை உடனடியாக எளிமையான முறையில் நடத்தி பதிவுத் திருமணத்தையு ம் செய்துவிடலாம் என்கிறா்களாம். இருவருக்கும் பொருத்தமான முகூர்த்த நாள் வரும் புதன் கிழமை அதன் பிறகு சரியான நாளும்  உடனடியாக இல்லை என்பதால் விடாமல் அலைந்து ஹால், மற்ற ஏற்பாடுகளை சங்கர் செய்துவிட்டான்.  போன் மூலமாகத் தான் எல்லாருக்கும் அழைப்பு. ராத்திரி உங்களோடும் பேசுவதாகச்   சொல்லியிருக்கான். நான் கண்டிப்பாக போவதாகயிருக்கிறேன்." ராமு  சொல்லி முடிக்கவும், " இப்ப சம்மர் சீசன் ஆரம்பிச்சாச்சு. மும்பைக்கு ரயில் ரிசர்வேஷன் முன் கூட்டியே துவங்கி புக் ஆகியிருக்கும். ப்ளைட்டில் போயிட்டு வந்திடுங்க"   அ்ர்ச்சனா ஐடியா கொடுத்தாள். "இ்ல்லை அர்ச்சனா, ஜூன் மாதம் நடக்கப் போற விஜயின் கல்யாணத்துக்கு ஆபிஸ் எல்.டி.சியை அவைல் பண்ணி நாம எல்லாருக்கும் ஏர் டிக்கெட் புக் பண்ணியிருப்பது தெரியுமில்லை? இப்ப நான் ஒருத்தன் போறதுக்கு எதுக்கு அநாவசியமா கைக்காசை செலவழிச்சு பிளைட்டில் போகணும்? மும்பை எக்ஸ்பிரஸில் காலையில ஏறினா மறுநாள் மதிய சாப்பாட்டுக்கு கோபி வீட்டுக்குப் போயிடலாம். "   

          "ஏன்பா  இந்தக் கல்யாணத்துக்கு அவசியம் போய்தான் ஆகணுமா? உங்க சார்பில   பெரியப்பா பெரியம்மா போனா போதாதா?"... "உங்க பெரியப்பா ஜாண்டிஸ் வந்து  படுத்து இப்பதான் சரியாகியிருக்கான். போதாததற்கு உங்க அக்கா யாமினிக்கு வாந்தியும் குமட்டலும் அதிகமா இருக்குன்னு ராதிகா அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கா. ராதிகா அம்மா பூனாவிலிருந்து பேத்தியைப் பாத்துக்க வந்திருக்காங்களாம்.  அதனால அவங்க கள்யாணத்துக்கு போக முடியுமான்னு தெரியலை. உங்க பெரியப்பாவுக்கு இந்த சாக்கிலாவது நான் அங்கு வந்திடணும்னும்னு ஆசை. நான் தான் விஜய் கல்யாணத்துக்குப் பிறகு அங்கேயே இருந்து  யாமினி பிரசவம் நல்லபடியா முடிஞ்சு அவ திரும்பி புகுந்த வீடு போற வரைக்கும் மும்பையில் இருக்கப் போறதா சொல்லியிருக்கேன்." கமலம் பேசி முடித்தாள்.

 

      "அம்மா, இப்ப உங்க தம்பியை எப்படியாவது பேசி சரிகட்டி ப்ளைட்டில் மும்பை போயிட்டு வரச் சொல்லுங்க. அர் ச்சனா சொல்ற மாதிரி இந்த வெய்யில்ல ஏ.சி. கோச்செல்லாம்  கிடைக்கறது கஷ்டம்." மாலா பேசி முடிப்பதற்குள், "இத பார் மாலா, இந்த விஷயத்தில  அக்கா, நீ,பசங்க யார்  சொன்னாலும் என் முடிவை மாத்திக்கறதாஇல்லை  தேவையென்றால் கணக்குப் பார்க்காம செலவழிக்கறதும் அதே சமயம் அனாவசியமா செலவு பண்றது பிடிக்காதுங்கறதும் என் சுபாவம்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அர்ச்சனா, நாளைக்கு காலையில நீ மும்பை எக்ஸ்பிரஸில்  ஞாயிற்றுக்கிழமைக்கு எனக்கு டிக்கெட் புக் பண்ணிடு. திரும்பி வரதுக்கு வியாழன் ராத்திரியா இருந்த பரவாயில்லை. ஏ.சி. கோச் இல்லாட்டியும் பரவாயில்லை .சனிக்கிழமை ஆபிஸ் போகணும்" தீர்மானமாகப் பேசி முடித்தார் ராமு.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு் பின், "அம்மா, மணி எட்டடிக்கப் போவுது. தோசை ஊத்த ஆரம்பிக்கறேன். எழுந்து வா" மாலா, எனக்கு மூணு தோசை போதும். வேறு யாருக்கும் தோசை வேண்டாமின்னா மூணு வாத்திட்டு அடுப்பை அணைச்சிடு. அர்ச்சனா, உங்க எல்லாருக்கும் தட்டு வை. அப்பாவைக் கூப்பிடு. எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்" சொல்லிக் கொண்டே கமலம் மேசையின் முன்  வந்து அமர, மாலா உணவு பண்டங்களை மேசையில் கொண்டு வைத்தாள்.   "அப்பா சாப்பிட வாங்க" குரல் கொடுத்தவாறே தட்டுகள் தண்ணீர் வைத்துவிட்டு அர்ச்சனா,ஆ்ர்த்தி அமர, குளித்து தலை துவட்டியபடியே ராமுவும் வந்தமர்ந்தார். மௌனமாக அனைவரும் சாப்பிடத் துவங்க, "என்ன யாரும் பேச மாட்டீங்களா?" ராமு மாலாவைப் பார்த்தவாறே கேட்க, "அம்மாவை விட்டிட்டு நீங்க மும்பை போறேன்னு சொன்னதால  அவங்க கோபமா இருக்காங்கன்னு நினைக்கிறேன். பாவம்பா அவங்களைக் கூட்டிட்டுப் போகலாமில்லை" ஆர்த்தி குறுஞ் சிரிப்புடன் ஆரம்பிக்க, "ஏய் உன் சிபாரிசு யாருக்கும் தேவையில்லை. இந்த வெய்யில்ல சரியான முன் பதிவு இல்லாம ரயில் பயணம் தேவையான்னு  புரியலை" லேசாகக் குரல் உயத்தினாள் மாலா .

"ஆமாம் தேவை தான். சங்கரும் நானும் எவ்வளவு நெருங்கிய தோழர்கள்னு அக்கா, அண்ணா, உனக்கு எல்லாருக்கும் தெரியும். பல நெருக்கடியான சந்த்ப்பங்களில் அவன் நம்ம குடும்பத்துக்கு எப்படி   எல்லாம் ஓடி வந்து உதவியிருக்கான்னு உனக்கு மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன். அவனுடைய ஒரே மகள் கல்யாணத்துக்கு நியாயமாப் பார்த்தா நாம எல்லாருமா போகணும். இப்ப அது முடியாதுங்கறால நான் மட்டுமாவது போய்தான ஆவேன்..... அக்கா நீங்க என்ன பேசாம இருக்கறீங்க?.... "நீ போகத்தான் வேணும்.  ஆனா......" தீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியும். நான் ரயிலில் தான போறதா இருக்கேன் "

        "ஏம்பா, பாட்டியை உனக்கு அக்காவா பிடிக்குமா இல்ல மாமியாரா பிடிக்குமான்னு நான் ரெண்டு மூணு நாள் முன்னே கேட்டப்ப,"அவங்க பிறப்பால அக்காவாகி பிறகு உறவில மாமியாரா ஆனாலும் என்னைப் பொறுத்தவரை என் அம்மா, அப்பா மட்டுமில்லை தினமும் நான் கும்பிடற சாமியே அவங்கதான்னு சொன்னீங்க, இப்ப அவங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசறீங்களே" ஆ்ர்த்தி  கேட்க, "ஆர்த்தி இதுககு மேல இந்த டாபிக் வேண்டாம்.  நம்ம அப்பா ஒரு முடிவு எடுத்தார்னா அதிலிரு்நது  மாறவே மாட்டா்னு நம்ம எல்லாருக்கு் நல்லாத் தெரியும். நாளைக்கு ஆன்லைன்  ரிசர்வேஷனைப் பார்த்து டிக்கெட்கிடைக்குதான்னு பாக்கறேன். அப்பா, நானும் உங்க கூடவரதா இருக்கேன்  பெரியப்பாவிற்குப் பயண விபரம் தெளிவானபிறகு சொல்லிக்கலாம்." தலைமகளின முடிவுக்கு எல்லாரும் மௌனத்தின் மூலம் சம்மதம் தெரிவிக்க,"  ஆர்த்தி, பிஸிக்ஸில் ஏ தோ சந்தேகம் கேட்கணும்னு சொன்னியே

வா ரூமுக்குப் போகலாம்" தங்கையோடு படியேறினாள் அர்ச்சனா

                                        காலத்தினால் செய்த நன்றி

                     அத்தியாயம்   15

         "அம்மா, ஞாயிற்றுக் கிழமை காலை மும்பை  எக்ஸ்பிரஸில் ரெண்டு டிக்கெட்  ரிசர்வ் செய்தாச்சு. என் பிரண்ட் நளினியின் அப்பா ரயில்வேசில் இருக்கறதால வாங்க முடிஞ்சுது.  ஆனா ஏ.ஸி. கோச் கிடைக்கலை. திரும்பி வியாழக்கிழமை இரவு மெயிலில் கிளம்பி சனிக்கிழமை விடியற்காலை சென்னை வந்திடுவோம். அதற்கு ஏ.ஸி. கோச் கிடைச்சிருக்கு. "  மறு நாள் அர்ச்சனா அறிவிக்க, "ரொம்ப தாங்க்ஸ்மா".."இதுக்கு என்னப்பா தாங்க்ஸ்?  " பாட்டி, பெரியம்மாகூட பேசி என்னென்ன வேணும்னு கேக்கணும் யாமினி அக்காவுக்குப் பிடிச்ச பலகாரம் ஏதாவது செய்றீங்களா?" அப்பா, திருமணப் பெண்ணுக்குக் கிப்ட ஏதாச்சும் வாங்கணுமா?" "வேணாம்மா பணமா குடுத்திடலாம்னு தோணுது. வெளிநாடு போறவங்களுக்குத் தேவையானதை அவங்களேப் பார்த்து வாங்கிப்பாங்க..... மாலா , பேசாம கடையிலிருந்து ஏதாவது  ஸ்வீட், காரம் வாங்கிடவா?  அக்காவும் நீயும் சிரமப் பட வேண்டாமே".... ராமு முடிப்பதற்குள் " அதெல்லாம் வாங்க வேண்டாம். முந்திரி கேக்,  காரா சேவு  நாங்க வீடடிலேயே செஞ்சிடுவோம். மாசமா இருக்கற மகளுக்குக்  கடை பலகாரம் எதுக்குங்க"என்றாள் மாலா.

 "கரெக்ட் அம்மா அந்த  மகளை மட்டு்ம்  கணக்கில் எடுககாம பலகார லிஸ்டில் இந்த சின்ன மகளையும் சேர்த்துப்பீங்க இல்ல " ஆர்த்தி கேட்க, "ஏய் தீனியைத் தவிர உனக்கு வேற நினைப்பே இல்லையா? டிபன் சாப்பிட்டாச்சு இல்ல, போய் படிக்க உக்காரு. அ்ர்ச்சனா, பயணத்துக்கு உனக்கு்ம உங்க அப்பாவுக்கும் துணிகள் ஏதும் துவைச்சு அயர்ன் பணண வேணடியிருக்குமா ஏதாச்சும் வாங்கணுமான்னு பாரு...." மாலா முடிப்பதற்குள் பாதி மாடியேறிய ஆ்ர்த்தி  அவசரமாக ஓடிவந்து, "அம்மா,அப்பா" எனக்கு எல்லாம் இருக்கறது போதும்"னு சொல்வாரு. அக்காவுக்கு லேட்டஸ்ட் மாடல்ல ஒரு லெஹன்கா  வாங்  கிடுவோம். யாமினி அக்கா சூப்பரா   மேக்கப் போட்டு எங்க அழகு அக்காவை இன்னும் அழகாக்கிடுவாங்க. கல்யாணத்துக்கு வர மாப்பிள்ளையோட பிரண்ட்ஸ் யாராவது  அவங்களைப் பார்ததுப் பிடிச்சுப் போயி அப்பா கிட்ட பெண் கேட்டாலும் கேப்பாங்க இல்லையா" அடிக்க கை ஓங்கிக் கொண்டுவரும் அர்ச்சனாவிடமிருந்து தப்பிக்க, ஆர்த்தி அப்பாவின் பின்னால் மறைந்து கொள்ள, "நீ பேசறதைக் கேட்க நல்லாத்தானிருக்கு கண்ணு " என்றாள் கமலம் சிரி்த்துக்கொண்டே.. "அக்கா மேல என் செல்லதுக்கு  எவ்வளவு பாசம்" ராமு மகளை அணைத்தபடி சொல்ல, "போதும்பா படிக்கறதை விட்டுட்டு அவ ஏதோ பேத்திக்கிட்டு இருக்கா. அதட்டி அனுப்பாம அவளை ஆளாளுக்கு ஏ த்திவிடறீங்க" அர்ச்சனா கோபமாகப் பேச, சித்ரா"வுக்கு திடீரென்று  அமைஞ்ச மாதிரி எங்க அக்காவுக்கும் ஒரு பாரின் மாப்பிள்ளை அமைஞ்சா நான் மேற் படிப்புக்கு அங்க போகலாம். பாட்டி, அபபா,அம்மா அடிக்கடி வெளிநாட்டுக்கு டிரிப் அடிக்கலாம்......." ஆ்ர்த்தி,         இதோட  வாயை மூடிக்கிட்டுப் போய் படிக்கற வழியைப் பாரு.  பிளஸ்டூ பரிட்சையை ஒழுங்கா முடி.  நான் எ்ந்த வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும் ஏங்கி நிற்கலை. உனனோட பைத்தியக்கார ஐடியாவெல்லாம் தேவையி்லலை புரியுதா" பொரிந்து தள்ளும் அர்ச்சனாவின் கத்தல் எல்லாரையும் அங்கிருந்து நகரவைத்தது.

"மாமா" கூப்பிட்டுக் கொண்டு தயங்கி நிறக்கும் சரவணனை""என்னப்பா, சொல்லு... ஏ்ய் டி. வி.யை ஏன் இப்படி  அலற விடற?  வால்யூமை குறை " சிதம்பரம் மனைவியை அதட்ட , பட்டென்று டி.வியை அணைத்தவள் "இந்த வீட்டில நிம்மதியா டி.வி. பார்க்கக் கூட நம்மால முடியலை. எல்லாம் என் தலையெழுத்து " என்ற ஆ்ங்காரமாகச் சொன்னபடி சோபாவில் அழுந்தி உட்கார்ந்து கொண்டாள். சரியாக அந்த நேரம்  வேலையிலிருந்து சுமதியும் வீட்டினுள் நுழைந்தாள்."வாம்மா, கை கால் கழுவிட்டு ஏதாச்சும் சூடா சரசுவை கலந்து தரச் சொல்லிக் குடிச்சிட்டு வாம்மா. முகமெல்லாம் வாடி களைப்பா தெரியுது" சிதம்பரம்   சொல்லி முடிப் பதற்குள் "வரும் போதுதான் ஆபிசில் டீ குடி்ச்சேன். வெய்யில் அதிகமா இருக்கறதால களைப்பா தெரியுது  நான் போய் முகம் கழுவிட்டு வரேன்" சொன்னபடியே நகர்ந்தவள் "பாவம் மாமா தினமும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து நான் டீ, காபி குடிக்கறதா நினைச்சிடடு இருக்கார் போல. விடிய விடிய இருமற அம்மாவுக்கு சூடா ஒரு டம்ளர் பால் குடுக்க வழியில்லை....." மனதிற்குள் நினைத்தபடி வரண்ட சிரிப்போடு  பின்பறம் சென்று முகம் கழுவியவள் துவைக்கும் கல் மீது உட்கார்ந்து கொண்டு ஏநோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அம்மாவைப் பார்த்தாள். "என்னம்மா இங்க உட்கார்ந்திருக்க? கொசு கடிக்கலையா எழுந்து உள்ள வா." அவளை எழுப்பினாள். "இன்னிக்கு ராத்திரிக்கு அண்ணி ரவா கிச்சடியும் கொத்சும் செய்யச் சொன்னாங்க. அந்த வேலையெல்லாம் சீக்கிரமா முடிஞ்சிடிச்சு. அதான் காத்தாடகொ் ஞ்ச்சநேரம் உக்காரலாம்னு வந்தேன்".... "உன் உடம்புல இருக்கற கொஞ்ச நஞ்ச ரத்தத்தையும் கடிச்சு உறிஞ்சக்கிட்டிருக்கற கொசுக்கடி கூடத் தெரியாம என்னம்மா நீ?...   " மனுசங்க வார்த்தையால கடிச்சுக் கொதறுவதைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போயிட்ட எம் மனசைப் போல உடம்பும் ஆயிடிச்சு சுமதி" இறுகிய குரலில் பேசும் அம்மாவை சமாதானப் படுத்துவது போல் சுமதி ஏதோ சொல்லத் துவங்கும் சமயம் "சுமதி,என்னம்மா பண்ணிக்கிட்டிருக்க? உங்கம்மா எங்க?  ரெ்ண்டு பேரும் இங்க வாங்க" "அமமா, மாமா கூப்பிடறாரு . முகத்தை சாதாரணமா வச்சிட்டு வா போகலாம்." இருவரும் உள்ளே வந்தனர      "உன் மகன் ஏதோ சொல்லணும்னான். ஆனா தயங்கி நிக்ககறான் பாரு. என்னனனு கேளும்மா."   "என்  பிரண்டு  அருண் தெரியுமில்லை. அவன் வேலை தேடி மும்பை போயி இப்ப அங்கு வேலை கிடைச்சு ஓரளவு  செட்டில் ஆகிட்டான்.  அப்பப்ப என்னோட போனில் பேசுவான். நேத்து ராத்திரி போன் போட்டு இப்ப நான் அங்க வந்தா ஒரு இடத்தில வேலைக்கு ஏற்பாடு செஞ்சு தரதா சொல்றான். அவன் இருக்கற இடத்தில் இப்போதைக்குத்  தங்கிக்கலாம். வேலை ஸ்திரமான பிறகு வேற  இடம பார்க்கங்ங்லாம்னு சொன்னான்....." மென்று விழுங்கி சரவணன் பேசி முடிக்கவும்" அடி சக்கை மும்பைக்குப் போயி வேலைப் பார்க்கப் போறியா?  நீ  மட்டுமில்லை உங்க ஆத்தா, தங்கிச்சி எல்லாருமா கிளம்பிப் போயிடுங்க. இங்க கிடைக்காத வேலை அங்க மட்டும் கிடைக்கப் போவுதாக்கும். "  நீலா குரலெடுத்துக் கூவத் துவங்கினாள். "வாயை மூடு நீலா. வரவர உம் பேச்சு வரம்பு மீறிப் போகுது. அந்தப் பிள்ளை விடாம ஏதேதோ முயற்சி செஞ்சிடுத்தானே இருக்கான்? நிச்சியமா அவனோட விடா முயற்சிக்குப் பலன் கிடைக்காம போகாது. என் தங்கச்சியும் அவ பசங்களும் இங்க என்னோடதான் இருப்பாங்க. வேணுமின்னா நீ போயி எங்காச்சும்  சௌகரியமா எங்க தொல்லையில்லாம இருந்துக்கோ. மாசாமாசம் உனக்குப் பணம் கொடுத்திடறேன். புரியுதா"?  சிதம்பரம் ஓங்கிக் குரலெடுக்க, அங்கு ஓடி வந்த ராகுல் "அப்பா, எங்களை அம்மா கூட அனுப்பிடாதீங்க, அத்தை, அக்கா இல்லாம நானும் தங்கச்சியும் இருக்கவே மாட்டோம்"என்றான்.

          "கண்ணுங்களா, யாரும் எங்கேயும போகப்போறதில்லை. சரியா? போய் வீட்டுப் பாடத்தை முடிங்க. இப்ப அக்கா உங்க கூட வந்து  உட்காருவா" குழந்தைகளை சமாதானப் படுத்தி அனுப்பிய சரசு "அ்ண்ணி சொல்றதிலேயும் நியாயம் இருக்கு அண்ணா. மும்பை போனா மட்டும் வேலை கிடைக்கும்ங்கறது என்ன நிச்சியம். அதனால....." "இதுக்குமேல ஏதும் பேசாதே சரசு. நான் அவனை மும்பை அனுப்பறதா முடிவு எடுத்தாச்சு. டேய் சரவணா, அருண் கூட பேசி எப்ப நீ மும்பை போய் இறங்கினா அவனால ரயிலடிக்கு வந்து கூட்டிட்டுப் போகமுடியும்னு கேளு. அதுக்கு ஏத்தாப்பில டிக்கட் வாங்கிடுவோம்." " மாமா , வரத் திங்கட்கிழமையிலேந்து ஒரு வாரம் அவனுக்கு நைட்ஷிப்ட். அதனால வர வாரம் மும்பைக்கு பகல்ல போய் சேர மாதிரி டிக்கட் எடுக்கணும்"  நாளைக்கே அந்த வேலையைப் பார்ப்போம்."...... "சுமதி போய் எல்லாருக்கும் தட்டு போடு. இன்னைக்கு எல்லாரும் வட்டமா உட்கார்ந்து சாப்பாட்டை நடுவில  வச்சிக்கிட்டு சேர்ந்து சாப்பிடுவோம்."" "குழந்தைகள் இருவரும் "சேர்ந்து சாப்பிடப் போறோமா? ஜாலி குதித்துக் கொண்டு வந்து "நான் அண்ணா பக்கத்தில் நீ அக்கா பக்கத்தில் " என்று தங்கள் தட்டை வைத்துக் கொண்டு அமர்ந்நனர். "அண்ணி, உங்களுக்குக் கீழே உட்கார்ந்து சாப்பிட சிரமமாக இருக்குமில்லை. இந்தாங்க" தடடு நிறைய  கிச்சடியும் ஒரு கிண்ணத்தில் கொத்சும் கொண்டு வந்து சோபாவின் எதிரிலிருந்த மேசையில் வைத்தாள். கூடவே தண்ணீர் குவளையோடு வந்த சுமதி "வேற ஏதாச்சும் தேவையின்னா கூப்பிடுங்க அத்தே. நான் வந்து தரேன்". "அந்த டி.வி.யை ஆன் பண்ணிட்டுப் போ.போதும் வேற ஒரு மண்ணும் தேவையில்லை" முகத்தை நொடித்நபடி கூறிக்கொண்டு சாப்பிடத் துவங்கினாள் .நீலா

            மறுநாள் வழக்கத்தை விட சீக்கிரமாகக் குளித்து விட்டுக் கிளம்பிய சிதம்பரம்" சுமதி இன்னைக்கு எனக்கு சாப்பாடு கட்டவேண்டாம். இப்ப இட்லி தானே செஞ்சிருக்கீங்க? சட்னி ரெடி ஆகாட்டியும் பரவாயில்லை. இட்லி பொடியும் தயிரும் வை." சொன்னபடியே சுவாமி பிறையிலிருந்து விபூதியை அணிந்து ஒரு நிமிடம் கண்மூடி நின்றபின் மேசையில் வந்து அமர்ந்தார்.  "எல்லாம் ரெடி மாமா" இட்லி, சட்னியைத் தட்டி்ல் பரிமாறினாள் சுமதி. குடிக்க மோர் தர, வாங்கிக் குடித்தவர் "வரேன்" என்று பொதுவாகச் சொல்லியபடியே வண்டியேறிக் கிளம்பினார்.

மாலை வண்டியை நிறு்த்திவிட்டு உள்ளே நுழையும் போதே "சரவணா" எனக்கூப்பிட்டுக் கொண்டேவந்தார் சிதம்பரம். குழந்தைகளின் பள்ளி சீருடை, மாமாவின் பாண்ட், சட்டை எனத் துணிமணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்தவன் "என்ன மாமா" என்று அருகில்வர, அவனிடம் ஒரு கவரை நீட்டியபடி "ஞாயிறு காலை கிளம்பற மும்பை எக்ஸ்பிரஸுக்கு ஒரு டிக்கெட் இதிலேயிருக்கு. என் ஆபிஸ் பியூன் ரத்தினம் விடியும் முன்னே போயி க்யூவில முண்டியடிச்சு எப்படியோ சாதா வகுப்பில ரிசர்வ் டிக்கட் வாங்கிக் கொடுத்திட்டான். ராத்திரி நான் போனில் அவங்கிட்ட விஷயத்தை சொல்லி முடியமான்னு கேட்டேன் விபரம் கொடுங்க சார் பாக்கிறேன்னு சொன்னான். காலையில ஆபிஸ் போனது்ம் டிக்கெட்டை கொடுக்கறான். "..... "இதுக்குக் கமிஷன் எவ்வளவு கொடுத்தீங்க? அதைச் சொல்லலியே..." இளக்காரமாகக் கேட்கும் மனைவியை முறைத்தவர்" எல்லாரும் உன்னை மாதிரின்னு நினைச்சிடட போல போன வருஷம் அவன் காலில அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தபோது அ்நத ப்த்து நாளும் சரவணன்  அவனுக்கு ஓடிஒடி உதவினதையும்  கைக்குழ்தையோடு இருக்கற அவன் பெண்டாட்டியை சிரமப் படுத்தவேண்டாம்னு என் தங்கச்சி வேளாவேளைக்கு பக்குவமா ஆகாரம் கொடுத்தனுப்பிச்சதையும் முக்கியமா சுமதி அவன் குழ்தைக்கு விதவிதமா டிரஸ் தைத்துக் கொடுத்ததையும் அவன் சொல்லிட்டு அதையெல்லாம் பார்க்கறப்ப   இப்ப நான் செஞ்சது ஒரு பெரிய விஷயமா சார்னு " கேக்கறான். இதையெல்லாம் புரிஞ்சிக்க பரந்த மனசு வேணும்.....சரி, டிக்கெட்டை சுவாமி பிறையில கொண்டு வை. இன்னும் ரெண்டு    நாள்தானிருக்கு. அதுக்குள்ள பயணத்துக்கு என்ன தேவைன்னு பார்க்கணும்".

ஆமாம இங்க வேலை கிடைக்காத  வெட்டிப் பயலுக்கு மும்பையில கலெக்டர் வேலை காத்திருக்கு" முணுமுணுத்தபடி தோளில் முகவாயை இடித்துக் கொண்டு நகர்ந்தாள் நீலா.

 

 

 

                       அத்தியாயம்    16

     "டேய் சரவணா, மணி ஆறு ஆயிடிச்சு. குளிச்சிட்ட இல்ல. அம்மாவையும் தங்கச்சியையும் சுத்திச்சுத்தி வந்ததுபோதும். வெய்யிலுக்கு இதமா பழைய சோறு மோரும் தண்ணியும் போட்டு கரைச்சு வச்சிருக்கேன் சாமி கும்பி்ட்டுட்டு  வயிராற அதைக் குடி. மதியத்துக்கு நாலைஞ்சு இட்லி பொடியோட உங்கம்மா கட்டிவச்சிருக்கா. அதை சாப்பிடு. இராத்திரிக்கு வண்டியில ஏதாச்சும் வாங்கித் தின்னு. ஏய் சுமதி ஒரு பாட்டில் தண்ணியோட இட்லி பொட்டத்தையும் வை.... " சிறிது நிறுத்திய நீலா, "நான் பேசும்போது எல்லாருக்கும் கஷ்டமாத்தானிருக்கும். ஆனா வீட்டு நிலைமை உனக்கே தெரியு்ம். உங்க மாமாவுக்கும் வயிசாயிட்டே போவுது. இத்தனை பேர் இருக்கற குடும்பத்தை அவரு ஒருத்தரா இன்னும் எவ்வளவு நாள் சுமக்கமுடியும் . எ்பபடியாவது கிடைக்கற வேலையில கால் ஊணிக்கப் பாரு." ஏய் போதும் நிறுத்துடி" சிதம்பரம் அதட்ட, "மாமா, அத்தை கும்பிடறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க", விழி நீரை மறைத்துக் கொண்டு சரவணன் பேச, "சரசு நீயும் வந்து பிள்ளையை ஆசிர்வாதம் செய்" சமையலறயில் மறைவாக கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கும் தங்கையைக் கூப்பிட மூவரின் கால்களிலும் விழுந்து எழுந்தான் சரவணன்.   ,ஆல் த பெஸ்ட் அண்ணா, ஸ்கூல் லீவு விட்டா நாங்க எல்லாருமா மும்பை வருவோம்..... கூட்டிட்டுப் போவீங்களா அப்பா" கேட்கும் மகளை அணைத்தவாறே "அண்ணா ..அங்க போய் வேலையில சேரட்டும். அப்புறம் நாம போகலாம் " பழைய சோற்றோடு துக்கத்தையும் சேர்த்து விழுங்கி விட்டுக் கை கழுவச் செனறவனைப் பின் தொடர்ந்த சிதம்பரம் ஒரு கவரை அவன் கையில் திணித்தபடி "இதில இரண்டாயிரம் ரூபாய் இருக்கு. வேலை கிடைத்து சம்பளம் வரவரைக்கும் செலவுக்கு ஐயாயிரமாவது குடுக்கணும்னு நினைச்சேன். ஆனா இப்ப இவ்வளவுதான் புரட்ட முடிஞ்சுது. அங்க போனபிறகு உன் பிரண்டுக்கு பாங்க் அகவுண்ட் இருந்தா கேட்டு வச்சிக்க. அப்புறம் ஏதாச்சும் அனுப்பறேன்." "அதெல்லாம்  பாத்துக்கலாம்     மாமா .எனக்காக இதுக்கு மேல நீங்க யாருகிட்டவும் கடன் வாங்காதீங்க" அழத் துவங்கும் சரவணனின் தோளைத் தட்டியவர்" சரி வா. டயம் ஆவுது பாரு. நான் ஸ்கூட்டரில் ஸ்டேஷனில் விட்டுடறேன். வேணாம் மாமா மணி ஏழு கூட ஆகலை. இப்ப பஸ் பிடிச்சா கரெக்டா போயிடலாம். சொன்னபடியே சாப்பாட்டுப் பையையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு செருப்பை அணிந்தபடியே எல்லாரையும் பார்த்துக்  கையசைத்துவிட்டு நடக்கத் துவங்கினான். வாசலைத் தாண்டி வந்தவன் பின்னாலேயே  வேகமாக வந்த சுமதி அண்ணன்  அருகில் வந்து ஒரு கட்டு ரூபாய்களை  ஒரு கவரில் போட்டு அவன் கையில் ரகசியமாக வைத்து மூடியபடியே "மாமா அவரால முடிஞ்ச தொகையை கொடுத்திருப்பாரு. நான் ஓவர் டைம் பண்ணி அத்தைக்குத் தெரியாம  தனியா சேர்த்து வச்ச பணம் இதில மூவாயிரம் ரூபாய் இருக்குண்ணா. இதையும் வச்சிக்க" ..... "அண்ணனா உனக்கு நான் இதுவரை எதுவும் செஞ்சதில்லை. ஆனா...." குமுறி அழத் துவஙகுபவனை "யாராச்சும் பார்க்கறதுக்குள்ள கண்ணை துடை. காலம் நிச்சயமா நமக்கு சாதகமா மாறும். வட்டியும் முதலுமா நா அப்ப உங்கிட்ட வசூல்   பண்ணிக்குவே்ன். தைரியமா போயிட்டுவா." புன்சிரிப்போடு விடைகொடுத்தாள்.

"இவ்வளவ பாசமும் நேசமும் காட்டும் என் அருமைத் தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுதுத்  தரக்கூடிய தகுதியை எனக்கு விரைவில் கொடு " எதிர்ப்பட்ட நடைபாதை பிள்ளையாரின் முன் கண்மூடிப் பிரார்த்தித்து நின்ற சரவணன் செண்ட்டரல் போகும் பஸ் வருவதைக் கண்டு விரைந்து சென்று   அதில்  ஏறி அம்ர்ந்தான்.   

                " டாக்ஸி இப்ப வந்திடும் வாம்மா" ராமு குரல் கொடுக்க, "இதோ வந்தாச்சுப்பா" கைப்பையை மாட்டிக் கொணடு டிராலி பெட்டியைத் தூக்கிக்கொண்டு படியிறங்கினாள் அர்ச்சனா. "உன் பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா" பாடியபடியே  ஆர்த்தி அவள் கைகளிலிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டு கீழே வந்தாள். "ஆர்த்தி, உனக்கு உங்கம்மா மாதிரி பாட்டு நல்லா வருது. பரிட்சைக்கு அப்புறம் உங்கம்மா சாயங்கால வேளைகளில் சில குழந்தைகளுக்கு பாட்டுக் கத்துக் கொடுக்கறாங்க இல்லையா அவங்க கூட உக்காந்து நீயும் கத்துக்கம்மா"  "ஓ.தே அப்பா ஆனா உங்க மனைவி எனக்கு இன்டியூஜுவல்  அட்டென்ஷன் கொடுக்கணும். கும்பல் கச்சேரி நம்ம ஸ்டாண்டர்டுக்கு ஒத்து வராது" பந்தாவாகச் சொல்லும் ஆர்த்தியைப் பார்த்து ராமுவும் கமலமும் சிரிக்க, "முதல்ல பரிட்சையை ஒழுங்காக முடி. மீதியெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நாங்க திரும்பி வர வரைக்குமாவது கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க. பாட்டியையும் அம்மாவையும் தொல்லைப் படுத்தாதே." கண்டிப்பான குரலில் அர்ச்சனா பேசிக் கொண்டே திரும்பினவள், " "என்னம்மா இது எங்க பெட்டியைவிட சாப்பாட்டுப் பை பெரிசாக இருக்கு"? என்றாள். முகத்தில் வியர்வை வழிய இரு டம்ளர்களில் ஜூசோடு அங்கு வந்த மாலா, முதல்ல இரண்டு பேரும் இதைக் குடிங்க. ஆர்த்தி, உனக்கு உள்ள இருக்கு  போய் எடுத்துக்க... மணி ஏழு கூட ஆகலை. இப்ப டிபன் சாப்பிட முடியாது. அதை கட்டி வச்சிருக்கோம். மதியத்துக்கு எலுமிச்சை சாதம், உருளை ரோஸ்ட், வத்தல் தயிர் சாதம், பொட்டலம்…. இரவுக்கு சப்பாத்தி, கொத்தமல்லித் துவையல். தான். சாப்பிடச் சாப்பிட பை காலியாகிடப் போகுது. அவ்வளவு தானே" .... "சரி, கார் வந்திடிச்சு. அக்கா போயிடடு வரோம்."இருவரும் கமலத்தை வணங்கி எழ, அவர்கள் நெற்றியி்ல் விபூதியை இட்ட கமலம் " பத்திரமாப் போயிட்டு வாங்க. போய் சேர்ந்ததும் போன் செய். ராதிகா, கோபி குழந்தைகளைக் கேட்டதா சொல்லு."  கையசைத்தபடியே இருவரும் காரில் ஏற, கார் ஸ்டேஷனை நோக்கி விரைந்தநு.

     "நம்ம கம்பார்ட்மெண்ட் கடைசியில வருது" சொல்லியபடியே இருவரும் விரைவாக நடந்து கம்பார்ட்மெண்ட் வாசலை அடைந்தனர். "முதலில் நீ ஏறும்மா" மகளை ஏறவிட்டு சாப்பாட்டுப் பையை அவளிடம் கொடுத்தவர் பெட்டியின் பிடியை மடக்கித் தூக்குவதற்காக முயற்சி செய்ய அது தகராறு செய்தது. "சார் நான் பாக்கறேன் குடுங்க" பின்னால் நின்ற சரவணன் அதை  வாங்கிப் பிடியை

 உள்ளே மடக்கி "நீங்க ஏறிட்டுப் பெட்டியை வாங்கிக்கிங்க" சொன்னபடியே அவர் ஏறியவடன் பெட்டியைக் கொடுத்து விட்டுத் தானும் ஏறினான் .

               இருக்கை எண்ணை சரி பார்த்துத் தன் தோள்பையையும் சாப்பாட்டு மூட்டையையும் வைத்து விட்டு "அப்பா இதுதான் நம்ம சீட்"  உள்ளே வரும் ராமுவைப் பார்த்துக் குரல் கொடுத்தவள்  தங்கள் பெட்டியை சுமந்து வரும் சரவணனை ஏறிட்டாள். "பெட்டி பிடி மடக்க வரலை .தம்பி தான்மடக்கிக் கொடுத்தது....."  "தாங்க்ஸ்" புன்முறுவலோடு பெட்டியை வாங்கிக்கொள்ள கை நீட்டினாள் அர்ச்சனா. "சார் மேல வச்சிடட்டுமா?" பெட்டியை மேல் பர்த்தில் வைத்துத் தன் கைப்பையோடு அமர்ந்தான். "நமக்கு அடுத்த சீட் தான் தம்பிக்கு... பேர் என்னப்பா"  "சரவணன்"... "என் பேரு ராமநாதன். இவ என் மூத்த மக அர்ச்சனா " எதிரில் ஒரு சுமார் அறுபதைந்து வயது மனிதர் ஒருவர் மனைவியோடும் ஏழு எட்டு வயது சிறுமியோடும் அமர்ந்திருக்க அவர்களைப் பா்த்து ஒரு அறிமுகப் புன்னகையை வீசினார்  வண்டி மெதுவாக நகரத் துவங்கியது.

     சாமான்களை ஒழுங்குபடுத்தி விட்டு ஜன்னலோர இருக்கையில் அர்ச்சனா அமர, ராமநாதன் நடுவில் அமர்ந்து கொண்டார். " தம்பி, இந்த ஜன்னல் சீட் உன்னுடையதுன்னு நினைக்கிறேன். எம் பேத்திக்கு அங்க உட்கார்ந்து வேடிக்கை பார்க்கணுமாம்..."பெரியவர் சொல்ல, "அதுக்கென்ன சார் நான் இங்க  உட்காந்துக்கறேன்" சரவணன் ராமுவின் அருகில் அமர்ந்து கொண்டான். "அப்பா, டிபன் சாப்பிடறீங்களா?"  அர்ச்சனா கேட்டவாறே இட்லி பொட்டலங்களை வெளியே எடுத்தாள். எதிர் இருக்கை பெண்மணியும் தன் பையிலிருந்து கணவருக்கு ஒரு பொட்டலத்தைத் தந்துவிட்டு பே த்தியிடம் ஒன்றை கொடுத்துத் தானும் சாப்பிடத் துவங்கினாள். "அர்ச்சனா, அக்கா செஞ்ச ஸ்வீட் இருக்கு பாரு. எடுத்து பாப்பாவுக்கும் எல்லாருக்கும் கொடும்மா" எனறார் ராமு.  எல்லாருக்கும் ஒவ்வொரு துண்டு கேக்கை கொடுத்த பின அவளது பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டே "நீங்க சாப்பிடலையா" என்று சரவணனைக் கேட்க, "இதோ சாப்பிடப் போறேன்" என்றவாறே கேக்கை வாயில் போட்டுக் கொண்டு இட்லி பொட்டலத்தைப் பிரித்தான். காலையில் குடித்த நீராகாரம் எப்பவோ ஜீரணமாகிப் பசிக்கத் துவங்கியிருந்த வயிறுக்கு அது போதும் போதாமலுமாகத் தானிருந்தது. எதிர் இருக்கை பெரியவர்,"ஸ்வீட் வீட்டில செஞ்சது தானே ரொம்ப நல்லாயிருக்கு" சாப்பிட்டுக் கொண்டேபேசத்ன் துவங்கினார் "ஆமா சார் எங்க அக்கா செஞ்சது. அவங்க அக்கா மட்டுமில்லை எனக்கு மாமியாருங் கூட  அவங்க ஒரே மகளைத் தான் நான் கல்யாணம் செஞ்சிருக்கேன். என் அண்ணன் குடும்பத்தோட மும்பாயில செட்டி்ல ஆகிட்டாரு. அவர் மக உண்டாகியிருக்கான்னு அக்கா பலகாரமெல்லாம் செஞ்சு கொடுத்திருக்காங்க. வழியில சாப்பிட தனியா கொடுத்ததுதான் இது.  எனக்கு ரெண்டு பெண்ணுங்க. இவ மூத்தவ. சின்னவ பிளஸ் டூ பரிட்சை எழுதப் போறா. இவ எம் எஸ்ஸி முடிச்சிருக்கா. மேல படிக்கப் போறா." "சார் மும்பையில   தான் இருக்கீங்களா?" பெரியவர் கேட்க ," இல்ல சார் நான் சென்னைவாசி தான். இங்க பாங்கில் வேலை பார்க்கறேன். என் நெருங்கிய  பிரண்டோட மகளுக்கு திடீரென்று கல்யாணம் நிச்சியமாகி வர புதன்கிழமை கல்யாணம். அதான் கிடைச்ச வண்டியில கிளம்பிட்டோம்.  நீங்க?...." "நானும் சென்னைக்காரன் தான். இது எங்க மக வயிற்றுப் பேத்தி பூமிகா.  மும்பையில இருக்கற எம்மகளும் மருமகனும் வேலைக்குப் போறவங்க. இவங்க பாட்டிதான் இவளைப் பாத்துக்கிட்டிருக்காங்க. இவளோட அத்தை கீழே விழுந்து கால் பிராக்சர் ஆகியிருக்றதால மக உதவிக்கு சம்பந்தியம்மா பெங்களூர் போயிருக்காங்க. பூமிகாவுக்கு ஸ்கூல் லீவு விட்டாச்சு. சென்னையில எங்க கூட இருக்கறதுக்கு ஒத்துகிட்டதால போன வாரந்தான் மக இவளை இங்க கொண்டு விட்டா. ஆனா இப்ப அம்மா அப்பா கிட்டப் போகணும்னு ஒரே ரகளை. அதான் இவளோடக் கிளம்பிட்டோம். சம்பந்தியம்மா வர வரைக்கும் மகளுக்கு உதவியா அங்க இருந்திட்டு வரதா இருக்கோம்." "தம்பி மும்பையில வேலை பார்க்கிறீங்களா?" சரவணனைப் பார்த்து பெரியவர் கேட்க, "வேலையி்ல்  சேரத்தான் மும்பை போறேன்" சுருக்கமாகச் சொல்லி முடித்தான் சரவணன்

 

       அவரவர் காலை ஆகாரம் முடித்து கை கழுவிக்கொண்டு வரவும் டிக்கெட் பரிசோதகரும் வந்து தன் கடமையை முடித்துச் சென்றார். "ஏய் பூமிகா நீ ஜன்னலோரமா தானே உட்காந்திருக்க, பாட்டி கொஞ்சநேரம் படுக்கட்டும். தாத்தா மேல ஏறி படுக்கறேன். விடியல்ல எழுந்து பரபரப்பா வேலை பார்த்திட்டு ரயிலைப் பிடிக்க வந்தது கொஞ்சம் அலுப்பாயிருக்கு. இந்தா கதைப்புக் வேணுமினா படி." பேத்தியின் கையில் சிறுவர்களுக்கான புத்தகத்தைக் கொடுததவர், "சார் நீங்க படுக்கலையா? ராமுவைக் கேட்க, " மதிய சாப்பாட்டுக்குப்  பிறகு படுத்தா போதும்" பேப்பரைப் படிக்கத் துவங்கினார். ரயில் பெட்டியின் கதவோரம் நின்றுகொண்டு சரவணன் தன் தாயைப் பற்றியு்ம்  தங்கையைப் பற்றியும் எண்ணி மனம் கலங்கினான் மும்பை சென்ற பிறகாவது தன் வாழ்வில் நல்லநேரம் வருமா என்று தவிக்கும் மனத்துடன் சிறிது நேரம் நின்றபின் தன் இருக்கைக்குத் திரும்பினான்.

 

       ஜன்னலோர இருக்கையில் அமரந்து அர்ச்சனா ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்து இருக்க, பேப்பரை மடித்துவிட்டு நிமி்ர்நத ராமு "வாப்பா வந்து உட்காரு சரவணா " என்றார் கனிவாக.  "மும்பாயில எங்க வேலை?" மெதுவாகப் பேச்சைத் துவங்கினார். சிறு தயக்கத்திற்குப் பின் அவர் மீது ஏதோ சொல்லத் தெரியாத பாசமும்  மரியாதையும் மனதில் கிளர்ந்தெழ, தன்னைப் பற்றிய விபரங்களை ஒளிவு மறைவின்றி சொல்லி முடித்தான்  சரவணன்.

 

   அத்தியாயம்   17

        "சரவணா , ரயில் சினேகிதம் அப்படீன்னா பயண சமயத்தில ஏதோ பொழுது போக்கா பேசிட்டு அவங்க அவங்க இறங்க வேண்டிய இடம் வந்ததும் தங்க வேலையைப் பாத்துக்கிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க.. ஆனா உன்னைப் பாத்து உங்கூட பேசிய பிறகு உம்மேல சொல்லத் தெரியாத பாசம் மனசில உருவாகிடிச்சு. எங் கதையும் சில கோணங்களில உன்னுடையது போலத் தான் ஆனா எனக்குக் கிடைத்த நல்ல அப்பாவோட நான் ரொம்ப நாள் சேர்ந்து வாழ முடியாமப் போனாலும் அவர் என்னையும் எங்க அக்கா, அண்ணாவையும் மிக நல்லாத்தான் வளர்த்தார். அவரது திடீர் மறைவால நிலைகுலைஞ்சு போன எங்க அம்மாவையும் எங்களையும் ஆதரிச்சுக் காப்பாத்தின எங்க மாமாவையும் அவருக்கு மேல பரிவு காட்டின அவருடைய அம்மாவையும் மனித உருவில வந்த தெய்வம்னுதான் சொல்லணும். நான் எங்க அக்காவை அம்மாவாகத் தான் பாக்கறேன். ஆனா என் அண்ணனைப் பொறுத்தவரை அக்காவும் மாமாவும் அவனுடைய குலசாமின்னு சொல்லுவாரு.  என் மனைவி்க்கு அவர்  உடன் பிறவா அண்ணன்.  உன் விஷயத்தில உன்னுடைய நல்ல மனசுக்கார மாமாவும் உன் வளர்ச்சிக்காக வேண்டி நிக்கற அம்மாவும் ஆறுதல் காட்டற தங்கச்சியும் உனக்குக் கிடைத்திருக்கற வெகுமதின்னு நினைச்சுத் தெம்பா இரு. நீ தங்கப் போற உன் நண்பன் விலாசம், உன் போன் நம்பர்  எல்லாம் எனக்குக் கொடு. மும்பையில் என் அண்ணன் அவரு மகன் இரண்டு பேர் கிட்டவும் பேசி உனக்கு எந்தவிதத்திலாவது உதவப் பார்க்கறேன். சரியா?" அவங்க விபரமும் நான் தரேன்

என் அண்ணன் மகன் பெரிய கம்பெனியில உயர் பதவியில இருக்கான். எங்க அண்ணாவுக்கும் பல நிறுவன அதிப்\ர்களோட  நெருங்கிய நட்பு இருக்கு.  எப்படியாவது உனக்கு உதவி செய்வாங்க.       

      "இன்னிக்கு பேப்பரில் உறுப்பு தானம் பத்தி ஒரு விபரமான கட்டுரை வந்திருக்கு பாத்தியா? இறந்ந பிறகும் ஒருத்தரால இது மாதிரி இன்னொரு உயிரை வாழவைக்க முடிகிறபோது நாம உயிரோடு இருக்கும் போது மத்தவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யலாமில்லையா?" கனிவான அவரது குரலும் அதில வெளிப்படட அன்பும் பாசமும் சரவணனின் புண்பட்ட நெஞ்சிற்கு மருந்தாய் அமைந்தது.

"நீ்ங்க சொல்றது ரொம்ப  கரெக்ட் சார். நானும் என்னோட சில நண்பர்களும்  இணைஞ்சு அப்பப்ப  சேவை இல்லங்கங்களுகுப்  போயி அவங்க கேட்கற  உதவிகளைச் செய்வோம். ரத்த வங்கிகளிலும் எங்க பேரைப் பதிஞ்சு அவங்க கேக்கற ரத்தப் பிரிவைச் சேர்ந்தவங்க உடனடியாப் போயி ரத்தம் கொடுத்திட்டு வருவோம்.  அடுத்து உறுப்பு தானத்துக்காக ஆஸ்பத்திரிக்குச் சென்று பேர் பதிஞ்சுக்கற எண்ணமும் இருக்கு." பேசும் சரவணனின் தோளில் தட்டியவாறே,   "ரொம்ப நல்லது தம்பி உனக்கு தனிப்பட்ட முறையில பல பிரச்னைகள் இருந்தும் பிறருக்கு உதவற உன் நல்ல குணத்துக்குக் கடவுள் சீக்கிரம் உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தருவார்  பாரு"என்றார்.

 

      "பாட்டி எழு்திருங்க. எனக்கு பசிக்குது." பூமிகா  பாட்டியை எழுப்பியதோடு "தாத்தா கீழே வாங்க என்று அவரையும் தன்னருகிவ் அமர்த்திக் கொ்ண்டாள். " அப்பா, மணி ஆவுது. நாமும் சாப்பிடலாம். லேட்டான தயிர் சாதம் புளித்துப் போயிடும் அப்புறம் உங்களுக்குப் பிடிக்காது " சொல்லியபடியே அர்ச்சனாவு்ம் உணவுப் பையை எடு்த்தாள். "நீங்க வசதியா உக்கா்ந்து சாப்பிடுங்க. நான் கதவுகிட்ட கொஞ்சம் நின்னிட்டு வரேன்." சரவணன் எழுந்திருக்க, "ஏன் தம்பி நீங்க சாப்பிடலையா?" "அடுத்து வண்டி நிக்கற ஸ்டேஷனில் சாப்பாடு வாங்கிக்கறேன்......" "அப்பா பாட்டியும் அம்மாவும் அதிகமாகவே எல்லாம் வச்சிருக்காங்க. அவரையும்  நம்மகூட சாப்பிடச் சொல்லுங்க" பதிலுக்குக் காத்திராமல் ஒரு பெரிய பேப்பர் பிளேட்டில் எலுமிச்சை சாதம் உருளை பொறியலுடன் வத்தலும் ஒரு ஸ்பூனும் வைத்து நீட்டினாள். மறுக்க வழியின்றி இஞ்சி, கருவேப்பிலை, பச்சை மிளகாயுடன் துருவிய காரட் வேர்கடலை கலந்த அந்த உணவை ருசித்து உண்டு முடிப்பதற்குள் கெட்டியான தயிர்சாதமும் மாங்காய் ஊறுகாயையும் ராமநாதன் அவன் தட்டில் நிரப்பி "சாப்பிடுங்க தம்பி" என்றார் பரிவாக. உண்டு முடித்தவன் " எல்லாம் ரொம்ப நல்லா இருந்திச்சு. ஆனா எனக்கு நிறைய வச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் ஒழுங்கா சாப்பிட்டீங்களான்னு தெரியலை" என்றான் "நாஙகளும் வயிராறதான் சாப்பிடடோம். அவங்க நிறையதான் கட்டிக் கொடுத்திருக்காங்க. எங்க அக்கா கை ரொம்ப தாராளம். இப்ப எம் மனைவியும் அப்படியே ஆயிட்டா. சின்ன வயசிலிருந்தே எங்க அக்காவுக்குத் தோடடவேலை செய்ய ரொம்ப ஆர்வம். அதனால  மனை வாங்கி தனி வீடு தான் கட்டணும் பிளாட் வேணாமுன்னு  என்னை வீடு கட்ட வச்சாங்க. இப்ப அவங்க மேற்பா்வையில வாசப்பக்கம் சின்னதா பூந்தோட்டம், மாடியில வெண்டை, கத்திரி, மிளகாய், புதினா, கொத்தமல்லி, கீரைன்னு தொட்டியில வச்சிருக்கோம். ஆரம்பத்தில  அக்கா ரொம்ப உற்சாகமா என்னோட தோட்டவேலை செஞ்சிட்டு இருந்தாங்க. இப்ப வயசு காரணமா முன்னபோல அவங்களால முடியறதில்லை. என் சின்ன மக இப்ப எனக்கு உதவியா தோட்ட வேலையை ஆர்வமா செய்யறா பெரியவ படிக்கற நேரம் போக மத்த நேரங்கள்ல அவங்க அம்மாவுக்கு வீடடு வேலையில உதவுவா. வீட்டில வச்சது வச்ச இடத்தில இருக்கணும்.  தூசி குப்பை இல்லாம வீடு  பளிசனு இருக்கணும்னு தீவிரமா வேலை செய்வா" ...."அப்பா நம்ம கதை போதும் . அவங்களுக்கெல்லாம் போரடிக்கப் போவுது"...செல்லமாக  அதட்டும் அர்ச்சனாவை "ஏம்மா அப்பாவைக் கோபிக்கற இனனும் கிட்டத்தட்ட ஒரு நாள் ஒண்ணா பயணிக்கப் போறோம். பொழுது போக இப்படிப் பேசிட்டுப் போனா என்ன தப்பு? எம் மக அதான் பூமிகாவோட அம்மாவும் இப்படித்தான். எல்லார் கூடவம் சட்டுன்னு பழகிடுவா .ஆனா துபாய்ல இருக்கற மகன் அதிகமா பேசமாட்டான்" பெரியவர் சிரித்துக்கொண்டே சொல்ல, "தாத்தா,  இப்ப நான் மேல்பர்த்தில படுக்கப் போறேன்" பூமிதா சொல்லியாறே மேலே ஏறிவிட்டாள்.  "சார், நீங்களும் உங்க மகளும் படுக்கலையா?" சரவணன் கேட்க, "எனக்கு இப்ப படுக்க வேண்டாம் அப்பா நான் இப்படி ஓரமா உட்கார்ந்து படிக்கப் போறேன். நீங்க படுங்க  "  "நான் உன் பக்கமா தலை வச்சிட்டு கீழேயே படுக்கறேன். தம்பி , நீங்க வேணா மேல ஏறி படுத்துக்கங்க" சொல்லிக்கொண்டேஒரு மெல்லிய பெட்ஷிட்டைவிரித்துக் கொண்டு ராமநாதன் வழியும் விய்வையைத் துடை்ததுக் கொண்டே படுக்க எதிர்பறத்தி்ல்  லோயர் பத்ர்தில் பாட்டியும் நடுவில் தாத்தாவும் படுத்துக் கொண்டனர். "தம்பி பாப்பாவை ஒரு கண்ணுப் பாத்துக்கப்பா" சரவணன் சரி என்று தலையசை்தபடி மேல் பர்த்தில் கால் நீட்டி படுத்தான். 

 

       வேகமெடுத்து விரையும் ரயிலின் தாலாட்டும் வயிறு நிரம்ப உண்ட உணவும் சேர்ந்து சரவணனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது .கடுங்கோடையின் காரணத்தால் பயணிகள் பலரும் பொங்கி வழியும் வியர்வையில் குளித்து ஒருவித மயக்கநிலையில் உறங்குவது போல் கிடக்க பெட்டி முழுவும் கனத்த மௌனம் நிலவியது..

அந்த நிசப்த வேளையில் திடீரென்று "அப்பா, என்னாச்சுப்பா, என்னைப் பாருங்கப்பா, ஏதாச்சும் பேசுங்கப்பா" வீறிடும் அர்ச்சனாவின் குரல் உலுக்கி எழுப்ப, ஒரே தாவலில் கீழே குதித்தான் சரவணன். எதிரிலிருந்த பெரியவர், அவர் மனைவி மற்றும் அடுத்த பெட்டியிலிருந்து பலர் என ஓடி வநது "என்னம்மா ஆச்சு" எனச் சூழ்ந்து நின்றனர். கொஞ்ச நேரத்துக்கு முன்ன பாத்ரூம் போயிட்டு வந்தார். வந்து உட்கார்ந்தவர் நெஞ்சை அடைக்கற மாதிரி இருக்கு கொஞ்சம் தண்ணி குடுன்னாரு. பாட்டிலைப் பிடிக்கு்ம போதே கை நடுங்கற மாதிரி இருந்திச்சு நானே குடுக்கலாம்னு  பக்கத்தில நின்னு வாயைத் திறங்கப்பான்னு சொல்லும் போதே ஒரு மாதிரி நிலைகுத்தின பார்வை பாத்துக்கிட்டே "அக்கா, மாலான்னு மெதுவா சொன்னாரு. அப்புறம் என் கையை பிடிச்சுக்கிட்டு "முருகா, முருகா"ன்னு  சொல்லிக்கிட்டே மயக்கமாகிட்டாரு. "தேம்பலுக்கிடையே அர்ச்சனா சொல்ல, சரவணன் அவரை ஒழுங்காகப் படுக்கவைத்து வியர்வையில்  நனைந்திருந்த அவரது சட்டைப் பித்தான்ளைக் கழட்டியபடியே ரொம்ப கூட்டமா  நிக்காம  காத்துவர வழி விடுங்க ப்ளீஸ்" சென்னபடியே அவரது நெஞ்சில்  இரு கைகளையும் வைத்து லேசாக அழுத்தத் துவங்கினான். "வெய்யில் கடுமையாக இருக்கறதால மயக்கமாயிருப்பாரு. பயப்படாதே அம்மா" பெரியவர் அவர்  இரு உள்ளங்கால்களையும் பரபரவென்று தேய்க்க, அவர் மனைவி அருகிலிருந்த தினசரியை வைத்து விசிறத் துவங்கினாள். "நம்ம கோச்சில் யாராச்சும் டாக்டர் இருக்காங்களா பார்க்கிறேன்" சொல்லியபடியே ஒருவர் விரைய, பெரியவர் ஒரு மடக்கு நீரை வாயில் விட, நீ்ர்  உள்ளே போகாமல் வெளியே வழிந்தது.  சரவணனும் கிழவரும் மாறி மாறி செய்த  முதலுதவிக்குப் பின்னும் ராமநாதன் உணர்வற்ற நிலையிலேயே இருந்தார் "தம்பி, உடம்பு சில்லிடறமாதிரி இருக்குப்பா" முணுமுணுப்பாக கிழவர் கூறும் போது "இன்னும் சிறிது நேரத்தில் வண்டி ரெய்ச்சூர் ஸ்டேஷனுக்கு ப் போய் நிக்கும். நான் அங்கிருக்கற ரயில்வே ஆஸ்பத்திரிக்குத் தகவல் அனுப்பிடறேன். அவங்க ஆம்புலன்ஸ் தயாரா வச்சிருப்பாங்க. இந்த நிலையில தொடந்து பயணம் செய்யறது சரியில்லை .நீங்க உங்க அப்பாவோட அங்கு இறங்கத் தயாராயிருங்க." சொல்லிக் கொண்டே டி.டி.ஈ. நகர்ந்தார்.  கிழவர் ராமநாதனின் கையைப் பிடித்தும் மூக்கருகில் கை வைத்தும் பார்த்து முகம் வெளிற, அம்மா அர்ச்சனா, மனசை திடப்படுத்திக்க. உங்க அப்பா இறந்திட்ட மாதிரிதான் தெரியுது."என்றார் மெதுவாக.  சக பயணியாக அந்த கோச்சில் இருந்த ஒரு வயதான நர்ஸ்  தகவல் தெரிந்து அங்கு வந்து அவரை பரிசோதித்து அவர் இறப்பினை உறுதி செய்ய, கதறி அழும் அர்ச்சனாவை தேற்றும் வகை அறியாது எல்லாரும் கண்கலங்கி  நிற்க வண்டி ரெய்ச்சூரை நெருங்கியது.  அழுது ஓய்ந்த அர்ச்சனா‌‌ "எப்பவுமே அப்பாவுக்கு வெ்யில் காலம் ஒத்துக்காது. மொட்டை மாடியிலயும் வாசலிலேயும் மாலை நேரத்தில வாளி வாளியா தண்ணி ஊத்துவாரு. படுக்கப்போகும் முன் குளிர் நீரில் குளிப்பாரு. இதையெல்லாம் நினைச்சுத் தான் எங்க அம்மா ஏ.சி வகுப்பு  இல்லைனா பிளைட்டில் போங்கன்னு சொன்னாங்க. இவரைப் பெத்த பிள்ளைக்கு் மேல பாசம் காட்டி வளர்த்த எங்க பாட்டிக்கும்,  ராமுதான்  எங்க

 

 

மூத்த மகன் விஜய் யாமினி எல்லாரும் இவனுக்குப் பிறகு தான் அப்படீன்னு  எங்க பெரியப்பாவும் பெரியம்மாவும் வாய்க்கு வாய் சொல்லிட்டு இவர வரவை  ஆவலா எதிர்பார்த்திட்டிருக்கும் அவங்களுக்கும் எங்க அம்மாவுக்கும் என்ன பதில் சொல்லுவேன்? அவங்க முகத்தில எப்படி முழிக்கப் போறேன்னு தெரியலையே "என்று பெரியவரிடம் அரற்றினாள். 

 

 அவள் அருகில அமர்ந்து அவள் கரங்களைப் பற்றிக் கொண்டிருந்த அவர் மனைவி" பழகின கொஞ்ச நேரத்திலேயே அந்த நல்ல மனுசனோட எங்களுக்கு ஒரு விதமான நெருக்கமும் நட்பும் உருவாயிடிச்சு. அவரோட இந்த திடீர் முடிவை எங்களாலயே தாங்கிக்க முடியாத இந்த நிலைமையில உனக்கு எப்படி சமாதானம் சொல்றதுன்னு தெரியலை கண்ணு. ஆனா இப்படி ஒரு விபரீதத்தில் அவர் தனியா பிரயாணம் செய்யாம நீகூட வந்தது எவ்வளவு நல்லதாப் போச்சுன்னு மனசைத் தேத்திக்க"என்றாள்.

அதேசமயம் அங்கு வந்த டி.டி.ஈ. " மேடம், ஸ்டேஷன் வந்திடிச்சு. நீங்க உங்க பொருட்களோடு இறங்கத் தயாராகுங்க. ஸ்டிரெச்சரோடு ஆளுங்கத் தயாரா காத்திருக்காங்க" என்றார்.

      "பாவம் இந்தப் பொண்ணு. ராத்திரி நெருங்கற இந்த வேளையில தகவல் தெரிஞ்சு இவங்க உறவுககாரங்க வரவரைக்கும் தனியா இந்த இடத்தில எப்படி சமாளிப்பா?" கிழவர் அங்கலாய்த்தார். கிழவரின் வார்த்தைகள் சரவணன் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த  ஒரு விநாடியில் ஏதோ முடிவுக்கு வந்தவனாய், சார், இவங்க கூட நானும் இங்கியே இறங்கிககிறேன். தகவல் தெரிஞ்சு இவங்க உறவுக்காரங்க யாராச்சும் வர வரைக்கும் இவங்களுக்குத் துணையா நான் இருக்கேன். இதே டிக்கட்டில் நாளைக்கு நான் மும்பை போறமாதிரி ஏதாவது நீங்க செய்ய முடியுமா?" சரவணன் கேட்க, அவன் தோளில் தட்டிக்கொண்டே"ஷுவர், சக மனுசனாய் தக்க சமயத்தில்  நீ  செய்யப் போற இந்த பேருபகாரத்துக்கு ஆதரவா எங்க டிபர்ட்மெண்ட் சார்பில் நான் இதைச செய்றேன் "நெகிழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டே அவனது டிக்கெட்டை வாங்கிக் கையொப்பிட்டுத்  தந்தார்.

      வண்டி நின்றதும் காத்திருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உதவியாக சகயணிகளும் கைகொடுக்க ராமநாதன் உடல் இறக்கப் பட்டு ஸ்டெச்சரில் வைக்கப்பட்டது. பெரியவர் உதவியுடன் அ்ர்சசனாவின் உடைமைகளைக்  கீழே இறக்கிய சரவணன் தன் கைபையோடு அவசரமாக வண்டியிலிருந்து  இறங்க,  பாண்ட் பாக்கெட்டின்  மேலாக நீட்டிக்கொண்டிருந்த அவனது கைபேசி கீழே விழுந்து உருண்டு ட்ராக்கில் சென்று விழுந்தது .நடந்ததை உணர்ந்து அதிர்ச்சியில் ஒரு நிமிடம் செய்வதறியாமல் சரவணன் நிற்க, ரயில்  வேகமெடுத்துக கிளம்பிச் சென்றது.

        

 

         

                                                                                                                                                         அத்தியாயம்    18

       "இவ்வளவு குறுகிய நேரத்தில்  தங்களது அழகான குருவிக்கூடு போன்ற குடும்பத்தில் தந்தையின் மரணம் எனும் கோரப் புயல் வீசித் எங்கள் வாழ்க்கையைச் சின்னாபின்னபடு்தயுள்ள அவலத்திற்கு யாரை நோவது? இதன் பின் விளைவுகளை எப்படி சந்திக்கப் போகிறோம்?" மனதில் பொங்கியெழும் விடைதெரியாத  கேள்விகளோடு கண்மூடி அமர்ந்திருந்த அர்ச்சனாவை "மேடம், ஸாருக்கு மாசிவ் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்குன்னு டாக்டர் எழுதிக் கொடுத்திட்டாரு. காலையில ஆபிஸ் திறந்தவுடன்  டெத் சர்ட்டிபிகேட் தருவாங்களாம்இங்க மாராச்சுரி வசதி இல்லைங்கறதால ஃபிரீசர் பாக்ஸில. சாரை இப்ப   வைச்சிருக்காங்க" சரவணனின் குரல் தட்டியெழுப்பியது "இதுக்குப் பணம் கட்டணுமில்லயா? "சொன்னபடி அர்ச்சனா எழுந்து சென்று கவுண்டரில்பணம் கட்டி வந்தாள் " என்னை நீங்க பேர் சொல்லியே கூப்பிடலாம் சரவணன் இந்த மேடம் வேண்டாம்" என்றாள். "உள்ளே பயணிகள் தங்கும் அறையிருக்கு. அங்க போயிடலாம் வாங்க" பெட்டிகளை   சுமந்து கொண்டு நடப்பவனை பின் தொடர்ந்தாள் அர்ச்சனா.

    " எங்க பாட்டிக்கோ அம்மாவுக்கோ என்னால இதை நேரிடையா சொல்லவே முடியாது. எங்க விஜய் அண்ணாகிட்ட முதல்ல பேசிடலாம்.I அவனுடைய நம்பர் தொடர்ந்து என்கேஜ்டாக  இருக்க, பெரியப்பாவின் எண்ணைத் தொடர்பு கொண்டாள். "ஹலோ அர்ச்சனாவா சொல்லும்மா" தந்தையை நினைவூட்டும் அவரது குரல் கேட்டவுடன் பேச முடியாமல் அழத் துவங்கினாள். "போனைகொடுங்க" அவளிடமிருந்து போனை வாங்கிக் கொண்டவன், "சார் என் பேரு சரவணன் "எனத் துவங்கி நடந்ததை ஒருவாறு சொல்லி முடித்தான்.  "ஐயையோ என்னப்பா சொல்ற? என் தம்பி இறந்திட்டானா? பதறிக் குரல் உயர்த்திக் கூவும் சத்தம் கேட்டு உள்ளிருந்து ராதிகாவும்  யாருடனோ பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழையும் விஜயும் பதறிக் கொண்டு அருகில் வந்தனர். அவரிடமிருந்து போனை வாங்கி விபரங்கள் கேட்டுக்கொண்ட விஜய் "சார் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தேவையான ஏற்பாடுகளோடு நான் அங்க வந்திடறேன். அது வரைக்கும் என் தங்கையை பத்திரமா பாத்துக்கோங்க ரெண்டு பேரும் வயிறைக் காயப் போடாம ஏதாச்சும் வாங்கி சாப்பிடுங்க" " நீங்க வரும்வரை நான் இங்கதான் இருப்பேன்" "அர்ச்சனா கிட்ட போனைக் கொடுங்க என்ற விஜய்  "அர்ச்சனா இந்த சமயத்தில நீ தைரியமா இருக்கணும். தப்பித்தவறி கூட சித்திக்கோ பாட்டிக்கோ போன் செஞ்சிடாதே. இந்த ஒரு ராத்திரியாவது அவங்க நிம்மதியா இருக்கட்டும்.  சில ஏற்பாடுகளைச் செஞ்சிட்டு நான் உன்னைக் கூப்பிடறேன். போனில் சார்ஜ் இருக்கற மாதிரிப் பாத்துக்க" பரபரப்பாகப் பேசி முடித்தான்.  " அர்ச்சனா, நான் போய் ஏதாச்சும் சாப்பாடு கிடைச்சா வாங்கி வரேன்." கிளம்பியவனைத் தடுத்தவள், "வீட்டிலிருந்து ராத்திரிக்காகக் கொண்டுவந்த சப்பாத்தி இருக்கு" சொல்லிக்கொண்டே பையைத் திறந்து ஒரு ப்ளேட்டில் சப்பாத்திகளோடு துவையலையும் வைத்து அவளிடம் நீட்டினாள். "உங்களுக்கு?....." "எனக்கு பசி இல்லை என்னால் சாப்பிட முடியாது...." அப்படீன்னா எனக்கும் வேண்டாம். எனக்கு ஓரிரு வேளைங்க  சாப்பிடாம இருக்கறது பழகிப் போன விஷயம். உங்க அண்ணன் சொன்னதாலதான் இதைப் பத்தி பேசினே்ன்" தட்டை வாங்காமல் கைகளை மடக்கிக் கொண்டான்.  "சாரி சரவணன். நானும் சாப்பிடறேன் "தட்டை அவன் கைகளில் கொடுத்து தனக்கும் ஒரு ப்ளேட்டில் வைததுக் கொண்டு ஒரு பெஞ்சில் இருவரும் அமர்ந்து உண்ணத் துவங்கினார்கள்.

ஓரிரு விள்ளலை வாயி்ல் போட்டவள்,"எங்க அப்பாவுக்கு ஷுகர், பி.பி. னனு எந்தப் பிரச்னையும் இல்லை.  ரண்டு மூணு வருடம் முன்பு வரை ரெகுலர் ப்ளட் டோனராகக் கூட இருந்தார் .ஐம்பது வயசுக்கு மேல நாங்கதான் வேண்டாம்னு சொல்லி நிறுத்தினோம்.  அவருக்கு எப்பவாவது தலைவலி வரும். அதுக்கே எங்க அம்மா பதறிப்போயி தைலம் தடவறது, தலையைப் பிடிச்சு விடறதுன்னு அமர்களப் படுத்துவாங்க. என் தங்கை ஒரு தடவை இதை வீடியோ மாதிரி அவங்களுக்குத் தெரியாம எடுத்து "உன் தலைவலி என் இதயவலி" என்ற தலைப்போடு யூட்யூபில் போடப் போவதாகச் சொல்லி செய்த கலாட்டா......... அவ எங்க அப்பாவுக்கு ரொம்ப செல்லம். எப்பவும் எல்லாரையும் கிண்டல் பண்ணிக்கிட்டு ரொம்ப ஜாலியா இருப்பா. அதே சமயம் படிப்பிலும் படு சுட்டி.இந்த வருடம் பிளஸ் டூ எழுதப் போறா. அவ இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்கப் போறன்னு தெரியலை. "பொங்கி வந்த அழுகையால் அர்ச்சனா தொடர்ந்து சாப்பிடமுடியாமல் நிறுத்திய சமயம் போன் ஒலித்தது.

       "அர்ச்சனா

,நானும் எங்க மாமா பரத்தும்   இப்போ காரிவ் கிளம்பி அங்க வரோம். பெரிய காரில் -பிரீசர் பெட்டி வசதியோடு கிடைக்க லேட் ஆயிடிச்சு. அப்பாவும் அம்மாவும் விடியல் நாலு மணி ப்ளைட்டில்  சென்னை போறாங்க. அவங்களை   ரிசீவ் பண்ணி வீட்டுக்குக்   கூட்டிட்டுப் போறதோட நாம போய் சேரற வரைக்கும் பெரியவங்க எல்லாருக்கும் துணையா இருக்க  வினாயகம்  சாரோட   மகன் அரவிந்த்  போறான். அப்பா, சித்தப்பாவின் நல்ல சினேகிதம் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது பாத்தியா?  வீக் எண்ட்டுன்னு யாமினியைப் பார்க்க வந்த அவ புருஷன் பாட்டிக்கும் அவளுக்கும் துணையா இங்க இருப்பாரு.  அதிகாலை நாங்க அங்கு வந்து சே்ந்திடுவோம்" ஸ்பீக்கர் ஆன் செய்திருந்ததால் விஜய் பேச்சை சரவணனும் கேட்டுக் கொண்டிருநதான். ஏதோ சாப்பிட்டதாகப் பேர் செய்த இருவரும்  மீ்ந்தவறறை அங்கு வாலாட்டிக் கொண்டு நின்றிருந்த ஒரு நாய்க்கு  கொடுத்துவிட்டு கைகழுவிக் கொண்டனர்

       நேரம் நத்தையாய் நகர , அர்ச்சனாவின் செல்போனில் தோடர்பு கொண்டார் பெரியப்பா. "அம்மா, தைரியமா இரும்மா. விஜய் பரத்தை ஒரு பாயிண்டில் பிக் அப் பண்ணிக்கறதா சொல்லிக் கிளம்பிட்டான்  எங்களை மாப்பிள்ளை ஏர்போர்டில் கொண்டு விடுவாரு. பாவிப்பய இப்படி நம்மையெல்லாம் தவிக்கவிட்டுடடு பொசுக்குன்னு போயிட்டானே. அக்காவையும் மாலினியையும் எப்படி சமாளிக்கப் போறோமோ.....அந்தத் தம்பி கிட்ட போனைக் கொடும்மா".... "அப்பா சரவணா,  முன்ன பின்ன பழக்கமில்லாத ஒரு குடும்பத்துக்கு வலிய வந்து உதவற உன்னை எப்படிப் பாராட்டறதுன்னு தெரியலை.  ஊர் பேர் தெரியாத இடத்தில இரவு வேளையில்  எங்க பெண்ணுக்குப் பாதுகாப்பா நீ இருக்கறது இப்ப எங்களுக்கெல்லாம் பெரிய ஆறுதலா இருக்கு. ரொம்ப நன்றிப்பா." "எதுக்கு சார் நன்றியெல்லாம் சொல்றீஙக.? பழகிய கொஞ்ச நேரத்திலேயே சாரின் இதமான பேச்சும் பரிவும் அவரை என் அப்பா போல உணர வைச்சுது. அவரது உயிரை காப்பாத்த முடியாமல் கோட்டை விட்டுட்டோமேங்கற ஏக்கமும் வருத்தமும் மனசில அதிகமா இருக்கு. சரி சார் நீங்களும் உங்க மனைவியும் ஜாக்கிரதையா கிளம்புங்க." தொடர்பு துண்டிக்கப் பட்டது..

           போனை சரவணனிடமிருந்து வாங்கியவள் அதில் தன் அம்மா அப்பாவின் திருமணநாள் அன்று ஆர்த்தி எடுத்த ஒரு போட்டோவை அவனுக்குக் காட்டியபடியே பேசினாள். "எங்க அம்மா ரொம்ப நல்லாப் பாடுவாங்க. எங்க தாத்தாவின் உடல்நிலை காரணமாக அவங்க ம்யூசிக் பி.ஏ இரண்டாம் ஆண்டு முடித்தபோது அவங்க திருமணம் நடக்கவேண்டியதா போச்சு. சிறிது நாளில் எங்க தாத்தாவும் இறந்திட்டாரு. எங்க அப்பா அதன் பிறகு அவங்களை விட்ட படிப்பைத் தொடரச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் ஏனோ மறுத்திட்டாங்க. அது அ்ப்பாவுக்குக் கொஞ்சம் வருத்தம் தான். ஆனாலும் நல்ல வாய்பாட்டு வித்வான்கள் கிட்ட அம்மாவை மாணவியா சேர்த்து விட்டு அவங்க இசை ஞானத்தை வளரச் செய்தாரு. எங்க குடும்பத்து நிகழ்ச்சிகளில் எல்லாம் அம்மாவோட மினி கச்சேரி இருக்கும். பெருமை பொங்க அப்பா முன் வரிசையில அமர்ந்து தாளம்போட்டு ரசிக்கறதை நாங்க எல்லாரும் கேலி செய்வோம் வீட்டில் அக்கம் பக்கக் குழந்தைகளுக்கு மாலை  வேளைகளில் அம்மா பாட்டு வகுப்பு எடுக்கும் போது அவங்களுக்கு எந்த  டிஸ்டபர்ன்ஸும் இருக்கக் கூடாதும்பாரு. இந்த போட்டோவில் கூட பாருங்க தலை நிறைய பூ, நெத்தியில பெரிய பொட்டு, பட்டுப் புடவையிலிருக்கற அம்மா தோள்மேல  கைபோட்டுக்கிட்டு பெருமிதமா நிக்கற  அப்பாவைப் பாருங்க. இதை எடுக்கும் போது என் தங்கை "மல்லிகையில் மயங்கும் மன்னன்" என்ற தலைப்பில் நான் இதை வாட்ஸ்அப்பில் போடப் போறேன்னு சொல்லி அவங்களை செஞ்ச கலாட்டாவில் சிரிச்சுச்சிரிச்சு சந்தோஷப் பட்டமே அத போல இனி எங்க வீட்டில வருமா?..... இதோ இந்த போட்டோவைப் பாருங்க  திடீரென்று பாட்டிக்கு ஒருநாள் கால் சுளுக்கிட்டு சோபாவிலிருந்து எழுந்துக்க சிரமப்பட்டாங்க. அப்பா அவங்களை நடக்கவிடாம தூக்கிடடுப் போயி படுக்கையில விடப் போனாரு. கரெக்டா அதை போட்டோ எடுத்த ஆர்த்தி "அம்மா என்று அழைக்காத உயிரில்லயேன்னு பாடிட்டே வாங்கப்பா ஒரு வீடியோவா இதைப் பண்ணிடலாம்னு சொல்லி எல்லாரையும் சிரிக்க வச்சா. இனி அ்ந்த துறுதுறுப்பு என் தங்கைகிட்ட இருக்குமான்னு தெரியலையே " அழத்துவங்குபவளை சமாதானம் செய்யத் தெரியாமல் நின்றான் சரவணன்.

           சிறிய இடைவெளிக்குப் பின் திடீரென நினைவு வரப் பெற்றவளாய்,"எங்க கதையையே பேசிக்கிட்டிருந்ததில உங்களைப்பத்தி  மறந்தே போயிட்டேனே. நாளைக்கு உங்க பிரண்ட் ஸ்டேஷனுக்கு வருவாருன்னு சொன்னீங்களே, அவருக்குத் தகவல் சொல்லிட்டீங்களா? அடுத்து மும்பை போற வண்டி எப்ப வரும்னு இங்க கேட்டு வச்சிக்கிட்டிங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி உங்க நண்பரை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லலாமில்லையா?  முதல் முறையா மும்பை போறவங்க சரியான வழிகாட்டி இல்லாம இடத்தைக் கண்டுபிடிக்கறது சிரமம்" என்றாள். "இப்ப வேணாம். காலையில பாத்துக்கலாம். மணி பன்னிரெண்டை நெருங்குது. நீங்க வேணுமினா அந்த ரூம் பெஞ்சில் படுத்துக்கங்க. நான் இப்படி வாசப்பக்கம் இருக்கற சீட்டில இருக்கேன்." சரவனணன்  பிளாட்பார்மில் இருந்த சீட்டில் படுத்தாலும் அவ்வப்போது அந்த நிறுத்தத்தைக் கடந்து செல்லும் வண்டிகளின் தடதட சத்தமும் புறப்பட்ட இடத்திற்கே தள்ளப்பட்டுள்ள அவனது நிலைமையும்  அவனைத் தூங்கவிடவில்லை. தன்னை அறியாமல் சிறிது கண் அயர்ந்தவனை பொழுது விடிந்ததைக் குறிக்கும் மனிதர்களின் நடமாட்டம்,  வியபாரிகளின கூவல் ஆகியவை எழு்ந்து உட்கார வைத்தது.

     அவனை நோக்கி வந்த அர்ச்சனா "அண்ணா கொஞ்நேரம் முன்ன போன் செஞ்சாரு. எட்டுமணி வாக்கில இங்கு வந்திடுவாராம். அதுக்குள்ள நாம போயி டெத் சர்ட்டிபிகேட்  வாஙகிட்டா கிளமபறதுக்கு சௌகரியமா இருக்கும்னாரு. ஆனா அ்ங்கே ஆளுங்களே இல்லை" "இருங்க  நான் போயி பாக்கறேன்" அங்கிருந்த குழாயில் முகம் கழுவிக் கொண்டு விரைந்தான் சரவணன்.

 

 

                                                                                                                                                               அத்தியாயம்     19

        விஜய் சொன்னபடி இருவருமாக பணத்தோடு தயாராகப் போய் நின்றபோதும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் மெத்தனமும் வேலைகளை தாமதப்படுத்தியது அதற்குள் அங்கு வந்து சேர்ந்த விஜயும் பரத்தும் போட்ட அதட்டலில் மற்ற வேலைகள் துரித கதியில் நடைபெற்று வெள்ளைத் துணியில் தலை முதல் கால் வரை கட்டப்பட்ட ராமநாதனின் உடல் மார்ச்சுரியில் இருந்து  கொண்டு வரப் பட்டு பரத்தின் மேற்பார்வையில் விஜய் வந்திருக்கும் பெரிய காரில் ஏற்றப் பட்டது. இதுவரை காணாத அளவில்  எங்கிருந்தோ வந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் விஜயைச் சூழ்ந்து கொண்டு காசுக்குக் கையேந்தி நிற்க அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து வழிவிடச் செய்வதிலும் அண்ணனைப் பார்த்து அழத் துவங்கும் அர்ச்சனாவோடு தானும் கண்கலங்கி அவளை அணைத்துக் கொண்டு வெளியே வருவதிலும் ஈடுபட்டிருந்த விஜய் ,"சித்தப்பா செஞ்ச புண்ணியந்தான் சரவணன் மாதிரி ஒரு நல்லவரை உனக்குத் துணையா இருக்கக் கைகாட்டி இருக்கு. ஆமா " எங்க அவரு?" சுற்றிலும் பார்வையை ஓட்டினான் காரை நெருங்கியவன்,  பரத்திடம்"மாமா சரவணன் எங்கே?" "அர்ச்சனாவோட சாமானெல்லாம் கொண்டு வந்து கார் கிட்ட வச்சாரு. அப்ப தான் ஆளுங்க சாரைக் காரில் வைக்க வந்தாங்க நான் அதைப் பார்ததுக்கிட்டிருந்தேன். திரும்ப உள்ளப் போன மாதிரி இருந்திச்சு. உங்க கூட வருவாருன்னு நினைச்சேன்." "ஒரு நிமிடம் வரேன்" உள்ளே ஓடிப் போய் பார்த்து சரவணனை எங்கும் காணாமல், "அவரு போன் நம்பர், விலாசம்   ஏதாச்சும் இருக்கா அர்ச்சனா"  "இல்லைண்ணா அப்பா அவரைப்  பத்திக் கேட்டாரு.அப்புறமா போன் நம்பர் தரச் சொல்லியிருந்தாரு. அதுக்குள்ள...."  "சார்,  நாம மேலும் டிலே பண்ணாம கிளம்பலாம்" டிரைவர் சொல்ல,வேறு வழியின்றி  மூவரும் காரில் ஏறிக் கொள்ளக் கார் வேகமெடுத்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் விரைந்தது .

.                                     அந்தப் பெண்ணை அவங்க ஆளுங்கக் கிட்ட பத்திரமா ஒப்படைச்சாச்சு. இனி நமக்கு இங்கு என்ன வேலை என்ற எண்ணத்தோடு அங்கிருந்து வெளியேறிய சரவணன் ராமநாதனின் இறப்பின் பின் தன் நிலை. மறந்து இத்தனை நேரம் செயலாற்றிய நிலையிலிருந்து விடுபட்டு நிதர்சன உலகிற்கு வந்தான்.

  போன கீழே விழுந்து நொறுங்கியதில் அருணின் விலாசம், புது போன் நம்பர் எதுவுமில்லாமல் எங்கே போய் நிற்பது?  இவ்வளவு சிரமங்களுக்கிடையே மனைவியை எதிர்த்துக்கொண்டு என் மேல் நம்பிக்கை வைத்து என்னை வழியனுப்பிய மாமாவிற்கு என்ன பதில் சொல்வே்ன்? என் தாய் தஙகை முகத்தில் எப்படி முழிப்பேன்? மனதின் எண்ண ஓட்டங்களுக்கும் விடை தெரியாத கேள்விகளும் மனதை அழுத்த நடந்து கொண்டே பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவனின் கைகளில் சுமதி கொடுத்த பணம் அடங்கிய கவர் தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பிரித்ததில் சுமதி வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரும் போன் நம்பரும் கவரின் மேல் அச்சிடப் பட்டிருந்ததைப் பார்த்தவன் அருகில் இருந்த போன் பூத்திற்குள் நுழைந்தான்.

               சுமதியோட செல் சனிக்கிழமையிலிருந்தே வேலை செய்யலைன்னு சொல்லிக்கிட்டிருந்தா. அவ ஆபிஸ் நம்பருக்குப் போட்டுப் பாக்கலாம் ...சரவணன் ஆபிஸ் தொலைபேசியை தொடர்பு கொண்டு "நான் சுமதியோட பிரதர் அவகூட பேசணும் " இதோ பக்கத்தில் தான் இருக்காங்க" என்ற ஒரு ஆண் குரல் "உங்க அண்ணன் பேசணுமாம்" போன் கொடுக்கப்ட்டது. "ஹலோ அண்ணா அதுக்குள்ள  மும்பை  போய் சேர்ந்திட்டியா? உன் பிரண்ட் ஸ்டேஷனுக்கு வந்தாரா? உற்சாகமாகப் பேசும் தங்கையிடம் எப்படி  விஷயத்தைத் துவங்குவது என்று ஒரு நிமிடம் யோசி்தவன் " நான் மும்பை போகவி ல்லை. நடுவழியில இருக்கேன். தெடர்ந்து விபரங்களைக் கூறினான்" அருண்  சனிக்கிழமை மாலை போன் செஞ்சு அவனது போனில் ஏர்டெல் கனெக்ஷன் ரொம்ப பிராப்ளம் கொடுக்குதுன்னு ஜியோவுக்கு மாறிட்டதா சொலலி புது நம்பரையும் அனுப்பினான். நானும் அதை போனில் சேவ் செஞ்சு வச்சிருந்தேன். எதிர்பாராத விதமா போன் விழுந்து நொறுங்கியதில அவனை எப்படி தொடர்பு கொள்றதுன்னு புரியலை. பேசாம இப்படியே கண்காணாம எங்கியாவது போயிடலாமான்னு தோணுது. மொத்தமா தோத்துப்போயிட்ட நான் இதுக்குமேல எதுக்கு உயிரோடஇருக்கணும சொல்லு" தொடர்ந்து பேசமுடியாமல் விம்மினான்

 

"நிறுத்து உன் புலம்பலை. முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் இக்கட்டான நிலைக்குத் துணிஞ்சு உதவி இருக்கற உன்னை நினைச்சா எனக்கு பெருமையும்  பூரிப்புமா இருக்கு. இப்ப எதுக்கு கோழைத்தனமா புலம்பறேன்னு புரியலை. நான் சொல்றதை கவனமா கேளு. இன்னிக்கு ராத்திரி நானும் மாமாவும் உன்னோட பேசறதாயிருந்தோம். அதுக்கு முன்னாடி நீயே பேசிட்ட. நேத்து நீ கிளம்பிப் போன பிறகு நம்ம வீட்டிலேயும் சில நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. நீ சுயநலமில்லாம தகுந்த சமயத்தில் ஒருவருக்கு செஞ்ச உதவியின் எதி்ர் விளைவாய் நமக்கும் நல்ல காலத்துக்கான பாதை தெரியத் தொடங்கியிருக்குன்னு தோணுது. அதால நீ இந்தமாதிரி பைத்தியக்கார எண்ணத்தையெல்லாம் சுத்தமா மறந்திடு. நல்ல அறையா எடுத்துத் தங்கி குளிச்சு, சாப்பிட்டு ஓய்வெடு. பிறகு  சென்னைக்கு வர பஸ்ஸிலோ ரயிலிலோ கிளம்பி வீட்டுக்கு வந்து சேரு. மீதியெல்லாம் நேரில் பேசிக்கலாம்"

      

         சுமதியோடு பேசிய பின் மனதில்  சிறிது தெளிவு பிறந்தது போல் உணர்ந்தவன் பஸ் நிறுத்தம் சென்றான். பின் இரவில் சென்னை செல்லும் பேருந்தில் முன்பதிவு செய்த பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு அருகில் ஒரு உணவகத்தில் அறை எடுத்துக் குளித்து, உண்டு சிறிது நேரம் தன்னை மறந்து உறங்கினான்.

 

             அதே நேரம் சென்னையை நெருங்கி விட்ட விஜய், அர்ச்சனா இருவரும் கடைசி நேரத்தில் சரவணனைக் கண்டுகொள்ளாமல் அவனை் தவறவிட்டதை நினைத்து வருந்தினார்கள்." பெரியப்பா அவரைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது என்று கலங்கிக்கொண்டே வீட்டை அடைந்தனர்.

        முன்னதாக சென்னை சென்று சேர்ந்து, ராமு இறந்த செய்தியை  மிகுந்த  வேதனையோடு மாலினி கமலத்திடம் கோபி கூறவும் அவர்களின் கதறலில் பூமியே அதிர்ந்தது. ஆர்த்தி திரும்பத் திரும்ப "எங்கப்பா அப்படியெல்லாம் எங்களை விட்டுட்டுப் போகமாட்டார் பெரியப்பா.  எங்கப்பா வந்திடுவாரு பாருங்க "என்று ஒரு முறை சொல்வதும் "ஐயோ அர்ச்சனா பாவம் தனியா எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பா" என்று மறுமுறையும் மாறி மாறிப் புலம்பியபடி ராதிகாவின் மடியில் படுத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்."இல்லை கண்ணம்மா அர்ச்சனாவோட நிலைமையைப் பார்த்து அவங்க கூட பயணம் செஞ்சிட்டிருந்த சரவணன்ங்கற பையன் அவ கூடவே இறங்கி ஆபத்பாந்தவனாய் உதவியிருக்கான். என் தம்பி வலியப் போயி பலருக்கு கஷ்டத்தில கைகொடுத்து இருக்கான். அந்த புண்ணியம் நம்ம குழந்தைக்கும்  இந்த சமயத்தில உதவி இருக்கு." ஆனா அந்த மனுஷன் உயிரைக் காப்பாத்த அந்த புண்ணியம் உதவலையே மாமா ? அக்கா பேச்சை மீறாதவரு ஏன் அவங்க சொல்லச் சொல்ல ஏ.ஸி இல்லாத பெட்டியில போயி  இப்படி  உயிரை விடணும்? எம் பொண்ணுங்க மாதிரி  வருமான்னு ரெண்டு பேரையும் பாத்து சந்தோஷப் படற மனுஷன் அவங்களுக்கு ஒரு நல்லது நடக்கறதுக்குள்ள அவசரமா ஏன் போகணும் சொல்லுங்க?" அழுகையும் ஆத்திரமுமாய் பேசும் மாலினிக்கு பதில் சொல்லத் தெரியாமல் அழுதார் கோபி." கோபி, நான் போனா எனக்குக் கொள்ளி நீ வப்பியா ராமு வப்பானான்னு எனக்கு அப்பப்பத் தோணும். இப்பப் பாரு அதை உனக்கு விட்டுக் கொடுத்திடடு அவன் போயிட்டான். நம்மில யாருக்காச்சும் கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னா பதறிப்  போயி டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு ஓடுவானே ஆனா கடைசி நேரம் அவன் எப்படியெல்லாம்   துடிச்சானோ அவனுக்கு ஒரு மருத்துவ உதவி கூட கிடைக்காம உயிரைவிட்டுட்டானே இ்நத கொடுமைக்கு என்னப்பா காரணம்?" கண்ணீர் வற்றி வரண்ட குரலில் பேசும் கமலத்தை தேற்ற வகையின்றி நின்றார் கோபி.

 

       அரவிந்த் வேதனையோடு மேற்கொண்டு நடக்கவேண்டிய  வேலைகளை அங்கிருந்த பெரியவர்கள் வழிகாட்டுதலில் கவனிக்க, தகவல் தெரிந்து ராமுவின் ஆபிஸ் நண்பர்களும் கூடி விட்டனர்.  திங்களன்று மதியம் தாண்டி மாலை நான்கு மணி சுமாருக்கு விஜய் அர்ச்சனா ராமுவின் உடலோடு வந்திறங்க, வா்த்தைகளுக்கு அடங்காத சோகமும் கதறலும் அவ்வீட்டை ஆக்கிரமித்தது.  உயிர் பிரிந்து ஒரு நாளுக்கும் மேல் ஆகி விட்டது  என்பதால் சடங்குகள் துரித கதியில் நடந்து ராமநாதன் உடல் இடுகாட்டைச் சென்றடைந்தது." இந்தக் கைகளால் அணைத்து வளர்த்த என் அருமைத் தம்பிக்கு அதே கைகளால் கொள்ளி வைக்கிறேனே'  என்று கோபி கதறிக் கொண்டே ஏறியூட்ட ராமாதனின் சடலம் தீக்கிரையாயிற்று.

 

                                   

காலத்தினால் செய்த நன்றி

                                 அத்தியாயம்  20

         செவ்வாய் கிழமை காலை மிகுந்த தயக்கத்தோடு வீட்டிற்குள் நுழைந்த சரவணனை குறுஞ் சிரிப்பும் கண் சிமிட்டலுமாய் சுமதி வரவேற்க, "வாப்பா" என்று கனிவான குரல் கொடுக்ககும்  நீலாவையும் புன்முறுவல் காட்டி பூரித்து நிற்கும் அம்மாவையும் “ உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையாயிருக்குடா” என நெகிழ்ந்து கைகொடுக்கும் மாமாவையும் ஒன்றும் புரியாத பார்வையோடு பார்த்துக் கொண்டு நின்றான். “-முதல்ல பயண அலுப்பு தீர முகம் கை கால் கழுவிட்டு வா. டிபன் சாப்பிடலாம் “ பேசுவது நம் நீலா அத்தை தானா என்று பிரமிப்புடன் சாப்பிட அமர்ந்தான் சரவணன். .இட்லி , சட்னி தட்டுகள் சகிதம் சுமதியும் சரசுவும் வர, ஒரு பாத்திரத்தில் கேசரியோடு வந்த நீலா “உன் தங்கச்சிக்கு கல்யாணம் கூடி வருது. முதல்ல இனிப்பு சாப்பிடு” என்றாள்.

       “ உன் பயணத்தின் நடுவில் நடந்தது எல்லாம் சுமதி சொன்னா. இராத்திரி நேரத்தில் அப்பாவை இழந்து தனியா தவிச்சு நின்ன ஒரு பெண்ணுக்கு வலியப் போயி நீ உதவியதை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்குப்பா. உன் கைமாறு  கருதா உதவிக்கு பயனா கடவுள்  நமக்கும் விடிவு காலத்துக்கு வழிகாட்டுகிறாரு. மாமா அந்த நேரம் அர்ச்சனா என் கண்ணுக்கு சுமதியா தான்தெரிஞ்சா.‌அவங்க உறவுக்காரங்க வர வரைக்கும் ஒரு சகோதரனா அவளுக்கு பாதுகாப்பு தரணும்னு எழுந்த உந்துதலில் நான் அவங்க கூட இறங்கிட் டேன். அதே சமயம் அவங்க ஆளுங்க வந்த பிறகு நான் அங்க.  நின்னுக்கிட்டு  அவங்க பாராட்டை கேட்டுக்கிட்டோ அதுக்கு பிரதியுபகாரமா அவங்க தயவில் வேலை தேடவோ‌ எனக்குப் பிடிக்கலை . நானும் இன்னொரு பெரியவரும் சேர்ந்து எங்களுக்குத் தெரிஞ்ச முதல் உதவியில் ஒருவேளை அவர் உயிர் காப்பாற்றப் பட்டிருந்தால் நான் பெருமையா அவருடைய சொந்தங்களை சந்திச்சிருப்பேனோ என்னவோ. ……. அத்தை சுமதிக் குக் கல்யாணம்னு. சொல்றாங்க. அந்த விஷயத்தைச் சொல்லுங்க……” சரவணனின் கேள்விக்கு பதில் பேசுவதற்குள் ' உள்ள வரலாமா”  சிரித்தபடி வாயிலில் நிற்கும் ஒரு தம்பதிகளின் வருகையால் பேச்சு தடைபட, “ வாங்க வாங்க என்று அவர்களை வரவேற்று அமரச் செய்து அவசரமாகக் கை கழுவிக்கொண்டு வந்தார். சிதம்பரம்.  “அண்ணா சாப்பிட்டு முடிச்சிட்டேன்னா இங்க வா “ சுமதி முணுமுணுப்பாக சொல்லியபடி தண்ணீர் குவளைகளோடு மாமாவைப் பின்தொடர்ந்தாள். அதற்குள் ஒரு இளம் பெண்ணும் ஒரு வாலிபனும் உள்ளே நுழைய யாவரும் நாற்காலிகளில் அமர்ந்தனர்.

 

      சரவணனும் அங்கு வர, “இவன் தான் சுமதியின் அண்ணன் சரவணன். இப்ப தான் வந்தான். நாங்க பேச்சைத் துவங்கற சமயம் சரியா நீங்களும் வந்திட்டீங்க” சிதம்பரம் தொடர்ந்து சரவணனைப் பார்த்து, . “ இவங்க சுமதி வேலை பார்த்திட்டு வர நிறுவனத்தின் முதலாளி சந்திரசேகர். அவங்க மனைவி நிர்மலா சந்திரசேகர். இது அவங்க மக காஞ்சனா. சிங்கப்பூரில் ஒரு பெரிய ஆடை ஷோ ரூமை நிர்வாகம் பண்றாங்க. அவங்க கணவர் அங்க ஒரு கம்பனியில் உயர் பதவியில் இருக்காங்க. அவரு அவங்க மகன் சுரேஷ். நம்ம சுமதியின் வருங்காலத் கணவர்..” சரவணன் சந்தோஷமாக எல்லாரையும் பார்த்து வணங்கினான். “ சார் வெறுமனே சுமதியை கட்டிக்கப் போறவர்னு மட்டும் சொல்லிட்டாரு. என்னைப் பத்திய எல்லா விபரமும் சொல்லவேண்டாமா? “ புன்சிரிப்புடன் கேட்கும் சுரேஷை முதற் பார்வையிலேயே சரவணனுக்குப் பிடித்துவிட்டது.

         “உங்க தங்கைக்கு வரப் போற கணவரைப் பத்தி நீங்க இன்னும் முழுமையாக தெரிஞ்சுக்க மேற்கொண்டு நானே பேசலாம் எனத் தோணுது.” சிறிது இடைவெளிக்குப்பின் தொடர்ந்தான் சுரேஷ். “ சுமதி வேலையில சேர்ந்த கொஞ்ச நாளிலேயே எங்க அப்பா அம்மாவுக்கு அவளை ரொம்பக் பிடிச்சுப் போயிடிச்சு. எனக்கும் உங்க தங்கையோட சுறுசுறுப்பு, வேலையில் அவங்க காட்டும் ஆர்வம், இனிய சுபாவம் எல்லாம் அவங்க மேல ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாக அமைஞ்சுது. அவளுடைய நெருங்கிய தோழி வழியாக அம்மாவுக்கு உங்க குடும்ப நிலவரமும்  தெரியவந்தது .இதையெல்லாம்  யோசித்து அவங்களுக்குப் பிறகு என்னைப் பாத்துக்க சுமதி ஏற்றவளாயிருப்பான்னு என் பெற்றோர் என் சம்மதத்துடன் சுமதியைப் பெண் கேட்க என் எண்ணத்தைக் கேட்டனர். ஒரு விபத்தில் ஒரு கால் ஊனமாகி செயற்கை காலுடன் இருக்கும் என்னை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள எந்தப் பெண் சம்மதிப்பாள் என்று தயங்கிய என்னை சுமதியுடன் பேசவைத்து அவள் மனநிலையை அறிய என் அக்கா முடிவு செய்து அவளோடு என்னைப் பேசவைத்தாள்…..சுமதி, இதுக்கு மேல நீ சொன்னா நல்லாயிருக்கும் இல்லையா நீ மீதியைச் சொல் .”

 

     “எங்க நிறுவனத்தில் எல்லாருக்குமே இவர் மேல அன்பு கலந்த மரியாதை மதிப்பு எல்லாம் உண்டு. தனது உயர்ந்த படிப்பு‌,.அந்தஸ்து  இதையெல்லாம் வெளிக்காட்டிக்காம எங்களில் ஒருவரா இயல்பா பழகற இவரது குணம் இவர் மேல என்னையறியாம ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திச்சு. ஆனா இவங்க வசதியைப் பார்த்து நான் இவர் கூட பழகறதா நினைக்கப் போறாங்கன்னு ஒதுங்கியிருந்த என்னை பேசவச்சு இந்தத்  திருமணத்தை ஏற்பாடு செய்தது இவங்க அக்காதான்.”… “ நாளைக்கு நாள் நல்லா இருப்பதால எங்க வீட்டில் முக்கியமானவர்களைக் கூப்பிட்டு எளிமையான ஒரு நிச்சய வைபவம் செஞ்சிடுவோம். உங்க பக்கத்திலும் யாரையாவது கூப்பிட்டணும்னாலும் அழைச்சிடுங்க..   முகூர்த்தத்தைக் கூடிய சீக்கிரம் முடிவு செய்திடலாம். அதற்கு முன்பாக தொழில்‌ ரீதியாக நாம் செய்யப் போறவைகளுக்கும் பக்கா ஏற்பாடுகள் பண்ணிடலாம். “சந்திரசேகர்  சொல்லிவிட்டுக் கிளம்பத் தயார் ஆனார். “ எதுவும் சாப்பிடாம கிளம்பலாமா ?  சொல்லிக் கொண்டே நீலா தட்டுகளில் கேசரி பஜ்ஜி கொண்டு வர, சுமதி காபியோடு பின் தொடர்ந்தாள்.   எல்லாரும் விடைபெற்றுக் சென்றபின் சிதம்பரம் மற்ற விபரங்களைத் கூற சரவணன் தங்கையின் நல்வாழ்வின் ஆரம்பம் குடும்பத்தின்  முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமாக இருப்பதை உணர்ந்து நெகிழ்ந்தான்

         

                சுமதி, சரசு, நீலா வேலைகளில் இருக்க சிதம்பரம் சரவணனுடன் ஹாலில் அமர்ந்து பேசத் துவங்கினார்.” இன்னிக்கு லீவு போட்டிருக்கீங்களா  மாமா” சரவணன் கேட்க , “ ஆமாம்பா திங்கட் கிழமையிலிருந்து லீவு ஒரு வாரம் போட்டிருக்கேன். அதுக்கப்புறம் சம்பந்தி சொன்னது போல ரிசைன் பண்றதுக்கு   நோட்டீஸ் கொடுக்கணும். பணக்காரர்களாக இருந்தாலும் ரொம்ப‌ தன்மையான மனுஷங்க. இவரு பல வருஷம் துபாயில் வேலைப் பார்த்தவரு. அவருடைய அப்பா மகன் சம்பாத்தியத்தை தாய் நாட்டில் விவசாய நிலங்களிலும் வீட்டு மனைகளிலும் முதலீடு செய்து குடும்பத்தை நிர்வாகம் செய்து வந்திருக்கிறார். அதோட‌ சுமதியின் மாமியாருக்கு தையல் கலையின் மேல இருக்கற ஆர்வத்தைத் புரிஞ்ச்சுக்கிட்டு அவங்களை அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பியிருக்காரு. அவங்க மனைவியும் குழந்தைகள் பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் எல்லாத்தையும் பாத்துக்கிட்டதில இவங்க அதில் சீக்கிரம் தேர்ச்சி அடைஞ்சிருக்காங்க. மருமகளுக்கு ஒருதையல் நிறுவனம் ஆரம்பிச்சுக் கொடுத்திருக்காரு . மகளுக்குத் திருமண வயது  வந்திடிச்சு. பெத்தவங்களுக்கும் வயசாயிடிச்சு,  வெளிநாட்டு வேலை போதும்னு தீர்மானித்து அவர் திரும்பி வந்த சமயம் தான் நம்ம மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடென்ட் ஆகி முழங்கால் வரை எடுக்க வேண்டியதா ஆகியிருக்கு. இனஞினியரிங் முடிச்சு மேல் படிப்புக்குத் தயார் ஆகிட்டிருந்த சமயத்தில் இப்படி ஆனதில் மனசொடிஞ்சு போனாலும் பையனின் முன்னேற்றத்துக்கு என்னென்ன பண்ணலாம்னு யோசிச்சதில . விரிவடையும் தையலகத்தையும் நிர்வாகம் பண்ணனும்., விவசாயத்தை மேலும் சிறப்பாகச் செய்யணும் கூடவே மகனின் விருப்பப்படி  புதுமையான முறைகளைப் புகுத்தி ஒரு ஈவெண்ட் மனேஞ்மெண்ட் கம்பனி துவங்கணும்னு  முடிவெடுத்திருக்காரு. நீ,  நான் எல்லாம் அவங்க கூட சேர்ந்து இதை நடைமுறைப் படுத்துணும்னு விரும்புறாங்க.”  நானும் சரின்னு ஒத்துக்கிட்டிருக்கேன். “யாருக்காகவோ உழைத்து பாடுபட்டு போதும் போதாத நிலையில இருக்கறதுக்கு நம்மை முழுமையாக நம்பி பொறுப்பை கொடுக்கறவஙகளுக்காக வேலை பார்க்கறது கௌரவம் தானே.. ..சரி போய் கொஞ்சம் ஓய்வெடு மீதியெல்லாம் அப்புறம் பேசலாம்.” இருவரும் உள்ளே சென்றனர்.

             

                                                             

 

                                                                                                                                                                                  அத்தியாயம் 21

           "ஜனனமும் பூமியில் புதியது இல்லை

          மரணத்தைப் போன்றதோர் பழையதும் இல்லை......

           பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்

            யாத்திரை முடியுமுன் நித்திரை கொண்டோம்." 

          குளித்து விட்டு ஆபிஸ் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அர்ச்சனா பக்கத்து வீட்டிலிருந்து ஒலித்த இந்த வைரமுத்துவின் பாடல் வரிகளைக் கேட்டவுடன் பழைய நினைவுகளில் மூழ்கி அ்ப்படியே அமர்ந்து விட்டாள் .சிறு பயணத்திற்குக் கிளம்பிய தந்தை இறுதிப் பயணம் சென்று விட்ட கடந்த ஐந்து வருடத்தில் குடும்பத்தில் நிகழ்ந்து விட்ட மாற்றங்களை மனம் அசை போடலாயிற்று.  அருமைத் தந்தையின் பிரிவால் ஆர்த்தி பிளஸ்ஒன தேர்வை எப்படி எதிர் கொள்வாள் என பயந்ததற்கு நேர்மாறாக தேர்வை மிக நல்ல மார்க்குகளோடு முடித்த ஆர்த்திக்கு நகரத்தின் சிறந்த பொறியியற் கல்லூரியில் சுலபமாக அட்மிஷன் கிடைத்தது. தம்பி குடும்பம் இனி தனித்து சென்னையில் இருப்பதை விரும்பாத பெரியப்பாவும் விஜயும் எவ்வளவோ வற்புறுத்தியும் மும்பைக்கு மாற அர்ச்சனா,  ஆர்த்தி, மாலா மறுத்துவிட்டனர். பெற்ற மகனை பறிகொடுத்து பரிதவிக்கும் ஒரு தாயின் நிலைமையில ஒரு நடைப் பிணமாய்  நாட்களை கடத்தி வந்த கமலம் ராமு இறந்து ஒரு வருடத்துக்குள் இறந்துவிட்டாள். கணவரின் நிழலாய் இது நாள்வரை அதிகமாக வெளிச்சத்திற்கு வராமல் வாழ்ந்து வந்த மாலா எல்லாரும் வியக்கும் வண்ணம் தன் இரு பெண்களுக்கு தாயும் தந்தையுமாய்  விளங்கி அவர்களின் நலன் கருதி தெம்பும் மனோ தைரியுமுமாக வளைய வந்தாள். தன் இழப்பின் வலியை அவள் சிறிது சிறிதாக மறக்க அவள் தொடர்ந்து நடத்தி வந்த பாட்டு வகுப்புகளும் ஓரளவு காரணமாக அமைந்தது.

         முதுகலைப் படிப்பிற்குப் பின் ஆராய்ச்சிப்  படிப்பில் சேர விரும்பிய அர்ச்சனா தந்தையின் இறப்பிற்குப் பின் அதைத் தன் நினைவிலிரு்ந்துத் துடைத்தெறிந்தாள். தந்தை பணியிலிருந்த போதே இறந்ததால் அவரது அலுவலகம் அவளுக்கு பணி கொடுக்க முன் வந்ததை ஏற்று வேலையில் சேர்ந்தாள்.  தொடர்ந்து அலுவலகத் தேர்வுகளை முடித்து இன்று அவள் அந்த வங்கிக் கிளையில்  ஒரு உயரதிகாரி.

       திருமண வயதை எட்டிவிட்ட  அர்ச்சனாவிற்கு பெரியப்பா நிறைய வரன்களைத் தேர்ந்தெடுத்த போதும் அவற்றை அவள் . ஏதேதோ காரணம் காட்டித் தவிர்த்து வந்தாள்  இன்ஜினியரிங் படிப்போடு உயர் கல்வித் தேர்வுகளுக்ககுத் தங்கையை வற்புறுத்தி அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர வைத்திருந்தாள.

 

             "அர்ச்சனா, இன்னும் குளிச்சு முடிக்கலையா?" மாலாவின் குரல் கேட்டு எண்ண வலைகளிலிருந்து விடுபட்டவளாய் "இதோ வந்திட்டேன்மா"  அவசரமாக உடையை சரிசெய்து கொண்டு வெளிவந்தாள். அதே சமயம் போனில் சித்தியைக் கூப்பிட்ட விஜய் "அர்ச்சனா கிளம்பிட்டாளா?" என்றான்.  "டிபன் சாப்பிடறா விஜய். இரு ஸ்பீக்கர் ஆன் செய்யறேன்" " சித்தி, விவேக், அவங்க அப்பா,அம்மாவுக்கு அர்ச்சனாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. திருமணத்துக்கு அவ போடற நிபந்தனைகள் எல்லாமே ரொம்ப நியாயானதுன்னு அவங்க மனப்பூர்வமா ஒத்துக்கறாங்க. அப்பா அர்ச்சனாவோட பேசி அவளோட சம்மதத்தைத் தெரிவிச்சாலும் நேரிடையா அவகிட்ட பேசி ஓ.கே. வாங்க வீட்டுக்கு இந்த வீக் எண்ட் வருவாங்களாம். வரதுக்கு முன்னாடி உங்களுக்குத் தகவல் சொல்வாங்க. பை ஆல் த பெஸ்ட் அர்ச்" போன் கட் ஆனது.

"என்ன அ்ர்ச்சனா, அவங்க நேரில் வந்தா ஒழுங்கா பேசுவே இல்ல பெரியப்பாவுக்கு நல்லாத் தெரிஞ்சவங்க வழியாத் தான் இந்த சம்பந்தம் வந்திருக்கு. விவேக், அவங்க அப்பா, அம்மா எல்லாருமே நம்ம நிலையைப் புரிஞ்சு நீ தொடர்ந்து எங்க ரெண்டு பேருக்கும் எல்லா விதத்திலும் உதவியா இருக்கறதுக்கு ஒ்த்துக்கறாங்க....." நேத்து பெரியம்மா போன் பண்ணி உங்க பெரியப்பா எப்பப் பாத்தாலும் நம்மைப் பத்தி நினைச்சுக் கவலைப் படறாராம்." நம்ம பிள்ளைங்க ரெண்டு பேருக்கும கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுத்திட்டோம். ஆனா என் தம்பி பொண்ணு திருமணத்தை என்னால சரியான காலத்தில பணணமுடியலையே..... என்னை விட இளையவனும் போயிட்டான்  எனக்கு மூத்தவளும் அவனைத் தொடர்ந்து போய் சேர்ந்திட்டா. இவங்களுக்கு நல்லது சீக்கிரம் செஞ்சு முடிச்சிட்டா நானும் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்" அப்படின்னு புலம்பிக்கிட்டே இருக்காராம்."

 

 "நா சாயங்காலம் பெரியப்பா கூட பேசறேன். நான் திருமணத்தை ஏன் தள்ளிப் போட்டேன்னும் இப்ப வந்தவங்களோட நல்ல அணுகுமுறையைப் புரிஞ்சுக்கிட்டு  சம்மதம் சொன்னேன்னு உனக்கு நல்லவே தெரியும் வீணா கவலைப் படாதே. அவங்க வரட்டும். இப்ப நான் கிளம்பறேன்,"டூ வீலரை ஸ்டார்ட் செய்து கை அசைத்துக் கிளம்பினாள் அர்ச்சனா.

 

          அந்த வார சனிக் கிழமை மாலை தகவல் தெரிவித்துவிட்டு விவேக் தன் பெற்றோர்களோடு வந்து சேர்ந்தான். எளிய அலங்காரத்தில்  இன் முகத்தோடு அவர்களை வரவேற்று  உள்ளே அழைத்து வந்து அமரச் செய்த அர்ச்சனாவின் கரம் பற்றி  தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் விவேக்கின் தாய் அபிராமி.  ஆர்த்தியின் உதவியுடன் மாலா வந்தவர்களுக்கு  சிற்றுண்டி காபி வழங்கி அவர்களும் உண்டு முடித்தவுடன் முதலில் அர்ச்சனா பேசத் துவங்கினாள்."அங்கிள் முதல்ல ஒரு நல்ல செய்தி. என் தங்கை காலேஜ் கெம்பஸ் இண்டர்வியூவில இண்டஸ்டிரியில் நம்பர் ஒன் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கற விபரம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். கூடவே அவள் ஆன் லைனில் நடக்கும் மனேஜ்மெண்ட் கோர்ஸ் வகுப்புகளில் சேர்ந்திருந்தாள். சமீபத்தில் நடந்த அந்த ரிடர்ன் தேர்வில் நல்ல ஸ்கோர் வா்ங்கியிருக்கா. அடுத்து வரவிருக்கும் நேர்முகத் தேர்விலும் பெரியவர்கள் உங்கள் எல்லாரது ஆசியோடு ம் கடவுள் அருளோடும் வெற்றி பெறுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு .பெரியப்பாவிற்கு இந்த நல்ல செய்தியை சொன்னவுடன் சந்தோஷத்தில் அவருக்குப் பேச்சே வரவில்லை. என் தந்தையின் இடத்திலிலிருந்து என் தங்கைக்கு ஒரு நல்ல எதிர் காலத்துக்கான பாதையை அமைத்துக் கொடுத்து விட்டேன். திருமணத்துக்குப் பிறகும் உங்கள் மூவரின் முழு விருப்பத்தோடு என்  ஆதரவு தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்கும் என்பதால் நான் என்  சம்மதத்தை பெரியப்பாவிடம் சொன்னேன். அதையே உங்களுக்கும் இப்போது சொல்கிறேன்" சிறிது நாணமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் பேசி முடித்தாள் அர்ச்சனா.

 

  " சூப்பர் ஆர்த்தி" கை கொடுத்த படி விவேக் பாராட்ட, அவனது தந்தை விஸ்வநாதன் "சகோதரிகள் இருவருமே ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சும் திறமையாளர்களாக இருக்கறதில எங்களுக்கு ரொம்பப்  பெருமை .கங்கிராட்ஸ்" என்றார். அபிராமியோ "விவேக் ஒரே குழந்தையா போயிட்டதும் எங்களுக்குப் பெண் குழந்தை இல்லாததும்   இரண்டு பேருக்குமே பெரிய குறையா இருந்தது. இப்ப வரப்  போற மருமகளோட இன்னொரு சுட்டிப் பெண்ணும் எங்களுக்குக் கிடைச்சிருக்கான்னு சந்தோஷமாயிருக்கு" என்றபடி ஆர்த்தியை அணைத்துக் கொண்டாள்.

 

         "இன்னொரு முக்கியமான செய்தி... நாங்க இப்ப இருக்கற பிளாட்டை வாடகைக்கு விட்டிட்டு இன்னும் கொஞ்சம் பெரிய வீட்டிற்கு மாறப் போறோம். நம்ம உறவால நெருங்கி வரதுக்கு அடையாளமா இந்த புது வீடும் ஓ. எம். ஆர். சாலையில தானிருக்கு. உங்க   வீட்டுக்கும் புது வீட்டுக்கும் அதிக தூரமில்லை.  உட் வொர்க் இன்டீரியர் இதெல்லாம் ஆரம்பிக்கற சமயம் அர்ச்சனாவை அழைச்சுக்கிட்டுப் போயி  அவ டேஸ்ட் படி எல்லாம் செய்யறதா இருக்கோம். என்ன சம்பந்தியம்மா,  நாங்களே பேசிட்டிரு்க்கோமே நீங்க எதுவும் சொல்லவேயில்லையே" விஸ்வநாதன் கேட்க," என்ன பேசறதுன்னு தெரியாம மனசில ஆனந்தம் நிரம்பியிருக்கு. நாங்க வணங்கற சாமி அருளும் அவங்க அ்ப்பாவோட ஆசியும் சேர்ந்து எங்க பெண்ணை இவவளவு சிறந்த   குடும்பத்தில வாழ வழிகாட்டியிருக்கு" கண்கள் பனிக்கச் சொன்னாள் மாலினி.

 

           "ஆண்டி, ரெண்டு நாளைக்கு முன்னாடி என் கூட வேலை பார்க்கற நண்பரின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா ரொம்ப தடபுடலா ஏற்பாடு செஞ்சு பிரமாதமா கொண்டாடினாங்க .எங்க மொத்த ஆபிஸும் போயிருந்தோம். அந்த விழாவில எல்லாமே ரொம்ப சூப்பர்.  இதை இவ்வளவு நல்ல முறையில நடத்திய "அன்புவட்டம்" என்ற அந்த ஈவெண்ட் மானேஜ்மெண்டின் விலாசம் நண்பர் கிட்டேயிருந்து வாங்கிவச்சிருக்கேன். நாளைக்கு நாம எல்லாருமா போயி அவங்களைப பாத்து அடுத்த மாதம்  வரப் போற எங்க நிச்சயதார்த்த விழாவுக்கு அவங்களையே ஏற்பாடு செய்யலாம்னு தோணுது. அப்படியே வரும்போது நல்ல ரெஸ்ட்டாரண்டில் வருங்கால மானேஜ்மெண்ட் எக்ஸிக்யூட்டிவ் ஆர்த்திக்கு ஒரு டிரீட்  கொடுக்கறதா பிளான். சரியா?" என்றான் விவேக்.  "பாவம் சார் நீங்க, அக்காவோடதனியா ஜாலியா போகாம இப்படிக் கூட்டம் சேர்த்துக் கிட்டா போவீங்க?"ஆர்த்தி குறும்பாகக் கேட்க, "ஏய் சும்மா இருடி" என அவளை முறைத்தாள் அர்ச்சனா. " நாளைக்கு மட்டும் தான்  இந்த கும்பல் டிரிப். அதுக்கப்புறம் நாமிருவர் தான்" அ்ர்ச்சனாவின் முகம் வெட்கத்தால் சிவப்பதை ரசித்தபடியே பதில் கூறினான் விவேக். பெரியவர்கள் மூவரும் இதையெல்லாம்

ரசித்து மகிழ  வேடிக்கை, சிரி்ப்பிற்கு இடையே விவேக் குடும்பம் விடைபெற்றது.

 

 

                                                               அத்தியாயம்    22

 

         நகரத்தின் சந்தடி, மாசு இவற்றிலிருந்து முற்றிலும் விலகி பச்சென்ற இயற்கை சூழலுக்கு நடுவே அமைந்திருந்த அந்த அழகிய கட்டிடத்தை நெருங்கும் போதே அர்ச்சனாவின் மனதில் இனம்  தெரியாத திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. கண்ணுக்குக் குளிர்ச்சியான பூந்தோட்டத்தின் நடுவே நீண்டு அமைந்திருந்த பாதையின் சுத்தமும் சுகந்தமும் உள்ளத்தைப் பரவசப் படுத்த "விவேக், இறங்கி நடக்கலாம்னு தோணுது. நீங்க காரில் பார்க்கிங் வரைக்கும் வாங்க. நான் இங்கிருந்து நடந்து வரேன்" அர்ச்சனாவோடு மற்றவர்களும் நடந்து வர விரும்பி இறங்கி விட விவேக் காரை பார்க்கிங்கில் கொண்டு நிறுத்தினான். "இந்த அழகான தோட்டத்தைப் பார்க்கப் பார்க்க அப்பாவோட ஞாபகம் வருது அக்கா" ஆர்த்தி கிசுகிசுக்க, அர்ச்சனா"ஆமாம் எனக்கும் உள்ளே நுழைஞ்சதிலிருந்தே அப்பா நம்ம கூட இருக்கறது போல ஒரு பீலிங்." என்றாள்.

 

        அனைவரும் வரவேற்பு அறையை அடைந்து அங்குள்ள பிரம்பு இருக்கையில் அமர்ந்தனர். அந்த அறையின் ஜன்னலுக்குப் போடப்பட்டிருந்த வேலைப்பாடமைந்த  வெட்டிவேர் தட்டிகளிலிருந்து எழுந்த நறுமணம் மின்விசிறியின் காற்றை வாசத்தோடு வீசச்செய்தது். அறையின் நான்கு புறமும் அழகிய வேலைப்பாடமைந்த மர ஸ்டாண்டுகளின மேல் காணப்பட்ட வண்ண மண் தெட்டிகளிலும் உள்ளே நுழையும் போது மாட்டப் பட்டிருந்த விநாயகர் படத்துக்கு எதிரில் தரை மீது ஒரு பெரிய  அகன்ற மண்  கிண்ணத்தில் தண்ணீரில் அழகுற அமைக்கப் பட்டிருந்த மலர் அலங்காரமும் கண்ணுக்கு மட்டுமல்ல வாசத்தால்  நாசிக்கும் விருந்தளித்தது. ஆர்த்தி ஒவ்வொன்றையும் ரசிப்பதோடு செல்லில் படம் எடுத்துக் கொண்டே வந்தாள் "என்ட்ரன்ஸ்ஸில்  உள்ள தோட்டத்தில்  உங்க ரெண்டு பேரையும்  நிக்க  வச்சு ஒரு க்ளிக் பண்ணிடலாமா" ஆர்த்தி கேட்க, "முதல்ல வந்த வேலையைப் பார்ப்போம்" எனறாள் அர்ச்சனா.

         வரவேப்புப் பெண்ணிடம் விவேக் விபரத்தைக் கூறத் துவங்கும் சமயம் "எல்லாருக்கும் வணக்கம். நான் மிஸர்ஸ் சுரேஷ் அன்பு வட்டத்தின் செயலர். உங்கள் நண்பர் நீங்கள் வரப் போவதைச் சொல்லியிருப்பால் எங்கள் நிர்வாக இயக்குனர் மிஸ்டர் சுரேஷ் உங்களை சந்திக்கக் காத்திருக்கிறார்." சுமார்  அர்ச்சனாவின் வயதையொத்த ஒரு பெண்  அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள் மொடமொடக்கும் காட்டன் புடைவை, பொருத்தான பிளவுஸ், நீண்ட கருங்குழலில் மல்லிகை சரம், கழுத்திலும் கைகளிலும் மெல்லிய அணிகலன்கள்,செயற்கை பூச்சு ஏதுமில்லாத தெளிந்த முகத்தில்  பளிச்சென்று துலங்கிய வட்டப் பொட்டு,   உதடுகளில் நிரந்தரமாக குடிகொண்ட புன்னகை என எளிமை கலந்த கம்பீரத்துடன் காணப்பட்ட அவளைப் பார்த்தவுடனேயே அர்ச்சுனாவின் மனதில் ஒரு தோழமை உணர்வு உண்டாயிற்று.      

          வந்தவரகளை வரவேற்க கைகூப்பிக் கொண்டே எழுந்திருக்க முயன்ற சுரேஷ் நிலை தடுமாறிச் சாய, அவனை ஓடிச் சென்று  "பார்த்துங்க" என்று பதறித் தாங்கிப் பிடித்தவளை "ஒண்ணுமில்லே சுமதி ஏன் பதட்டமாகிறே" என்றவன் எல்லாரையும் அமரச்செய்து தானும் அமர்ந்தான். "முதல்ல என்ன சாப்பிடறீங்க சொல்லுங்க, இந்த வெய்யிலுக்கு இதமா இஞ்சி, தேன் கலந்த எலுமிச்சை ஜூசா, எங்க தோட்டத்து இளநீரா  நீர் மோரா .இல்லைன்னா,சூடா சுக்கு மல்லிக் காப்பியா" சுமதி கேட்க,  பெரியவர்கள் மூவரும் இளநீர் கேட்க, மற்ற மூவரும் எலுமிச்சை ஜூஸ் என்றனர்.

 

     " சார் விழா நடக்கப்போற  தேதி, டைம் முதல்ல சொல்லுங்க. எங்களது அமைப்பு ஒரு ஸ்டார்ட் அப் தான். எங்களுக்குன்னு சில கொள்கைகள் வச்சுக்கிட்டு அதன்படி தான் வேலை செய்யறோம்.  உதாரணமாக எங்க பயன்பாட்டில் பிளாஸ்டிக் அறவே இல்லை. ஐஸ் வாட்டருக்கு பதிலா வெட்டிவேர் மணத்தோடு காய்ச்சி ஆற வைத்து மண் பானைகளில் சேகரித்த சில் குடிநீர் தருகிறோம். அது வேண்டாமென பிரிட்ஞ் நீர் கேட்டால்  அதை மூடி போட்ட  மண் குவளையில் தருகிறோம். உங்களது மெனு, விருந்தினர்களது எண்ணிக்கை, விழா நடக்கவிருக்கும் மண்டபம் பற்றி பேசுவோம் .ஒரு வேலையாக வெளியில் சென்றிருக்கும் என் பிரதர் இன் லா இப்போது வந்துவிடுவார்  அதற்குள் அன்றைய தேதியில் வேறெதும் நிகழ்ச்சிகள் புக் ஆகி இருக்கிறதா என்பதைப் பார்ப்போம். முதல்ல இதைக் குடிங்க" ஒரு டிராலியில் ஒரு பணியாளர் பானம் அடங்கிய மண் சொம்புகளைத் தள்ளிக் கொண்டு வர,  மற் றொருவர் மூன்று செவ்விள நீர் காய்களோடு வந்தார். "சார் அப்படியே ஸ்ட்ரா போட்டுத் தரவா இல்லை லோட்டாவில் ஊத்திக் கொடுக்கவா என்று கேட்க, மூவரும ஸ்ட்ரா போட்டுத் தரச்சொல்லிப் பருகத் துவங்கினர். பெரிய மண் குடுவையில் வந்த ஜூஸை அழகிய கைப்பிடியோடு கூடிய கோப்பைகளில் ஊற்றித் தர, சுமதி சரேஷும் அவர்களோடு சேர்ந்து குடித்தனர் வரவேற்புப் பெண்ணிற்கும் ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு வந்தவர்"சார் இன்னும் கொஞ்சம்  தரவா "எனக் கேட்க, "கோப்பையின் அழகைச் சொல்லவா ஜூஸின் ருசியை பாராட்டறதான்னு தெரியலை"என்றாள் ஆர்த்தி. "நாங்க எங்க தேவையைச் சொல்லிப் பிரத்யேகமாக வண்ணங்களால் அலங்காரம் செய்யவச்சு பல்க் ஆர்டரில் வரவழைக்கற ஐட்டம்ஸ் இவையெல்லாம். பெரிய சைஸ் சட்டி, பானைகள் எல்லாமும் கிச்சனில் இருக்கு " என்று பதில் கூறிய

சுமதியிடம்" இளநீர் ரொம்ப சுவையா இருக்கு. ஒவ்வொருகாயிலும் ரண்டு லோட்டா தண்ணி இருக்கும் போல. குடிச்சு முடிச்சதும் வயிறு  ரொம்பிடிச்சு " என்றாள் அபிராமி எல்லாம் எங்க தோட்டத்துக் காய்கள் தான் என்றான் சுரேஷ். அதற்குள் காலி கோப்பைகளை எடுக்க வந்த பணியாளரிடம் " அண்ணே சார் வண்டி சத்தம் கேக்குது. அவருக்கு ஒரு லோட்டா நீர் மோர் கொண்டு வந்திடுங்க" சுமதி சொல்ல "இதோ கொண்டு வரேன்" ஊழியர் அகன்றார். "எங்க மெனு புக் இந்தாங்க. இதைப் பார்த்து உங்க மெனுவை செலக்ட் பண்ணுங்கவேற எதாச்சும் எக்ஸ்ட்ரா வேணுமினாலும் சொல்ல்லம்ல சுரேஷ் நீட்டிய புக்கை வாங்கிப் பார்க்கத் துவங்கிய நேரம்,  சுரேஷ், சுமதி வங்கி மானேஜரை அவர் வீட்டில் சென்று பார்த்ததில் அவரு நம்ம பிராஜக்ட்டை பாராட்டினாரு நாளைக்கு பேப்பர்ஸ்ஸோட வங்கிக்கு வரசசொல்லியிருக்காரு கூடிய சீக்கிரம்  லோன் அப்ளிகேஷன் சாங்ஷன் வாங்கிடலாம். இந்த வாரத்துக்குள்ள அவங்க கேக்கற எல்லா பேப்பர்ஸும் பக்காவா தயார் பண்ணிக் கொடுக்கணும்" உற்சாகமாகப் பேசிக்கொண்டு   .     " உள்ளே நுழைபவனை அர்ச்சனா நிமிர்ந்து பார்த்து "சரவணன் நீங்களா?"ஆச்சர்யம் பொங்கக் அர்ச்சனாகேட்ட அதே சமயம்"அர்ச்சனா நீங்களா"என சரவணனும் குரல் கொடுத்தான்.                                                                    

 

       "விவேக் நேத்து ராத்திரி எங்க அப்பா இறந்த விபரம் பத்தி போனில் சொன்னேனில்லையா? அந்த இக்கட்டான நேரத்தில ஆபத்பாந்தவனா எனக்குப் பாதுகாப்பா இருந்த ஒரு நல்லவரைப் பத்திக் குறிப்பிட்டேனே அது இவரு தான். " என்றாள்  அர்ச்சனா உணர்ச்சி பொங்க. "எங்க அண்ணன் அந்த நாளைப் பத்தி அடிக்கடி சொல்வாரு.  கொஞ்ச நேரப் பழக்கத்திலேயே உங்க அப்பாவோட கனிவும் நல்ல வார்த்தைகளும் அவரு மனசில ஆழப் பதிந்துப் போச்சு அவர்  உயிரைக் காப்பாத்த முடியலையேன்னு சொல்லிச் சொல்லி வருத்தப் படுவாரு."  சுமதியும் பதில் கொடுத்தாள். கண் எதிரில் சரவணனைக் கண்ட மாலினிக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. "இவ்வளவு பெரிய உபகாரத்தைச் செஞ்சிட்டு ஏம்பா மாயமா மறைஞ்சுப் போயிட்ட? அவரு போன அதிர்ச்சி கொஞ்சம் குறைய ஆரம்பித்த பிறகு உன்னை கண்டுபிடிக்க முடியாத வருத்தம் எங்க எல்லாருக்கும் இப்ப வரைக்கும் இருந்திச்சு" கண் கலங்கிபடி மாலினி பேசினாள். "அண்ணா மோரைக் குடிங்க" சரவணன் புறம் திரும்பி சொன்ன சுமதி "அம்மா உணர்ச்சி வசப் படாதீங்க. வாழ்க்கையில நடக்கற பல சம்பவங்கள் கதைகளில் புனையப்படுவதைக் காட்டிலும் நம்ப முடியாததாக அமைவது உண்டுன்னு ஒரு பிரபல எழுத்தாளர் கூறியிருக்கி.றார். என்ன நடந்ததுன்னு நான் செல்றேன்" சுமதி சொல்லத் துவங்கும் முன் சரவணன் "நீங்க பேசிட்டிருங்க இதோ வரேன் " உள்ளே சென்றான்.

 

      

அத்தியாயம்    23     

 

அன்னக்கு அ்ண்ணாவோட செல்போன் கீழே விழுந்து ரயிலுக்கடியில் போனதால அவருடைய நண்பரைத் தொடர்பு கொள்ள அவரால முடியாம போயிடிச்சு. அதே நேரம் ஆறாத சோகத்தில இருக்கற அர்ச்சனா, அவங்க உறவுக் காரங்க கிட்டயும் தன் பரிதாப நிலையை வெளிப்படுத்திக்கவும் அவருக்குப் பிடிக்கலை.  இதுக்கு மேல தோல்விகளை சந்திக்கற தைரியம் இல்லை பேசாம உயிரை விட்டுடலாமான்னு தோணி அங்கிருந்து நகர்ந்தவருக்கு  கடைசியா ஒரு தடவை என்னோடு பேசத் தோணினதில என்னோட ஆபிஸுக்குப் போன் போட்டாரு." சுமதி சிறிது நிறுத்த, "இதுக்கு மேல நடந்ததை நான் சொல்றேன்,சுரேஷ் பேசத் துவங்கினான்.

 

        ஓரளவு வசதியான குடும்பம் எங்களுடையது. எனக்கு ஒரு  மூத்த சகோதரி இருக்கா. அப்பா அபுதாபியில பெரிய நிறுவனத்தில வேலை பார்த்தாரு. அவருடைய பெற்றோர்களைப் பார்ப்பத்தற்காக  அடிக்கடி இந்தியா வருவாரு. ஒரு கட்டத்தில அவங்க உடல்நிலை கருதி அம்மாவையும் எங்களையும் இங்கேயே இருக்க ஏற்பாடு பண்ணி்டாரு. அவரும் நாலைந்து வருடத்தில இங்கேயே வந்திடறதா பிளான். தாத்தா பாட்டியோட அரவணைப்பு, அப்பப்ப வ்ந்து போற அப்பாவோட செல்லச் சீராட்டுன்னு நானும் எங்க அக்காவும் ரொம்ப ஜாலியா வளர்ந்தோம். எங்க அம்மாவுக்கு தையல் கலையிலிருந்த ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்ட எங்க தாத்தா அவங்களை அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி அவங்க ஆர்வத்தை வளர்த்து விட்டாரு. பாட்டியும் வீட்டுப் பொறுப்பு, எங்களை கவனிக்கறதுன்னு அவங்க வேலைகளைப் பகிர்ந்து கொண்டு அவங்களை உற்சாகப் படுத்தியதில கொஞ்ச நாளி்ல் அம்மா தன் திறமையை தன்கு வளர்த்துக்கிட முடிஞ்சது.  எங்க தாத்தா அ்ம்மாவு்க்கு ஒரு சின்ன நிறுவனத்தை ஆரம்பிச்சுக கொடுத்தாரு. அதோடு  அப்பாவின் சம்பாத்தியத்தைப் பிற்காலத் தேவைகளுக்காக தாத்தா மனை நிலங்களிலும்  விவசாய நிலங்களிலும் முதலீடு செய்துவந்தார். இதோ இந்த இடம் கூட எங்கள் தாத்தா வாங்கி வைத்தது தான். அம்மாவின் தொழிற் கூடமும் நல்ல விதமாக வளர்ந்து வர, அதையும் சொந்தமாக  இடத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான வசதிகளுடன் விரிவு படுத்தினார்.  எல்லாம் நல்ல முறையில் நடந்து வர, அப்பாவும் பணியிலிருந்து விருப்ப ஓ்ய்வு வாங்கிக் கொண்டு தாய்நாடு திரும்பும் முயற்சிகளில் இருந்தா்ர்..

 

        எங்க சந்தோஷமான வாழ்க்கையில் ஒரு கரும் புள்ளியா எனக்கு நிகழ்ந்த ஒரு விபத்து குடும்பத்தில எல்லார் நிம்மதியையும் பறிச்சிட்டது .எங்க அக்கா அப்ப பாஷன்  டிசைனிங் பட்டப்படிப்பு முடிச்சு மேற்படிப்புக்கு வெளிநாடு போற சமயம்..... நான் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலையா ,மேற்படிப்பான்னு யோசிச்சுக்கிட்டிரு்த நேரம். நகரத்தின் ஒதுக்கு புறமா ஒரு பெரிய மைதானத்தில நடந்ந பைக் ரேஸில் நான் பங்கெடுத்துக் கிட்டேன். அப்ப எனக்கு நேர்ந்த விபத்தில காலில்  பலத்த அடி. அதிகம் வளர்த்துவானேன்..... மருத்துவ மனைக்குப் போக நேர்ந்த தாமதமா இல்லை என் தலை விதியா தெரியலை அடிபட்ட காலை முழங்கால் வரைவெட்ட வேண்டியதாயிடிச்சு. ஒருவாறு மனம் தேறி அப்பாவும் அம்மாவும் என் எதிர்கால  வாழ்க்கையைப் பற்றி யோசிக்கத் துவங்கினாங்க. இடையில எங்க அக்காவுக்கும் நல்ல இடத்தில் திருமணம் முடிஞ்சுது. அவ கணவர் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதால் அவளும் சிங்கப்பூரில் ஒரு பிரபல பாஷன் ஷோரூம் டைரக்டராயிட்டா. அப்பப்ப எங்களைப் பார்க்க அவ வருவா. அப்படி ஒரு முறை வந்தபோதுதான் சுமதியோடு ப ழக்கம் ஏற்பட்டு அவங்களுக்குள்ள ஒரு நெருக்கான நட்பை உருவாக்கிடிச்சு.  எங்க அப்பா அம்மாவுக்கும் சுமதி மேல ரொம்ப உயர்ந்த எண்ணம் எப்பவுமே உண்டு.  அப்பாவோட தூண்டுதல்  காரணமாக நான் ஆன்லைனில் பல கோர்ஸ் முடிச்சு சில நிறுவனங்களுக்கு கன்சல்ட்டண்டாக வேலை பார்த்து வந்தேன்.. மற்ற நேரங்களில் எங்க டெய்லரிங் யூனிட் சம்பந்தப் பட்ட நிர்வாக வேலைகளிலும் அம்மாவுக்கு உதவி செய்வேன். " அதனால சுமதியோடு அப்பப்ப பேசிப் பழக நேர்ந்ததில எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருந்தது  ஆனா செயறகை கால் வச்சுக்கிட்டு வாழற இந்த முடவனுக்கு இது தேவையான்னு நான் அதைவெளிகாட்டிக்காம இருந்தேன்" இவங்களுக்குப் போர் அடிக்கப் போவுது" சுமதி இடை மறிக்க "மேடம் ஏன் அப்படி  நினைக்கறீங்க? உங்க வாழ்க்கை நிகழ்வுகளை இவ்வளவு சுவாரஸ்யமா ஒளிவு மறைவின்றி    உங்களுக்கு நெருக்கமானவரா  எங்களை நினைச்சுச் சொல்லும் போது கேட்க கசக்குமா என்ன " விவேக் பேசும் போது சரவணன் கையில் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு  ஒரு பெண்மணி சகிதம் வந்து சேர்ந்தான்.

 

            " இது தான் எங்கம்மா சரஸ்வதி " சரவணன சொல்ல  உழைத்து உரமேறிய மெல்லிய உடல் வாகும்  கனிந்த புன்னகை தவழும் முகமுமாக கை கூப்பி நிற்பவளை மாலினி  எழுந்து கைபற்றி  "இன்னிக்கு எங்க எல்லாருக்கும் மறக்க முடியாத நல்ல நாளா அமைஞ்சிடிச்சு.அஞ்சு வருடங்களுக்கு மேலா யாரைப் பார்க்கணம்னு தவிச்சுக்கிட்டிருந்தோமோ அவரையும் அவங்க குடும்பத்தையும் சேர்நது சந்திச்சிட்டோம். இதுக்குக் காரணமான எங்க மாப்பிள்ளைக்கு ரொம்ப நன்றி " மாலா முடிக்கவும் சரவணன் கையிலிருந்த குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது." இது சுமதி சுரேஷ் மகன் ஸ்ரீராம். என்னால் மறக்கமுடியாத மனிதரின் நினைவாக என் தங்கை மகனுக்கு நான் வைத்த பெயர்".என்றான் சரவணன்.குழந்தையை கையில் வாங்கிக் கொணடு முத்தமிட்ட  மாலினி " தங்க விக்ரகம் போல அழகா இருக்கான் " என்றாள்.

           "மேடம் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்ங்கற மாதிரி உங்க திருமண நிகழ்ச்சிக்கே நாம இன்னும் வரலையே" ஆர்த்தி கேட்க,எல்லாரும் சிரித்தனர். " இனி நடந்ததை நான் சொல்றேன்" சுமதி துவங்கினாள்.

"      " அந்த முறை ஒரு வார லீவில் வந்திருந்த இவருடைய அக்கா தான் என்னிடமும் இவரிடமும் தனித்தனியா பேசி எங்க இருவரின்

சம்மத்தைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு அத்தை மாமாவோடு எங்க வீட்டுக்குப் பெண் கேட்டு வந்தாங்க. உழைக்கத் தயாரா இருந்தும் தகுந்த வேலை அமையாம  மனம் நொந்து கிடக்கும் அண்ணாவையும் தனியார் நிறுவனத்தில் பல வருடங்களாக உண்மையா வேலை செய்தும் தகுந்த  முன்னேற்றமில்லாம கஷ்டப்படும் எங்க மாமாவையம் தங்க கூட சேர்த்துகிட்டு எங்க பிஸினஸை வளர வைத்து எங்க வீட்டிற்கும் விடிவுகாலம் ஏற்படுத்திக் கொடுத்த புண்ணியம் இவருக்கும் இவங்க அப்பாவுக்கும் தான். இப்ப டெய்லரிங் யூனிட்டை அத்தை பேரன் வந்த பிறகு சுத்தமா எம் பொறுப்பில் விட்டுட்டு குழந்தையோடு தானிருக்காங்க. இவர் விருப்பப் பட்டுத் துவங்கி இருக்கற இந்த ஈவெண்ட் மானேஜ்மெண்ட் அமைப்புக் கான இவருடைய புதிய எண்ணங்கள் அதை நடைமுறைப் படுத்தும் அண்ணாவின் உழைப்பில நல்ல வளர்ந்து வருது. எங்க அம்மாவின் உழைப்பாலும்  மேற்பார்வையிலும்  சமையற்கூடமும் பிரமாதமாக வளர்ந்திட்டு வருது பண்ணை நிலங்கள் மாமாவின் கவனிப்பில் நல்ல வளர்ச்சி கண்டுவருது. நம்மாழ்வார் கொள்கைப்படி இயற்கை முறை விவசாய வழியில் விளையும் எங்க கறிகாய்களைத் தான் எங்க நிகழ்ச்சிகளுக்குப் பெரும்பாலும் உபயோகப் படுத்துகிறோம். அதிகமானத் தேவைகளுக்கு அருகிலுள்ள மற்ற இயற்கை விவசாய விளை நிலங்களிலிருந்து  உரிய விலைக்கு வாங்கிக் கொள்வதால் நம் பாரம்பரிய விவசாய முறைகள் புத்துயிர்பெற்று வருகிறது" இங்க வேலை பார்க்கிற நல்ல உழைப்பாளிங்களை உற்சாகப் படுத்தும்விதமா அவங்ளுக்கு ஆயுட் காப்பீடு, பிராவிடண்ட் பண்ட் போன்ற உதவித் திட்டங்களை சுரேஷ் அவங்க அப்பாவின் விருப்பத்தோடு ஆரம்பிச்சு இருக்காரு. அடுத்து முக்கிய பணியாக  பக்கத்திலிருக்கும் எங்க காலி மனைகளில் எளிய குடியிருப்புகளை பணியாள்களுர்களுக்குக் கட்டித் தருவதற்கு லோன் கேட்டிருந்தோம். அது விஷயமாகத் தான் அண்ணா   அலஞ்சிட்டிருக்காரு சுமதி பேசி நிறுத்திய இடைவெளியில்  அர்ச்சனா, "மேடம்  எங்க வங்கியிலயும்  இந்த மாதிரி ஸ்கீமுக்கெல்லாம் லோன் கிடைக்கும். " என்றாள். இது வரை அதிகம் பேசாமலிருந்த சரவணன் பேசத் துவங்கினான்.

     "சுரேஷும் அவரோட பெற்றோர்களும் எங்க குடும்பத்தை கைதூக்கி வளரச்செய்யற எண்ணத்தோட வீட்டுக்கு வந்திருந்த அதே நேரத்தில தான் அர்ச்சானாவின் அப்பா என்னைப் பற்றிய விபரங்களை கேட்டு என்னை ஊக்கப்படுத்தும் விதமா பேசி உன் எதிர்காலம் சிறப்பா அமையும்னு வாழ்த்தினாரு. நல்ல உள்ளங்களோட உளமார்ந்த ஆசி நிச்சயம் பலிக்கும் என்பது என் விஷயத்தில  நிரூபணம் ஆகியிருக்குன்னு நான் நம்பறேன். அது மட்டுமில்ல அவரு கையால அப்ப எனக்கு "தாயினும் சாலப் பரிந்து" கொடுத்த மதிய உணவின் சுவை இன்னும் என் நாக்கில் தங்கியிருக்கிறது .தெய்வ சன்னிதியில் தரும் பிரசாதம் போல எனக்கு அது பலன்கொடுத்திருக்கு..."    "அண்ணா, விவேக் சார் சொன்ன தேதி நமக்கு ப்ரீ தான். நீங்க அவங்களை நம்ம இடத்தைச் சுத்திக் காட்டிட்டு டைனிங் ஹாலுக்குக் கூட்டிட்டு வாங்க. இன்னிக்கு அவங்க நம்மோட இங்கதான் சாப்பிடணும். அதுக்குள்ள கோயிலுக்குப் போயிருக்கற அத்தை மாமாவும் நம்ப மாமா குடும்பமும் வந்திடுவாங்க.அம்மா விருந்தாளிகளுக்கு ஸ்பெஷலா ஸ்வீ்ட் செய்யப் போயிருக்காங்க  நான் போயி எல்லாம் தயாரான்னு பாக்கறேன்." சுமதி சென்றாள்.

 

      " அம்மா,பெரியப்பாவுக்கு இங்க நடக்கறதெல்லாம் தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப் படுவாரு. இப்ப அவருக்கு போன் போடவா?" அர்ச்சனா கேட்க, "அக்கா முதல்ல சாப்பிடுவோம் பிறகு தெம்பா பேசலாம். கிச்சனிலிருந்த வர அறுசுவை மணம் மூக்கைத் தாண்டி நாக்கு வரை வருது" ஆர்த்தி சொல்ல, "தாங்க்ஸ் ஆரத்தி நான் நினைத்ததை நீ சொல்லிட்டே" என்றார் விவேக்கின் தந்தை. அதே சமயம் ஒரு காரில் சுரேஷின் பெற்றோர்கள் வந்து சேர, பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரிலிருந்து சிதம்பரம் குடும்பமும் வந்து யாவரும் உற்சாகமாக  உள்ளே நுழைந்தனர்.

 

 

            

                                                                                                                                                           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                    

  

 

 

 

 

 

             

 

 

 

 

 

 

 

 

 

               

           

 

       

 

 

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu